கருவாச்சியின் அன்பான இனிமையான அட்டகாசமான காலை
வணக்கம்ங்க ..வெளிக்கிழமைன்னா, எனக்கு அவ்ளோ புடிக்கும் அதுக்கு முதக் காரணம் எனக்கு சர்க்கரைபொங்கல் புடிக்கும்ங்க ..வெள்ளிக்கிழமைதான் மாரியாத்தாக்கு பூசை வைச்சி பொங்க வைப்பாங்க..அந்த
சர்க்கரை பொங்கல அடிச்சி புடிச்சி வாங்கி சாப்பிடும் பொது இருக்கும் பேரின்பத்தை
வர்ணிக்க வார்த்தைகளே இல்லை..அதானுங்க இன்னைக்கு கொஞ்சம் லேட் ..சரிங்க இன்றைய பதிவுக்கு போறதுக்கு முன்னாடி கருவாச்சி கம்பெனி யின் தயாரிப்பில் அடுத்து வெளிவரும் டீ வித் DD ஆபீசியல் ப்ரோமோ...பார்த்துட்டு போவோம் வாங்க
டீ வித் DD (காப்பி அடிக்கிறது நமக்கு
புடிக்காதுங்க அதான் இப்புடிஈஈ) அபீசியல் ப்ரோமோ...
கலை:சொல்லுங்க dd நீங்க படிகீரிங்களா?
DD:ஆமாம்சகோதிரி நான் வலைப்பதிவை
படித்துக்கொண்டு இருக்கேன் ..
கலை:அய்யோ dd நான் அதைக் கேக்கல,நீங்க கல்லூரி
மாணவரா ன்னு கேட்டேன்
DD:என்னைப் பார்த்தா அப்புடியா தெரியுது
கலை ஆமாம் DDஉங்களுக்கு ஒரு இருபத்து ரெண்டு இருபத்து மூணு வயதிருக்குமா??
DD:நீங்கள் சொல்வதை நமபலாமா சகோதிரி??
கலை: தாரளமாக,நீங்க என்னை நம்பலாம் ...நீங்க எனக்கு 14 வயசுன்னு நம்பும்போது நான் உங்களுக்கு 24 வயசுன்னு நம்புறேன் DD....நம்பிக்கை தானே வாழ்க்கை!!...
DD:அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்
(கூல் கூல் மக்களே நோ கல்லைத் தூக்குதல்,கருக்கு மட்டையத் தேடுதல் எதுவா இருந்தாலும் பேசித் தீர்த்துப்போம்)
வாத்து ஆராய்ச்சி: என்னதான் அறிமுகப் பதிவர்களை
அவரிகளின் தளத்தில் பகிரும் DD
அறிமுகத்தை DDயால அவரோட தளத்தில பகிர முடியாதே!!
சரிங்க வாங்க இப்போ கொஞ்சம் பதிவர்கள்
வீட்டுக்கு போயிட்டு வருவோம்,
பதிவர்: ஜீவலிங்கம்
புனைப் பெயர்: யாழ்பாவாணன்
வலைப்பூ:யாழ்பாவணனின்எழுத்துக்கள்
யாழிலிருந்து
எழுத்துப் பணியைத் தொடரும் அய்யா தனது எழுத்துக்களின் மூலம் பல நெஞ்சங்களைக்
கொள்ளைக் கொண்டவர்.கவிதைகள் கதைகள் கட்டுரைகள் மட்டுமில்லாது அய்யாவிற்கு
நாடகங்களையும் எழுதி இயக்கிய அனுபவம் பெற்றவர்..
பதிவர்:ஏஞ்சலின் (தேவதை )
புனைப் பெயர்
வலைப்பூ:காகிதப் பூக்கள்
காகிதப் பூக்கள் :
தேவையில்லாத பொருளைக் கூட அழகாக்கும் இந்த தேவதை
கியில்லிங் கிரீடிங் கார்ட் செய்வதில் மட்டுமில்ல கற்றுக் கொடுப்பதிலும் வித்தகி.
சமையல் கலையில் வெளுத்துக் கட்டிய இவர்கள் பொதுமக்களின்
நலன் கருதி இப்போது சமையல் குறிப்பை எழுதாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சமூகசேவகி என்ற புதிய அடையாளத்தை கையில்
எடுத்துக் கொண்டு நல்லதொரு கருத்துக்களை பகிர்ந்து வருபவர்.
