Monday, March 10, 2014

நீங்களும் கருவாச்சியும் ...

அனைவருக்கும் வணக்கம் !!




அனைவரும் நல்ல சுகமோ ??
கருவாச்சிய எல்லாருக்கும் தெரியும் தானே ??? என்னாது தெரியாதா?? ஒரு பிரபல பதிவர தெரியாமலா இத்தனை நாள் பதிவுலகில இருந்தீங்க ...சரி பாவம் உங்க எல்லாரையும்,மன்னிச்சு!!மன்னிச்சு!!..பதிவுலக பெருமக்களே!! இந்த பொன்னான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கருவாச்சி யாரெண்டு அறிந்து பயனடையுங்கோ..இந்த அரியதொருவாய்ப்பு ஒருவார காலம் மட்டுமே இருப்பதால் மக்கள் அனைவரும் ஏழு நாட்களுக்கும் தங்களது ஆபிஸ் கல்லூரி பாடசாலைக்கு முக்கியமா முகநூலுக்கு உடனே லீவ் லெட்டர் கொடுத்துட்டு ”வலைச்சரமே சரணம்”நு இருக்கோணும்...இங்க யாராவது பால்வாடி போறவங்க இருந்தாலும் அவங்களும் லீவ் லெட்டர் கொடுத்துடுங்கப்பா அப்புறம் அவவுக்கு தனியா சொல்லலைன்னு சண்டைக்கு வந்துடுவீங்க ..


என்னை பற்றி சொல்லனும்னா நாமலாம் பெரிய கோவக்காரி (நான் பிறந்ததும் ஒருவருஷமா எங்க அம்மா அப்பாகிட்ட கூட பேசினதில்லை தெரியுமா) கொஞ்சம் குணத்துக்காரி நிறைய தைரியம் இருக்கும் தன்னம்பிக்கை அதை விட அதிகமாக இருக்கும்.அம்மா அப்பா வைச்சி போட்ட பெயர்தானுங்க கலைச்செல்வி... எங்க குடும்பத்துல நாளு பேருங்க ..அம்மா, அப்பா அப்புறமா என் அண்ணன்...வீட்டுக்குள்ளயே நமக்கு எதிரிகள்படை கொஞ்சம் அதிகம்..அப்பாவோட கூட்டணியால தான் என்னோட சுதந்திரம் எதிர்கட்சியிடம் (அம்மா அண்ணன் தானுங்கோ) பறி போகாமல் உள்ளது..


வலையுலகத்தில நம்ம பேரு கருவாச்சி,வாத்து ..உங்க விருப்பம் இதுல எத வைத்து என்னை  அழைத்தாலும் எனக்கு ஓகே...நம்ம ஊரு எல்லாருமே இலங்கை நு தான் நினைச்சிக்கிராக..ஏன்னா நமக்கு மாமா அண்ணா அக்கா ன்னு நிறைய சொந்தங்கள் இலங்கையே ...வலையில் நான் புதிதா வந்தபோது எனக்கு இந்திய நண்பர்களே கிடையாது அனைவரும் ஸ்ரீலங்கா தான் .. இலங்கை தமிழர்களுக்கு பாசம் அதிகம் அதனாலேயே அங்கேயே செல்லைப் பிள்ளையா இருக்கிறதுன்னு முடிவு பண்ணிட்டேன்..ஆனா நம்ம ஊரு நெல்லை சீமையும் சிங்காரச் சென்னை யும் தான்..

நம்ம ஊரில கொஞ்சம் மழை பெய்யும் அதுக்காக பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்க போயி படிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட அப்பாவிப்பெண் நான்..என்னை பார்த்து பள்ளிக்கூடம் போனியாக்கும் நு கேட்ட மகி அண்ணாக்கேள்விக்காகவே ஒரு பதிவு எழுதி இருக்கேன் (இப்போவாதுநம்புங்கோநானும் இஈஈஈஸ்கூல்லுக்குபோன்னினான்)

சென்னை அண்ணா பல்கலைகழத்தில் முது அறிவியலில்இயற்பியல் முடித்து இருக்கேன் இப்போ எனக்கு வேலைகொடுத்து இருக்க முதலாளி MR.மார்க் தான் அவரோட facebook கம்பெனில தான் முழுநேரமா உசுரைக் கொடுத்து வேலை பார்க்கிறேன்.அதுப் போக மீதமிருக்கநேரத்துல பகுதி நேரமா ஒருக் கம்பெனி ல இயற்பியல் வல்லுனரா வேலை பார்த்துட்டு வருகிறேன்..எனது லட்சியம் இயற்பியலில் ஆராய்ச்சி படிப்பை தொடர வேண்டும் என்பதே.. எனது கனவு கனவாகுமோ இல்லை நினைவாகுமோ என்று காலம் பதில் சொல்லும் ..

