Sunday, February 9, 2014

விடை பெறுதல்!

விடை பெறுதல்!

ஒருவார காலமாய் உடன் வந்தது
ஆசிரியப்பணி!
ஆசிரியப்பணி புதிதல்ல! எனக்கு!
ஆயிரம் மாணவர்களுக்கு மேல்
ஆண்டுகள் பன்னிரண்டு அழகாய் பாடம் பயிற்றுவித்தேன்!
அவனியில் அவர்கள் புகழ் மிளிர வைத்தேன்!
கையெழுத்துப்பிரதிகள் மூன்றின் ஆசிரியராய்
பதின்ம வயதில் பணியாற்றிய அனுபவம் உண்டு!
ஆயினும் முதல் முறை வலைச்சர ஆசிரியர் பணி!
நிறைவாய் செய்யவேண்டுமே! என்று கொஞ்சம் பதட்டம்!
பதிவுகள் கொட்டிக்குவிந்த இணையத்தில் தேடி
சில பதிவுகளை நாடி தேனாய் சேகரித்து உங்களிடம்
ஒப்படைத்தேன் ஒரு வாரம்!
தொடக்கம் இருந்தால் முடிவு இருக்கும்!
திங்களில் துவங்கிய என் பயணம் ஞாயிறில் முடிகிறது!
என் பணி சிறப்பாய் இருந்ததா செப்புங்கள்!
உங்கள் பின்னூட்டங்கள் என்னை ஊட்டும்!
தளிர் தழைக்கும்!

இன்று  கதம்பமாய் சில வலைப்பூக்களை காண்போம்!

வவ்வால் தலைகீழ் விகிதங்கள் என்ற வலைப்பூவில் எழுதும் முகமூடிப் பதிவர் இவரின் பதிவுகள் நிறைய அலசும் காக்க! காக்க! கணிணி காக்க!  கணிணி காப்பது குறித்து சொல்கிறது
ஊர்க்காவலன் என்ற வலைப்பூவில் எழுதும் என் எச் பிரசாத் தின் இந்த பதிவை படியுங்கள்!  பாட்டியின் வீட்டுக்கு அழைக்கிறார்!பாட்டி வீட்டு நினைவலைகள்

மலர்தரு என்ற தளத்தில் எழுதும் ஆசிரியர் மது பல நல்ல தகவல்களை பகிர்கிறார் அவரது இந்தப்பதிவு ஓர் ஆசிரியை அறிமுகம் செய்கிறது மாற்றத்தின் முகவர்கள்  

விளையாட்டு ரசிகர்களுக்கு இந்த தளம் மிகவும் உதவும். கிரிக்கெட் ரசிகனான இவரது இந்த பதிவு சாதனைகள்_ வேதனைகள் 

அழகிய நிலாச்சாறல் என்ற தளத்தில் எழுதி வரும் பிறைநிலாவின் இந்த கவிதையை வாசியுங்கள் ரசியுங்கள்! 

மூன்றாவது கண் என்ற தளத்தில் எழுதும் கைலாச சுந்தரம் படங்களை அழகாக பதிவிடுகிறார்.   குருவியின் அற்புத தருணங்கள்! இவரது உழைப்பை சொல்லுகிறது     
நிசப்தம் என்ற தளத்தில் எழுதுகிறார் பிரபல எழுத்தாளர் வா.மணிகண்டன் இவரது இந்தக் கதைஇன்றைய காதலை சொல்கிறது!ஒரு செம லவ்வும் சுமார் எதிரியும்!      
மோகனனின் வலைக்குடிலில் எழுதும் மோகன் இந்த பதிவில் நீர் உறிஞ்சும் வாட்டர் கம்பெனிகளையும் மரம் வெட்டுபவர்களையும் சாடுகிறது கல்லூத்துப்பட்டி ஆலமரம்   

மனதின் ஓசை என்ற தளத்தில் எழுதும் டினேஷ் சாந்த் கதைகள் நிறைய எழுதுகிறார். இவரது கதை கொலையாளி  

கவிதைச்சாலை என்ற வலைப்பூவில் எழுத்தாளர் ஜோசப் சேவியர் பல்சுவை எழுதுகிறார் இவரது கல்கியில் வெளியான பழைய காதலி கதையை வாசியுங்கள் குடும்ப வெற்றியின் ரகசியங்கள் இங்கு!  

