Saturday, March 15, 2014

இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி!!!

கருவாச்சியோட அதிரடியான(ரவுடிப் பிள்ளையாக்கும்) அருவா வணக்கம்ங்க !!

யாருக்கும் வெட்டுக் குத்து ஒண்ணுமில்ல ல ???நல்லா இருக்கீகளா ??இப்போ என்ன ஆத்தா சொல்ல வர்றன்னு டென்ஷன் ஆகாதிங்க..ஒன்னுமில்லைங்க..வெறும்  ஜும்பிளிக்கா ஜிலாபி மேட்டர்.. இன்னும் தெளிவா சொல்லனும்னா நான் பெரிய மனுஷிஆகிட்டேன்..




ஆமாங்க நாங்களும் ரவுடி தான்...நாங்களும் ரவுடி தான் நாங்களும் ரவுடி தான்(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி)..பதிவர்களே ,நல்லாப் பார்த்துகோங்க..அப்புறம் நான் பார்க்கல,நீ பார்க்கல ன்னு என்கிட்டே சண்டைக்கு வந்திடக்கூடாது....என்னையும் ஒரு பெரிய மனுஷியா மதிச்சி எனக்கும் மைனஸ் ஓட்டுப் போட்ட அந்த மகானுக்கு சிலை வைச்சி கும்பிடனும்னு ஆசைப்படுறேன் ..பாஸ்,போடுறதே போடுறிங்க உங்ககிட்ட அதான் ஒன்னு ரெண்டு மூணு நு லைன் ஆ வைச்சி இருக்கீங்கல்ல எல்லாத்தையும் சேர்த்து போட்டு இருக்கலாம்ல  நானும் தாதா ன்னு ஊருக்குள்ள உங்க பேரை சொல்லி பொழைச்சிக்குவேன் ..ஒரே ஒரு ஒட்டுப் போட்டு ஓரவஞ்சனை பண்ணிடீங்க தல..

அய்யோயோ,இன்னைக்கு சந்தோசத்துல திக்கு முக்காடி எழுத வேண்டியதையே மறந்துவிட்டேனே..போங்க பாஸ் ஒரு முன்னறிவிப்பே இல்லைமா திடிர்னு என்னை ரவுடி யா அறிமுகம் செய்தா நான் என்ன தான் செய்யுறது...


சரிங்க,,இன்றைய அறிமுகங்களை கொஞ்சம் பார்ப்போம் வாருங்க 


பதிவர் நேசன்
வலைப்பூ :தனிமரம்
மின்னூல்: மலையகத்தில் முகம் தொலைத்தவன்
          உருகும் பிரெஞ்சு காதலி
மலையகத்தில் முகம் தொலைத்தவன் தொடரை தொடர்ந்து படித்தவள்..தொடர் இந்திய மணிக்கு இரவு பன்னீரண்டு ஒரு மணி ஆனாலும் படித்து பால்க் காப்பி குடித்தவுடன் தான் தூக்கமே வரும்..அண்ணனும் ரயிலில் ஐ போனில் எமக்காக அவசர அவசரமாக தொடர் எழுதிப் போடுவார் ..மலையகத்தில் முகம் தொலைத்த ராகுல் அண்ணாவை மறக்க முடியாது... நெஞ்சில் பதியும் கேரக்டர் ராகுல் ..ராகுலை அண்ணன் என்ற அடைமொழி இல்லாமல் கூப்பிட கூச்சமாக உள்ளது அவ்வளவு நெருங்கிய பந்தம் ராகுல் அண்ணாவும் நானும் மலையகத்தில் முகம் தொலைத்தவனும் ...
எதுகை மோனை யில் கவிதையில் பிரித்து மேய்வார் ரீரீ அண்ணன்.தற்போது தாலியுடன் தவிக்கிறேன் தனிமரம் என்ற தொடரை எழுதி வருபவர் ..
மலையகத்தில் முகம் தொலைத்தவனை படிக்க  இங்கே கிளிக் செய்யவும் ...