என்னோடபொழுதுபோக்குன்னா (நல்லாசாப்பிடுறது படுத்து தூங்குறது-இப்படிலாம் சொன்னா இமேஜ் டமேஜ் ஆகிடும் புள்ள கத விடு கத விடு- மனசாட்சி) கொஞ்சம் படிக்கிறது நிறையப் புதுப் புது இடங்களை சுற்றிபபார்ப்பது,புதுமனிதர்களுடன் பழகி அவவின் வாழ்க்கை முறைகளை அறிந்து கொள்வது..

நானும் வலைச்சரம்ன்னு சொன்னா ரொம்ப நாளா எழுதுறேன் ஆனா உருப்படியா ஒன்னும் எழுதல...உங்க பார்வைக்கு கொஞ்சம் வைக்கிறேன் படிச்சிட்டு என்ன திட்டனுமோ அத பொதுவில திட்டி போடுங்க..நம்ம ப்ளாக் எழுத வரும்போதே சூடு சொரனை எல்லாத்தையும் மூட்டை கட்டி வைச்சிட்டு வந்திருப்பதால எம்புட்டு திட்டினாலும் எனக்கு தான் வலிக்கவே வலிக்காதே (அம்புட்டு நல்லவளா டா நீ )!!

இதுதான் என்னோட முதல்கவிதைங்க,"என்னை மன்னித்து விடு சகோதரி" ன்னு...மனசை ரொம்ப நெருடிய சம்பவம் இன்றும் நினைத்தால் மனசில் பாரம் வந்து சேரும்.

எனக்கு நெண்டு அம்மா நெண்டு அப்பா இருக்கே ன்னு பள்ளிப் பிள்ளைகளிடம் சொல்லி பெருமைக் கொள்வதுண்டு ...யாருன்னு நீங்களே பாருங்க ..

சரி வாங்க கொஞ்சம் வெளிய ஊரு சுற்றிப் பார்த்துட்டு வருவோம் ..
இதாங்க நம்நாட்டு கோனார்க் சூரியக் கோவில்ரொம்ப அழகான இடம் பதிவை படிச்சி பாருங்க..

விடுமுறையில நல்ல என்ஜாய் பண்ணனும் நினைச்சீங்க எண்டா துருக்கி ல அன்டால்யா நல்ல டூரிஸ்ட் ஸ்போட்.ஐரோப்பிய நாடுகளை ஒப்பிட்டு பார்க்கையில் இங்கு செலவு ரொம்ப குறைவு .நம் நாட்டு குடிமகன்களுக்கு பொழுது போக்க சிறந்த இடம்..

எனக்கு ரொம்ப புடிச்ச ஊரு சுவிசர்லாந்துஉம் பின்லண்ட்உம்.கோடைப் பொழுதுகள் நீண்ட பகலாகவும்  குறைந்த இரவாகவும் குளிர் காலங்கள் குறைந்த பகலாகவும் நீண்ட இரவாகவும் காட்டியது எனக்கு ஒரு இனிய அனுபவம் ..அப்புறம் குட்டிஸ் குட்டிஸ் லாம் pair pair ஆ சுற்றி கடுப்ப்ஸ் கிளப்பினது சோகக் கதை..

வார்த்தையால சொல்ல முடியாதா உணச்சி பூர்வமானஅனுபவம் ஆல்ப்ஸ் மலைத் தொடர்களுக்கு சென்றது பனி மலைகளுக்குள் பனியாகி உருகிய நாட்கள் அவை ...

