காலையிலேயே நம்ம பிரபல வலைப் பதிவாளரின் அழைப்பு,
“சொல்லுங்கண்ணே!! நேத்து நம்ம பதிவபடிச்சீகளா, ஊருக்குள்ள என்ன சொல்லிக்கீராக”
“அதுவாம்மா “யாருயா அந்தப் புள்ள கிறுக்குத்
தனமா எழுதுது” ன்னு கேக்குராக,அதாவது பரவல்லாம்மா முக நூலில கருவாச்சி லாம் ஒரு
பதிவராயா ன்னு கிழிகிழி ன்னு கிழிக்கிறாங்கமா”
“அவ்வ்வ்வவ்வ்வ்வ் ,,,,ஹலோ ஹலோ என்னன்னா
சொல்றிங்க, எனக்கு எதுவுமே கேக்கலயே..இங்க சிக்னல் கிடைக்கலன்னு நினைக்கேன்,நான் அப்புறமா
பேசுறேன் ,ஹிஹிஹி“
“ஓகே கலை அழகா சிரிக்கிறே!!நான்
வைக்கிறேன் bye “
“ஹலோ ஹலோ அண்ணா இருங்க இருங்க இப்போ சிக்னல்
கிடைக்குது என்ன சொன்னீங்க நான் அழகா இருக்கேன்னா”
“சச்சச்சா உன் போட்டோ பார்த்தப்புறமும்
அப்படிலாம் சொல்லுவேனா அழகா சிரிக்கிற,ன்னு சொன்னேன்“
“ஓ!!ஒ!! அவ்ளோ தானா...ஓகே “
“கலை உன்கிட்ட ஒண்ணுக் கேட்டா கோவச்சிக்கமாட்டல்ல”
“கேளுங்க ண்ணா”
“நீ எதுக்கு எப்போவும் சிரிச்சிகிட்டே இருக்கே”,
(அவ்வவ்வ்வ்வ்,இந்தக்கேள்விக்கு நான் என்னையா பதில சொல்லுறது) “சும்மா தான் அண்ணா.எப்போவும்
அப்படியே சிரிச்சிட்டு இருக்க பழகிட்டேன்”
“இல்லை அதுவில்லை நான் சொல்லட்டுமா நீ எதுக்கு
சிரிச்சிட்டு இருக்கேன்னு “
(அவ்வவ்
ஒருவேளை நம்மள கீழ்ப்பாக்கத்துக்கு போயி ஒருக்கா பாருன்னு அட்வைஸ் சொல்றதுக்காக
இருக்குமோ)
“ம்ம்ம் சொல்லுங்க அண்ணா”
“சொன்னா கோவச்சிக்கப்பிடாதுப்பா”
(யோவ் சொல்லித் தொலையா முதல்ல)ம்ம் பரவால்ல கோவமில்ல சொல்லுங்கண்ணா
“நீ கருப்பா இருக்கல்ல, சிரிச்சா பளப்பளன்னு மூஞ்சி
சொலிக்கும் அதான் எப்பவும் சிரிச்சிட்டே இருக்கே”
ஞேஞேஞேஞேஞேஞேஞேஞேஞேஞேஞே!!!
“மனசு விட்டு சிரிச்சா மூஞ்சி ஜொலிக்கும்”,ன்னு
சொன்ன அந்த பிரபல பதிவர் வேறு யாருமில்லைங்க டாக்குத்தர்.தமிழ்வாசி பிராகாசு தான்..
டாக்குத்தரின் ஆலோசனைப் படி எல்லாரும் எப்போவும் சிரிச்சிகிட்டே சந்தோசமா இருக்கோணும்...
சரிங்க வலை கொடுத்த வேலையே கொஞ்சம் தொடுப்போம் வாங்க ..நிறையப் பதிவர்களை அறிமுகம் கண்டு மறப்பதை விட புதுப் புதுக் பதிவர்களின் வருகையை கொஞ்சம் விசாலமாக்கி அவவையும் நம்முடன் கைக் கோர்த்து பயணித்து செல்லலாம்ன்னு நினைக்கறேன்.. அறிமுகப் பதிவர்களின் வரவையும் திறமையும் வாழ்த்தினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நம்புகிறேன்..அதனாலேயே குறைந்த பதிவர்களோடு சேர்ந்து நானும் உங்கள் மனதை ஆக்கிரமிக்கப் போகிறேன்.
