Wednesday, March 26, 2014

கவனிக்கப்பட வேண்டிய படைப்பாளிகள்


நானும் பதிவுலகமும் என்ற தலைப்பில் எழுதிவந்த பதிவு சற்றே அனாயசமாக நீண்டுவிட்டதால் அதனை இங்கே பதிவிடுவதை விட எனது பதிவில் வெளியிடுவது நலமாய் இருக்கும் என நினைக்கிறன். ஏற்கனவே இந்த வாரம் சக பதிவர்களின் பார்வையில் பதிவுலகம் பற்றிய தொகுப்பு வெளிட்டுக் கொண்டிருப்பதால் அது முடிந்த பின் நானும் பதிவுலகமும் திடங்கொண்டு போராடுவில் தொடரும். முன்பெல்லாம் தொலைகாட்சியில் போடுவார்களே சிரமத்திற்கு மன்னிக்கவும் என்று அதை இங்கே கூறிகொள்கிறேன் :-) ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது... 

*****  


ஒரு தற்செயலான பயணத்தில் சந்திக்கும் சக பயணி வாழ்க்கை முழுவதும் நண்பனாதல் என்பது மிகக்கடினம். எல்லையில்லாமல் பரந்து விரிந்த இந்த வலையுலகில் எழுத ஆரம்பித்த பொழுது அறிந்திருக்கவில்லை என்னோடு பயணிக்கும் சில சக பயணிகள் கைபிடித்து அழைத்துச்செல்லும் தோழர்கள் ஆவார்கள் என்று. அப்படிபட்டவர்களில் ஒருவர் ஜீவன்சுப்பு. 

சமயங்களில் நான் ஒழுங்காக எழுதவில்லை என்றால் என்னைவிட அதிகமாய் வருத்தப்படும் ஒரு ஜீவன் இருக்குமென்றால் அது ஜீவன்சுப்புதான். இவரது நட்பிற்கு பின் எனது எழுத்தில் வெகுவான மாற்றம் வந்திருப்பதை என்னால் உணர  முடிகிறது. ஒவ்வொருமுறை பதிவெழுதிய பின்னரும் அதை ஜீவன்சுப்பு வாசித்தால் எப்படியிருக்கும் என்று ஒருமுறை வாசித்துப் பார்பதுண்டு. அப்படி வாசிக்கையில் ஒருவேளை அது அவருக்கு பிடிக்காது என்று தோன்றினால் அழித்து விடுவேன். இதை மிகைபடுத்தி கூறவில்லை, வலைசரத்தில் என் முதல் நாள் பதிவை படித்துவிட்டு highly disappointed என்று மின்னஞ்சல் அனுப்பியிருந்தார், வலைச்சரத்திற்காக எழுதியிருந்த அடுத்த மூன்று நாட்கள் பதிவையும் அப்போதே அழித்துவிட்டேன்.             

இவரிடம் ஒரு பழக்கம் உண்டு இவருக்கு பிடித்த ஒரு பதிவு எங்கேனும் இருக்குமானால் அதனை நான் படித்திருக்க மாட்டேன் என்றால் உடனே மின்னஞ்சல் அனுப்பிவிடுவார். இவர் அனுப்பும் எந்த ஒரு பதிவும் மோசமாயிருக்காது. எழுதுதலை விட வாசிப்பை அதிகம் நேசிப்பவர். கணினி மற்றும் இணைய தட்டுப்பாடால் சரிவர இணையத்தில் இயங்க முடியாத நிலையில் இருந்தாலும் தற்போதும் பேசாத வார்த்தைகள் எனும்  தலைப்பில் எழுதிவரும் பதிவுகள் ஒவ்வொன்றும் அட்டகாசம். பதிவுகள் பெரிதாக பெரிதாக வாசித்தல் கஷ்டம் என்று கருதுவதால் தன்னுடைய பதிவுகளையும் சுருங்கக் கூறி சீக்கிரம் முடித்து விடுகிறார். 

இவரை வைத்து தனியொரு பதிவு திடங்கொண்டு எழுத நினைத்திருப்பதால் இவருடைய மற்றொரு 'உயரமான' பக்கத்தை அங்கு பகிர்கிறேன்.



