இன்றைய வலைசரத்தில் நான் பகிரும் பதிவர்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய உள்ளன. மேலும் இவர்கள் பெரும்பாலான பதிவர்களுக்கு அறிமுகமானவர்கள் தான், இருந்தும் யாரேனும் சிலருக்கு இவர்கள் புதிய அறிமுகமாய் இருந்தால் அதுவே எனக்கு மகிழ்ச்சிதான்.
பதிவர்கள் மத்தியிலும் சரி எழுத்தாளர்கள் மத்தியிலும் சரி சற்றே பிரபலமானவர் வாத்தியார் பாலகணேஷ். வலையுலகில் நான் முதன்முதலில் சந்தித்த நபர் வாத்தியார் தான், அந்தநிமிடம் இன்றும் நியாபகம் உள்ளது. தனக்கு நேர்ந்த நேரும் அனுபவங்களை ஹாஸ்யமாக கூறுவதில் வல்லவர், ஆனால் நிஜத்திலோ கொஞ்சம் கோவக்காரர்! என்னவொன்று கோவப்படும் அடுத்தநொடி அதையே ஹாஸ்யமாக்கி விடுவார். இவரது நடைவண்டிகள் தொடரைத் தவிர வேறெதையும் சீரியசாக பதிவு செய்யவில்லை. சமீபத்தில் பேசும்போது கூட 'எனக்கு கனமான சப்ஜெக்ட் எல்லாம் எழுதனும்னு ஆச இல்ல, லைட்டாவே எழுதுவோம்' என்றார். கட்டுரைகள் கதைகள் தவிர்த்து விறுவிறுப்பான ஒரு நாவலை இவர் எழுத வேண்டும் என்பது எனது அவா!
சீரியசான விஷயத்தை சீரியசாகவும் சிரியஸான விஷயத்தை சிரியசாகவும் கூறுவதில் வல்லவர். நான் புதிதாக அறிமுகம் ஆகும் ஒவ்வொருவரிடமும் தவறாது கூறுவது சிறுகதை எழுத ஆர்வம் இருந்தா சிவகாசிக்காரன வாசிங்க என்பது தான். தொய்வே இல்லாத எழுத்துநடைக்கு சொந்தக்காரர். ஒருமுறை ஒரு பிரபல பதிவர் என்னிடம் 'சீனு தயவு செஞ்சு பதிவ சின்னதா எழுது, ஏன் இவ்ளோ பெருசா எழுதுற என்று கூறியபோது 'ஏங்க சிவாகாசிக்காரன் என்னவிட பெருசா எழுதுவாருங்க' என்றேன். அவரோ நொடிப்பொழுதும் தாமதியாமல் 'அவரு நல்ல சுவாரசியமா எழுதுவாரு, ஆனா நீ' என்று மொக்கை கொடுத்தார். நிஜமாகவே அதுதான் சிவாகாசிக்காரன். ஏனோ இவரோடு பேசும்போதெல்லாம் என் வகுப்புத் தோழனோடு பேசும் ஒரு உணர்வு ஏற்படும். பெரும்பாலும் ஒரே போன்ற பதிவுகளாக எழுதமாட்டார். ஒவ்வொரு பதிவும் ஒவ்வொரு விதமாய் இருக்கும், சிலசமயம் சர்ச்சையை கிளப்பும் என்று தெரிந்தாலும் தான் கூற விழைந்த கருத்துகளை தைரியமாக கூறுபவர். இவருடைய சில கதைகள் குறும்படமாகி உள்ளன. விகடனில் மாணவ பத்திரிக்கையாளனாய் பணியாற்றியவர். சமீபத்தில் இவருடைய பழைய பதிவுகளை நோண்டிக் கொண்டிருந்த போது தற்செயலாய் சில பதிவுகள் என் கண்ணில் பட்டன, நல்லவேளை அது போன்ற பதிவுகளை அவர் தற்போது எழுதுவதில்லை என்பது யாருக்கு சந்தோசமோ இல்லையோ எனக்கு சந்தோசம், அந்த பதிவின் லேபிளில் குறிப்பிட்டிருந்த ஒரு வார்த்தை 'கவிதை'.
சார் நீங்க செத்துப்போயிட்டா??!! - சிறுகதை...
நீதி நேர்மை நியாயம் என்ற வார்த்தைகளை கண்டறிந்தவர்கள் இப்போது இருந்திருந்தால் அதற்கு அடுத்த வார்த்தையாக அண்ணன் மெட்ராஸின் பெயரையும் சேர்த்திருப்பார்கள். ஒரு பதிவரை எப்படி அணுக வேண்டும் எல்லாரும் கற்றுக் கொடுக்க ஒரு பதிவரை எப்படியெல்லாம் அணுகக்கூடாது என்று கற்றுகொடுத்தவர் சிவா. பொய்யாக நீங்கள் புகழ்ந்தால் மதிக்காதவர் நேர்மையாக இகழ்ந்தால் புன்னைகையோடு ஏற்றுக்கொள்வார். நான் வலையுலகிற்கு வரும் முன் வெரைட்டி ரைட்டராக இருந்தவர் அதன்பின் சினிமா மற்றும் நாடக ரைட்டராக மாறிவிட்டார். எந்தவொரு விசயமாக இருந்தாலும் நாம் சிந்திக்காத கோணத்தில் எள்ளலாக கூறும் தன்மை படைத்தவர். தமிழகத்தின் முன்னணி பத்திரிக்கைகளில் சிவா எழுத வேண்டும் என்பது என் அவா!