முதலில் காமெடில இருந்து அடிப்போம் தூளு ...
1.பெயர் :வெங்கட்
வலைப்பூ :கோகுலத்தில் சூரியன்
பலப்பதிவர்கள் கவிதை கட்டுரை கதை நகைச்சுவை எனப் பலப் பரிணாமங்களில்எழுதினாலும்
ஒரு சிலர் தான் காமெடி என்ற ஒத்தயடிப் பாதையில் பயணித்து வேரூன்றி நிற்கிறார்கள்..அப்படிப்பட்ட ஒரு மாமனிதருள் மாணிக்கம் வெங்கட்.பதிவுலகில்,ரத்த பூமி (கோழி ரத்தமா ஆட்டுரத்தமான்னு தான் கண்டுபிடிக்கமுடியவில்லை)என்று அடைமொழி இட்டு பெருமைக் கொள்ளும் TK குரூப்பை சேர்ந்த டெரரிஸ்ட் தான்.
customer கேர் அம்மணிகிட்ட கொடுத்த லந்தை நாமும் பார்த்துட்டு
வருவோம் வாங்க..
2.பெயர் :கவியருவி டாக்டர் ம.ரமேஷ்
வலைப்பூ:கவியருவி ம.ரமேஷ் கவிதைகள்
படைப்புகள்:ஓராயிரம்
சென்ரியு,பனித்துளியில் பனைமரம் நூல் ஆசிரியர்.
தமிழில் ஆராய்ச்சிப் படிப்பை முடித்து
ஹைக்கூவில் புதுமைக் காணும் முயற்சியில் ஈடுக் கொண்டுள்ளார்.ஹைக்கூ, ஹைபூன், கஸல்,லிமரைகூ
மற்றும் சென்ரியு,குறட்கூ எல்லாவற்றிலும் சும்மா பின்னிப் பட்டையக் கிளப்பி பிடெலடுப்பவர் தான் ரமேஷ்.மற்ற எழுத்தாளர்களையும் கவிதை ஹைக்கூ சென்ரியு எழுத ஊக்குவிக்கும் பண்பு அவரின் தனிச்
சிறப்பு..
உணவின்றி விவசாயி
வயிறு பெருத்து இருக்கிறது
காவல் பொம்மைக்கு !!
புள்ளிகளை வைத்துவிட்டு
கோலம் போடாமல் தவிக்கிறாள்
நிலாப் பெண் !!
இவரின் சிறந்த ஹைக்கூக்களுக்கு உதாரணம் இவையே..
3.பெயர் :அருண்
வலைப் பூ:என் நிலாவின் தேவதையே
நிலவையே தன் காதலியா நினைத்து உருகி உருகி கவிதை எழுதுபவர் பின்னொருநாளில் பெரிய இயக்குனர் ஆக வேண்டும் என்ற இலட்சியம் கொண்ட இந்தப் பொறியாளர் அதற்கான குறும்பட முயற்சியிலும் வெற்றிக் கொண்டுள்ளார்..காதல் மன்னன் அருண் கவிதைகளைப் படித்தால் உங்களுக்கும் அவரின் கவிதையின் மேல் காதல் பிறக்கும் ..