பதிவர்  முத்தரசு
வலைப்பூ:பஜ்ஜிக் கடை 

கோயம்பூத்தூர் குசும்பு கொஞ்ச நெஞ்சமில்லைங்க ..ஏகப்பட்டது இருக்கு மனுஷனுக்கு... மனுஷன் அடைமொழி போட்டு எழுதுறதுல ரொம்ப விவரம் தான் ..அண்ணனுடைய விவரமான புள்ள 


பதிவர் நாஞ்சில் மனோ 
வலைப்பூ பதிவர் நாஞ்சில் மனோ 
அண்ணன் யாருன்னு தெரியுமிலே...சீவிடுவாருலே சீண்டுனா ...அண்ணனுடைய உலக 

அனுபவங்களை வைத்தே பதிவு எழுதுபவர் ..அண்ணன் சொன்னாக் கதைய கேட்டு 

ஆடிட்டேன் நானு .அந்தப் பெண் உயிரோடு இருக்க மாட்டா படிக்க இங்கே சொடுக்குவும் 


பதிவர் :இமா
பதிவுலக டீச்சர்ன்னு அன்போடு அழைக்கும் இவங்க யாரவது தமிழை கொலை செய்தா மண்டை மேலே நாளுக்கொட்டு பொடுவாங்க..
இமாவோட உலகத்துக்கு போயி பாருங்க  

பதிவர் கலை நிலா
சமூக சிந்தனையுள்ள படைப்பாளி ..இன்னும் இந்த சமுதாயம் இப்படி இருக்கே என்று ஆதங்கப்படும் இவர் எழுதாத தலைப்புகளே இல்லை ...
கவிதைக் காதலர்கள் இவரது கவிதைகளை கண்டிப்பா காதலிப்பர்.. இங்கே போங்க ..பொம்மையாய் மனம் படிக்க 

பதிவர் பகீரதன் கலாசலிங்கம்
வலைப்ப்பூ பகீ கிரியேஷன்
பகீயோடகவிதைகள் பற்றி நான் செல்வதை விட நீங்களே பார்த்துக்கோங்க ..அதப் பார்த்தாலே தெரியும் மனிதர்க்கு  காதல் தோல்வின்னு ..(இத நான் சொன்னேன் நு பக்கீ கிட்ட என்னை போட்டுக் கொடுத்துடாதிங்க..உங்களுக்குள்ள இரகசியமாவே இருக்கட்டும் )...பக்கீயோட இன்றைய கவிதைகளை ஆராயும் போது காதல் தோல்வியுற்ற காளை ஒருவன் சன்யாசி ஆஅ போவான் என்ற முடிவுப் போலத் தெரிகிறது ..யாருக்குத் தெரியும் நாளைக்கே கூட நம்ம பக்கீ நித்தியானந்த சுவாமிகள் மாறி பெரிய மகானாக வரவும் வாய்ப்புகள் பிரகாசிக்கின்றன (சும்மா காமெடி நோ கருக்குமட்டை).
பிரமை மனிதனுக்கு உண்டாகிறது
சிந்தித்தால் ஏற்படும் மகிழ்ச்சி , வேதனை , கவலை 
ஆகிய உணர்ச்சிகளுக்குத் தகுந்தபடி
காலமும் வேகமாகவோ , மெதுவாகவோ
நகருவதாக நினைக்கிறோம்
வெறும் பிரமைதான்
இருந்தாலும் அந்தப் பிரமையிலிருந்து
தப்பியவர் யாருமே இல்லை... மேலும் படிக்க 
உங்களுக்கும், இஸ்க் இஸ்க் என்றா கேட்கிறது??  

சரிப்பதிவர்களே!!இன்னைக்கு உங்களிடமிருந்து நான் இப்போ கிளம்புற நேரம் வந்துடுச்சி...எங்கயும் போய்டாதிங்க..ப்ளொக்ஸ்அ படிப்படின்னு படிச்சிட்டே இருங்க ..நாளை புதிய ப்ளாக் களுடன் மீண்டும் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெருவது உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை உங்களன்பு கலை...டோன்ன்ட்ட டோஇங்..... 




55 comments:

  1. //நாளைக்கே கூட நம்ம பக்கீ// பக்கீன்னா எங்க ஊர்ல...........ஹி....ஹி....

    ReplyDelete
    Replies
    1. எங்க ஊர்லயும் அதே மீனிங் தான் அண்ணா

      Delete
  2. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்:)

    ReplyDelete
    Replies
    1. உங்களோட பதிவு எப்போ

      Delete
  3. //..நாங்களும் ரவுடி தான்...// ஒரு எக்கோ வேற குறையுது!..

    அதுவுமில்லாம... அது என்ன முன்னறிவிப்பு இல்லாம திடீர்னு ... ரவுடி !?..

