அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற - சா.சுரேஷ் பாபு - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 204
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 283
பெற்ற மறுமொழிகள் : 176
வருகை தந்தவர்கள் : 1952
இவர் எழுதிய பதிவுகள் : 009
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 204
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 283
பெற்ற மறுமொழிகள் : 176
வருகை தந்தவர்கள் : 1952
நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து - அவர்களீன் நல்ல பதிவுகளை அறிமுகப் படுத்தி உள்ளார்.
பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
283 பதிவுகள் அறிமுகம் மற்றும் வருகை தந்தவர்கள்
எண்ணிக்கை 1952 என்பதும் பிரமிக்க வைக்கிறது.
சா.சுரேஷ் குமாரினை அவரது கடும் உழைப்பினைப்
பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி
அடைகிறோம்.
அடைகிறோம்.
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார்
திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார்
வருகிறார்.
இவருக்கு இவர் தாத்தா அன்புடன் ஆசையுடன் வைத்த பெயர் மஞ்சுபாஷிணி. இவர் குவைத்தில் கணவர், இரண்டு பிள்ளைகள், மற்றும் அம்மாவுடன் வசிக்கிறர். வேலைக்கு சென்றுக்கொண்டே வீட்டிலும் எல்லோர் தேவைகளையும் பார்த்துக்கொண்டு அவ்வப்போது எழுதுகிறார்.
வலைப்பூவை பற்றி எதுவுமே தெரியாமல் இருந்த இவருக்கு 2007 இல் இவரது தோழி கிருஷ்ணபக்தை பத்மஜா - ஒரு வலைப்பூ தொடங்கி அதற்கு தலைப்பு கதம்ப உணர்வுகள் என்று வைத்து இவரது படைப்புகளைப் பதிவிட கற்றுத் தந்தார்.
கூகுளீல் ஏதோ தேடப் போய் - ஒரு வலைப்பூவில் கொண்டு வந்து விட்டது… அட ஒரு அழகிய கவிதை… எளிமையான வரிகள்… உடனே அதற்கு விமர்சனம் எழுத ஆசைப்பட்டு எழுதினார்.. அப்போது தொடங்கியது இந்த பயணம் இனிமையாக….
அதில் இருந்து ஒவ்வொரு வலைப்பூவுக்கும் சென்று விமர்சனம் எழுதிக்கொண்டிருந்தார்..
அன்பை எல்லோரிடமும் அன்பாய் பகிரும்போது அங்கே அன்பு சூழ்ந்த நட்பு மலரும் என்பது நம்பிக்கை… காண்போர் எல்லோருமே நல்லவர் என்ற இவரது நம்பிக்கையும் பொய்க்கவில்லை.
மஞ்சு பாஷினியினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் சா.சுரேஷ் பாபு
நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத்குமார்
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள் மஞ்சுபாஷினி சம்பத்குமார்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteஅயராது உழைக்கும் சீனா அய்யா போலவே ஒரு வாரத்திற்குள் சுரேஷ் செய்த சாதனை பிரமிக்கக்கூடியதே. வாழ்த்துகள் சுரேஷ். வருக மஞ்சு சுபாஷிணி. நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஉண்மையே உங்கள் கூற்று. திரு சுரேஷ் அவர்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களின் லிஸ்ட் பார்த்து பிரமிப்பு எனக்குள். சுரேஷின் உழைப்பு இதில் தெரிகிறது. மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜோதிஜி.
Deleteநல் வாழ்த்துகள் சுரேஷ்...!
ReplyDeleteமஞ்சு பாஷினியினை வருக வருக என வலைச்சர வருகைக்கு வரவேற்று வாழ்த்துகிறோம் ..!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ராஜேஸ்வரி. போன வெள்ளிக்கிழமை தனபாலன் சாரும் நானும் பேசும்போது உங்கள் ஆன்மீக பதிவுகளைப்பற்றி நினைவுக்கூர்ந்தோம்பா..
Deleteநன்றி சீனா ஐயா! காலையில் அவசர பணி வந்தமையால் இன்னும் ஓரிரிரண்டு பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப்படுத்த முடியாமல் போய்விட்டது. அதில் ஒருவர்தான் நாளை ஆசிரிய பொறுப்பேற்க இருக்கும் திருமதி மஞ்சு சுபாஷிணி அவர்கள்! இன்னொருவர் பதிவுலக ஜாம்பவான் கேபிள் சங்கர் இவர்கள் இரண்டு பேரின் பதிவுகளை படித்து ரசித்து இருக்கிறேன்! பகிர்ந்து கொள்ள முடியாதது வருத்தமே என்ற போதிலும் விடை பெற்ற போது ஒரு நிறைவு கிடைத்தது! வாய்ப்பளித்த தங்களுக்கும் ஆதரவளித்த வாசக அன்பர்களுக்கும் நன்றி! வணக்கம்!
ReplyDeleteஅதனால் என்னப்பா.. நாம அறிமுகப்படுத்திருவோம் :) உங்க உழைப்பை நான் கண்டு பிரமித்தேன்பா.. அன்பு வாழ்த்துகளுடனான நன்றிகள் சுரேஷ்.
Deleteசாதனையுடன் விடைபெற்ற சுரேஷ் அவர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்!