நண்பேண்டா என்ற தளம் ஆங்கிலம் கற்க உதவுகிறது  ஆங்கிலம் கற்க உதவும் தளம்!

திரைஜாலம் என்ற தளத்தில் ராமராவ் திரைப்புதிர்கள் எழுதுகிறார்  திரைஜாலம் எழுத்துப்படிகள்           

இன்றைய வானம் என்ற தளத்தில் இந்த கட்டுரையை படியுங்கள்  அரசியல் நையாண்டி அழகிரிதான் அடுத்த தலைவர் என்று சொல்லுகிறார்.      

இலக்கியவட்டம்  எஸ்கே கார்த்திகேயன்,கே முருக பூபதி இணைந்து எழுதும் வலைப்பூ கூட்டு முயற்சி இதழ்          

இரயில் பயணங்களில் முருக பூபதி  தெருநாடக்கலை பற்றி விரிவாக சொல்கிறார்  இங்கு

யாருடா மகேஷ்? மகேஷ்பிரபு வெளிநாட்டு அழகை வர்ணிக்கிறார்

 அக்கரைச்சீமை அழகினிலே  அவரது குழந்தையின் கேள்வி இதுகூடத்தெரியாத அப்பா?

பட்டா சிட்டா அடங்கல் பதிவேடு வருவாய்த்துறை ஆவணங்கள் பற்றி ராம்கி என்பவர் விரிவாக விளக்கங்களுடன் பகிர்ந்துள்ளார்     

களர்நிலம் தளத்தில் ஆதித்த கரிகாலன் உலகசினிமா பதிவுகள் அவர் பார்வையில் எழுதுகிறார்        

ஆறுமுகம் ஐயாசாமி வேர்ட் பிரஸ் காமில் எழுதுகிறார் நாளைய தலைமுறை நம்ப மறுக்கும் என்று சாணம் கிடைக்காத தன் அனுபவம் பகிர்கிறார்      
  வேதாவின் வலையில் கோவைக்கவி கவிதைகள் எழுதி வருகிறார் இவரது இந்தக் கவிதை துணிவு  வரவழைக்கும்    
தூயத்தமிழ்ப் பேணும் பணி  தளத்தில்- யாழ்பாவாணன் தற்காலத் தமிழின் போக்கு  குறித்துக் கவலைப்படுகிறார்        

குழந்தைகளுக்கான வலைப்பூக்கள்! சில
சிறுவர் பாடல்கள் மதி  குழந்தைகளுக்கான பாடல்கள் கொட்டிக்கிடக்கின்றன இங்கு சிறுவர் பூங்கா பரஞ்சோதி தளத்தில் நிறைய கதைகள் குழந்தைகளுக்கு சொல்லக் கிடைக்கும். குட்டிக்கதைகள் என்ற தளத்தில் நா. உதயகுமார்  கொடுத்துப்பெறுவோம் என்கிறார்       
 தமிழ்பேசும் மக்கள்! தளத்தில் ரகுவர்மன் நாட்டுமாடு வளர்க்கும் கரூர் விவசாயி பற்றிய தகவல்கள்! சொல்கிறார்  சுகபிரசவம் ஏற்பட மருத்துவம் இங்கு       
Explore in experience தளத்தில் எழுதி வரும்  தீபக் திரைப் பாடல்களை விவரிக்கிறார்
எவனோ ஒருவன் யாசிக்கிறான் பாடலை காட்சிக்கு காட்சி விவரிக்கிறார்  இங்கு!

யாமிதாஷா நிஷா- அவன் ஆண் தேவதை தளத்தில் கவிதைகள் படைக்கிறார் கவிதை அவரது மௌனம் வேண்டாமே!
 தேவா சுப்பையா வாரியர் என்னும் தளத்தில் எழுதுகிறார் அவரின் இந்த பதிவை படித்தால் எழுத்து எவ்வளவு சுகம் என விளங்கும்  வாசியுங்கள்!