கல்லில் கடவுளை காண்பதை விட மனிதரில் தெய்வத்தை தேடுகிறேன். இந்த தாயும் கடவுள்தான்

 நாங்களும் காதல் கவிதை எழுதுவோம்ல .( இதுலாம் சும்மா ஒருக் கற்பனை தானுங்கண்ணா..இதுக்குலாம் கருக்கு மட்டை தூக்கிடாதிங்கோ ரீ  ரீ அண்ணா)

 நிறைய பதிவுகள் எழுதணும் உங்களை எல்லாம் என் பதிவை படிக்க வைத்தே தற்கொலைக்கு தூண்டனும் நு நிறைய ஆசை இருக்கு ...ஆனால் உங்கள் நல்ல நேரம் பாருங்க எனக்கு நேரமே கிடைக்கிறதில்லை எழுதுறதுக்கு..பார்ப்போம் இனிமேலாவாது பதிவை ஒழுங்கா எழுதி  உங்க உசுரை வாங்குறனாஎன்று ...

சரிப்பதிவர்களே!!இன்னைக்கு உங்களிடமிருந்து நான் இப்போ கிளம்புற நேரம் வந்துடுச்சி...எங்கயும் போய்டாதிங்க..ப்ளொக்ஸ்அ படிப்படின்னு படிச்சிட்டே இருங்க ..நாளைக்கு நிறைய புத்தம் புதிய ப்ளாக் களுடன் மீண்டும் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெருவது உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை உங்களன்பு கலை...டோன்ன்ட்ட டோஇங்..... 


 . 

74 comments:

  1. அன்பின் கருவாச்சி -நல்ல தொரு துவக்கம் - மேன் மேலும் சிறப்புடன் நடை போட நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள அய்யாவுக்கு ,வணக்கம் ...எல்லாம் தங்கள் ஆசிர்வாதமே ...அன்புடன் கலை

      Delete
  2. அருமையான துவக்கம். வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா

      Delete
  3. வாழ்த்துக்கள் கலை !! இந்த வாரம் முழுதும் உங்களோடு பயணிக்க நாங்க ரெடி :)
    எல்லா அண்ணாக்கள் அக்காக்கள் சார்பாக அன்புடன் அஞ்சு அக்கா .

    ReplyDelete
    Replies
    1. அஞ்சு அக்க்காஆஆஆஆஆஆஆஆஆஅ ,,, கொஞ்சம் பயமாத்தான் இருந்தது ஆனாலும் இதுவும் ஒரு அனுபவம் தானே ன்னு கண்ணை மூடி குதிச்சிட்டோமோல

      Delete
  4. ரசிக்க வைக்கும் சுய அறிமுகம்... மேலும் அசத்த வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க சார் ...

      Delete
  5. ஆஹா .......நம்ம நாட்டுக்கு வந்து போகும் பிள்ளையின் மனதில்
    எத்தனை அனுபவங்கள் ! மீண்டும் சுவிஸ் நாட்டிற்கு வரும் போது
    என்னை மறவாதீர்கள் தோழி ! இன்றைய சுய புராணம் போல்
    அடுத்துத் தொடரவிருக்கும் அணி வகுப்புக்களும் சிறப்பாகத் தொடர
    வாழ்த்துக்கள் தோழி .

    ReplyDelete
    Replies
    1. சுவிட்சர்லாந்த் எனக்கு இன்னொரு அம்மா வீடு மாறி தான் அக்கா ...மாசத்துக்கு ஒருக்கவாது வரும் வாய்ப்பு கிடைத்தது பாக்கியம் ..ஆனால் குறுகிய நாட்கள் வேலைப் பளு வால காண முடியாமல் போவதற்கு வருந்துகிறேன் ...அடுத்த மாதம் வரும்போது கண்டிப்பாக பார்க்க முயற்சிக்கிறேன் ...

      Delete
  6. படித்த அறிமுகங்களில் வித்தியமாசமான அறிமுகம் உங்களுடையது. நேரில் பேசுவதைப்போல இருக்கிறது உங்களின் எழுத்துக்கள். வருக. வருக.

    ReplyDelete
    Replies
    1. நிசமாத்தான் சொல்லுறிங்களா சார் .... உங்க நல்ல மனசுக்கு நன்றி

      Delete
  7. சிறப்பான சுய அறிமுகம்... வாரம் முழுவதும் தொடருங்கள் சகோ...