    முடிகயிறு.. தாயத்து.. ன்னு.. ஏதும் தேவைப்படலையே?... அடுத்த பதிவு வர்ற வரைக்கும் ஒரே கலக்கமா..ல்ல இருக்கு!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க துரை சார் ...இப்போவே சரி செய்துட்டேன,,,

      அமைதியா வலைச் சரத்துக்கு வந்த பொண்ணை ரவுடி யா மாற்றியது இந்த உலகம் ...

      அடுத்த பதிவில சந்திப்போம் அய்யா ..வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      Delete
  4. அறிமுக பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அண்ணா

      Delete
  5. ஸ்ஸ்ஸ்ஸ் ஹப்ப்ப்ப்பாஆ :) இப்பவே கண்ணை கட்டுதே :)
    நான் உடனே ஆல்ப்ஸ் மலையில் ப்ளக்ஸ் banner வச்சே ஆகணும் :)

    ReplyDelete
    Replies
    1. The Jungfraujoch ல வைக்க நான் ஆர்டர் குடுத்துட்டேன் :)

      Delete
    2. ஆஹா :) சூப்பர் ..நன்றி டாக்டர் :)

      உங்களுக்கு ஸ்பெஷல் பார்சல் உப்புமா தோசை வருது ..அனுப்பிட்டேன் :)

      Delete
    3. ஹ்ஹீஹி டாக்குத்தர் க்கு சூப்பர் சாப்பாடு ..

      Delete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள் ..... :)

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க மேடம்

      Delete
  7. குறும்பான எழுத்து நடைக்கு பாராட்டுக்கள் சகோதரி...

    பகீரதன் அவர்களின் தளம் புதிது... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி dd சார் ...பக்கீ bro மிகவும் அருமையாக எழுதக் கூடியவர் சார் ....மீண்டும் நன்றி

      Delete

  8. ஆமாங்க நாங்களும் ரவுடி தான்...நாங்களும் ரவுடி தான் நாங்களும் ரவுடி தான்(இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி).///

    வணக்கம் வச்சிக்கிர்றேன் தலைவா(வி) ,

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மீ தலைவி

      Delete
  9. எங்க வாத்தும் ரவுடியாக்கும் !ஹீ ஹீ இனி ரவுடி தானைத்தலைவி வாத்து என்று அழைப்போம்!ஹீஹீ

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா கூபிடுங்க கூப்பிடுங்க அண்ணா

      Delete
  10. பலரும் அறிந்தவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் ணா

      Delete
  11. வணக்கம் மருமகளே!நலமா?///டென்ஷன் ஆகாதிங்க..ஒன்னுமில்லைங்க..வெறும் ஜும்பிளிக்கா ஜிலாபி மேட்டர்.. இன்னும் தெளிவா சொல்லனும்னா நான் பெரிய மனுஷிஆகிட்டேன்..///சடங்கு எப்போ வைக்கப் போ றீங்க /றாங்க?

    ReplyDelete
    Replies
    1. அண்ணா அது மழலை தமிழ் :)
      மேடம் பெரும் புள்ளி ,பிரபலம் ஆகிட்டாங்கன்னு சொல்றாங்க ..

      Delete
    2. அடடே..........அப்போ எந்தத் தொகுதியில நிக்கிறாங்க?

      Delete
    3. !! ..அவுகதேங் வருங்கால ஆசிய பிரதமர்னு அன்னிக்கே சொல்லிட்டேனே !!

      Delete
    4. !! ..அவுகதேங் வருங்கால ஆசிய பிரதமர்னு அன்னிக்கே சொல்லிட்டேனே !!///CORRECT!!!!! ..அவுகதேங் வருங்கால ஆசிய பிரத(ம)ர்!!!Ha!Ha!!Haa!!!

      Delete
    5. avvvvvvvvvvvvvvvvv நான் ஒண்ணுமே சொல்லல

      Delete
  12. அறிமுகங்கள் நன்று!///அந்த மைனஸ் ஓட்டுப் போட்ட பிரகிருதி யாருன்னு மட்டும் சொல்லிடுங்க.நாங்க "திருநெல்வேலி" ஆளுங்க என்கிறத ப்ரூப் பண்ணிடுவோம்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா :) அப்பாவி பச்சை பிள்ளைய அருவா தூக்க வச்சிப்புட்டாங்களே :)

      Delete
    2. என்னது,அப்பாவி,"பச்சப் புள்ளை" யா?