கொஞ்சம் ருசிக்க இங்க,
என்னை விட்டு,எப்பவும் என் தோழிகள்..தள்ளியே நடக்கிறார்கள்..பிடிக்கவில்லை என்பாய்..காரணம் என்னவென்று,என்னிடம் கேட்பாய்..நிலாவை விட்டு,தள்ளியே இருக்கும்நட்சத்திரங்களுக்கு மட்டும்தெரிந்த ரகசியத்தை,நான் எப்படி அறிவேன் என்பேன்
4.பெயர் :கவிஞர் கே.இனியவன்
வலைப்பூ:கே இனியவன் கவிதைகள்
இவர் ஒரு இலங்கைக் கவிஞர்."சமுதாயத்தில்
வலு இழந்தோருக்கு சமூக
கண்ணோட்டத்துடன் பார் சமூக பொறுப்பு
நம்முடையதுசமூகத்தின் கூட்டு
வாழ்க்கையில்சரிசமமாய் வாழ்வது
நம் கடமை!! என்று பொங்கி எழும்புகிறவர்.என்னையா இம்புட்டு கோவக்கார
பாரதியா இருக்காரேன்னு நினைச்சிடாதிங்கோ..அந்த கல் மனசுக்குள்ளயும் ஒருக் கண்ணம்மா
இருந்துகிட்டு மனிதரைக் காதல்-காதல்-காதல் ன்னு கவிதை எழுத வைக்கிறாங்க ...அவோரட சிலக் கவிதைகள் உங்களுக்காக ..
உன் நினைவுகள் ஊசி
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது !!!
நூல் போல் என் கிழிந்த
இதயத்தை தைக்கிறது
இடையிடையே இரத்தமும்
வடிகிறது !!!
எனக்கு உன் வலிகள் வலிப்பதில்லை
இதயம் புண்ணாகி போனதால்!!
5.பெயர்: தமிழ்முகிழ்
வலைப்பூ :முகிலின் பக்கங்கள்
இவங்களும் ௨௦௧௧ முதல் பதிவேழுதுறாங்க
..காதல்,குடும்பக் கவிதைகள்ன்னு ரொம்ப சிறப்பா எழுதிட்டு வர்றாங்க .எளிய நடையில அழகா எழுதுவது முகிழின் தனிச்சிறப்பு
எல்லாரோட வலைப்பூக்களுக்கும் நேரம் கிடைக்கும் போது சென்று வந்து மறுமொழி கொடுத்து அவவை உற்சாகப்படுத்தும்படி சங்கம் சார்பா கேட்டுக்கிறேன்ப்பா ..
இப்போ நான் உங்களிடமிருந்து கிளம்பும் நேரம் வந்துடுச்சி.நாளைக்கு மீண்டும் வேறொரு பதிவர்களுடன் உங்களை வந்து சந்திக்கிறேன் ..அதுவரைக்கும் உங்கட்ட இருந்து டாட்டா bye bye சொல்லிட்டு போறது உங்களன்பு கலை ...
.
அறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteவருகைக்கு நன்றிங்க அய்யா ...
Deleteகாமெடில இருந்து அடித்தது சூப்பரு...! தமிழ்வாசி அவர்களுக்கு நன்றி...
ReplyDeleteகவியருவி ம. ரமேஷ், HumaLAnimaN, கே இனியவன் - இவர்களின் தளங்கள் புதியவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
மிக்க மகிழ்ச்சி சார் ..உங்களுக்கு புதியவர் அறிமுகம் படுத்தி இருக்கேன் என்ற போது சந்தோஷமா இருக்கிறது ..
Deleteஎன் தளத்தை அறிமுகப்படுத்திய கலைக்கு நன்றி மகிழ்ச்சியும் நன்றியும் அன்பும்...
ReplyDeleteமிக்க நன்றிங்க அண்ணா
Deleteமுன்னுரை மிகவும் அருமை. தொடர்ந்து பெயர், வலைப்பூ, தலைப்புகள் என்ற நிலைகளில் அறிமுகப்படுத்தும் முறை சிறப்பாக உள்ளது.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றிங்க அய்யா
Deleteஎல்லாரின் தளங்களுக்கும் சென்று கருத்திட்டு உற்சாகப்படுத்தணும்னு சொல்லி முடிச்சது அருமை. அதைக் கடைப்பிடிக்க முயல்கிறேன்மா. நம்ம ட்ரேட்மார்க் அதிரடிச் சிரிப்போட அமர்க்களமா ஆரம்பிச்சிருக்கே!
