பாட்ட்ட்ட்ட்டி!
வாம்மா இனியா!? இந்தா பட்டாணி சாப்பிடு.
வேணாம் பாட்டி.
வாம்மா இனியா!? இந்தா பட்டாணி சாப்பிடு.
வேணாம் பாட்டி.
ஏன்ம்மா!? சிப்ஸ், பிஸ்ஸா, மிக்சர்லாம் சாப்புடுறதுப் போல இதையும் சாப்பிடு. இது எங்கக் காலத்து நொறுக்குத் தீனி. பல்லுக்கும் நல்லது. காசும் கம்மி, உடம்புக்கும் ஒண்ணும் பண்ணாது.
அதுக்காக சொல்லலப் பாட்டி. பல் வலிக்குது. அதான் வேணாங்குறேன்.
ம்ம்ம்ம் இந்த காலத்துப் புள்ளைங்க வாழ்க்கை முறையே மாறிட்டதால சிறு வயசுலயே கண்ணாடி போட்டுக்குறதும், பல்லைப் புடுங்குறது சகஜமாகிட்டுது.
என்னப் பாட்டி சொல்றே!?
ஆமாம்மா! எங்கக் காலத்துல உடல் உழைப்பு அதிகமா இருந்தது. சத்தானப் பொருட்கள் விளைந்தது. அதனால நல்ல உணவுகளை நாங்க சாப்பிட்டோம். அதுமில்லாம, நாங்கலாம் மிக்சில அரைக்காம, அம்மில அரைச்சும், குக்கர்ல சமைக்காம பாத்திரத்துல சமைச்சதால சத்துகள் வீணாகாம பார்த்துக்கிட்டோம். இப்பலாம் அப்படி முடியலை. எங்காவது ஊருக்கு போகனும்ன்னா நடைப்பயணம் இல்லாட்டி மாட்டு வண்டி பய்ணம். இப்ப அப்படியா!? புகையைக் கக்குற வண்டிப்பயணம்தான்
இந்த அவசர யுகத்துல இதெல்லாம் அத்தியாவசியம்தான் இருந்தாலும் வாரத்துல ஒரு நாள் பழைய கால வாழ்க்கைப் போல மாட்டு வண்டி பயணம், அம்மில அரைச்ச சாப்பாடுன்னு இருக்கலாம்ல!!??
அம்மா நீங்கச் சொல்றது சரிதான்மா. அதனாலதான் நம்ம வீட்டுல அம்மி,உரல் வாங்கிப்போட்டு எப்பவாவது பசங்களை அரைக்கச் சொல்றேன். தயிர் கடைஞ்சு மோராக்கி வெண்ணெய் எடுக்கச் சொல்றேன். நான் எப்படி வளர்ந்தேனோ! அதுப்போலதான்மா என் பசங்களையும் ஓரளவுக்கு வளர்க்குறேன். அதுக்காக, கொஞ்சம் மெனக்கெட்டாலும் சரிதான்னு இருக்கேன்.
உனக்குத் தெரியுது ராஜி! ஆனா, மத்தவங்க தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கனுமில்ல. பல வீட்டுல அம்மாக்களுக்கே அம்மி அரைக்குறது, மோர் கடையுறதுலாம் தெரியாதே!! அதுக்கு என்னப் பண்ணுறது!?
இதானா உங்கக் கவலை!? இப்பவே ஒரு பதிவுப் போட்டு எல்லோருக்கும் பழைய நினைவுகளை நினைவுப் படுத்திட்டாப் போச்சு!!
முதல்ல மாட்டு வண்டிப் பயணம்:
மாட்டு வண்டில மூடு போட்ட வண்டி, மூடு போடாத வண்டி, டயர் வச்ச வண்டி இது மூணுதான் எனக்குத் தெரிஞ்சது. சின்ன வயசுல பஸ் வசதி இல்லாத ஊர்களுக்குப் போது சின்ன பைள்ளைங்க, வயசானவங்க, சுமைகள்லாம் ஏத்தி விட்டுட்டு பெரியவங்கலாம் நடந்து வருவாங்க. அந்த சந்தோசத்தை தம்பி ஆதிமனிதனின் பதிவு கண் முன் கொண்டு வந்தது.