      Delete
    3. யாருன்னு தெரியும் மாமா .....மீ பச்ச புள்ள தானே

      Delete
  13. எதுகை மோனை யில் கவிதையில் பிரித்து மேய்வார் ரீரீ அண்ணன்.//ஹீ அந்தள்வு எல்லாம் தனித்திறமையில்லை தனிமரத்துக்கு!

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹீ உண்மை அண்ணா நம்புங்கோ

      Delete
  14. விவரமான புள்ள....நன்றி தங்கச்சி கருவாச்சி

    இரண்டு பதிவர்கள் புதுசு எனக்கு, அறிமுகத்துக்கும் நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அண்ணா ..

      ரொம்ப சிரமமா நா புதிய பதிவர்கள தேடுறேது

      Delete
  15. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா

      Delete
  16. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ஜி

      Delete
  17. // வணக்கம் வச்சிக்கிர்றேன் தலைவா(வி) , //

    ஓ.. மங்குனி அமைச்சரே பம்மறாரே..
    அப்ப இந்த பொண்ணு பெரிய அம்மாடக்கராத்தான்
    இருக்கும் போல இருக்கு..

    எதுக்கு வம்பு...

    வணக்கம்ம்ம்மா.....!!!

    ReplyDelete
    Replies
    1. இது நல்லாருக்கே,சூரியனுக்கு டார்ச் லைட் அடிச்சவரே!

      Delete
  18. சிறந்த அறிமுகங்கள்
    தொடர வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. நன்ற்ங்க அய்யா

      Delete
  19. தகவல் தந்த திண்டுக்கல் தனபாலன் சாருக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நானும் நன்றி சொல்லிறேன்

      Delete
  20. //தமிழை கொலை செய்தா மண்டை மேலே நாளுக்கொட்டு பொடுவாங்க..// ;))) இப்ப நான் என்ன செய்யட்டும்!! இங்க என் உலகத்தை அறிமுகம் செய்த ஒரே காரணத்துக்காக கலைக்கு குட்டாம கிளம்புறேன். ;D

    நன்றி கலை. நன்றி தனபாலன்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹ்ஹா ...நானும் இன்னைக்கு டீச்சர் தன ...சோ இன்னைக்கு ஒரு டீச்சர் இன்னொரு டீச்சர் ஆ கொட்டக் கூடாது

      Delete
  21. வணக்கம் கலை !
    கருவாச்சி நல்ல பிள்ளை இல்ல,அவங்க கிடக்கிறாங்க விடும்மா இதுக்காக எல்லாம் போய் ரவுடி ஆகலாமா ? வேணாம் என்ன. கூல் கூல் ok.
    அருமையாக நகைசுவையோடு அறிமுகம் செய்கிறீர்கள்.ரசித்தேன் மகிழ்ந்தேன்! வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மேடம் ...

      ஹிஹி சும்மா விளையாட்டு ...எனக்கும் பதிவு போட ஒரு கோன்கேப்ட் வேணுமில்ல அதன் ...நன்றிங்க மேடம்

      Delete
  22. மிக்க நன்றி....யாவருக்கும் என் வாழ்த்துக்கள்...

    அப்புறம் ஜெயலானிக்கும் யாரோ தண்ணி தெளிச்சு விட்டுட்டாங்க போல...ஆளைக் காணோம் ?!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா ...ஆமாம் ஜெய் அண்ணாக்கும் அப்புடி தன் நினைக்கேன் ..வருகைக்கு நன்றிங்க அண்ணா

      Delete
  23. அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ரொம்ப நாளா காணம போன மங்குனி அமைச்சர் இப்ப வந்து இருக்கார்..

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. ஹாய் கலை நலமா?
    என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி கலை
    வலைச்சர ஆசிரியருக்கும் என் நன்றிகள்
    அறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்

    ஒவ்வொரு வெற்றியும்
    ஒரு தோல்வியின் தன்னம்பிக்கை!
    ஒவ்வொரு வாழ்க்கையும்!
    ஒரு போராட்டத்தின் தன்னம்பிக்கை
    இந்த தன்னமிக்கையோட உங்களோட சேர்த்து பயணிக்கிறேன் நன்றி

    ReplyDelete