தமிழ் அபூர்வமாக வாசிக்கபடும் ஒரு இடத்தில் தமிழ் அபூர்வத்திலும் அபூர்வத்திலும் அபூர்வமாக எழுதப்படும் ஒரு சூழலில் பணிபுரியம் ஒருவனிடம் 'பாஸ் நானும் தமிழ்ல ப்ளாக் எழுதணும் ஐடியா குடுங்க' என்று யாரேனும் கேட்டால் அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்குமா இருக்காதா! அலுவலகத்தில் என்னுடன் பதிவுகள்/புத்தகங்கள் குறித்து பேசும் சிலர் இக் கேள்வியைக் கேட்டிருந்தால் கூட இவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன், ஆனால் ஆச்சரியம் கேட்டதோ ரூபக். இப்போ வரை கூட என் ஆச்சரியம் குறையவில்லை 'ரூபக்குள்ள இவ்ளோ திறமையா ஆர்வமா' என்று. தீவிர சுஜாதா வாசகனான ரூபக் தீவிர உலக சினிமா ரசிகனும் கூட (இங்கேற்படும் ஆள் மாறாட்டத்திற்கு நான் பொறுப்பல்ல :-)) 

சிறுகதைகள், பயணக் கட்டுரைகள், சாப்பாட்டு ராமனாக சாப்பாடு குறித்து எழுதிவரும் ரூபக் சாகும் காண வேண்டிய சினிமாக்கள் என்றும் ஒரு பகுதி எழுதி வருகிறான். இதில் விமர்சனம் ஆகும் ஒவ்வொரு சினிமாவும் பார்க்கத் தூண்டும் விதத்தில் இருக்கும்.

Duel - உலக சினிமா


*****
விஜயன் துரைராஜ்

வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் எழுதுவதையும், படிப்பதையும் மட்டும் விட்டுவிடக் கூடாது என்று நினைப்பவன் விஜயன் துரைராஜ். துரைராஜ் இயற்பெயர். விஜயன் புனைப்பெயர். எப்போது தனக்கு ராமேஸ்வரம் சொந்த ஊர் என்று கூறினானோ அப்போதே விஜயனையும் பிடித்துவிட்டது. நான்குபுறமும் கடற்கரை சூழ்ந்த கிராமத்தில் இருந்து வந்தவன் என்பதால் தன்னுடைய வலைப்பூவின் பெயரையும் கடற்கரை என்றே வைத்துக் கொண்டான். 

விஜயனை ஒரு கட்டுரையாசிரியனாக பிடித்ததை விட ஒரு கவிஞனாகவே எனக்கு மிகவும் பிடிக்கும். கவிதை, கட்டுரை, புத்தக ஆய்வு என்று பல்வேறு தளங்களில் எழுதிவரும் விஜயனுக்கு சமயமும் சந்தர்ப்பமும் அமைந்தால் மிகச்சிறந்த எழுத்தாளனாக வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதிகம் கவனிக்கப்படாத கவனிக்கப்பட வேண்டிய எழுத்துக்கள் விஜயனுடையது. 



எப்போது எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் 'இங்க இருக்கதிலயெ நான்தான் சின்ன பையன்' என்று அறிமுகமாகிக் கொள்ளும் வெற்றிவேல் அரசனுக்கு பக்கத்து ஊர். கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மையுடன் வலம் வரும் வெற்றி தற்போது வானவல்லி என்னும் சரித்திர நாவலும் எழுதி வருகிறான். வானவல்லியின் கதையை கேட்டதில் இருந்து ஆவிபாஸ் கூறிவருவது 'ஹே செம ஒன்லைன் பா, ஒரு நல்ல வடிவம் கிடைச்சா நிச்சயமா ஒரு மிகபெரிய வெற்றி வெற்றிக்கு கிடைக்கும்' என்பதுதான். 