ReplyDeleteகாமெடி கிங் கணேஷ் அங்கிள் சொன்னா சரியாத்தான் இருக்கும் ..நன்றிங்க அங்கிள் உங்கள் வருகைக்கும் கருத்துக்கும்
Deleteகாமெடி கலக்கல், உங்களுக்கும் சகோ தமிழ்வாசி பிரகாசுக்கும் நன்றி.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
மிக்க நன்றிங்க மேடம் ...
Deleteநன்றிங்க மேடம்
Delete// அப்படிப்பட்ட ஒரு மாமனிதருள் மாணிக்கம் வெங்கட் //
ReplyDeleteஹா., ஹா.. ஹா.. இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே..!!
:)
நீங்க மட்டும் தான் காமெடி யா எழுதுவீங்களா ...நானும் ஒருக் கொமேடிக்கு சொல்லிப் பார்த்தேன்
Deleteஅன்பின் கலை..
ReplyDeleteதாங்கள் இன்று தளங்களை தொகுத்த விதம் அருமை!..
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றிங்க அய்யா ...உங்களுன் அன்பான வாழ்த்துக்கு
Deleteஎனது வலைப்பூவை அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் சகோதரி. இன்று அறிமுகமாகியுள்ள அனைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.
ReplyDeleteசகோதரி, ஓர் சிறு திருத்தம் எனது பெயரில் சிறு எழுத்துப் பிழை உள்ளது. எனது பெயர் தமிழ் முகில். தமிழ் முகிழ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Deleteநன்றி.
என்னை மன்னியுங்கள் சகோதிரி ...அன்புக்கு நன்றி ..
Deleteஎல்லோருமே எனக்கு தெரிந்த பதிவர்கள்தான். அறிமுகத்துக்கு நன்றி கலை.
ReplyDeleteஉங்களுக்கு தெரியம இந்த பதிவில யாருமே இருக்க முடியாதுங்க அக்கா ..நன்றிங்க அக்கா
Deleteகவிதையாய் நகைச்சுவையாய் சிறப்பான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteரொம்ப நன்றிங்க மேடம் அன்புக்கும் வாழ்த்துக்கும்
Deleteகலை said.....எல்லாரோட வலைப்பூக்களுக்கும் நேரம் கிடைக்கும் போது சென்று வந்து மறுமொழி கொடுத்து அவவை உற்சாகப்படுத்தும்படி சங்கம் சார்பா கேட்டுக்கிறேன்ப்பா .. ////ஆனா........நீங்க போறீங்களான்னு தப்பித் தவறி யாராச்சும் கேட்டுடப்புடாது..........ஆங்!
ReplyDeleteமாமா மெயில் பார்த்தீங்களா ....நீங்க வந்தது சந்தோஷம் ரொம்ப
Deleteவலைச்சர ஆசிரியர் பணி சிறப்புற வாழ்த்துக்கள் கலை
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றிங்க அண்ணா
Deleteவணக்கம் தங்கள் மடல் பார்த்தேன்
ReplyDeleteஎன் தளம் வலைப்பின்னலுடன் இணைக்க பட்டது என்று கூறினீர்கள் மிக்க நன்றி
எப்படி அது இணைக்க பட்டுள்ளது என்பதை அறிவது
அறியத்தரவும் ஆவலாக உள்ளேன்
நன்றி கே இனியவன்
வணக்கம் அய்யா ...வலைச் சரம் வந்தமைக்கு மிக்க நன்றி
Deleteஎல்லாரோட வலைப்பூக்களுக்கும் நேரம் கிடைக்கும் போது
ReplyDeleteசென்று ...
வந்து ...
மறுமொழி கொடுத்து ...
”அவவை” உற்சாகப்படுத்தும்படி சங்கம் சார்பா கேட்டுக்கிறேன்ப்பா..... ’ எவ....அவ ’ கருவாச்சி? !
எவ....அவ ’ கருவாச்சி? !////
Deleteசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூசு ச்சூ ச்சூ காக்கா ஹஹ்ஹாஆஆஆஆஆ ....எனக்கு நேரிமில்லை அக்கா ..ரொம்ப சந்தோஷம் அக்க நீங்க வருவதற்கு .
