Saturday, April 12, 2014

மின்மினி பூச்சியும் மற்றும் சிலரும் !

வீட்டில் எனது மகனுடன் டிவி பார்த்து கொண்டிருந்தேன், அப்போது அவன் பட்டாம்பூச்சி என்று கத்தினான். நானும் அவனை ஆமோதித்தேன், அதை அவன் யாபகம் வைத்து கொண்டு சென்ற வார சனிக்கிழமை அன்று ஒரு பட்டாம்பூச்சி ஒன்று காண்பித்தால்தான் ஆயிற்று என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். அட இது என்ன பெரிய விஷயமா என்று தேட ஆரம்பித்த போதுதான் சில நிஜங்கள் முகத்தில் அறைந்தன. அப்போதெல்லாம் வீடு என்று இருந்தால் அங்கு சில செடிகள் இருக்கும், அதை நாடி பூச்சிகள் வரும், அதனிடம் கடி வாங்கி, உடம்புக்கு வந்து இந்த வாழ்க்கை முறையை கற்றுகொண்டோம். இன்று பூச்சிகள் என்றாலே மருந்து அடித்து கொல்ல  வேண்டும் என்ற நமது வாழ்க்கை முறையில், ஒரு சக மனிதனிடம் அன்பை எதிர்பார்ப்பது என்பது கடினம்தானே. ஒரு பட்டாம்பூச்சி இல்லா வாழ்க்கை என்பது குறை ஒன்றும் இல்லை...... ஆனால் ஒரு இனம் சிறுக சிறுக அழிகிறதே என்ற கவலை இல்லாமல் இல்லை என்பது மட்டும் உண்மைதானே.



யோசித்து பாருங்கள்.... கடைசியாக நீங்கள் எப்போது மின்மினி பூச்சியை பார்த்தீர்கள் ? நாம் சிறு வயதில் பார்த்த கட்டெறும்பு, பிள்ளையார் எறும்பு, வெட்டுக்கிளி, குச்சி பூச்சி, தட்டான், பொன்வண்டு, அணில், சிட்டு குருவி, கரையான், கம்பளி பூச்சி, மண்புழு, நத்தை, தவளை, தண்ணி பாம்பு போன்ற நாம் தொட்டு உணர்ந்த அந்த உயிரினங்கள் எல்லாம் இப்போது எங்கே ? ஒரு பட்டாம்பூச்சியின் இறகில் இருக்கும் அந்த ஓவியத்தை வரைந்தது யார் என்று அதிசயித்த அந்த தருணங்கள் எல்லாம் இப்போது எங்கே ?






அன்று வீடுகளில் பறவை கூடு கட்டுவதும், அணில் சமையலறை வந்து அரிசி பொறுக்குவதும், அம்மா போட்ட கோலத்தை திங்க பிள்ளையார் எறும்பு வருவதும், மழை பெய்தால் தவளை கத்துவதும், அம்மா வீட்டின் முன் வைத்த பூச்செடியில் இருக்கும் தேனை சுவைக்க வரும் பட்டாம்பூச்சியும், முருங்கை மரத்தில் ஊரும் கம்பளிபூச்சியும், செடி வைக்க குழி தோண்டும் போது  தோன்றும் மண்புழுவும், மழை பெய்து ஊரும் சாலை ஓரங்களில்  தெரியும் நத்தைகளும், காலி பிளாட்களில்  ஓடி ஓடி பிடித்த தட்டான் பூச்சி, ஊருக்கு வெளியே இருக்கும் கரையான் புற்று என்று இயற்கையோடு சேர்த்திருந்தது அந்த கால வாழ்க்கை.




ஆனால் இன்று மாடுகள் என்பது பால் கொடுப்பது, கரப்பான் பூச்சிகள் என்றால் அருவருக்கதக்கது, கொசு என்றால் பட்டென்று அடித்து கொல்லு, பூச்சிகளில் எந்த வகை இருந்தாலும் காலி பண்ணு, தவளை என்பது ஒரு அசிங்கமான அமேசான் காட்டு விஷ பிராணி, பட்டாம்பூச்சி என்றால் துரத்து, கோழி என்றாலே தின்பதற்கு, ஆடு என்றாலே அது தோல் அறுத்து தொங்க விடப்பட்டிருக்கும், எறும்பு என்றால் கடிக்கும் என்று மிருகங்களிடம் நாம் இரக்கம் இல்லாமல் அல்லவா நடந்து கொள்கிறோம். இன்று மிருங்கங்கள் என்றாலே ஜூ சென்றுதான் காட்ட வேண்டி இருக்கிறது, எந்த மிருகத்தையும் அது கொடியது என்று சொல்லி தள்ளி வைத்துதானே பார்க்கிறோம். கம்பிகளின் பின் இருப்பதால் பாதுகாப்பு மிருகத்துக்கா இல்லை நமக்கா என்பதே புரியாத வாழ்க்கைதான் நமது குழந்தைகள் வாழ்வது !!