அம்மி அரைத்தல்:
அம்மில துவையல் அரைச்சு வழிச்சுட்டு அம்மில ஒட்டி இருக்கும் துவையலில் சூடான சாதத்தைப் போட்டு நெய் விட்டு பிசைஞ்சுக் கொடுப்பாங்க. அதோட சுவைக்கு ஈடா எதுமில்ல. அம்மி அரைப்பது எப்படி!? அம்மி அரைப்பதன் பலன்களை பார்வதி ராமச்சந்திரன் பட்டியலிட்டிருக்கிறார்.
கல்சட்டி:
என்னதான் இன்னிக்கு விஞ்ஞான வளர்ச்சியினால நாந்ஸ்டிக் பாத்திரங்களும், டப்பர்வேர் டப்பாக்களும் வந்து நாம சமைக்கும் சாப்பாட்டை ஃப்ரெஷ்ஷா வச்சாலும், அன்னிக்கு கல்சட்டில சமைச்ச சாப்பாடும், தண்ணி ஊத்தி வைக்கும் பழையக் கஞ்சியும் ருசிக்கு மட்டுமில்ல ஆரோக்கியத்துக்கும் நல்லதுன்னு கீதா சாம்பவசிவம் சொல்லும் செய்தி.
மரப்பாச்சி:
ஸ்பைடர் மேன், ஆங்கிரி பேர்ட், டாம் அண்ட் ஜெர்ரின்னு விதம் விதமா பொம்மைகள் இன்னிக்கு இருந்தாலும் அவையெல்லாம் உடலுக்கு தீங்கானது. குழந்தைகள் உடலுக்கு நன்மை செய்யும் பொம்மையான மரப்பாச்சியை காண நாகராஜி தளத்துக்குப் போங்க.
நுங்கு வண்டி:
இன்னிக்கும் கீரோ ஹோண்டா பிளசர் வண்டில 80கிமீ வேகத்துல போனாலும் அன்னிக்கு நுங்கு வண்டில காடு மேடுலாம் சுத்துன சுகம் வருமா!? பைசா செலவில்லாம நுங்கு வண்டி செய்யும் முறை பத்தி ஈரோடு கதிர் சொல்லுறதைக் கேளுங்க. சகோதரரைப் பத்தி அறிமுகப்படுத்த நான் எதுமே சொல்லத் தேவையில்ல. எல்லோருக்கும் தெரிந்தவர்தான். நான் ரசிச்சுப் படிக்கும் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.
தாயக்கட்டை:
முன்னலாம் விடுமுறை நாட்களில் பொழுது போக விளையாடும் விளையாட்டுகளில் தாயக்கட்டைக்கு இடம் உண்டு. சில சமயம் ஆண்கள் காசுக்கட்டி விளையாடுவாங்க. பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள்ன்னு எல்லோரும் விளையாடும் தாயக்கட்டையை எப்படி விளையாடுறதுன்னு கிருத்திகாதரன் சொல்லி தர்றார்.
பல்லாங்குழி:
முன்னலாம் நம்ம ஊருல பெண்கள் பூப்ப்பெய்தி ஓய்வா இருக்கும்போது அவங்களுக்குப் பொழுதுப் போக பல்லாங்குழி ஆடக் கொடுப்பாங்க. அதனால எல்லோர் வீட்டுலயும் இருக்கும். ஆண்பிள்ளைகள் இந்த விளையாட்டை விளையாடினால் என்னடா! சமைஞ்சப் பொண்ணு மாதிரி இந்த விளையாட்டுலாம் விளையாடுறேன்னு சொல்லிக் கிண்டல் செய்வாங்க.பல்லாங்குழி ஆடும் முறையை சுபாஷினி சிவா சொல்றாங்க.
பம்பரம்:
பக்கத்துல இருக்கும் பெண்கள் தொப்புள்ல பம்பரம் விடும் அளவுக்கு இல்லாட்டியும் ஓரளவுக்கு பம்பரம் விளயாட கத்துக்கொடுக்கிறார் ஆனந்த் ஆரோக்கியராஜ்.