வணக்கம் தங்கள் மடல் பார்த்தேன்
ReplyDeleteமிக்க நன்றி
அறிந்து கொண்டேன் முழுவிபரமும் மிக்க நன்றி
உங்கள் ஊக்கிவிப்புக்கும் அருமையான கருத்துக்கும்
நன்றி
நன்றிங்க அய்யா
Deleteவாஆஆழ்துக்கள் கலை !!! பிரமாதம் அனைவர் பதிவுகளுக்கும் சென்றேன் வாசித்தேன் ரசித்தேன் .அப்புறமாதான் இங்கே பின்னூட்டம் எழுத வந்தேன் .
ReplyDeleteAngelin
குட் கேர்ள் நீங்க தான் அக்கா ....நேற்றைய நினைவுகளின் காமெடி இலயுந்து இன்னும் மீளவில்லை ...ஒரு அப்பாவியா காப்பாற்றிய வீர மங்கை உங்களுக்கு வாழ்த்துக்கள்
Delete
ReplyDeleteகலை !!! யாரோ அரசியல்வாதி ஒருவரின் விளம்பர ப்ளெக்க்ஸ் போர்டுக்கு opposite இல் அத விட பெரிசா உங்க படத்தை வச்சிட்டாங்கலாம் !!!! டேக் கேர் :)
அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ் அந்த அளவுக்கு பிரபலப் பதிவர் ஆகிட்டனா .....இனிமேல் நேரடியா உலக அரசியலில் தான் குதிக்கப் போறேன் ....நன்றிங்க அக்கா அன்புக்கு
Deleteகருவாச்சியின் கட்டளைக்குக் கீழ் படிந்து இன்று அறிமுகமான தளங்களுக்கும்
ReplyDeleteசென்று வருவோம் .அனைவருக்கும் அம்பாளடியாளின் மனம் கனிந்த நல்
வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .
வாங்கோ அம்பாள் ....ரொம்ப சந்தோஷம் அவர்கள் தளத்துக்கு போவது ....மிக்க நன்றிங்க
Deleteநகைச்சுவையுடன் தொடங்கி
ReplyDeleteநல்ல தளங்களை அறிமுகம் செய்து
கலக்கிட்டீங்களே...
வாழ்த்துகள்
வாங்கோ யாழ்பாவணன் அய்யா ...மிக்க நன்றி உங்க வருகைக்கு
Deleteதமிழ்தோட்ட நண்பர்களை வலையில் சிறப்பா அறிமுகம்செய்து கலக்கிவிட்டீர்கள்! நண்பர் கவியருவி ரமேஷ் தளத்தை நான் ஆசிரியராக இருந்த போது அறிமுகம் செய்ய நினைத்தேன்! தள இணைப்பு கிடைக்க வில்லை! அதனால் விட்டுப்போய்விட்டது. அந்தக் குறை நீக்கியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள் தொடருங்கள்!
ReplyDeleteநன்றிங்க அண்ணா ..உங்களுக்கு தெரிந்த புது bloggers இருந்தாலும் சொல்லுங்கோ ப்ளீஸ் அறிமுகம் பண்ணலாம்
Deleteதமிழ்தோட்ட நண்பர்களை வலையில் சிறப்பா அறிமுகம்செய்து கலக்கிவிட்டீர்கள்! நண்பர் கவியருவி ரமேஷ் தளத்தை நான் ஆசிரியராக இருந்த போது அறிமுகம் செய்ய நினைத்தேன்! தள இணைப்பு கிடைக்க வில்லை! அதனால் விட்டுப்போய்விட்டது. அந்தக் குறை நீக்கியமைக்கு நன்றி! வாழ்த்துக்கள் தொடருங்கள்!
ReplyDeleteCherub Crafts said ...Tue Mar 11, 02:42:00 PM
ReplyDeleteகலை !!! யாரோ அரசியல்வாதி ஒருவரின் விளம்பர ப்ளெக்க்ஸ் போர்டுக்கு opposite இல் அத விட பெரிசா உங்க படத்தை வச்சிட்டாங்கலாம் !!!! டேக் கேர் :)///திருஷ்டிக்காக வச்சிருப்பாங்க!நீங்க வேற................!!!!