    ReplyDelete
    Replies
    1. ஹும்ம்ம் ....நான் தொடர்கிறேன் ...நீங்க வாரம் முழுவதும் லீவ் போட்டுவீட்ட்ர்கள் தானே

      Delete
  8. உங்க நல்ல நேரமோ எங்க நல்ல நேரமோ - வந்தது வந்துட்டோம்!..
    கூடவே - உங்க வீட்டு செல்லப்பிள்ளை ... ன்னு வேற சொல்லிட்டிங்களா!..

    ReplyDelete
    Replies
    1. ஏதோ தலை எழுத்து கலைக் கிட்ட வந்து மாட்டிட்டேன் ன்னு சொல்லுற மாறியே இருக்கு ...வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க ...

      Delete
  9. துவக்கமே அதிரடியா இருக்கே கலை....

    சூப்பர்.... தொடருங்கள்//

    ReplyDelete
    Replies
    1. நான் எவ்ளோ கேவலமா ஏழுதப் போறானோன்னு பயந்தீங்க தானே ....


      ம்ம்ம்ம் தொடர்வோம்

      Delete
  10. அன்பின் கருவாச்சி!
    அறிமுகம் அமர்க்களம் அசத்திடீங்க என்னை.
    உங்க வேண்டுகோளின் படி லீவு லெட்டர் கொடுத்தேன் ஆனால் அவங்க மாட்டேன்னு சொல்லிட்டாங்க. என் தூக்கத்தை கொறைச்சுகிறேன் எல்லாம் உங்க திருப்திக்காக தான்.
    அசத்துங்க ஆவலோடு காத்திருக்கிறேன். நன்றி வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. ஹாய் இனியா ,
      அறிமுகம் அமர்க்களம் அசத்திடீங்க என்னை.
      உஸ்ஹ்ஹ உண்மையா சொல்றிங்க ...இதை கேட்கத்தானே என் காதுகள் கடுந்தவம் இருந்தன

      நீங்க தான் சமத்துப் பொண்ணு சொன்னபடி லீவ் கேட்டு இருக்கீங்க ,..

      நன்றி இனியா தோழமையான கருத்துக்கு

      Delete
  11. கடவுள் நீ என்ற உங்கள் பதிவை உங்கள் வலையில் பார்த்தேன்.

    படித்து முடித்து
    பல நிமிடங்கள் கடந்தன எனினும்
    பிரமிப்பு அடங்கவில்லை.

    என்றோ
    எழுபத்து மூன்று வருடங்களுக்கு முன்பு
    என்னைச் சுமந்த என் அன்னை
    என்
    நினைவுக்கு வந்தாள்.

    என் கண்களை
    நனைத்தாள்

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம் உங்கள் உணர்வுக்கு நான் தலை வணங்குகிறேன் அய்யா ...ரொம்ப நன்றி

      Delete
  12. வலைச்சரம் தொடுப்பதற்கு
    வளமான வாழ்த்துகள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க அக்கா

      Delete
  13. கலை!.. நீங்க... இஸ்கூல் போனதாக - எழுதிய பதிவில் இப்படி இருக்கு!..

    //..(பாடம் ஏதும் படிக்காம ) சந்தோசமா இருக்கும் போதே -
    யாரோ சூனியம் வைத்து பன்னிரெண்டாம் வகுப்புக்கு சேர்த்து விட்டாங்க!..//

    ஆகா!.... எவ்வளவு பெரிய நல்ல காரியம் செஞ்சிருக்காங்க!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹ்ஹா ...நாமளே அந்த சூனியம் வைச்ச ஆளை தான் இன்னும் தேடிட்டு இருக்கோம் ...

      ஒழுங்கா படிக்காம இருந்தா எதாவது ஒரு ஊர்ல சோறு குழம்பு வைச்சி ஜாலி யா இருந்து இருபேன் ...

      இப்போ பாருங்க படிப்பு வேலை அது இதுன்னு ...இதுலாம் தேவையா எனக்கு ??

      மிக்க நன்றிங்க வாழ்த்துக்கு

      Delete
  14. நான் பிறந்ததும் ஒருவருஷமா எங்க அம்மா அப்பாகிட்ட கூட பேசினதில்லை தெரியுமா
    >>
    அந்த ஒரு வருசம்தான் உங்க அப்பாவும், அம்மாவும் நிம்மதியா இருந்தாங்களாமே! நிஜமா!?