பதிவர் :அ.பாண்டியன்
வலைப்பூ :அரும்புகள் மலரட்டும்
நீங்கள் தொடுக்கும் அரும்புகள் எங்கள் மனதில் அழகாக மணம் வீசுகின்றது அய்யா ..தங்களின் பதிவைப் பெண்களுக்கான வன்முறை எதிர்ப்புத் தினம் பயனடைந்தேன் .இதனைப் படிக்க
(பின்னூட்ட பயங்கரவாதி அ.பாண்டியன் அய்யாவின் வலையைத் தேடிக் கண்டறிவதர்க்குள் தலைப் பிதுங்கி என் கிட்னியே வெளிய வந்துடுச்சுங்க
பாஸ் ,உங்க பேரைச் சொடுக்கினால்கூகுலார் இப்படி சொல்லுறார் பாஸ்..என்னன்னு கேட்டு ரெண்டு தட்டி வையுங்க தல ,"404. That’s an error.
The requested URL was not found on this server. That’s all we know."பக்கத்துலையே ஒரு ஆளு சுத்தியல் கூட தூக்கி காட்டுறான் பாஸ் )
கரந்தை ஜெயக்குமார் அய்யாவின் வலையில் தான் அ.பாண்டியன் அய்யாவின் தளத்தை பிடிக்க முடிந்தது..கரந்தை அய்யாவிற்கு சிறப்பு நன்றிகள் ..அய்யாவின் வலையை அறியாதவர்கள் யாருமே இல்லை ..இருந்தாலும் நம்ம கடமை பாஸ் அய்யா வோட வலைத்தளம் செல்ல இங்கே சொடுக்கவும் ..
பதிவர்:சசிகலா
வலைப்பூ:சசியின் கோலங்கள்
திருவண்ணாமலையிலிருந்து சசிகலா ன்னு பெயர் பார்த்து இருப்பீங்க நிறைய பத்திரிகைகளில் ..அவங்க வேற யாரும் இல்லைங்க இவங்க தான் ...
நிறைய கருத்துகளை முகநூலுக்கும் பத்திரிக்கைக்கும் அனுப்பும் இவர் தற்போது அதற்கேன தனி வலைப்பூ தொடங்க ஆரவாக உள்ளார்..
பதிவர்:இனியா
வலைப்பூ: காவியக்கவி
காவியக்கவி என்ற வலைப்பூவில் எழுதும் தோழி இனியாவின் தளத்தில் கவிதைகளை சுவைத்து மகிழலாம்
தன்னிகரில்லாதாரைகளைப் பற்றி கவிதையா சொல்றாங்க இனியா ..
பதிவர்:மகி
வலைப்பூ:வெல்கம் டூ மகிஸ் கிச்சன்
குண்டா இருக்கீங்களா கவலைப் படாதிங்க ..இங்க போங்க எப்படி சாப்பிட்டே ஒல்லியாகலம் நு சொல்லித் தாராங்க மகி..போயி பார்த்ட்டு வந்து சொல்லுங்க
சமையற்கலை ராணி மகி அவர்களோட வலைப்பூவில இருக்குற எல்லா ரேச்சிபி செய்து பாருங்க ..நீங்களே அசந்துருவீங்க ..
சரிப்பதிவர்களே!!இன்னைக்கு உங்களிடமிருந்து நான் இப்போ கிளம்புற நேரம் வந்துடுச்சி...எங்கயும் போய்டாதிங்க..ப்ளொக்ஸ்அ படிப்படின்னு படிச்சிட்டே இருங்க ..நாளை புதிய ப்ளாக் களுடன் மீண்டும் உங்களை வந்து சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடைபெருவது உங்கள் வீட்டு செல்லப் பிள்ளை உங்களன்பு கலை...டோன்ன்ட்ட டோஇங்.....
இன்று வலைச்சரத்தில் அறிமுகமான சொந்தங்கள் அனைவருக்கும் என்
ReplyDeleteதோழிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் உரித்தாகட்டும் .
வாங்க அம்பாள் ...உங்கள் அன்புக்கும் முதல் வருகைக்கும் நன்றி
Deleteநன்றி கலை என்னை அந்த வளை தள அன்பு வட்டதில் இனைத்தமைக்கு ....
Deleteஎன்னவொரு ஆராய்ச்சி...! ஹா... ஹா... ரசித்தேன்...
ReplyDeleteபிறகு வருகிறேன் சகோதரி...!
எனது அறிமுகத்தை தம்பி ரூபன் அவர்கள் அறிவித்து விடுவார்...!
DeleteURL தவறாக அடித்தால் இப்படித் தான் சுத்தியல் வரும்... ஹிஹி...
இனிய நண்பர்கள் உட்பட அனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
14 என்பது கொஞ்சம் அதிகம் தான்... இருந்தாலும் பரவாயில்லை... அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்...
வாங்க சார் ...உங்களுக்கு தான் இருபது நாளு கொடுத்து இருக்கேன் ல ...டீலிங் சரியா தான் இருக்கு அண்ணா
Deleteஎனக்கே இப்பத்தான் 28 வயசு ஆவுது இளவரசி. அதனால டி,டி,க்கு 24ன்றதை ஒத்துக்கறேன், ஹி.... ஹி.... ஹி...!
ReplyDeleteஉங்களுக்கு 28 ன்னா அப்போ எனக்கு பத்து வயசுதானக்கும்
Deleteஎல்லோருமே தெரிந்தவர்கள்தான். பகிர்வுக்கு நன்றி கலை.
ReplyDeleteநன்றிங்க மேடம்
Deleteஅனைத்தும் சிறப்பான தளங்கள்! பகிர்வுக்கு நன்றி! அறிமுகப்பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றிங்க தளிர் அண்ணா
Deleteவலைசர வாழ்த்துக்கள் வாத்து. ச்சே..... வாத்தியாரே :)
ReplyDeleteஜெய்ஈஈஈஈஈஈஈஈஈ அண்ணா ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ...........................நீங்களா ...ரொம்ப சந்தோசமா இருக்கு ..
Deleteகலை நேற்று என்னாமா தூசி தட்டிநீங்க :) பச்சை ரோசா பறந்து வந்திட்டாங்க :)
Deleteவெல்கம் டாக்டர் :)
ஜெய் அக்கா சாஆஆ ஜெய் அண்ணா , உண்மையிலே நான் ரொம்ப ரொம்ப சந்த்சப் படுறேன்....வலைச் சரம் எழுதியதுக்கு இதை விட பெரிய பரிசு வேற ஒண்ணுமே இல்லை ...நீங்க தினமும் வரணும் நீங்களும் எழுதணும் நானும் உங்களை கலையிக்க ட்ரை பண்ணனும்
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சார்
Deleteஇதுக்குத் தான் தன்னந்தனியா உச்சி உருமத்தில எங்கேயும் போகக் கூடாதுங்கிறது...
ReplyDeleteகருவாச்சி கலை.. அப்படின்னு தெரிஞ்சும் - சுத்தியல தூக்கி காட்டுறான்..ன்னா
எவ்வளோ தைரியம்!..
ஏதோ.. வெள்ளிக்கிழமை அதுவுமா மாரியாத்தா தான் எல்லாரையும் காப்பாத்தியிருக்கா!..
வாங்க துரை அய்யா ...உங்கள் வரவை எதிர் பார்த்து இருந்தேன் ...
Deleteஏன்னா தைரியம் பாருங்க அவனுக்கு சுத்திய தூக்கி மூஞ்சி மேல காட்டுறான் சார் ...எனக்கு வந்த கோவத்துக்கு அவன் மூஞ்சில ரெண்டு அப்பு அப்பி இருப்பேன் ....பயல பார்த்தா பொடியனா தெரிஞ்சான் அதான் ஒண்ணுமே சொல்லல
ஆமாய்யா அந்த மாரியாத்தா துணை தான் ...
நன்றிங்க அய்யா வருகைக்கும் வாழ்த்துக்கும்
வணக்கம் கலை !
ReplyDeleteஆமா இப்படியா DD அவர்களை கலாய்க்கிறது. ஐயோ! இன்னா முதல் ஆளா நிக்கிறது அவர் தானே வலைதள உறவுகளில் அவ்வளவு பாசம். அதுவுமில்லாமல் மனசாட்சியோடு வாழ்பவர் எமக்கு தேவை யானைவைகளை கேட்காமலே உதவி செய்யும் பெரியவர் அவரை போய்..... சின்னப் பிள்ளை என்றால் தப்பில்ல கோவிச்சுக்க போறரும்மா.ஆனால் (அவர் முகத்தில சந்தோஷம் தெரிகிற மாதிரி அல்லவா அனைத்தும் இருக்கிறது) ரசித்தேன் கருவாச்சி என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி அனைவரும் தெரிந்தவர்களே அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள் !
சகோ DD அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள்.