இன்று வீடு என்பது நகரத்தில் இருக்கும் பலருக்கு பிளாட் என்று ஆகிவிட்டது. இந்த வீட்டுக்குள் என்ன செடி வளர்க்க முடியும் ? நாகரிகம் என்ற பெயரில் நாம் அடைந்ததை விட இழந்ததே மேல் என்று இன்று புரிகிறது. எனது மகன் இன்று மிருகங்களை நேசிப்பது எல்லாம் டிவியில் எனும்போது மனதில் வருத்தம்தான் வருகிறது. பாட்டி வடை சுட்டதும், மரத்தின் மீது இருந்த காக்கா வடை தூக்கி சென்றதும் இன்று வெறும் கதைகள்தான்...... ஒரு நாள் அவன் ஒரு காக்காவை நேரில் பார்க்கும்போது வியப்புடன் பார்ப்பான், அந்த வியப்பு நாம் குழந்தைகளுக்கு இயற்கையை கற்று கொடுக்க மறந்ததற்கு கிடைக்கும் சவுக்கடி இல்லாமல் வேறண்ண ??!!


*********************************************************************************

வாருங்கள், இன்று எனக்கு பிடித்த, நான் ரசித்த பதிவுகளை எல்லாம் பட்டியல் இடுகிறேன், நீங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன் !

கவியாழி கண்ணதாசன் - கவிதை கொட்டும் இந்த தளத்தில், வார்த்தை ஜாலங்கள் புரியும். கவிதையை ரசிக்க இங்கே வாரங்கள் !

ஜெயதேவ் தாஸ் - அறிவியல், சுற்றுலா, கருத்துக்கள், நகைசுவை, விழிப்புணர்வு என்று தெளிவான, ரசிக்க வைக்கும் எழுத்துக்கள்  இவருடையது. எனது இனிய நண்பர் என்று சொல்வதில் பெருமை !

தஞ்சை சிவா - துபாய் வரமா சாபமா என்று இவர் எழுதும் தொடர் மிகவும் அருமை. ரசித்து படிக்க வைக்கும் நடை !

நாஞ்சில் மனோ - கதை, கவிதை, குறிப்புக்கள், அரசியல், அனுபவம் என்று பல தளங்களில் ரசிக்கும்படி எழுதுபவர், ஒரு முறை உள்ளே சென்றால் கவர்ந்து இழுக்கும் இவரது எழுத்து நடை !

நினைவில் சில கனவுகள் - எந்த டாபிக் எடுத்தாலும் அதை சிரம்பட தெளிவாக வாசகருக்கு புரியும்படி எழுதுவதில் வல்லவர் !

பஞ்சாமிர்தம் - பிரபலங்களின் சொற்பொழிவுகள், உரைகள் எல்லாம் இங்கே அருமையாக தொகுக்க பட்டு உள்ளது !

புலவர் ராமானுசம் - ஐயாவின் கவிதைகளை ரசித்து படிப்பவன் நான். தமிழில் அழகிய வார்த்தைகளை தொடுத்து இவர் கொடுக்கும் கவிதைகளின் சுவை அபாரம் !

முத்துசரம் -  மிகவும் பிரபலமான பதிவாளர், கவிதை கட்டுரை கதை கருத்துக்கள் எல்லாவற்றிலும் ஒரு தெளிவு என்று அசத்துபவர்.

மேலதாணியம் ஆசாத் - இப்போது இருக்கும் டெக்னாலஜியில் ஏதேனும் சந்தேகமா, இவரிடம் கேளுங்கள் அல்லது இவரது இடுகைகளை படியுங்கள் எல்லாமும் புரியும் !