நீங்க கலாயிப்பது என்னை அல்ல ..வருங்கால ஆசியப் பிரதமரை ....கவனம் மாமா
Delete:) ஆமாம் யோகா அண்ணா :)
Deleteவெங்கட் said...Tue Mar 11, 08:05:00 AM
ReplyDelete// அப்படிப்பட்ட ஒரு மாமனிதருள் மாணிக்கம் வெங்கட் //
ஹா., ஹா.. ஹா.. இதுல உள்குத்து ஒன்னும் இல்லையே..!! ///இத்தப் பார்றா! இது டைரெக்ட் குத்து சார்!!இது கூட புரியலியா,இல்ல சமாளிக்குறீங்களா?
ஹஹ்ஹா கரெக்ட் ,மாமா
Deleteஅறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றிங்கோ
Deleteஎன் தோழி முகில் அறிமுகம் ஆகிருக்காங்க !
ReplyDeleteமற்றவர்களை பொய் பார்க்கிறேன்.
அதுவரை வழக்கம் போல உங்க வட்டார பாசைல கலக்குங்க சகோ!!
//“அவ்வ்வ்வவ்வ்வ்வ் ,,,,ஹலோ ஹலோ என்னன்னா சொல்றிங்க, எனக்கு எதுவுமே கேக்கலயே..இங்க சிக்னல் கிடைக்கலன்னு நினைக்கேன்,நான் அப்புறமா பேசுறேன் ,ஹிஹிஹி“//ஹா...ஹா...ஹா...
ரொம்ப சந்தோஷம் ங்க ...வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் ரொம்ப நன்றி
Deleteகலை கலக்கிற போ,,,��
ReplyDeleteஎங்கே போக வேண்டும் என்றுத் தாங்கள் கூறினால் அங்கேயே போவேன்
Deleteநல்ல அறிமுகங்கள்..அருமை.
ReplyDeleteஅண்ணியாரே, அப்படியே என்னையும் நாலு பேருக்கு அறிமுகப்படுத்தினால், பொழைச்சுக்குவேன்.
ரொம்ப நன்றிங்க ..
Deleteஅண்ணியா நான் உங்களுக்கு .....ஹும்ம்ம் நடத்துங்க ...
என்னையும் நாலு பேருக்கு அறிமுகப்படுத்தினால், பொழைச்சுக்குவேன்/////ஆடு ஒன்னு தானா வலைக்குள்ள விழ ஆசைப் பட்டுருக்கு விடுவோமோ நாம ....கடா வெட்டி பொங்கல் வைச்சிடும்வோம்ல ....
சிலதளம் புதிது எனக்கு .நேரம் கிடைக்கும்போது ஒரு விசிட் போகின்றேன். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மீண்டும் சந்திப்போம்.
ReplyDeleteகண்டிப்பாக அண்ணா ...டைம் இருக்கப்ப பாருங்க ...மீண்டும் சந்திப்போமா வருவீங்கல்ல நாளைக்கு
Deleteகலக்குறியே கருவாச்சி..
ReplyDeleteநம்ம தமிழ்த்தோட்டம் உறவுகளின் வலைத்தளங்கள் பகிர்வுக்கு நன்றி தங்கை கலை
ReplyDeleteதெரிந்தவர்களும் தெரியாதவர்களும் என அறிமுகம் தொடங்கியது....
ReplyDeleteஎனக்கு புதிதானவர்களின் தளங்களை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
கலை உங்கள் நகை சுவைக்காகவே தாமதமானாலும் ஓடி வந்துவிட்டேன். அருமையான ஆரம்பம்.அறிமுகங்களையும் சென்று பார்கிறேன். தங்கள் விருப்பப்படி.வாழ்த்துக்கள் அனவருக்கும். தங்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும்.....!
ReplyDeleteநகைச்சுவையாய் அறிமுகங்கள்.... கண்டிப்பாய் சென்று பார்க்கிறேன் . அனைவருக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete