Sunday, March 23, 2014

திடங் கொண்டு போராடு சீனு என்ற ஸ்ரீனிவாசன் ரூபக் ராமிடம் இருந்து ஆசிரியப் பொறுப்பேற்கிறார்

அன்பின் சக பதிவர்களே 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்ற ரூபக்ராம்  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
இவர் வித்தியாசமான முறையில் பனிச் சறுக்கு என்ற தலைப்பில் தினம் ஒரு பதிவு - தன் சொந்த வலைத் தளத்தில் பதிவிடுவது போன்ற முழு நீள பதிவு ஏழு நாட்களிலும் இட்டிருக்கிறார்.  அதன் தொடர்ச்சியாக வலைச்சர விதி முறைகளின் படி தினந்தினம் ஐந்து பதிவர்களையும் அவர்களது சிறந்த பதிவுகளீல் ஒன்றினையும்  அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
இவர் எழுதிய பதிவுகள்                       : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்        : 031
அறிமுகப் படுத்திய பதிவுகள்           : 036
பெற்ற மறுமொழிகள்                            : 196
வருகை தந்தவர்கள்                              : 2277

பதிவர் பெயரும்  பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

ரூபக் ராமின்   கடும் உழைப்பினைப் பாராட்டி  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் திடங்கொண்டு போராடு என்னும் தளத்தில் எழுதி வரும் சீனு என்ற ஸ்ரீனிவாசன். 
இவர் ஏற்கனவே 2013 ஜனவரி 28 அன்று ஆசிரியப் பொறுப்பேற்று பதிவுகள் எழுதி இருக்கிறார்.  அப்பொழுது குடுத்த அறிமுகத்தினை அப்படியே இங்கு தருகிறோம் 

இவர் நெல்லை அருகே தென்காசியை சேர்ந்தவர்.  இவர் முதுநிலை கணினி பயன்பாட்டு அறிவியல் படித்து விட்டு மென்பொருள் நிறுவனம் ஒன்றில், அமெரிக்க வர்த்தகத்தின் மென்பொருள் எஞ்சினின் பழுது நீக்கும் துறையில் கடந்த ஒரு வருடமாக சென்னையில் பணியாற்றி வருகிறார். புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தால் எழுதும் ஆர்வம் ஏற்பட்டு கடந்த 22.03.2012  முதல் இவரது வலைப்பூவில் எழுதி வருகிறார்.

      சீனு அவர்களை வரும் வார ஆசிரியர் பொறுப்பேற்று சிறப்பாக இடுகைகளை எழுதிட வாழ்த்தி வரவேற்கின்றேன்.

நல்வாழ்த்துகள் ரூபக் ராம்

நல்வாழ்த்துகள் சீனு
நட்புடன் சீனா 

12 comments:

  1. வாழ்த்துகள் அண்ணா...

    கலக்குங்க...

    ReplyDelete
  2. சோதனை மறுமொழி

    ReplyDelete
  3. மூன்றாம் ஆண்டில் வலைப் பயணத்தைத் தொடர்ந்து இரண்டாம் முறையாக ஆசிரியர் பொறுப்பேற்கும் ஒரே ஒரு சீனுவுக்கு மகிழ்வுடன் நல்வரவு..! திறம்பட பொறுப்பை நிறைவேற்றி வடை... ஸாரி, விடைபெறும் ரூபககுக்கு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. வாய்ப்பளித்து ஊக்கப்படுத்தியமைக்கு மிக்க நன்றி .

    ReplyDelete
  5. சகோதரர் ரூபக்ராம் அவர்களுக்கு நன்றி! சகோதரர் சீனு அவர்களை வரவேற்கிறேன்! இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

    த.ம.1

    ReplyDelete
  6. திடங்கொண்டு வரும் சீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. வாரம் முழுதும் பதிவர்களை கைப்பிடித்து அழைத்துச் சென்று பனி பொழியும் சிம்லாவினைக் காட்டிய ரூபக் ராம் அவர்களுக்குப் பாராட்டுகள்.......

    திடம் கொண்டு போராடும் சீனுவிற்கு வாழ்த்துகள்.....

    ReplyDelete
  8. காதல் இளவரசன் சீனு அவர்களை வரவேற்கிறேன்...!

    அசத்துங்க...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. சீனு அவர்களுக்கு நல்வரவு. நல்வாழ்த்துக்கள் ..

    ReplyDelete
  10. ரூபக் அவர்களுக்கு பாராட்டுக்கள்! சீனு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete