Tuesday, March 4, 2014

கல்வி எது? - கரைத்துக் குடிப்பதுவா? கற்று உணர்வதுவா?

வலைச்சர நட்பு மலர்களுக்கு, இனிய வணக்கம்.

"மனம் நிரப்புவதற்கான ஒரு பாத்திரம் அல்ல, தூண்டப்படவேண்டிய நெருப்பு" - ப்ளுடார்ச், கிரேக்க எழுத்தாளர்

எங்கள் எண்ணமோ நேரெதிர்
அகன்ற ஆழமான பாத்திரமே மனம் 
உள்ளே இருக்கும் பொறியோ நெருப்போ
உற்று நோக்கித் தூண்டிட  ஏது மனம்?
அதையும் இதையும் கொட்டி நிறை
கல்வி என்ற பெயரில் மறை



"குழந்தைகளுக்கு  சிந்திக்கக்  கற்றுக்கொடுக்க வேண்டும், எதைச் சிந்திக்க என்றல்ல" - மார்கரெட் மீட்

ஏன் கனவு கண்டு  வீணடிக்கிறாய் நேரத்தை
எடுத்துப் படி பாடப் புத்தகத்தை
எதிலும்  வேறு நினைக்காதே
எடுக்கவேண்டும் முழுமதிப்பெண் மறக்காதே

"குழந்தையை கட்டாயப்படுத்தியோ கடுமையாகவோ கற்பிக்காதீர்கள், அவர்கள் மனம் கவர்ந்தவற்றை வைத்து வழிகாட்டுங்கள், அவர்கள் ஒவ்வொருத்தர் உள்ளும் இருக்கும் மேதாவியைக் கண்டுகொள்வீர்கள்" - பிளாடோ

உலகம் தெரியாத பிளாடோ
உருப்போடச் சொன்னால் கேடோ
உள்ளம் போல விட்டால் 
உருவாவது எப்படி மேதாவி
படி படி என்றே பாடி 
பல மதிப்பெண் பெறுபவனே மேதாவி

இதைப்போல இன்னும் நிறைய இருக்கு. அனைத்தும் சொன்னால் மாறுமோ இன்றைய நிலை? பொதுத் தேர்வுகள் ஆரம்பம், பிள்ளைகளுக்கு அழுத்தமும் ஆரம்பம். ஆண்டுத் துவக்கத்தில் இருந்தே கேட்டிருப்பர், "இந்த ஆண்டு பொதுத் தேர்வல்லவா? நல்லா படி. மாவட்டத்தில் முதலா மாநிலத்தில் முதலா?....." பாடத்தை விட இப்படிப்பட்ட வசனங்கள் பதிவாகியிருக்கும் நன்றாய். எனக்கு ஒன்று தோன்றுகிறது..இப்படி ஏதாவது சொல்லிக் கொண்டிருந்த நேரத்தில் நல்ல குணங்கள் ஒன்றிரண்டு சொல்லியிருந்தால் உருப்படுமே சமுதாயம்.

இந்த மாணவர்கள் பரீட்சை எழுதி, பின்னர் மதிப்பெண் சான்றிதழ் பெற்று, பலரோடு ஒப்பிடப்பட்டு, ஒரு கல்லூரியில் சேர்ந்துவிட்டாலும் அடங்காது இப்பேச்சு. இப்பொழுதெல்லாம் இரண்டு வயதிலேயே ஆரம்பித்து விடுகின்றனர். போட்டி நிறைந்த உலகமாம், பொசுக்கி விடுகின்றனரே பால்யத்தை. மண்ணை ஆராய்ந்து ருசிபார்க்க  வேண்டிய வயதில் மனனம் செய்து கொண்டிருக்கிறது மழலை.

நேற்று ஒரு தோழி சொன்னார், மருத்துவ மேல்படிப்பிற்கு அவருடைய உறவினரிடம் ஒரு கோடி கேட்கிறார்களாம், நல்ல (?!) மதிப்பெண் இருந்தும். எப்படியோ, மருத்துவம் ஏன் வியாபாரமாகிறது என்ற என் கேள்விக்குப் பதில் கிடைத்துவிட்டது. மதிப்பெண் மதிப்பெண் என்று ஓடும் சமுதாயமே மதிப்பு எது என்று உணர்வாயோ? உணர வேண்டுமே என்றே சிலர் ஏதேதோ எழுதியிருக்கிறார்கள்..பாருங்கள்!

பள்ளிப் பொதுத்தேர்வுகள் பற்றி சில உண்மைகளைச் சொல்கிறார் சிவகாசிக்காரன்சாமி வீட்ல டியூப் லைட் சரியா எரியலேனா என்னாகும்னு சொல்றார் பாருங்க.

முதல் மதிப்பெண் வாங்குவது என்பது பெரிய சாதனையும் இல்லை, தேவையும் இல்லை என்று தன்  மகளுக்குக்  கடிதம் எழுதுகிறார் ஒரு சிறந்த அப்பா, திரு.முத்துநிலவன்.   இவரைப் பற்றி அனைவருக்கு தெரிந்திருக்கும், அவருடைய இடுகையைப் பகிர்வதே என் நோக்கம், அவரை அறிமுகம் செய்வது அல்ல. அவரின் மற்றொரு இடுகை, படிப்பது எதற்காக?
இந்தப் படிப்பு கோடை விடுமுறையையுமாத்  தடை செய்ய வேண்டும்?
பெண்கள் தினம் வரும் இந்த வாரத்தில் அவரின் இந்தப்  பதிவையும் கண்டிப்பாகப் பாருங்கள், தமக்காகப் பெண்கள் போராட முன்வர வேண்டும்.

இவர் ஒரு சிறந்த ஆசிரியர், இவர் கல்வி பற்றி எழுதி இருப்பதே உண்மைதானே? மேலே நான் மருத்துவம் பற்றிச் சொன்ன செய்தி எல்லாத்துறைகளிலும் இருக்கத்தானே செய்கிறது. திறமையுள்ள ஏழை மாணவர் பாவம், என்ன செய்வார்..?
ஏன் இந்த வேண்டாத வேலை என்று சைத்தான் சொல்வதைக் கேட்காமல் விடுமுறையிலும் மாணவருக்கு வழி காட்டுகின்றார் இவர். பல பயிலரங்கங்கள் நடக்கின்றன இவர் ஊரில்..மற்ற ஊர்களிலும் நடத்தினால் நன்றாக இருக்கும். மதிப்பெண் எடுக்கவைப்பதை விட அருமையான ஒன்றைப் பற்றிச் சொல்கிறார், படியுங்கள். சினிமாவில் மூழ்கும் மாணவர் இவர்களை அறியவில்லையே என்று ஆதங்கப்படுகிறார். தொன்மையான பாறை ஓவியங்கள் பற்றியப்  பதிவு இது, கண்டிப்பாகச் சென்று பார்ப்பீர், பாதுகாப்பீர். அந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரையும் பாராட்ட வேண்டும். சரியான கல்விக்கு உழைக்கிறார்.

கல்வியும் முரணும் என்று உள்ளத்து உணர்வுகளைக் கொட்டியிருக்கும் சகோ பாண்டியனும்  ஒரு நல்லாசிரியரே. வரலாறு படைப்போம் வா நண்பா என்ற இவரின் கவிதை மாணவர்களுக்கு ஊக்கம் தருவதாய் அமைகிறது.

காட்டில் என்ன மாநாடு? அறிந்துகொள்ள கீதா அவர்கள் எழுதியிருக்கும் கவிதைப்  படியுங்கள்.
பணம் கட்டவில்லை என்பதற்காக நான்காம் வகுப்பு மாணவனுக்கு என்ன தண்டனை தெரியுமா?
தொலைக்காட்சி வச்சுருக்கீங்க, கணினி வச்சுருக்கீங்க, வண்டி வச்சுருக்கீங்க, என்னென்னமோ வச்சுருக்கீங்க, இதில் ஒன்று வச்சுருக்கீங்களா?