சிலம்பம்:
எங்க ஊர் திருவிழாக்களில் சாமி ஊர்வலத்தின்போது சிலம்பம் சுத்துவாங்க. இதுக்காக இளவட்டப் பசங்க சிலம்பம் சுத்த கத்துவாக்குவாங்க. என் வீட்டுக்காரர்(நல்லவேளை,இதுவரைக்கும் என்கிட்ட சிலம்பம் சுழட்டி வீரத்தைக் காட்டல), மச்சினர்களுக்குலாம் தெரியும். அப்புக்கு சிலம்பம் சுத்த ஆசை. ஆனா, உரிய வயசு வராததால கத்துக்கல. சிலம்பத்தின் வகைகள், சுழட்டுறது எப்படின்னு பட்டதும், சுட்டதும்ல சொல்றாங்க.
பட்டம் விடுதல்:
படிச்சு பட்டம் வாங்காட்டியும் சின்ன வயசுல நான் நிறைய பட்டம் வாங்கி விட்டிருக்கேன். பழைய நியூஸ் பேப்பர்ல பட்டம் செஞ்சு ஏரிக்கரையில் நண்பனோடு பட்டம் விட்ட சுகத்தை கண் முன் கொண்டு வந்தது நான் ஆதவன் பதிவு.
கிட்டி புள்:
ஐபிஎல், ட்வெண்டி ட்வெண்டின்னு இன்னிக்கு கிரிக்கெட் வளார்ந்திருக்கு. கிரிக்கெட்டோட தாத்தாவான கிட்டிபுள்ளை விளையாடி பக்கத்து வீட்டுலலாம் அம்மாக்கிட்ட சண்டைக்கு வந்து, ஓடி ஒளிஞ்ச காலத்தை நினைவூட்டியது முரளி கிருஷ்ணா பதிவு. கூடவே பப்பர மிட்டாய் சுவையையும் பகிர்ந்திருக்கார்.
கோலி:
சின்னச் சின்ன கண்ணாடி உருண்டை. அதைக் கைக்குள் வச்சிருந்தால் சூடு. எடுத்து கன்னத்தில் வைத்துக் கொண்டால் குளிர்ச்சின்னு இரு முகம் காட்டும் கோலி. கோலி விளையாட்டு எனக்கு அதிகம் பரிச்சயமில்ல. ஆனா, கோலியை இப்படியும் விளையாடலாம்ன்னு தியானா புதுசா என்னவோ சொல்றாங்க.
காகிதக் கப்பல்
பாடம் படிக்க உதவுச்சோ இல்லியோ! என் புத்தகங்கள். ஆனா, மழைக்காலத்தில் கப்பல் செஞ்சு விட உதவுச்சு. என்னை மாதிரியான இன்னொரு ஆளான கிருஷ்ணப்பன் பதிவு.
தட்டாங்கல்:
இதுவும் பெண்கள் ஆட்டம்தான். சில சமயம் ஆண்களும் ஆட வருவாங்க. ஒரே மாதிரியான வட்ட வடிவ கற்களைப் பொறுக்கி வந்து சேர்த்து வச்சிருப்போம். இதென்னடி குப்பைன்னு அப்பா, அம்மா திட்டிக்கிட்டே தூக்கிப் போடுவாங்க. தட்டாங்கல்லின் வகைகளை சில்வண்டு சொல்றாங்க.
கண்ணாமூச்சு ரே! ரே!
பொனுட் பொடுசுகளுடன் ஆடிய, கண்ணாமூச்சி ரே!ரே! விளையாட்டுப் பற்றி சே,குமார் சொல்லும் தகவல்கள்.
குச்சி ஐஸ்:
நம்ம பசங்களுக்கு என்னதான் பிராண்டட் ஐஸ்க்ரீம் லாம் வாங்கிக் கொடுத்தாலும் சளிப் பிடிச்சு, காய்ச்சல் வருது!! ஆனா, தெருவில் வித்த குச்சி ஐஸையும், சேமியா ஐஸையும் சாப்பிட்ட நமக்கு எதுமே ஆகலியே!ன்னு சுகுமார் ராஜேந்திரன் ஆதங்கப் படுகிறார்.