வலைப்பூவில் நாவல் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் எண்ணம் புக்கா வந்ததும் படிச்சிக்கலாம் என்பதாகவும், எழுதுபவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் எண்ணம் ச்ச யாருமே படிக்க மாட்டேங்காங்க என்பதாகவும் தான் இருக்கிறது. ஒருநாவல் முயற்சியில் இறங்கி கைவிட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் வெற்றிக்குள் இருக்கும் உற்சாகம் அசாத்தியமானது. தொடர்ந்து எழுதிமுடிக்க வாழ்த்துகள்... ( நான் நாவல் முயற்சியை கைவிட்டதன் காரணம் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியால் பலரும் கதையை தொடர கஷ்டப்பட்டனர் என்பதுமே ஆகும்)  



கடந்த வருட பதிவர் சந்திப்பு நிகழ்வு முடிந்து அனைவரும் கிளம்பிக் கொண்டிருக்கும் தருவாயில் சந்தித்த ஒரு நபர் தினேஷ். என் பால்ய கால வயதில் என்னோடு படித்த நண்பனின் சாயலில் இருந்தார் தினேஷ். ஏதோ ஒரு உள்ளுணர்வு அவரோடு பேசச் சொன்னாலும் அவர் முதல்முறை சந்தித்தாலோ என்னவோ வார்த்தையை அளந்து அளந்தே பேசினார். தற்போது முகநூலில் தொடர்ந்து இயங்கிவரும் தினேஷ் அவ்வப்போது மனக்குதிரையிலும் தன் மனக்குதிரையை ஓட விட்டால் நன்றாக இருக்கும்.    



நாளை வேறுசில பதிவர்களோடு மீண்டும் சந்திப்போம்... 

36 comments:

  1. தங்களின் அறிமுகங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  2. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். வானவல்லி நூலாக வரவேண்டும் என்பது என் ஆசையும் கூட சீனு.

    ReplyDelete
  3. ஜீவன் சுப்பு- அந்த "டை" கட்டுன நக்கீரர் தானே? இணையத்தில் கல கலன்னு கலாய்க்கும் இவர் நேரில் மட்டும் அம்பி மாதிரி ஒரு லுக் குடுப்பதன் மர்மம் தான் பிடிபட மாட்டேன் என்கிறது.. இவருடைய "டைமிங்" நக்கலுக்கு நானும் ஒரு விசிறியே..!

    ReplyDelete

  4. இளைய தலைமுறையில் (என்னையும் சேர்த்து தான்!!) வெகு சிலரே படிக்க எழுத ஆர்வம் காட்டுகின்றனர்.. அதுல என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது இந்த ரூபக் தான்.. முன்பெல்லாம் செல்பேசி வழியாக தன் STR வாயிஸில் அழைத்துப் பேசுவார்.. இப்போது இடைவிடாத தழுவல் சாரி அலுவல் காரணமாய் அழைப்பது குறைந்துவிட்டது, இருந்தாலும் தம்பி உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு!! :)

    ReplyDelete
    Replies
    1. //உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு// இந்த வாக்கியம் உங்களிடம் பட்ட பாடு சிலர் மட்டுமே அறிவர் :)

      Delete
  5. விஜயனின் எழுத்துகள் என்னை வசீகரிக்கும் முன்னரே இவருடைய "கடற்கரை" என்ற பெயருக்கு முன்னும் பின்னும் இரு இதயத்தை போட்டிருந்தது (சின்ன விஷயமாக இருந்தாலும்) வசீகரித்தது.. இவர் கொஞ்சம் சீரியஸா எழுதும் போது மட்டும் டரியலாகிறது.. சுதந்திர தினத்தை பற்றி இவர் எழுதியிருந்த ஒரு பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..

    ReplyDelete
    Replies

    1. //இவர் கொஞ்சம் சீரியஸா எழுதும் போது மட்டும் டரியலாகிறது.....// :) :) நன்றி ஆ.வி ! பாஸ்

      //சுதந்திர தினத்தை பற்றி இவர் எழுதியிருந்த ஒரு பதிவு எனக்கு மிகவும் பிடித்த ஒன்று..//