க.ந.கல்யாணசுந்தரம் அவர்களின் கவிதை வாசல் எனும் தளம் தமிழ்த் தேன் அருந்த அழைக்கின்றது. அதில் அம்மா என்னும் சொல் என்ற கவிதை புதியத் தலைமுறையினர் அணிய வேண்டிய மகுடம் பற்றிச் சொல்கிறது. கடிகார முள் இதுவல்லவோ கற்றுக்கொள்வது என்று சொல்கிறதோ?
அருமையானதொரு தன்னம்பிக்கை ஊட்டும் கவிதை இது.

நாளை சந்திக்கும்வரை இந்தப் புதிரைக் கண்டுபிடியுங்கள். இன்னொன்று குழு குறுக்கெழுத்து.

நட்புடன்,
கிரேஸ்

42 comments:

  1. படித்து ஒரு துளி மாற்றம் செய்யுங்கள்..நன்றி!

    ReplyDelete
  2. அறிமுகங்களுக்கு சென்று வருகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. தெரியபடுத்தத்தானே? நீங்கள் அறியாப் பதிவரைக் கண்டுபிடிப்பது கடினம் :)
      நன்றி திரு.தனபாலன்!

      Delete
  3. தங்கள் தொகுப்பினைப் படித்தேன்!..
    அத்தனையும் படித்தேன்!..
    நல் வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. அனைத்தையும் படித்ததற்கு மிக்க நன்றி ஐயா!

      Delete
  4. அனைத்தும் தொடரும் சிறப்பான தளங்கள் மட்டுமல்ல... திரு. க.ந.கல்யாணசுந்தரம் ஐயா அவர்களைத் தவிர, புதுகை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனைவர். ந.அருள்முருகன் ஐயா உட்பட இன்றைய அறிமுகங்களை சந்தித்தும் உள்ளேன்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அனைவரையும் சந்தித்தும் உள்ளீர்களா? மிக அருமை..மகிழ்ச்சி!

      Delete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  6. பெரும் அறிஞர்களின் கருத்துகளும் உங்கள் கவிதைகளும் அருமை...

    தொடருங்கள்...

    ReplyDelete
  7. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  8. சிறப்பான அறிமுகங்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  9. புதுசா யாராவது இருக்காங்களானு பார்த்து வருகிறேன்.

    ReplyDelete
  10. ஆஹா ,முதல் நாளே என் (நிலவன்)அண்ணா , (கீதா)அக்கா, (பாண்டியன்)தம்பி அப்புறம் எங்க c.e.o சார் என புதுகை பௌண்டரி அடுச்சிருக்கோமே !!! நன்றி கிரேஸ்!

    ReplyDelete
  11. என் கணவர் தளமும் இருக்கு தோழி ! சொடுக்குனதுக்கு அப்புறம் தான் தெரிஞ்சது ! so இது குடும்ப பதிவுங்கோ! நன்றி நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்க முதல் கருத்துரைப் பார்த்துட்டு முக்கியமானவரை சொல்லலியேனு கேக்க நினைச்சேன்..இரண்டாம் கருத்துரையாப் போட்டுட்டீங்க.. :)

      Delete
  12. அறிமுகங்கள் அருமை..... வாழ்த்துக்கள்.....

    ReplyDelete
  13. கருத்துச் செறிந்த கட்டுரைகளும், கவிதைகளும் அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி. தமிழறிவும், பொது அறிவும் வளர்க்க
    உதவும் தமிழ்ப் புதிர்கள் (http://muthuputhir.blogspot.in/) அறிமுகத்திற்கும் நன்றி. இது போன்ற அனைத்து நண்பர்களின் வார்த்தை விளையாட்டுக்கள் பற்றிய அறிவிப்புகளை உடனடியாக அறிந்து கொள்ள
    விருப்பமுடையோர் https://groups.google.com/group/vaarthai_vilayaatu?hl=en என்ற கூகிள் குழுமத்தில் இணைந்து கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கும் கூகிள் குழுமத் தகவலுக்கும் நன்றி ஐயா!

      Delete
  14. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
  15. அருமை கிரேஸ்... கருத்துகள் மிகுந்த பதிவுகள்.. அதை தொகுத்த விதம் மிக அருமை.. வாழ்த்துகள் :)

    ReplyDelete
  16. ஆஹா இன்று புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் தினமா?மிகவும் நன்றிம்மா.