தேன் மிட்டாய்:
சின்ன வயசுல எல்லாக் குழந்தைகளின் தேடலும் தேன் மிட்டாய்லயே முடிஞ்சுடும். தேன் மிட்டாயின் சுவைக் குன்றாம அனத்தலாம் வாங்கல சொல்லி இருக்காங்க.
மண் சொப்புகள்:
மன் இட்லி, கருவேங்க மர இலை துவையல், இட்லிப்பூ சட்னின்னு மண் சொப்புல சமைச்சு, எல்லோருக்கும் பசியாறி விளையாடி இருக்கோம். ஆனா, இன்னிக்கு ஆயிரத்தெட்டு விளையாட்டுகள் இருந்தும் பசங்களுக்கு போரடிக்கும் கதையை கவிதை மூலம் சொல்றாங்க . மரியா
நம் சந்தோசங்கள்:
கால ஓட்டத்தில் நாம் தொலைத்த அத்தனை சந்தோசங்களையும் ஒரே இடத்தில் நம் கண்முன்னே கொண்டு வந்திருக்காங்க Cloud Nine
பூம் பூம் மாடு:
ராமராஜனுக்குப் போட்டியா கலர் கலர் ட்ரெஸ் பண்ணிக்கிட்டு பெருசாப் மைப் பொட்டு வச்சிக்கிட்டு கிருஷ்ணருக்குப் போட்டியா குழலூதிக்கிட்டும், தில்லானா மோகானாம்பாள் பத்மினிப் போல சலங்கைக் குலுங்க நடந்து வரும் மாட்டைப் பிடிச்சுக்கிட்டு இவர் வந்தாலே ஊர் பிள்ளைகள் அத்தனையும் இவர் பின் தான். பழைய நினைவுகளை கவியரசன் அசைப் போடுவதைப் பாருங்க.
கோலி சோடா:
என்னதான் பெப்சி, கோக்ன்னு கலர் கலரா குடிச்சாலும் அதெல்லாம் உடம்புக்கு கெடுதி. சின்ன வயசுல பன்னீர் சோடாவை குடிக்கத் தெரியாம குடிச்ச ருசி எதுலயும் இல்லன்னு அனன்யா சொல்றாங்க.
போதும் நிறுத்தும்மா ராஜி! நீ சின்ன வயசு நினைவுகள் எதையும் மறக்கலைன்னு தெரியுது. ரொம்ப சந்தோசம்தான். ஆனா...,
என்னம்மா ஆனா!?
இன்னும் விளையாட்டுப் பிள்ளையாவே இருக்கியே!! இனியாவது மாத்திக்கோ!!
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

நாம் தொலைத்த அத்தனை சந்தோசங்களும்...
ReplyDeleteஆகா... மறுபடியும் முதல்ல இருந்து!...
ஆச்சர்யக்குறி மகிழ்ச்சியின் வெளிப்பாடா!? இல்ல துக்கத்தின் வெளிப்பாடா!?
Deleteராஜி என்னையா கூப்பிட்டீங்க .
ReplyDeleteசரி சரி நல்லாவே அசத்திறீங்க ராஜி பழைய நினைவுகளை மீட்டுத் தரும் பதிவுகளை அசத்தலாக அறிமுகம் செய்தீர்கள் வழமை போலவே.
வாழ்த்துக்கள் ....!
உங்களையுதான் கூப்பிட்டேன் இனியா! கூப்பிட்டதும் வந்ததுக்கு ரொம்ப நன்றி
Deleteசிறுவயது இனிய நினைவுகளோடு அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்... உதவிப் பொறுப்பாசிரியருக்கு வாழ்த்துக்கள் சகோதரி...
ReplyDeleteவாழ்த்துகளுக்கு நன்றி அண்ணா!
Deleteதொடரும் அறிமுகங்களுக்கு என் இனிய வாழ்த்துக்கள் .
ReplyDeleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றிக்கா!
Deleteஅழகான சந்தோஷப் பகிர்வுகளின்
ReplyDeleteஅருமையான தொகுப்புகள்..பாராட்டுக்கள்.!