      டரியல் ஆகாமல் வாசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றி அண்ணா

      Delete
  6. நான் சொந்தமாக கம்போஸ் செய்து பாடிய பாடலை முதன் முதலில் இசைத்தட்டில் பதிந்து தன் காரில் கேட்டு ரசித்த நண்பன் ஜெயராஜிற்கு பிறகு தன் செல்பேசியில் நான் எழுதி பாடிய பதிவர் சந்திப்பு பாடலை பதிந்து கேட்டு ரசித்து முதல் சந்திப்பிலியே அசத்திய வெற்றிவேல். "உதிரும் நான்" என்று காதலுக்காய் தன்னையே உதிர்த்துக் கொள்ளும் இவர் கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுப் பூர்வமானவை.. சீனு கூறியது போல் இவர் வானவல்லி கதையின் சுருக்கத்தை என்னிடம் கூறியபோது வியப்பில் ஆழ்ந்திருந்தேன்.. கல்கி, சாண்டில்யன் போன்ற ஜாம்பவான்கள் எடுத்துக் கொண்டு வெற்றி பெற்ற களம் அது.. உனக்கு வரும் மாற்றுக் கருத்துகளை முன்னேற்றப் படிகளாய் நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுது.. சிறப்பான முயற்சி..! அண்ணனின் அன்பு வாழ்த்துகள்!!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொந்தமாக கம்போஸ் செய்த பாடலை போன வாரம் வரை வைத்திருந்தேன் அண்ணா... பேக் செய்யாமல் பார்மெட் பண்ணியபோது எல்லாம் காலியாகிடுச்சி...

      "உதிரும் நான்" என்று காதலுக்காய் தன்னையே உதிர்த்துக் கொள்ளும் இவர் கவிதைகள் ஒவ்வொன்றும் உணர்வுப் பூர்வமானவை.
      /////////////////////////////////////////////////////////////////////
      நன்றி அண்ணா....

      சீனு கூறியது போல் இவர் வானவல்லி கதையின் சுருக்கத்தை என்னிடம் கூறியபோது வியப்பில் ஆழ்ந்திருந்தேன்.. கல்கி, சாண்டில்யன் போன்ற ஜாம்பவான்கள் எடுத்துக் கொண்டு வெற்றி பெற்ற களம் அது.. உனக்கு வரும் மாற்றுக் கருத்துகளை முன்னேற்றப் படிகளாய் நினைத்துக் கொண்டு தொடர்ந்து எழுது.. சிறப்பான முயற்சி..! அண்ணனின் அன்பு வாழ்த்துகள்!!
      ////////////////////////////////////////////////////////////////////////////////////////
      உண்மைதான் அண்ணா... வானவல்லி ஆரம்பித்த போது அதன் கடினம் எனக்குத் தெரியவில்லை. ஒரு சரித்திர நாவல் எழுதுவது எவ்வளவு முயற்சி, உழைப்பு தேவை என்பதை அனுபவித்த பிறகே உணர்கிறேன். வேலை கூட தேடாமல் இப்போ இந்த வேலையைத் தான் முழுசா செஞ்சிகிட்டு இருக்கேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி அண்ணா... நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்...

      மாற்றுக் கருத்துகள் அதற்குள் வர ஆரம்பித்துவிட்டது அண்ணா... வானவல்லி -12 ல் ஒருவர் இது யவன ராணியின் அப்பட்டமான காபி என்று போட்டார், பிறகு எனது விளக்கத்திற்குப் பிறகு அவர் மன்னிப்புக் கேட்டார்.

      நன்றி அண்ணா....

      Delete
  7. தினேஷின் பக்கங்களை படித்ததில்லை.. இப்போது வாசிக்க ஆரம்பிக்கிறேன்.

    ReplyDelete
  8. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்....

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகங்களுக்கு வாழ்த்துகள். எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள்தான்.

    ReplyDelete
  11. நான் தொடர்ந்து எழுதி வருவதில் என்கே சில சமயங்களில் ஆச்சரியமாகத் தான் இருக்கும். நன்றி சீனு :)

    ReplyDelete
  12. அறிமுகமான பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. இன்றைய பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. //தன் செல்பேசியில் நான் எழுதி பாடிய பதிவர் சந்திப்பு பாடலை பதிந்து கேட்டு ரசித்து முதல் சந்திப்பிலியே அசத்திய வெற்றிவேல்.//


    நீங்கல்லாம் ரெம்பப் பெரிய ஆளா வருவீங்க மிஸ்டர் வெற்றி :)

    ReplyDelete
    Replies
    1. நன்றி அண்ணா... இந்த மாதிரி வாழ்த்துகள் எப்போதும் இருக்கட்டும் அண்ணா...

      Delete
  15. அம்மா பிரச்சாரத்துக்கு வந்துட்டாங்கப்பா ...