    ReplyDelete
  17. சில தளங்களை உங்களின் பதிவுகளின் மூலம் சென்று பார்த்தேன்..
    நன்றி..
    வலைச்சர ஆசிரியராக நான் கனவில் கூட நினைக்கமாட்டேன்..
    எப்படிப்பா இவ்வளவு தளங்களை படிக்றீங்க...
    பெரிய விஷயம் வாழ்த்துக்கள்.. தொடர்க
    என்னையும் இங்கு அறிமுகம் செய்ததில் பெருமகிழ்வு கவிஞரே..

    ReplyDelete
    Replies
    1. சில நான் தொடர்ந்து படிப்பவை, சில அறிமுகப்படுத்த தேடியவை...
      நன்றி மது, எனக்கும் மகிழ்ச்சியே!

      Delete
  18. ஏராளமான தொலைக்காட்சி நிகழ்வுகளில் சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்துப் பார்ப்பது கடினம், அதைவிடக் கடினம் நல்ல இதழ்களில் நல்லவற்றைத் தேர்ந்தெடுத்துப் படிப்பது, அதைவிடவும் கடினம் நல்ல வலைத்தளம் சென்று அவற்றிலும் நல்ல பதிவுகளைப் படிப்பதுதான்... நீங்கள் எப்படி...இப்படிக் கடினத்திலும் கடினத்தை மிக எளிதாக (எங்கள் மாவட்ட மலர் தொகுத்த மாதிரி) படித்துவிட்டுப் பதிவும் இடுகிறீர்கள்?. அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் - நன்றி திருவள்ளுவர். (என்னடா காலையில் போட்ட சாதாரணப் பதிவை மாலைக்குள் 500பேர் பார்த்திருக்காங்களேன்னு ப்ளாக்கர் பார்த்து முதலில் திகைத்துவிட்டேன்... பிறகுதான் தெரிந்தது இது உங்கள் வேலை என்று... டி.டி.முதலான நண்பர்களும் சொன்னார்கள்..) நன்றிம்மா , உங்களுக்கும் வலைச்சரத்திற்கும், நல்லன நாடும் நம் வாசக நண்பர்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் கருத்திற்கு நன்றி ஐயா..நல்ல பதிவுகளை பகிர்ந்ததில் எனக்கு மகிழ்ச்சியே!

      Delete
  19. அருமையான பதிவுகள் கிரேஸ்... அதிலும் முத்து நிலவன் சாரோட பதிவை என் முக நூலிலும் பகிர்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி எழில். ஆமாம் அனைவரும் படிக்க வேண்டிய அருமையான பதிவு.

      Delete
  20. நேற்று காலையில் வந்தேன் பதிவு தாமதமாக வந்திருக்கிறதா ? அதோடு இன்று தான் வர நேரம் கிடைத்தது.. தேனாய் அறிமுகங்கள் இருக்கும் என்றே தேடி வந்தேன் அப்படியே இருக்கிறது வாழ்த்துக்கள் பா... நான் உங்களுக்கு அக்காவா ? தங்கையா ?

    ReplyDelete
    Replies
    1. முதல் நாள் கொஞ்சம் முன்னதாகப் பதிவு செய்ய முடிந்தது. இரண்டாம் நாள் தாமதமாகிப் போனது.எதிர்பார்த்து தேடி வந்தீர்களா? மகிழ்ச்சி சசி..உளமார்ந்த நன்றி. அக்கா என்றாலும் தங்கை என்றாலும் மகிழ்ச்சிதான்...தங்கையாக இருக்கவா ;-) ஹிஹி

      Delete
  21. சிறந்த பகிர்வு வரவேற்கிறேன்.

    ReplyDelete
  22. சிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  23. அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  24. எமது வலைப்பூவின் பதிவினை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி கிரேஸ் அவர்களே.
    அன்புடன், கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

    ReplyDelete
  25. பிள்ளைகளை அவர்கள் போக்கில் படிப்பை விரும்பி படிக்கவைக்கும் வித்தைகளை மிக அழகாக சொல்லி இருக்கீங்க கிரேஸ்...

    அறிமுகங்கள் அனைத்து பேருக்கும் அன்பு வாழ்த்துகள்.

    ReplyDelete