வணக்கம் மேடம் ...உண்மை மேடம் dd அய்யாவின் பண்பு வியப்புக்கூரியது ...யாராலும் செய்ய முடியாதது ...நீங்க வந்தமைக்கு நன்றிங்க இனியா
Delete//வாத்து ஆராய்ச்சி: என்னதான் அறிமுகப் பதிவர்களை அவரிகளின் தளத்தில் பகிரும் DD அறிமுகத்தை DDயால அவரோட தளத்தில பகிர முடியாதே!!//
ReplyDeleteஆராய்ச்சின்னாலும் யப்பாப்பா இந்த மாதிரி யாராலையும் முடியாது !!!!!
..............
எல்லாமே நீங்க கொடுத்த ட்ரைனிங் தானே
Delete//சமையல் கலையில் வெளுத்துக் கட்டிய இவர்கள் பொதுமக்களின் நலன் கருதி இப்போது சமையல் குறிப்பை எழுதாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.//
ReplyDeletenaan ithai paarkavillai :)
வாத்துக்கு ஒரு தோசை உப்புமா பார்ஸல்ல்ல்ல்ல்ல்ல் :)
Deleteஇப்பவே அனுப்பறேன் நீங்க ரெண்டு பேரும் ஷேர் செஞ்சி சாப்பிடுங்க :)போன வருஷம் செஞ்சது ..ஒரு போர்ஷன் ப்ரீசர்ல இருக்கு :)
Deleteநீங்க பார்க்க மாட்டிங்கன்னு தெரியுமே ....
Deleteதோசை உப்புமா வாஆஆஆஆஆஆஆஆஆ avvvvvvvvvvvvvvvvv
Deleteநானு மாரியாத்தா க்கு விரதம் இருக்குறதல என்னோட பங்கையும் ஜெய் அண்ணா சாப்பிடுவாங்க
வணக்கம் அனைத்து பதிவர்களுக்கும் என்மனதார வாழ்த்துகளும் நன்றிகளும்...
ReplyDeleteவாங்க மேடம் வணக்கங்களும் நன்றிகளும்
Deleteவலைச் சரத்தின் கொள்கைப் பரப்புச் செயலாளர் என்னும் ஒரு பதவியினையே திரு திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொரு நாளும் வலைச் சரத்தில் அறிமுகப்படுத்தப் பெறும் பதிவர்களுக்கு, இச்செய்தியினைக் கொண்டு சேர்க்கும் மகத்தான பணியினை செய்து வருபவரல்லவா அவர்.
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள் சகோதரியாரே,
என்னையும் அறிமுகப்படுத்தியது கண்டு பெரிதும் மகிழ்ந்தேன்
நன்றி சகோதரியாரே
வணக்கம் அய்யா ,
Deleteதாங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே ...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அய்யா
கலை, அறிமுகத்துக்கு மிக்க நன்றிகள்! வராத ஆட்களை எல்லாம் வர வைச்சிருக்கீங்க, ஜூப்பரு!
ReplyDelete@ஜெய் அண்ணே, வணக்கமுங்கோ! :))))
@டிடி அண்ணா, தகவலுக்கும் கருத்துக்கும் நன்றிகள்!
வாங்க மகி அக்கா ....
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
DD... thanks brother ..
ReplyDeleteமிக்க நன்றிக்கா
DeleteDD அய்யாவிற்கு அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு முறை இல்லை பலமுறை நன்றி சொல்லிகிறேன் ...
ReplyDeleteயாவருக்கும் வாழ்த்துக்கள்....!
ReplyDeletenandringannaa
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteகாலையில பத்தர/பதினோரு மணி(இந்திய நேரம்) வரைக்கும் வெயிட்டிங்.
ReplyDeleteசூப்பர் மாமா ..மன்னிச்சிடுங்க
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களின் நகைச்சுவை குணம் அனைவரும் கற்றுக்கொள்ள வேண்டியது. தங்களின் இந்த குணம் என்றும் நிலைக்கட்டும். அழகான மொழி நடை கூடவே எள்ளல் தன்மை தங்களின் தனிமைத்திறமை என்று கருதுகிறேன். தொடருங்கள் சகோதரி.
-----------
என் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தியமைக்கு எனது அன்பார்ந்த நன்றிகள். உங்கள் அறிமுகத்தால் வலைச்சொந்தங்களின் வரவு அதிகரிக்கட்டும். தங்கள் அன்புக்கும் வலைத்தள ஆசிரியர் பணிக்கும் எனது வாழ்த்துகளும் நன்றிகளும். தொடர்வோம். நன்றீங்க.