ரூபனின் எழுதுப்படைப்பு - கவிதை படைக்கும் நண்பர், எந்த ஒரு பின்நூடதிலும் -நன்றி- -அன்புடன்- -ரூபன்- என்று இருப்பதை பார்க்கும்போது ஒரு பாசம் தோன்றும் !

வளரும் கவிதை - ஐயாவை பற்றி எப்படி ஒரு சின்ன வரியில் சொல்வது என்று தெரியவில்லை, இவர் மகளுக்கு எழுதிய கடிதம் என்ற பதிவு நெற்றியடி எனலாம். கருத்துக்களை ஆழமாக பதிபவர்....

இன்னும் நிறைய பதிவர்களை நாளை பார்க்கலாம் !! அதுவரை விடைபெறுகிறேன் நண்பர்களே !


17 comments:

  1. காணாமல்போன உயிரினங்களைக் கவித்துவமாக அலசியிருக்கிறீர்கள். அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  2. அருகி வரும் உயிரினங்கள் குறித்து அருமையான பதிவு! விழிப்புணர்வு அவசியம்! நல்லதொரு பகிர்விற்கு நன்றி! த.ம.2
    -காரஞ்சன்(சேஷ்) (www.esseshadri.blogspot.com)

    ReplyDelete
  3. பல உயிரினங்கள் அழிந்து... இல்லை இல்லை அழிக்கப்பட்டதும், அழிந்து கொண்டு வருவதும் உண்மை... ம்... இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் தொடரும் அருமையான தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. நிச்சயமா தேனீக்கள் குறைவது பயிர் விளைச்சலுக்கான கேடு. இயற்கை விவசாயம் என்பதே ஹை டெக் சமாச்சாரமா போச்சு. உங்க கோபம் ஞாயமானது நண்பரே

    ReplyDelete
  5. காணாமல் போன உயிரினங்கள்.... உண்மை தான். இழந்த பலதில் இவையும்.....

    சிலர் எனக்குப் புதியவர்கள். படிக்கிறேன். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. உங்க எழுத்து நடை வித்தியாசமா இருக்கு.. தொடருங்கள்..

    ReplyDelete
  7. வித்தியாசமான முறையில் வலைச்சரத்தை தொகுத்து அசத்துகிறீர்கள்! சிறப்பான பதிவர்களின் அறிமுகம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. பல தெரிந்த பதிவர்களையும், சில புதிய பதிவர்களையும் அறிந்தேன். நன்றி.

    ReplyDelete
  9. காணாமல் போன உயிரினங்கள்.... உண்மை தான். இழந்த பலதில் இவையும்.....நிஜம்தான் ஐயா

    ReplyDelete
  10. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. இரசாயன பூச்சி கொல்லிகள் நன்மை தரும் பூச்சிகளையும் கொல்கிறதே :(
    தேனீக்கள் அருகிபோய்விட்டன :(

    ..எறும்பு கிட்ட கடி வாங்காத நாட்கள் இல்லவே இல்லை ..இப்போ படத்தில் தான் பிள்ளைகளுக்கு காட்டனும் ..அருமையான பதிவு .

    ReplyDelete
  12. அடைக்கலான் குருவிகள் வரும் ..அதனால் fan போடகூடாதின்னு எங்களுக்கு சொல்லி வளத்தாங்க முன்பு .. ..:(.இப்போ ஒட்டு வீடுகளும் இல்லை அவை அடுக்கு மாடி குடியிருப்புக்குள் நுழையும் சாத்தியமும் இல்லை :(

    Angelin

    ReplyDelete
  13. தங்கள் ஆதங்கம் சிந்திக்க வைக்கும். உண்மைதான், மின்மினிப்பூச்சிகளையும், பிள்ளையார் எறும்புகளையும் கண்டு பல வருடங்கள் ஆகி விட்டன.

    அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். எனது தள அறிமுகத்துக்கு நன்றி.

    ReplyDelete
  14. சிறந்த அறிமுகங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete
  15. என் தள அறிமுகத்திற்கு நன்றிகள்!

    ReplyDelete
  16. வணக்கம் நண்பரே, தங்களுக்கும் வலைச்சரத்திற்கும் என் நன்றிகள் பல.

    ReplyDelete
  17. என் தளத்தையும் அறிமுக படுத்தியதற்கு நன்றி சகோ

    ReplyDelete