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
Deleteஇன்றும் அறியாத பல தளங்கள்... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோதரி... உங்களின் தேடுதலை அறிந்தேன்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...
ReplyDeleteமண் சொப்புகள் தளத்தின் இணைப்பு இது தானோ...? ---> http://mariavellore.blogspot.in/
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
அதே! அதே!
Deleteஅழகு நடையில்
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோ!
Deletehaahaahaa, thanks for the introduction of my blog and
ReplyDeletethanks for sharing this DD.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க கீதா!
Deleteஅத்தனை விளையாட்டுகளையும் அருமையாக அறிமுகத்தில் கொண்டு வந்திருக்கிங்க... கடின உழைப்பு தெரிகிறது அக்கா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சசி
Deleteஅக்கா நெட் பக்கம் வருவதே எனக்கு அறிதாகி விட்டது எனினும் ஞாயிறு அன்று தங்கள் பதிவை பார்க்கவே ஆவலாக வந்தேன். வந்தால் மறுபடி நீங்க என்ன என்று பார்த்தால் ஆனந்தம்....
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சசி
Deleteசிறுவயது நினைவுகளை எழுப்பிவிட்டீர்கள்..இப்போ என்கூட யார் தட்டாங்கல், தாயம், பல்லாங்குழி எல்லாம் விளையாடுவா?
ReplyDeleteவலைச்சர வேலை முடியட்டும். நான் வரேன் கிரேஸ். இல்லேன்னா ஞாயித்துக்கிழமைல தூயாவை வரச் சொல்றேன்.
Deleteஆஹா! மலரும் நினைவுகள். அத்தனையும் அருமை.. கலக்கறீங்க.
ReplyDeleteஉதவி பொறுப்பாசிரியர் ஆனதற்கு வாழ்த்துகள்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஆதி!
Deleteரொம்ப ரொம்ப அருமையான, இப்போதைய சூழலில் தேவையான பகிர்வு!.. தங்களின் கடுமையான உழைப்புத் தெரிகிறது.. என் தளத்தையும் அறிமுகம் செய்ததற்கு ரொம்ப நன்றி!.. தகவல் தெரிவித்த டிடி சாருக்கும் நன்றி!...
ReplyDeleteஅறிமுகப்படுத்தப்பட்ட மற்ற வலைப்பதிவர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!..
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி பார்வதி!
Deleteநம் பாரம்பரிய விஷயங்கள் உடல் மற்றும் மனநலத்திற்கு முக்கியத்துவம் தருவதாக இருந்தது.
ReplyDeleteஇன்றும்கூட அதன் சிறப்பை அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகப்படுத்தி விளையாடுகின்றனர்.
ஆனால் சிலர் விளையாட்டா? அது எதுக்கு படி படி என்று அடிப்படை - அடிக்கல்லையே பெயர்த்து விடுகின்றனர்.
விளையாட்டு மற்றும் நல்ல பொழுதுபோக்கு இருக்கும் பிள்ளைகள் தவறான வழியில் செல்ல வாய்ப்பில்லை என்று பலரும் அறியாதது வருந்தத்தக்கது.
இதுபோன்ற நல்ல விஷயங்கள் எல்லோருக்கும் சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் பதிக்கும் வலைப்பதிவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
ராஜி உங்களுகுக்கும் நன்றி
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி விஜயலஷ்மி
Deleteஇப்பக்கூட விளையாட ரெடி. தட்டாங்கல்,புளியமுத்துக்களை ஊதி ஒத்தையா இரட்டையா விளையாடுவது எவ்வளவு அரிதாகிவிட்டது. மிக மிக நன்றி. உங்கள் வழியாக பலதளங்களை அறிந்து கொண்டேன்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிம்மா!
Deleteஆஹா, இப்படி ஒரு அறிமுகமா. வாழ்த்துக்கள் சகோதரி.
