Monday, March 3, 2014

மகிழ்வுடனே வணக்கம்

வலைச்சரம்
பதிவர்களின் குழுமம்
மணங்கமழும் கதம்பம்
மலர்ந்த வலைப்பூக்கள்
மலரும் அரும்புகள்
மணம் பலவிதம்
மனங்கள்  மகிழும்
இனிதாய்த் தொடுத்தவர் வரிசையில்
இந்த வாரம் நான்
அழைத்தவருக்கும் வாழ்த்தியவருக்கும்
அகமிருந்து நன்றிகள்!

வணக்கம் வலைச்சர நட்புகளே, இங்கு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி! வலைச்சரத்தில் ஆசிரியராக இரண்டாம் முறை, இதற்கு அழைத்த சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் திரு.சீனா ஐயா அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!


இந்த முதல் இடுகையில் என்னைப் பற்றிக் கொஞ்சம் சுயபுராணம்.

காண்பது எழுத்தாகி வந்துவிடும் சிலநேரம். அப்படி கழுகு துரத்திய காக்கை பார்த்தபொழுது வந்தது காக்கை வென்றதோ கழுகு வென்றதோ. வண்டிஓட்டிச் சென்றபொழுது வழியில் பார்த்த மானிற்குத் தெரியாது தான் பாடுபொருளாகப் போவது, இரலை காண்பேனோ! 
பட்டாம்பூச்சி.

தாய்மை கவியாவது சிலநேரம், காதல் கவியாவது சிலநேரம், காய் நறுக்கும்பொழுதும்.

இயற்கைச் சூழல் காக்க வேண்டுமென்று கூவிடும் மனம் படைத்தன இவை, ஓவியத்திலா காட்ட வேண்டும்? , மழை வேண்டும் வேண்டும் என்று சொல்லும் நாம் மழைக்கு மரம் வேண்டுமாம் என்று மழை சொல்வதையும் கேட்போம்.

சமூகம் பற்றி சிந்திக்கும் நேரங்களில் தோன்றும் சிலவும் பதியப்படும் இப்படி.
நானாக நான்,
நாளைய சமுதாயம்.

 இயற்கை கவிதைகளாக  மேகம், மற்றும் பெரும் பெயல் பின்னால் .

இலக்கியத்தின் காதல், யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என்றே வந்துவிடும் இங்கே.
இரவின் வருதல் அறியான் 
முல்லைப்பாட்டு சொல்லும் மன்னன் மனம்.
ஐங்குறுநூறு பாடல்களில் ஒன்று.

ஆத்திச்சூடி கதையாகக் கற்றுக் கொடுக்கலாம் என்ற எண்ணத்தில் எழுதிய கதைகளில் ஒன்று ஐயமிட்டு உண்.

இன்னும் என் எண்ணங்கள் அனுபவங்கள் கற்பனைகள் என்று பலவும் இருக்கும் என் தளத்தில். தளத்திற்கு வருகை தந்து கருத்துகளைத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நாளை சந்திப்போம்.

53 comments:

  1. நீங்கள் வாசித்துவிட்டேன் என்று சொன்னால் எனக்குத் தெரியுமா என்று பார்க்க.. :)

    ReplyDelete
  2. ஆசிரியர் பொறுப்பேற்றிருக்கும் கிரேசுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. சுய அறிமுகம் நன்று... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் கிரேஸ் :)

    ReplyDelete
  5. எனக்கு சமீபமாகத்தான் அறிமுகம் உங்கள் எழுத்து! நன்றாகவே எழுதுகிறீர்கள் என்பது கண்டு மகிழ்வு! வலைசசரத்திலும் அசத்த மனம் நிறைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்கள் மனமார்ந்த கருத்திற்கும் வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றி சகோதரரே!

      Delete
  6. வணக்கம்
    சுய அறிமுகம் சிறப்பாக உள்ளது.
    வாழ்த்துக்கள்.

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  7. வணக்கம்
    த.ம
    4வது.வாக்கு

    ReplyDelete
  8. இந்த வார ஆசிரியருக்கு பாராட்டுகள்..

    கலக்குங்க...

    ReplyDelete
  9. //காண்பது எழுத்தாகி வந்துவிடும் சிலநேரம்!..//

    அனைவருக்கும் இது கைகூடுவதில்லை!..

    இங்கே அறிமுகத்தில் - தாங்கள் குறிப்பிட்ட அனைத்தையும் வாசித்து விட்டு - நெடுநாட்களுக்குப் பின் நல்ல தமிழ்க் காற்றை தங்கள் தளத்தில் சுவாசித்து விட்டு
    மகிழ்ந்தேன். மனம் நெகிழ்ந்தேன்..

    வாழ்க.. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. பதிவுகளை வாசித்து மனமுவந்து கருத்திட்டதற்கு நன்றி ஐயா!

      Delete
  10. வாழ்த்துக்கள் ஆசிரியர் பணிக்கு!

    ReplyDelete
  11. இந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. oh! கிரேஸ்ச்செல்லம் வாழ்த்துக்கள் !!

    ReplyDelete
  13. இனிய வாழ்த்துக்கள் கிரேஸ்.

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் சகோ! வலைச்சரத்தில் உங்கள் எழுத்துக்கள் மணம் சேர்க்கட்டும்! நன்றி!

    ReplyDelete
  15. வலைச்சரத்தின் ஆசிரியையாக இரண்டாம் முறை வந்த சகோதரி - தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களை வரவேற்கிறேன்! மீண்டும் எனது வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. வாழ்த்துகள் கிரேஸ்!

    ReplyDelete
  17. ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. சுய அறிமுகம் ரசிக்கும்படி இருந்தது. தங்களின் பிற அறிமுகங்களைக் காண ஆவல்

    ReplyDelete
  19. சுவையான சுய அறிமுகம் !
    ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.

      Delete
  20. சுவாரஸ்யமான சுய அறிமுகம் கிரேஸ்.. ரசித்தேன்பா..

    இபானுக்கு எக்சாம் இருப்பதால் உங்கள் தளம் சென்று பார்க்க முடியவில்லை..

    நிதானமாக படிப்பேன் கருத்தும் இடுவேன்.. மார்ச் 13 தான் வருவேன். அதுவரை அன்புடன் வாழ்த்துகள்பா க்ரேஸ்.. த.ம.8

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரி! இபானுக்கு நல்வாழ்த்துக்கள்!
      நிதானமாக வாருங்கள், நன்றி!

      Delete
  21. சிறந்த அறிமுகம்
    தொடருங்கள்

    ReplyDelete
  22. சுய அறிமுகம் அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  23. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
  24. ஆசிரியப் பணிக்கு வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
  25. 2ஆம் முறை ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள் பா..
    நேரம் கிடைக்கும் போது வலைக்கு செல்கிறேன்... அசத்துங்க..வருகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சசிகலா. கண்டிப்பாக வாங்க..

      Delete
  26. ஆசிரியர் பணி சிறந்தோங்க வாழ்த்துகள்!

    ReplyDelete
  27. வாழ்த்துக்கள் சகோ இவ்வாரம் முழுவதும் மகிழ்வாக அமையட்டும் .

    ReplyDelete
  28. இந்த வாரம் உங்கள் வாரம்..... பாராட்டுகள். சிறப்புற பணியாற்ற வாழ்த்துகள்.

    ReplyDelete