    ReplyDelete
  16. வலையுலகின் சக பதிவர்களின் அறிமுகத்தினை அசத்தலாக செய்துவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  17. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! எங்களுக்கும் புதிய அறிமுகங்கள் கிடைக்கின்றன! ஒவ்வொரு அறிமுகத்திற்கும் நீங்கள் கொடுத்திருக்கும் விளக்கம் அருமை!

    இதெற்கெல்லாம் முதலாக நீங்கள் சொல்லியிருக்கும் ஒரு வரி

    //ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது... //

    இந்த வரியில், தமிழ் வாசக உலகத்தையே தன்வசம் கொண்டிருந்த, அந்த ஸ்ரீரங்கத்துக்காரர் ஒளிந்திருக்கின்றார்! இதை வாசித்ததும் அவர் நினைவு வந்து கண்களில் நீர் துளிர்த்ததை தவிர்க்க முடியவில்லை, சீனு!

    தமிழ் உலகம் வெகு சீக்கிரமே ஒரு நல்ல எழுத்தாளரை இழந்துவிட்டதே என்ற ஆதங்கம்! அவரது பாதிப்பு பலரது எழுத்துக்களில் இலைமறை காயாகவும், நேரடியாகவும் தெரியத்தான் செய்கின்றது! அதுதான் அவரது ஆளுமை! அந்த ஸ்ரீரங்கத்துக்காரரும், ரங்கநாதனும் உம்மை ஆசிர்வதிக்கட்டும்!

    ReplyDelete
  18. super சீனு brother..

    ReplyDelete
  19. வணக்கம் அண்ணா....

    எப்போது எங்கே பதிவர் சந்திப்பு நடந்தாலும் 'இங்க இருக்கதிலயெ நான்தான் சின்ன பையன்' என்று அறிமுகமாகிக் கொள்ளும் வெற்றிவேல் அரசனுக்கு பக்கத்து ஊர்.
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    உண்மை தான் அண்ணா.... இப்போதும் சொல்வேன். அகில உலக தமிழ் வலைதளத்திலேயே சின்னப் பையன் நான் தான். குழந்தைப் பதிவர்....


    கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மையுடன் வலம் வரும் வெற்றி தற்போது வானவல்லி என்னும் சரித்திர நாவலும் எழுதி வருகிறான். வானவல்லியின் கதையை கேட்டதில் இருந்து ஆவிபாஸ் கூறிவருவது 'ஹே செம ஒன்லைன் பா, ஒரு நல்ல வடிவம் கிடைச்சா நிச்சயமா ஒரு மிகபெரிய வெற்றி வெற்றிக்கு கிடைக்கும்' என்பதுதான்.
    /////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    கவிஞன், கட்டுரையாசிரியன், சிறுகதை எழுத்தாளன் என்று பன்முகத்தன்மை.... இதுலாம் ஆகத்தான் அண்ணா முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன். இந்த முயற்சியின் வெளியீடு தான் வானவல்லியும்... ஆவி அண்ணா. தங்கள் பாராட்டுகளுக்கு நன்றி அண்ணா... நிச்சயம் இந்த முயற்சியில் வெற்றி பெறுவேன் என்று நம்புகிறேன்.