ஆனந்த விகடனில் எழுதிய எழுத்தாளர் சமஸ் சின் வலைப்பூ இது இந்த ஒருஜோடி  நெய்தோசை  தோசையை ருசித்துப்பாருங்கள்! 
ஆயுர்வேத மருத்துவம் என்ற தளத்தில் மருத்துவ குறிப்புக்கள் தருகிறார் முகமது இதை படித்துப்பாருங்கள் 

உங்களுக்காக என்ற தளத்தில் நிறைய மின்நூல்களை தரவிறக்கம் செய்ய லிங்குக்கள் கொடுத்துள்ளார். மின்நூல்கள்
ஜெயதேவ் பல்சுவை விஷயங்களை பகிர்கிறார் இணையத்தில் கிடைக்கும் படங்களை பார்ப்பது பற்றி இங்கே  இணையத்தில் படங்களை பார்த்தல்

உலக சினிமா ரசிகன் உலகப்படங்களையும் தமிழ்படங்களையும் அலசுவார் கமலின் தீவிர ரசிகர் இவரது சினிமா ஆர்வம் வியக்கவைக்கும் இதோ இந்த பதிவு  டாப் 5 தமிழ் சினிமா

ஆத்மா என்ற தளத்தில் எழுதும் இவரின் இந்தப்பதிவை சந்தோஷமாக வாசியுங்கள் 

கோவை கமல் தளத்தில் எழுதும் ரமேஷ் வெங்கடபதியின்   இந்தப்பதிவை வாசியுங்கள் 

சிவகாசிக்காரன் தளத்தில் ராம் குமார் சிறுகதைகள் எழுதுகிறார் இவரது இந்தக் கதை உண்மை சம்பவமாம் படியுங்கள்  சிறுகதை

தனிமரம் நேசன் எழுதும் இந்த தொடர் இலங்கை படுகொலைகளை காட்சிப்படுத்தி என்னமோ செய்கிறது  

தென்காசி தமிழ்ப்பைங்கிளியின் இரண்டே வரிக்கவிதை மனதை காயப்படுத்துவது நிஜம்! குறுங்கவிதை

நற்கூடல் தளத்தில் எழுதும் அனந்தபத்மநாபன் நாகராஜன் ஆன்மீகப்பதிவுகள் சிறப்பானவை இதை படியுங்கள்  சொக்கநாதரின் லீலைகள்

பஜ்ஜிக்கடை முத்தரசுவோட வலைப்பூ இந்த பதிவினை படிச்சு   சிரிச்சுக்கிட்டே இருங்க

எழுத்தாளர் ஞானியின் வலைப்பூ இது! இதைப்படித்துப்பாருங்கள்!


நிறைவாய் விடைபெறுகிறேன்!  வலைதளங்களுக்கு செல்வதோடு மட்டும் அல்லாமல் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்! அது அந்த வலை தளங்களை வாழ வைக்கும்! நிறைய வலை தளங்கள் பார்வையாளர்கள் இல்லாமையால் தொடர்ந்து எழுதப்படாமல் இருப்பதை இந்த வலைச்சர தேடல் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. வாசகர்களே! நிறைய தேடிப்படியுங்கள்! அது உங்களின் எழுத்தாற்றலை மேலும் வளர்க்கும்.  விடைபெறுமுன் இந்த ஆசிரியப்பணிக்கு வாய்ப்பளித்த அன்பின் சீனா ஐயாவிற்கும் வலைச்சர குழுவினருக்கும் இத்தனை பதிவுகளையும் இந்த பதிவினையும் வந்து வாசித்து கருத்திட்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!

 

 

 





21 comments:

  1. இன்றைய அறிமுகங்களை பார்த்து விட்டு வருகிறேன்...

    ReplyDelete
  2. ஆகா சுரேஷ் வலைச்சர ஆசிரியராக இத்துணை தளங்களை வாசிப்பது அவசியம் என்று புரிய வைத்தது.. உங்கள் பதிவு
    எனது பதிவினை அறிமுகம் செய்ததற்கு நன்றி..