ReplyDeleteபுதிய ஆசிரியர் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துக்களும்!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
Deleteபிரமிக்க வைத்துத் தனது பணியில் இருந்து விடைபெற்றுச் செல்லும்
ReplyDeleteஅன்புச் சகோதரரிற்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவிக்கும் இத்
தருணத்தில் என் மனதிற்கு நெருக்கமான அன்புச் சகோதரி மஞ்சுபாஷினி
அக்கா அவர்களை இவ்வார ஆசிரியைப் பணி சிறந்து விளங்கிட வருக
வருக என வரவேற்று மகிழ்கின்றேன் .ஆழ்கடலில் முத்தெடுத்து அழகழகாய்
கோத்து மகிழ்ந்து வாழ்வளிக்க வா மகளே வலைச்சரம் என்னும் வண்ணச்
சோலைக்குள் திங்களும் துணையிருக்கும் மங்களகரமாய் உன்றன் பணி
சிறக்க ! மிக்க நன்றி வருகைக்கு .
ஆஹா வரவேற்பு ரொம்ப பலமா இருக்கேப்பா :) மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா...
Deleteஆஹா !
ReplyDeleteவலைச்சரத்தில் மீண்டும் [மாட்டியவர்] மஞ்சுவா !!!!!
மகிழ்ச்சியோ மகிழ்ச்சியாக உள்ளது.
மஞ்சூஊஊஊஊஊஊ ......... வெல்கம் !
ஆல் தி பெஸ்ட் ப்பா !!
அண்ணா :) இருக்கட்டும் இருக்கட்டும்... மாட்டினேனா :)
Deleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா.
வணக்கம்
ReplyDeleteஒருவார காலமும் தனது பணியை சிறப்பாக செய்த சுரேஷ் பாபு அவர்களுக்கு பாராட்டுக்கள் இந்த வாரம் பொறுப்பாசிரியராக வருகிற மஞ்சுபாஷிணி. அவர்களை அன்புடன் வலைச்சரப்பணிக்கு வருக வருக வென்று அழைக்கிறோம்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா ரூபன்
Deleteஇந்த வார வலைச்சர ஆசிரியராகப்
ReplyDeleteபொறுப்பேற்கும் மஞ்சு அவர்களுக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ரமணி சார்.
Delete
ReplyDeleteவலைச்சரம் பொறுப்பேற்க இரண்டாம் முறை ஆசிரியையாக வந்த சகோதரி திருமதி மஞ்சுபாஷினி சம்பத்குமார் அவர்களை வருக! வருக! என வரவேற்கிறேன்! வாழ்த்துக்கள்!
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் இளங்கோ சார்.
Deleteவாங்க... வாங்க... அசத்த மீண்டும் வாங்க சகோதரி...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
அசத்தவா? அச்சச்சோ.. அப்டி எல்லாம் எதுவும் இல்லப்பா.. :)
Deleteவலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பித்தமைக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள் சுரேஷ்
ReplyDeleteஆசிரியராக பொறுப்பேற்கும் திருமதி மஞ்சு சுபாஷினி சம்பத்குமார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா சரவணன்.
Deleteதங்களின் வருகைக்காகவும் பதிவுகள் அறிமுகத்திற்காகவும் காத்திருக்கிறோம்.
ReplyDeleteஅப்படியே ஐயா.. அன்பு வணக்கங்கள்.
Deleteசிறப்பாக இவ்வாரத்தை நிறைவு செய்தி ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.
ReplyDeleteசபாஷ் பாபு ...இல்லை இல்லை .. சபாஷ் ,சுரேஷ் பாபு !
ReplyDeleteதிருமதி மஞ்சு 'சபாஷ் 'ஷினி பாராட்டுப் பெற வாழ்த்துக்கள் !
ஆஹா சொல்லாடல் தொடங்கிட்டீங்களாப்பா? :) அன்பு நன்றிகள் பகவான் ஜீ.
Deleteகொடுத்த பணியைச் சிரமேற்கொண்டு
ReplyDeleteசெவ்வனே நற்செயலாற்றிய நண்பர் சுரேஷ் அவர்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்...
==
புதியதாக பொறுப்பேற்கவிருக்கும் அன்பிற்குரிய சகோதரி
மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்கிறேன்
அகமகிழ்வுடன்..
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் மகேந்திரன்.
Deleteநண்பர் சுரேஷ் பாபு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteஅன்பிற்குரிய சகோதரி
மஞ்சுபாஷிணி அவர்களை வரவேற்கிறேன்
மனம் நிறைந்த அன்பு நன்றிகள் சார்.
Deleteவாழ்த்துக்கள் சகோதரி! உங்கள் பணி சிறப்பாக தொடங்க வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா..
Deleteமஞ்சு பாஷினியினை வருக வருக என வரவேற்று வாழ்த்துகிறோம் ..!
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜனா...
Deleteசுரேஷ் குமார் பாராட்டுக்கள், அருமையான உங்கள் வாரத்தினை பார்வையிடுகிறேன்.மஞ்சு பாஷிணிக்கு வாழ்த்துக்கள்.தொடருங்கள்.
ReplyDeleteமனம் நிறைந்த அன்பு நன்றிகள்பா.
Deleteஅய் என் அக்காவா ? வாங்க வாங்க... சூப்பர்.
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் சுரேஷ்குமார் அவர்களுக்குப் பாராட்டுகள்....
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் மஞ்சுபாஷிணி அவர்களுக்கு வாழ்த்துகள்.
படிக்க ஆவலுடன்... மஞ்சுபாஷிணி..
ReplyDelete