ReplyDeleteநன்றி சொக்கன்
Deleteஇனியா இந்த மாதிரிப் பதிவுகளை அறிமுகப்படுத்தறது?ன்னு இனியாரும் கேட்க முடியாதபடி இனியாவோட இனிய உரையாடல் மூலமாப் பகிர்ந்த ஒவ்வொண்ணும் மனசுக்குள்ள பழைய நினைவுகளைக் கிளறி அசைபோட வெச்சுடுச்சு. ரம்மியமான விஷயங்கள் ஒவ்வொன்றும்! தொடர்ந்து இரண்டு வாரங்கள் வலைச்சரத்துல சிக்ஸர்களா அடிச்சுத் தள்ளினது வேற யாரும் இல்லன்னுதான் நெனக்கிறேன். அதுக்கும், வலைச்சரத்தில பொறுப்பு எடுத்துக்கிட்டதுக்கும் மகிழ்வு நிறைந்த என் நல்வாழ்த்துகள்மா!
ReplyDeleteஎல்லாத்துக்கும் வலை உலக உறவுகளின் ஆதரவுதான்ண்ணா காரணம்
Deleteநல்ல தொகுப்புகள் அக்கா .. கடினமாக தேடி இருக்கீங்கன்னு தெரிகிறது ..
ReplyDeleteதனபாலன் அண்ணா போகாத தளங்களை தேடுறதுதான் சிரமம் அரசா!
Deleteசூப்பர் அக்கா..உங்க கடின உழைப்பு தெரியுது...நிறைய அறிமுக பதிவர்கள்,இதிலேர்ந்து என்ன் தெரியுதுன்னா நிறைய வலைப்பூ படிக்கிறீங்கன்னு தெரியுது..அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேனகா!
Deleteநன்றி ராஜி என் தளத்தை அறிமுகம் செய்ததற்காக.. தெரியப்படுத்திய தனபாலனுக்கு நன்றிகள்!
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தியானா!
Deleteநிறைய புதிய தளங்கள்! நேரம் இல்லாமையால் செல்ல முடியவில்லை! ஓய்வு கிடைக்கும்போது சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள் சகோ!
ReplyDeleteநேரம் கிடைக்கும் போது அவசியம் புதிய தளங்களுக்கு போய் வாங்க சகோ!
Deleteஅத்தனை அறிமுகங்களிலும் உங்கள் உழைப்பு தெரிகிறது. உடம்பையும் பாத்துக்கோங்க!
ReplyDeleteஅதான் வலைச்சரப் பணி முடிஞ்சதும் ஒரு லாங்ங்ங்ங்ங்ங்க் டூர் போகப் போறேனே!
Deleteவணக்கம்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ரூபன்
Deleteகவலையில்லா சிறுவயது பிராயத்துக்குப் போய் வந்ததுபோலிருக்குது.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ!
Deleteஅக்கா...
ReplyDeleteஞாபகம் வருதேயில் என்னையும் சேர்த்தமைக்கு நன்றி...
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்ரி குமார்.
Deleteஊர் ஞாபகங்களை மீட்டும் பகிர்வுக்கு எப்போதும் தனிச்சுகம்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ!
Deleteமலரும் நினைவுகளுக்கு அழைத்துச் சென்றமைக்கு நன்றி.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி எழில்
Deleteஅடடே... நான் குடித்த பன்னீர்ஜோடாவை தூசு தட்டி எடுத்துருக்கிறீர்களே? தன்யளானேன்! நன்றிகள் பல!
ReplyDeleteஇதைத் தெரிவித்த DDக்கும் அன்பு நன்றிகள்!
Deleteஎனக்கும் பன்னீர் சோடான்னா ரொம்ப பிடிக்கும் அனன்யா.
Deleteஇனியா மூலம் மலரும் நினைவுகள் போல இனியவை பழையவை என்று அருமையாக சொல்லி அறிமுகப்படுத்தி இருக்கும் அத்தனைப்பேருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா.. த.ம.11
ReplyDeleteஎனது பள்ளி நாள்கள் நினைவிற்கு வந்தன, தங்களது பதிவைப் பார்த்து. நான் மறக்கமுடியாதது நாங்கள் விளையாண்ட கிட்டிப்புள் விளையாட்டு.
ReplyDeleteசிறப்பான பகிர்வு. மறந்து போன பல விஷயங்களை நினைவுக்குக் கொண்டு வந்தது.....
ReplyDelete