வாங்க அய்யா ,,நீங்க என்னனோ சொல்றிங்க ...பெரியவங்க சொன்னா சரி தான் ...ரொம்ப ரொம்ப நன்றி சார்
Deleteசுத்தியல் வச்சுகிட்டு பயமுறுத்தறது சத்தியமா நான் இல்லைங்க சகோதரி. நாம எல்லாம் ஒன்லி அருவா தான்!!. விளையாட்டுக்காக தான்.
ReplyDelete----
தகவலுக்கு நன்றி சகோதரி. அவசியம் கவனிக்கிறேன்.
ஹிஹிஈ பாஸ் உங்க அடியாள் யாரவது இருக்கப் போறான் ..நன்றிங்க சென்று திருத்தவும்
Deleteநேரத்துடன் அதிகாலை வந்தால் வாத்து அதிகாலையில் தூக்கம்!ம்ம்
ReplyDeleteம்ம்ம் பரவால்லா அண்ணா ..நீங்க எப்போ கமெண்ட் போடுரின்கோள அப்புறம் தன அடுத்த போஸ்ட்
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசூப்பர் ணா
Deleteவாத்து ஆராய்ச்சி: என்னதான் அறிமுகப் பதிவர்களை அவரிகளின் தளத்தில் பகிரும் DD அறிமுகத்தை DDயால அவரோட தளத்தில பகிர முடியாதே!!//
ReplyDeleteஆராய்ச்சின்னாலும் யப்பாப்பா இந்த மாதிரி யாராலையும் முடியாது !!!!!//வாத்து என் தங்கையாக்கும் அஞ்சலின்!!ஹீ
ஹிஹிஹீ பரம்பரை அப்புடி
DeleteகலைFri Mar 14, 11:11:00 PM
ReplyDeleteDD அய்யாவிற்கு அனைவரின் சார்பாகவும் மீண்டும் ஒரு முறை இல்லை பலமுறை நன்றி சொல்லிகிறேன் ...//அதேதான் வாத்து தனபாலன் சார் ஒரு ஹீரோ!
aama annaa
Deleteசுத்தியல் வச்சுகிட்டு பயமுறுத்தறது சத்தியமா நான் இல்லைங்க சகோதரி. நாம எல்லாம் ஒன்லி அருவா தான்!!. விளையாட்டுக்காக தான்./ஹீ நம்பீட்டோம் வாத்தியாரே!
ReplyDeleteheheee
Deleteதொடரட்டும் பணி மீண்டும் நேரம் இருக்கும் போது சந்திப்போம் டீச்சர்!
ReplyDeleteநீங்கள் இல்லமல் தொடர்வதா அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ் அண்ணா வரணும்
Deleteநமக்கெல்லாம் விஜய் டி.வி டி டி நெக்ஸ்டு
ReplyDeleteநம்ம டி டி அண்ணன் தானே first !!
சூப்பர் !! தோழி இனியாவும் .தம்பி பாண்டியனும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி மேடம்!
நன்றிங்க மேடம் உங்க வருகைக்கும் கருத்துக்கும்
Deleteபுரியாததெல்லாம் இப்போதான் புரிகிறது கலை, ஏஞ்சல் & ஜெய். ;))
ReplyDelete//எப்படி சாப்பிட்டே ஒல்லியாகலம் நு சொல்லித் தாராங்க// அப்போ நிச்சயம் போய்ப் பார்க்க வேண்டியதுதான். ;)
எல்லோருக்கும் நல்லதே நினைக்கிற DDயை இப்பிடி போட்டு காலாய்க்கிறீங்களே கலை. ;))
இமமா நான் அவர கலாயிக்கவே இல்லை ...நன்றி டீச்சர்
Deleteஅம்மா! தாயே!
ReplyDeleteநெடுநேரம் எனது தளத்தைப் படித்த பின்
எனது சுய விரிப்போடு (Bio-Data)
எனது தளத்தை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
கலை: , DD: உரையாடலைப் (Script) பார்த்தால் தாங்களும் நன்றா நாடகம் எழுதுளீர்களே...
இன்றைய அறிமுகம் சுவையானது!
தங்கள் பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
மிக்க சந்தோஷம் ஜீவா சார்
Deleteவணக்கம் வாவ் ...இது புது முறையாக இருக்கே...!உங்களின் வலைச்சரத்தில் ஒருசிலரின் விபரம் அருமை ,மொழிநடை கலக்குறீங்க நான் மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteநன்றிசகோதரி.
வணக்கம் மேடம் ...இப்போதான் உங்கள் வலைய பார்த்தேன் மீண்டும் வருவேன் nandri
DeleteMee the first...
ReplyDeleteஅறிமுகம் எல்லாம் அருமை வாழ்த்துக்கள்