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ ராஜி அக்கா .... நீங்க சொல்லுறது முற்றிலும் உண்மை தான் நாம சின்ன வயசுல இருந்தே அப்படி தான் ...

      Delete
  15. என்னை பற்றி சொல்லனும்னா நாமலாம் பெரிய கோவக்காரி (நான் பிறந்ததும் ஒருவருஷமா எங்க அம்மா அப்பாகிட்ட கூட பேசினதில்லை தெரியுமா) - அருமை! மிக இயல்பான இதுவரை நான் கேட்டிராத நகைச்சுவை.. தொடர்நது உங்கள் எழுத்துகளைப் படிக்கத்தூண்டும் எழுத்தின் ஒரு சோற்றுப் பதம். தொடர்க.. தொடர்வேன் நன்றிம்மா.

    ReplyDelete
    Replies
    1. அய்யா இத மட்டும் படிச்சிட்டு நீங்க தப்பான முடிவுக்கு வந்துடீங்க ....இன்னும் ஒருமுறை நல்லா யோசிசிகொங்க ..அப்புறம் பின்விளைவுக்கு கம்பெனி பொறுப்பு ஏற்காது ... நன்றிங்க அய்யா வாழ்த்துக்கு ...

      Delete
  16. கருவாச்சிக் கலையா
    நம்ம கலையா
    எங்கோ ஓர் தளத்தில்
    தங்கை கலை என்று
    படித்த நினைவு
    "என் பதிவை படிக்க வைத்தே
    தற்கொலைக்கு தூண்டனும்நு
    நிறைய ஆசை இருக்கு" என்கிறியள்
    தொடருங்கள்
    வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தமிழ்தோட்டத்தில் பவனி வரும் உலகத் தமிழர்களின் ஒரே தங்கைத் தாரகை தங்கை கலை தான் நானு..வாழ்த்துக்கு நன்றிங்க யாழ்பாவணன் அய்யா

      Delete
    2. அப்படியா!
      தொடருங்கள் தங்கச்சி
      நானும் உங்கட்சி
      வாழ்த்துக்கள்!

      Delete
  17. இனிமையான தன்னடக்கத்துடன் அறிமுகம். தொடரட்டும் பணி.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா ஆஆஆஆ அண்ணா ஆஅ .....இதுக்கு பேரு தான் தன்னடக்கமா ??? வாத்து உங்கள் தங்கை அல்லவா அதான்

      Delete
  18. நல்ல அறிமுகம்..இவங்க திருநெல்வேலியா இலங்கையானு யோசிச்சேன்..பதிலும் சொல்லிட்டீங்க.. :)
    உங்க தளம் வருகிறேன்.
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டுபிசிடீன்களா ...சூப்பர் .....வாழ்த்துக்கு நன்றிங்க

      Delete
  19. அறிமுகத்துக்கு எனை அறிமுகப்படுத்திக்கொள்கிறேன்...ஹஹஹ வாழ்த்தக்கள் பா.. தொடருங்க தொடர்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க....யாரவது தெரிந்தவர்கள் பார்க்கும் பொது கொஞ்சம் தெம்பு தான் ...நன்றிங்கம்மா தொடர்ந்து வருகை தாருங்கள்

      Delete
  20. // 10.03.2014 முதல் ஆசிரியப் பொறுப்பேற்பவர்

    "கருவாச்சி கலை" //

    என்னடா இது வலைசரத்துக்கு வந்த சோதனை..?!!

    :) :) :)

    நீ கலக்கு கலை..!! All the Best..

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ திருவாளர் வெங்கட் அவர்களே,

      என்னடா இன்னும் நம்மள யாரும் அசிங்கப் படுத்தவில்லையேன்னு நினைச்சேன் ...


      அடியேனின் அடைமொழியை பார்த்ததும் தான் கொஞ்சம் நிம்மதி கிடைத்தது ...

      Delete
    2. // என்னடா இன்னும் நம்மள யாரும் அசிங்கப் படுத்தவில்லையேன்னு நினைச்சேன் ... //

      இப்ப நான் உன்னை அசிங்கப்படுத்திட்டேன்..
      அதனால நீ நாளையில இருந்து வலைசரத்துல
      எழுத மாட்டே.. அப்படித்தானே...