அண்ணன் கே.ஆர் பி செந்தில் ஆரம்பித்திருக்கும் சினிமா மற்றும் சினிமா சார்ந்த தகவல்கள் அடங்கிய வலைதள ஆக்கத்தில் சிவா மற்றும் கற்போம் பிரபுகிருஷ்ணாவிற்கு பெரும்பங்கு உண்டு.
எதற்கும் சற்றும் விட்டுகொடுக்காத வளைந்து கொடுக்காத எழுத்து பிலாசபி பிரபாகரனுடையது. இவரையும் அறிமுகபடுத்தியது விஜயன் தான் 'அதோ நிக்றாரு பாருங்க பிலாசபி, அவரோட போஸ்டுக்கு எதிர்ப்பு தெரிவிச்சு நிறைய மிரட்டல் எல்லாம் வந்தருக்கு' என்று விஜயனிடமிருந்து வந்த ஒற்றை ஸ்டேட்மென்ட்தான் பிரபாவின் தளத்தை வாசிக்கத் தூண்டியது. எதையுமே நீட்டி முழக்கி எழுதாதவர், கூறவிழைவதை கூறிவிட்டு அடுத்த விசயத்திற்கு நகர்ந்து விடுவார். எழுத்துக்களை வாசிக்கும் போது வாசிப்பது போலவே உணர மாட்டோம், அவர் எழுதிய வேகத்திலேயே அவ்வளவு சுவாரஸ்யமாக முடித்து விடுவார். இவருடைய அந்தமான் பயணக் கட்டுரைகளை வாசித்ததில் இருந்து என் அண்ணன் என்னிடம் கூறிக்கொண்டே இருப்பது 'வா நாமளும் அந்தமான் போயிட்டு வரலாம்' என்பது தான். பிரபா தன்னுடைய எழுத்துப்பணியை புத்தகம் நோக்கி நகர்த்துவதாக ஒரு தகவல் காற்றுவாக்கில் வந்தது. இது நான் நெடுநாட்களாக எதிர்பார்த்திருக்கும் விஷயம் பிரபா, வாழ்த்துகள்.
ஜீவன்சுப்பு ஒருமுறை நான் வாசித்தே ஆக வேண்டிய தளம் என்று எனக்கு அறிமுகப்படுத்திய தளம் சுபத்ராவினுடையது. என்னுடைய வலையில் நடைபெற்ற காதல் கடிதம் போட்டியிலும் சாருநிவேதிதா விமர்சகர் வட்டம் சார்பில் நடைபெற்ற சிறுகதைப் போட்டியிலும் முதல்பரிசு வென்றவர். இவருடைய எழுத்தில் இன்னதென்று கூறமுடியாத ஒரு வாசிப்பு அனுபவத்தை உணரலாம். நம் கண்களுக்கு சாதாரணமாக தெரியும் சில விஷயங்கள் இவருடைய எழுத்தில் அவ்வளவு சுகமாகத் தெரியும் அதுதான் சுபத்ரா. தற்போது சீரிய படிப்பில் ஆழ்ந்திருக்கும் சுபத்ரா அவ்வபோது மட்டுமே எழுதிவருகிறார். சமீபத்தில் வெளிவந்த எனக்கு மிகவும் பிடித்துப்போன மூடர்கூடம் படத்திற்கு இவர் எழுதிய விமர்சனம் தான் நான் படித்த விமர்சனங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தமானது. மூடர்கூட பொம்மையில் எழுதியிருக்கும் happy life வார்த்தைக்கு இவர் கண்டறிந்திருக்கும் குறியீடு பற்றி குறிப்பிட்டிருப்பது சற்றும் எதிர்பாராதது. சொல்லமறந்துட்டேன் எனக்கு சுபத்ராவின் கவிதைகளும் மிகப்பிடிக்கும்.
இவர்கள் அனைவரது எழுத்திலும் நான் கற்றுக்கொண்ட மற்றொரு முக்கியமான விஷயம் எதற்காகவும் எழுத்தில் இவர்கள் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
எமது ’ஜில்மோர்’ இணைய தளம் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி சீனு...
ReplyDeleteநாவல் என்கிற ஏரியாவை நான் இதுவரை சீரியஸாக நிகைத்தே பார்க்கவில்லை. ஆனாலும் இப்ப சீனுவின் விருப்பம் அதுவெனத் தெரிந்ததும் விரைவில் அதை நிறைவேற்றிவிட என்னுள் விருப்பம் எழுந்திருக்கிறது. செய்கிறேன் ப்ரோ. வலைச்சரத்தில் நான் பேசப்படும் போதெல்லாம் என்னுடன் அறிமுகமாமகிறவர்கள் என் நட்பு வட்டத்தில் உள்ளவர்களாகவே இருக்கிறார்கள். இம்முறையும் அப்படியே என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. மிக்க நன்றி சீனு.
ReplyDeleteஅனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteseenu-day-4.html... (அதிக வேலைப்பளு என்று நினைக்கிறேன்...)
நல்ல தளங்கள்.... அனைவருக்கும் வாழ்த்துகள்...
ReplyDeleteதங்களது எழுத்து நடையும் வாசிக்க சுகமானதாக இருக்கிறது.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நல்ல சுவாரசியமான பதிவுகளை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி.
ReplyDelete/நீதி நேர்மை நியாயம் என்ற வார்த்தைகளை கண்டறிந்தவர்கள் இப்போது இருந்திருந்தால்/
ReplyDeleteநாட்டாமை பார்ட் டூல சரத்தும், விஜயகுமாரும் என்ன தூக்கி போட்டு மிதிச்சிருப்பாங்க.....
@ Siva
DeleteROFL
சிவா எழுதணும்னு அவான்னு சீனுத்தம்பி கவிதைல்லாம் ட்ரை பண்ணிருக்குது பாக்கலியா ஜீவன்?
Deleteசீரியசான விஷயத்தை சீரியசாகவும் சிரியஸான விஷயத்தை சிரியசாகவும் கூறுவதில் வல்லவர். //புரியல
ReplyDeleteஉங்களால் சிலரை இன்று தொடர ஆரம்பித்து விட்டேன் நன்றி
ReplyDeleteசொல்ல விட்டுப்போன விஷயம்... நான் கோவக்கரன்னு சொல்லியிருக்கீங்க சீனு...பரவால்லை... இதை சரிதாட்ட மட்டும் சொல்லிட வேணாம். அவ்வ்வ்வ்வ்!
ReplyDeleteவாவ் நன்றி சீனு...
ReplyDeleteசிவா பற்றிய பத்தி புகழ்ச்சி மாதிரியே தெரியவில்லையே...
என்னது பால கணேஷ் கோவக்காரரா??
ReplyDeleteஇலலம்மா சுபத்ரா.. அநியாயத்தக் கண்டா பொங்குறத தம்பி கோவம்னு கௌப்பி விட்ருக்குது.
Deleteமுதலில் வாழ்த்துகள். சிறப்பான முறையில் அறிமுகங்கள் செய்திருப்பது அருமை.
ReplyDeleteஎதற்காகவும் எழுத்தில் இவர்கள் சமரசம் செய்து கொள்ளாதவர்கள்.
ReplyDelete>>
நிஜம்தான் சீனு.
பாலகணேஷ் சார் கோவப்படுவாரா? சும்மா அளந்துவிடாதீங்க நண்பா.. என்னையும் இந்த லிஸ்டில் குறிப்பிட்டு சொன்னதற்கு ரொம்ப நன்றி.. //ஏனோ இவரோடு பேசும்போதெல்லாம் என் வகுப்புத் தோழனோடு பேசும் ஒரு உணர்வு ஏற்படும். // same feeling :-) ரொம்ப தேங்க்ஸ்.. தென்அமெரிக்க இலக்கியத்தை ஒட்டித்திரியும் என் பின்நவீனத்துவ கவிதைகளை பகடி செய்வதது சரியா? :o ஒரு இலக்கியவாதியிடம் எப்படி பேசுறதுன்னே இந்த சமூகத்துக்கு தெரியல... எமாசவா?
ReplyDeleteநல்லாச் சொல்லுங்க ராம்... நான் ‘நள்ளிரவு நாயகன்’னு பட்டம் கொடுத்ததுக்காக தம்பி பழிவாங்குது. (எல்லா போஸ்டையும் நடுராத்திரில பப்ளிஷ் பண்றதால அந்தப் பட்டம். நீங்க வேற விபரீதமா கற்பனை பண்ணினா சங்கம் பொறுப்பில்லை, ஹி... ஹி...)
Deleteஅவர் பட்டப்பகல்ல போஸ்ட் போட்டாலும் அவருக்கு “நள்ளிரவு நாயகன்” பட்டம் பொறுத்தமாத்தான் இருக்கும் சார்...
Deleteஅனைவரும் நான் தொடர்பவர்கள் என்பதில் ஓர் இணையற்ற மகிழ்ச்சி! சிறப்பான முன்னுரையோடு அறிமுகம் சிறப்பு! வாழ்த்துக்கள் சீனு!
ReplyDeleteநல்லதோர் அறிமுகம். நன்றி. தொடர்கிறோம்.
ReplyDeleteபாலகணேஷ் சார் கோவப்படுவாரா?உண்மையாகவாக சீனுசார் அப்ப வாத்த்தியாரை சந்திக்கும் ஆசையை தள்ளி வைப்போம்:)))))
ReplyDeleteநல்ல தளங்கள்! அறிமுகத்திற்கு நன்றி !
ReplyDeleteதங்கள் அறிமுகங்களை வரவேற்கிறேன்.
ReplyDelete