    வலைப்பூவில் நாவல் படிக்கும் அனைவருக்கும் இருக்கும் எண்ணம் புக்கா வந்ததும் படிச்சிக்கலாம் என்பதாகவும், எழுதுபவர்கள் அத்தனை பேருக்கும் இருக்கும் எண்ணம் ச்ச யாருமே படிக்க மாட்டேங்காங்க என்பதாகவும் தான் இருக்கிறது. ஒருநாவல் முயற்சியில் இறங்கி கைவிட்டவன் என்ற முறையில் கூறுகிறேன் வெற்றிக்குள் இருக்கும் உற்சாகம் அசாத்தியமானது. தொடர்ந்து எழுதிமுடிக்க வாழ்த்துகள்... ( நான் நாவல் முயற்சியை கைவிட்டதன் காரணம் தொடர்ந்து எழுத நேரம் கிடைக்கவில்லை என்பதாலும், அதனால் ஏற்படும் இடைவெளியால் பலரும் கதையை தொடர கஷ்டப்பட்டனர் என்பதுமே ஆகும்)
    ///////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////
    முற்றிலும் உண்மைதான் அண்ணா. நானும் நாவலை முழு புத்தகமாகத் தான் படிப்பேன். வாரப் பத்திரிகை, வலைதளங்களில் படித்தது இல்லை. அப்படி வாசிக்கவும் பிடிக்காது. வாசிக்க ஆரம்பித்தால் ஒரே மூச்சில் படித்து முடித்து விட வேண்டும். அப்படித்தான் நானும் படிப்பேன்.
    ஆரம்பத்தில் நானும் அப்படித்தேன் நினைத்தேன். யாரும் வரமாட்டேன் என்கிறார்களே என்று. வானவல்லி முதல் தொடருக்கு ஏகப்பட்ட வரவேற்பு. பிறகு அது குறைந்து போனது. ஆனால் பதிவர்கள் இல்லாமல் சைலென்ட் வாசகர்கள் அதிகம் உள்ளனர். இதுவரை தஞ்சை, சென்னை, சிங்கப்பூர் என்று மூன்று பேர் என்னைத் தொடர்பு கொண்டு வாழ்த்தி இருக்கிறார்கள். ஆதலால் அந்த எண்ணம் காலப்போக்கில் மறைந்து விட்டது. இந்த சிறு சிறு வாழ்த்துகள் எழுதும் வேகத்தையும் அதிகப்படுத்திவிட்டது....

    இப்போது உங்கள் பாராட்டுகளும் மேலும் உத்வேகம் அளித்தள்ளது அண்ணா...

    நன்றி அண்ணா....

    ReplyDelete
    Replies
    1. ஒரு வருத்தம் என்னவென்றால் வானவல்லி ஆரம்பித்த பின் தேடல் அதிகமாகிவிட்டது. ஆனால் வாசிப்பு குறைந்துவிட்டது. மத்தவங்க பிளாக் பக்கம் அறவே அவரது இல்ல இப்போ... :)

      Delete
    2. நிச்சயம் வெல்வாய் நன்பா :) உன் பெயரிலேயே வெற்றி என்கிற வார்த்தை இருக்கிறது,உன்னை பிறர் கூப்பிடும் போதெல்லாம் வெற்றிபெற வாழ்த்துவதாக நினைத்துக்கொள் :) !! வானவல்லி வெற்றியடைய வாழ்த்துக்கள் வெற்றி !! வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன் :)

      Delete
  20. இந்த இணைப்பு தவறாக உள்ளது அண்ணா...

    -----> அவள் கேட்க மறந்த என் காதல் கனவுகள்...

    ReplyDelete
  21. ஒருவேளை நான் வெளியிடாமல் இருப்பதை பாக்யமாகக் கருதுபவர்கள் கனவில் அம்மா வந்து தேர்தல் பிரச்சாரம் செய்யக் கடவது...
    /////////////////////////////////////////////////////////////
    தலைவர் விஜயகாந்த் என்று கூறினால் இன்னும் தகும் என எண்ணுகிறேன்....

    ReplyDelete
  22. சில நல்ல பதிவுகளை சுவையாக அறிமுகம் செய்தீர்கள் சீனு... நன்றி!

    ReplyDelete
  23. சூப்பர் சூப்பர்..... ரொம்ப நாளா இந்த பக்கம் வராம இருந்துட்டேன்.... அவ்வ்வ்வ் மன்னிச்சு.... நேரம் இருக்குறப்போ எல்லார் பக்கமும் போயிட்டு வந்துடுறேன்

    ReplyDelete
  24. உண்மை தான் ஜீவன் சகோவின் எழுத்து டிகிரி காபி மாதிரி கொஞ்சமா, ஸ்ட்ராங்கா இருக்கும் . சின்னசின்னதா அவர் கொடுக்கும் கமெண்ட்ஸ்சும் நல்லா இருக்கும். காதல் கடிதம் போட்டிக்கு அவர் எழுதின லெட்டர் இப்போ நினைத்தாலும் சிரிப்பா வரும்! வாழ்த்துக்கள் சகோ இருவருக்கும்!

    ReplyDelete
  25. மிக்க நன்றி அண்ணா :)

    ReplyDelete
  26. பல புதியவர்களைப் பற்றி அறிந்துகொண்டேன். நன்றி.

    ReplyDelete
  27. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  28. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  29. அறிமுகத்திற்கு மிக்க நன்றி.. வாழ்த்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்..

    ReplyDelete