      பாருங்க மக்களே.. உங்களை எல்லாம் நான் காப்பாத்திட்டேன்... :) :)

      Delete
  21. // இவங்க திருநெல்வேலியா இலங்கையானு யோசிச்சேன்..பதிலும் சொல்லிட்டீங்க.. :) //

    இவங்க பேசற தமிழை வெச்சி அப்டி யோசிச்சீங்கலாக்கும்..

    நம்ம கலை.. பேசும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ற
    பார்ட்டியாச்சே... :)

    ReplyDelete
    Replies
    1. நாங்கலாம் குயந்தபுள்ளக அப்படித்தான் தத்தை தமிழில் பேசுவோம் ...அதை எல்ல்லாம் கேக்க நீங்க கொடுத்து வைச்சி இருக்கோணும் ...

      Delete
  22. இந்த வாரம் - வலைச்சரம் ஆசிரியையாகப் பொறுப்பேற்ற சகோதரி கிராமத்துக் கருவாச்சி - கலை செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு மிக்க நன்றிங்க அய்யா

      Delete
  23. வணக்கம் தங்கை கலை! தமிழ் தோட்டத்தில் சந்தித்தது! மிக நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் இந்த வலைச்சர சந்திப்பு! அறிமுகம் அருமை! தொடருங்கள்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அண்ணா தமிழ் தோட்ட நிகழ்வுகள் அனைத்தும் பசுமையானவை கல்லூரி நாட்கள் போன்றவை ...மீண்டும் அந்த காலங்கள் வராதோ

      Delete
  24. வணக்கம் சகோதரி
    அறிமுகம் செய்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துகள். தங்களின் எழுத்து நடை ரசிக்க வைக்கிறது. வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துகளும். நன்றி சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. தல அஅஅஅ !! நீங்கதான் தல சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குறிங்க பின்னூட்டத்துல !!!எப்பவுமோ நீங்க இப்படித்தானா இல்லை இப்படித்தான் எப்போவுமா ....உங்கட கடமை உணர்சிக்கு கட்டுப்பட்டு கண்கலங்கி நிக்குறேன் பாஸ் ...

      வருகைக்கு நன்றிங்க ...நான் இன்னைக்கு சுய அறிமுகம் பண்ணி இருக்கேன் நினைக்கேன் பாஸ் ...யாரையும் இந்த பதிவுல அறிமுகப் படுத்தவில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள இந்த சந்தர்பத்தில் விழைகிறேன் ...

      Delete
  25. Replies
    1. ஆமாம் அருண் திரும்படி வந்துட்டேன் ...நான் அலைகடல் ஓடி போனாலும் என் தாய் மக்கள் கொண்ட அன்பின் பால் மீண்டும் வந்துவிட்டேன் ..

      Delete
  26. தங்கையின் அலப்பறை அடிச்சு தூள்கெளப்புடா

    ReplyDelete
    Replies
    1. அடிப்போம் சிக்ஸ்சரு அண்ணா ....அலப்பறையா பண்ணி இருக்கேன் ...அவ்வ்வ்வவ்வ்வ் ...அன்புக்கு நன்றி அண்ணா ....

      Delete
  27. கலக்கலான துவக்கம்...
    அடிச்சு ஆடுங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார் ...

      அடிச்சி தூள் கிளப்புவோம் ...

      Delete
  28. தல அஅஅஅ !! நீங்கதான் தல சும்மா கலக்கு கலக்குன்னு கலக்குறிங்க பின்னூட்டத்துல !!!எப்பவுமோ நீங்க இப்படித்தானா இல்லை இப்படித்தான் எப்போவுமா ....உங்கட கடமை உணர்சிக்கு கட்டுப்பட்டு கண்கலங்கி நிக்குறேன் பாஸ் ...

