Sunday, March 2, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே ! 

இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பெற்ற ராஜி  தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,  ஈடுபாட்டுடனும் நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 

இவர் எழுதிய பதிவுகள்                       : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்        : 137
அறிமுகப் படுத்திய பதிவுகள்           : 138
பெற்ற மறுமொழிகள்                            : 232
வருகை தந்தவர்கள்                              : 3747

பதிவுகளை அறிமுகப் படுத்தும் போது அப்பதிவுகள் பற்றிய கருத்துகளையும் கூறி இருக்கிறார். பதிவர் பெயரும் தளத்தின் பெயரும் பதிவின் பெயரும் சுட்டிகளும் கொடுத்து அறிமுகப் படுத்தி இருக்கிறார்.

137பதிவுகள் அறிமுகம் -  மற்றும் வருகை தந்தவர்கள் 

எண்ணிக்கை 3747 என்பதும்  பிரமிக்க வைக்கிறது. 

ராஜியினை-இரு வாரம்  தொடர்ந்து ஆசிரியப் பொறுப்பேற்றுப் பணியாற்றிய அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 
நாளை பொறுப்பேற்க அன்புடன் இசைந்துள்ளார் திருமதி தேன்மதுரத் தமிழ் கிரேஸ். 

இவர்  தேன்மதுரத் தமிழ்  என்னும் தளத்தில்எழுதி வருகிறார். 
இவரைப் பற்றிச் சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை என தன்னடக்கத்துடன் கூறுகிறார். - ..மென்பொருள் பொறியாளர், குழந்தைகளுக்காக தற்பொழுது குடும்பத்தலைவியாய் இருக்கிறார். இவர் வளர்ந்தது மதுரையில்,- தற்போது வசிப்பது பெங்களூருவில். என் மொழி தமிழின் மேல் தனிக்காதலுண்டு என்று கூறும் இவர் இலக்கியத்தில் உள்ள  வரலாற்றையும் இனிமையையும் அனைவரும் அறிய வேண்டும் என்ற ஆசை கொண்டவர். அதனால் இலக்கியத்தைக்  கொஞ்சம் எளிதாக இவரது தளத்தில் பதிகிறார்.

தேன்மதுரத் தமிழ் கிரேஸினை வருக வருக என் வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன். 
நல்வாழ்த்துகள் ராஜி

நல்வாழ்த்துகள் தேன்மதுரத் தமிழ் கிரேஸ்

நட்புடன் சீனா 

31 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. தேன்மதுரத் தமிழ் அருந்த காத்திருக்கிறேன் !

    ReplyDelete
  3. இரண்டு வாரங்களாக வலைச்சரத்தினை அழகுபடுத்திய ராஜிக்கு பாராட்டுகள்.....

    நாளை முதல் துவங்கும் வாரத்தின் ஆசிரியர் கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. தேன் மதுரத் தமிழோசையை தனது வலைப் பதிவின் மூலம், உலகமெல்லாம் பரவச்செயயும் சகோதரிகள் ! - சகோதரி ராஜிக்கு நன்றி! தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. வாருங்கள் தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களே...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. வாழ்த்துக்கள் கிரேஸ் .

    ReplyDelete
  7. வாருங்கள் தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களே...! வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  8. வாருங்கள் தமிழ். வாழ்த்துகள்

    ReplyDelete
  9. இரண்டு வாரங்கள் வலைச்சரத்தில் கலக்கிய பதிவுலகின் அக்கா ராஜி அவர்களுக்கு மிக்க நன்றி... இந்த வாரத்தில் கலக்கப் போகும் சகோதரி கிரேஸ் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. தேன்மதுரத் தமிழ் கிரேஸ் அவர்களுக்கு நல்வரவு!..
    நல்வாழ்த்துக்களுடன்..

    ReplyDelete
  11. வணக்கம்

    கடந்த வாரம் போல வருகிற வாரமும் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
    தாங்கள்தான்வலைச்சரப் பொறுப்பு என்ற தகவலை பார்த்தவுடன் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து அசத்துங்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  12. வாழ்த்தி வரவேற்ற அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்!

    ReplyDelete
  13. வலைச்சர ஆசிரியப்பணியை தொடரப்போகும் கிரேஸுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  14. இரண்டு வாரங்களும் வெகு சிறப்பாக பணியாற்றிய ராஜிக்கு
    பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .இன்று பணியினை ஏற்று
    வருகை தரவிருக்கும் தேன்மதுரைத் தமிழன் கிரேஷுக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் .

    ReplyDelete
  15. வாழ்த்துக்கள்! வலைச்சரத்தில் தேன் மதுரத் தமிழ் இனிக்கட்டும்!

    ReplyDelete
  16. ஆசிரியரின் கடின உழைப்பும், ஈடுபாடும் பிரமிக்க வைக்கிறது. இவ்வாறான எண்ணிக்கையில் பகிர்வுகளைப் பகிர்வது என்பது பாராட்டத்தக்கவேண்டியதாகும். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. கல்யாண வீடு போல நம் சொந்தங்கள் எல்லோரும் கூடி நின்று விழா சிறப்பித்ததை போன்றதொரு உணர்வு ராஜி ரெண்டு வாரமும் வலைச்சரம் பொறுப்பேற்று சிறப்பாக செய்து முடித்து இருக்கீங்கப்பா.. அன்பு வாழ்த்துகள் ராஜி. அடடே நம்ம கிரேஸ் :) வாங்க வாங்க அன்பு வாழ்த்துகள்பா.. த.ம.9

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி மஞ்சுக்கா!

      Delete
    2. ஆமாம், ராஜி அருமையாய்க் கலக்கிவிட்டார்கள்..
      மிக்க நன்றி சகோதரி.

      Delete