    ReplyDelete

  3. நண்பேன் டா, coova alaguraja, சுந்தரவடிவேல், Raghu Varman, Deepak, - இந்த 5 தளங்களும் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    இலக்கியவட்டம் தளம் இனிமேல் தான் ஆரம்பிக்கும்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. ஒவ்வொரு நாளும் பல தளங்களை தொகுத்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  5. என் வலைத்தளத்தினை அறிமுகப்படுத்திய சுரேஷ் அவர்களுக்கும் இத்தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளதினை எனக்கு தெரிவித்த திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் மிக்க நன்றி.
    கைலாசசுந்தரம்

    ReplyDelete
  6. அருமையான புதிய அறிமுகங்கள். ஒவ்வொரு நாளும் மிக அருமையாக செதுக்கி வலைச்சர ஆசிரியர் பொறுப்பை செவ்வென செய்து முடித்த தங்களுக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
  7. கொடுக்கப் பட்ட பணியை செம்மையாக செய்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. பல பிரபல எழுத்தாளர்கள் மத்தியில் ஒன்றுக்கும் உதவாத இந்தச் சின்னஞ் சிறியவனையும் அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி சார்..
    பணியைச் சிறப்பாக செய்துள்ளீர்கள்
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. மெய் சிலிர்க்க வைக்கின்றது ! கொடுத்த பணியைச் சிரம்மேல் கொண்டு
    வெகு சிறப்பாகவும் கச்சிதமாகவும் முடித்துள்ளீர்கள் சகோதரா மேலும்
    மேலும் இந்த ஆசிரியர் பதவியை ஏற்றுக் கொள்ளும் வாய்ப்பு தங்களுக்குக்
    கிட்டிடவும் அன்பு கலந்த நல் வாழ்த்துக்களையும் நன்றியினையும் தெரிவித்துக்
    கொள்கின்றேன் .இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய நல்
    வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. என் வலைதள அறிமுகத்திற்கு மிக்க நன்றி..சுரேஷ் சார்!

    ReplyDelete
  11. நிறைய தளங்களை இன்று அறிமுகப்படுத்தி, மன நிறைவோடு விடைபெறும் அன்பர் சுரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. பல தளங்களை அறிமுகப்படுத்தி இனிதாய் அருமையாய் ஆசிரியப்பணியை நிறைவேற்றிய உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் சுரேஷ்!

    ReplyDelete
  13. பல ஜாம்பாவங்கள் மிளிரும் வலைச்சரத்தில் தனிமரத்தையும் வலையேற்றியதுக்கு நன்றி சுரேஸ்!

    ReplyDelete
  14. மிகவும் பலதேடல்கள் கொண்டு மிகவும் சிறப்பாக வலைச்சரத்தை தொகுத்து இருந்தீர்கள் இவ்வாரம் வாழ்த்துக்கள் சுரேஸ்!

    ReplyDelete
  15. தகவல் தந்த தனபாலன் சாருக்கும் நன்றிகள்

    ReplyDelete
  16. பிரமிக்க வைத்த வாரம்

    ReplyDelete
  17. சிறப்புற ஆசிரியப்பணி ஆற்றிய உங்களுக்கு
    என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே..

    ReplyDelete
  18. தங்களின் இந்த ஆசிரியப்பணி மூலம் நிறைய வலைத்தளங்களின் அறிமுகம் கிடைத்துள்ளது. அதற்கு முதலில் நன்றி.
    வாழ்த்துக்கள் சுரேஷ்.

    ReplyDelete
  19. நன்றி தோழர்களே...

    ReplyDelete
  20. எனது பதிவை அறிமுகபடுத்திய ஆசிரியர் சுரேஷ் அய்யா அவர்களுக்கும், எனக்கு தெரியபடுத்திய தனபாலன் அண்ணாவுக்கு பெரிய நன்றிகள்....

    ReplyDelete
  21. ஒரு வாரம் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்குப் பாராட்டுகள். த.ம. +1

    ReplyDelete