    வருகைக்கு நன்றிங்க ...நான் இன்னைக்கு சுய அறிமுகம் பண்ணி இருக்கேன் நினைக்கேன் பாஸ் ...யாரையும் இந்த பதிவுல அறிமுகப் படுத்தவில்லை என்பதை மிகவும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்ள இந்த சந்தர்பத்தில் விழைகிறேன் ...//வாத்து அண்ணாச்சி பாண்டியன் சார் கடந்தவார பதிவை படித்துவிட்டு அவசரத்தில் அந்த வாரம் என் நினைத்து இந்த வார் உன் பதிவில் பின்னூட்டம் இட்டு இருக்கலாம் !!அவதானம் பிரதானம் இந்த ஆசிரியர் பணியில்!ஹீ நோ டென்சன் வாத்து !நோ மூக்கில் குத்து !ஹீப்இது ப்ல்லாயிரம் பதிவர் பொது மேடை தாயி!ம்ம் தொடர்வேன் கருக்குமட்டையுடன்!ஹீ கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா நான் அவவை பேரை போடமா அதுக்கு பதிலா உங்க பேரை போட்டு பதிவு போடப் போறேன் அண்ணா ....கருக்கு மட்டை பார்த்து கண நாள் ஆச்சி ....ஹிஹ்ஹீ

      Delete
  29. பதிவை தமிழ்மணத்தில் இணைப்பதன் மூலம் வாத்து எத்தனை பேரை நிஜமாக அன்பில் மேய்க்கின்றது என்பதையும் அறியும் ஒரு சந்தர்ப்பம் இந்த வாரம் ! இதை கிரீக்கட்போல நினைத்து அடித்து விளாசு!ஹீ

    ReplyDelete
    Replies
    1. அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் ...கிரிக்கெட் மாரியோ ...எனக்கு கிரிகெட் விளையாட தெரியாதே ....அப்போ நான் அவ்ளோதானா புட்டுப்பேனா ....அன்புக்கு நன்றி அண்ணா ...மாமாதான் வரமா இருக்குறது எனக்கு கஷ்டமா இருக்கு

      Delete
  30. கா...........க்...........கா....... அன்பு வாழ்த்துகள்டா குட்டிம்மா !

    ReplyDelete
    Replies
    1. அக்க்காஆஆஆஆஆஆஆஆஆஅ பாருங்கோ அக்கா எனக்கு வந்த சோதனைய..

      ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்குக்கா நீங்க வந்தது

      Delete
  31. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கனா

      Delete
  32. அறிமுகத்தை அழகாப் பண்ணிட்ட இளவரசி! தொடர்ந்து இந்த வாரம் பூரா கலகலப்பா எங்க எல்லாரையும் வெச்சிருக்க மகிழ்வான நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அங்கிள் என்னாலான முயற்சி செய்வேன்

      Delete
  33. வணக்கம்,'வலைச்சர' ஆசிரியை அவர்களே!நலமா?///இந்தத் தளம் அடிக்கடி வருவதில்லை.எப்போதாவது.........இன்று என்னவென்றே தெரியவில்லை.போ....போ....என்று.....பிள்ளையார் அனுப்பினார் போலும்!.அறிமுகப் படலம் நன்று.தொடர்வேன்.பேசலாம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மாமா ....நான் நலமே நீங்க ....பிள்ளையார் அனுப்பினாரா மெயில் எதுவும் பார்க்கலையோ ...தொடரலன்னா அவ்ளோ தானே நீங்க ..நன்றிங்க மாமா

      Delete
  34. ஹேமாTue Mar 11, 04:34:00 AM
    கா...........க்...........கா....... அன்பு வாழ்த்துகள்டா குட்டிம்மா !////வன்மையாகக் கண்டிக்கிறேன்!

    ReplyDelete
  35. பால கணேஷ்Tue Mar 11, 07:37:00 AM
    அறிமுகத்தை அழகாப் பண்ணிட்ட இளவரசி! தொடர்ந்து இந்த வாரம் பூரா கலகலப்பா எங்க எல்லாரையும் வெச்சிருக்க மகிழ்வான நல்வாழ்த்துகள்!////சார்.........இது (இளவரசி)உங்களுக்கே கொஞ்சம் ஓவராத் தெரியல?

    ReplyDelete
  36. வேற வழி.. நானும் லீவூ.. லெட்டர் எழுதிக்கொடுத்திட்டேன். ரொம்ப அழகா ரசிக்க வச்சுட்டீங்க உங்க எழுத்தின் மூலமாக.. சூப்பர் கருவாச்சி

    ReplyDelete
  37. நல்ல துவக்கம். தொடர்ந்து சந்திப்போம்....

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete