Sunday, April 13, 2014

பயணங்கள் முடிவதில்லை...... நன்றி !!

ஒரு கப்பலை உருவாக்கிவிட்டு அது கடலை பார்க்கவில்லை என்றால் அதனால் பயன் இல்லை என்ற ஒரு பொன்மொழி உண்டு, அது போலவே  இந்த கடல்பயணங்கள் தளமும் இந்த வலைச்சரத்தில் ஒரு தீவு போல ஒதுங்கி ஓய்வெடுத்து விட்டு, சில அனுபவங்களையும் பகிர்ந்துக்கொண்டு மீண்டும் பயணத்தை தொடங்க போகிறது. இந்த ஒரு வாரமும் எனக்கு இந்த வலைச்சரத்தில் எழுத வாய்ப்பு தந்த அன்பு நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும், அன்பின் சீனா அவர்களுக்கும் மிக்க நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன். புதிய நண்பர்களையும், பழைய நண்பர்களையும் நினைவு கூறவும், அவர்களது தளத்தினை பற்றி எனது கருத்தினை பகிர்ந்து கொள்ளவும் இந்த வலைச்சரம் உதவியது என்பதில் மகிழ்ச்சி. இன்னும் சில தளங்களை பற்றி கூறவில்லை, அது நேரமின்மையால் தவிர வேறொன்றும் இல்லை....... என்னோடு இந்த வாரம் பயனிததர்க்கு நன்றி !! புதிதாக ஆசிரியர் பொறுப்பேற்கும் நண்பருக்கு வாழ்த்துக்கள் !!





*********************************************************************************

ஒரு முறையேனும் ஆள் இல்லாத அல்லது ஆட்கள் வெகு குறைவாக இருக்கும் தீவில் தங்க வேண்டும் என்று ஆசை. அதுவும் ஒரு நிலவு தெரியும் இரவில், இளையராஜாவின் பாடலை கேட்டுக்கொண்டு கரையில் அமர்ந்துக்கொண்டு மனதுக்கு பிடித்தவருடன் எந்த பயமும் இல்லாமல், சில நேரம் சத்தமாக சிரித்துக்கொண்டு, அந்த இரவில் சத்தமாக கத்த வேண்டும் என்று தோன்றும். அதை இந்த முறை நிறைவேற்றி பார்க்க வேண்டும் என்று தேடி தேடி கண்டுபிடித்ததுதான் இந்த எம்புடு வில்லேஜ் என்னும் மாலைதீவு கூட்டங்களில் ஒன்று.

எம்புடு வில்லேஜ் தீவு - ஒரு சிறிய தீவு கடலின் நடுவே !


நடுவில் தெரியும் பச்சைதான் தீவு, சுற்றிலும் பவள பாறைகளின் பரப்பளவு 
அந்த தீவு மாலைதீவின் தலைநகரத்தில் இருந்து முப்பது நிமிட தூரத்தில் இருக்கிறது. தீவு நெருங்க நெருங்க மனது "கொலம்பஸ், கொலம்பஸ் கொண்டா ஒரு தீவு..... கொண்டாட கண்டுபிடிக்க கொண்டா ஒரு தீவு" என்று குதிக்க ஆரம்பித்தது. தீவு எவ்வளவு சிறியது என்றால் நீங்கள் இந்த கரையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தால் அடுத்த மூன்றாவது நிமிடத்தில் அந்த கரையை நெருங்கி இருப்பீர்கள். நாங்கள் சென்ற சமயம் அவ்வளவு கும்பல் இல்லை, அதுவும் நிறைய பேர் அன்று கிளம்ப ஆரம்பித்தனர். அன்று எங்களது மதிய சாப்பாடிற்கு பின் சிறிது ஓய்வு எடுத்தோம். பின்னர் மாலையில் கடல் மணலில் குவித்து குவித்து எனது மகனுடன் விளையாடினேன்.

தீவில் ரிலாக்ஸ் செய்ய ஊஞ்சல் !

பவள பாறைகள் தெரியும் துல்லிய தண்ணீர் !


அன்று இரவு சில்லென்று காற்று வீசும்போது, இளையராஜாவின் தாலாட்டுடன், மணலில் உறங்கி கொண்டு, நிலவு வெளிச்சமும், அலைகளின் ஓசையுடன் அந்த தருணத்தை உங்களது வாழ்கையில் அனுபவித்து பார்க்கும்போது சொர்க்கம் இங்கேதான் இருக்கிறது என்று தோன்றும். இரவு மூன்று மணி வரை அந்த இடத்தில் நடந்து கொண்டும், படுத்துக்கொண்டும் மனதில் எந்த பயமும் இல்லாமல் எங்கும் கடல் பார்த்து நடந்தால் உங்களுக்கு திரும்ப வரவே தோன்றாது !

மாலை மயங்கும் அந்த மாலத்தீவு கூட்டம்.....

அடுத்த முறை மீண்டும் வித்யாசமான பயண அனுபவங்களுடன் சிந்திப்போம், அதுவரை  தளத்தில் நீங்களும் பயணிக்கலாம்.......WWW. Kadalpayanangal.com or Kadalpayanangal.blogspot.com

9 comments:

  1. அன்பின் சுரேஷ் குமார்..
    தங்களுடன் பயணித்ததில் மிக்க மகிழ்ச்சி..
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்களுடன்!..

    ReplyDelete
  2. அமைதியான அழகான தீவு.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. ஒரு குழந்தை போல ரசிச்சு எழுதியிருக்கீங்க... பதிவர் அறிமுகம் எதுவும் இல்லையா?

    ReplyDelete
  4. நன்றாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்...

    எம்புடு வில்லேஜ் - ஆகா...! வாழ்த்துக்கள்... ஆமாம்... இரவில் சத்தமாக கத்துனீர்களா...? இல்லையா...? ஹிஹி...

    ReplyDelete
  5. சூப்பர் வாரம்! தினமும் ரசிச்சு வாசித்தேன்.

    ஃபிஜியில் இருக்கும் 365 தீவுகளில் பீச் கோம்பரும் ஒன்று. குட்டித்தீவு. அரை மணியில் தீவைச்சுற்றி நடந்துவந்துற முடியும்.

    இஷ்டம்போல் கத்திக் கூத்தாடலாம்:-))))

    ReplyDelete
  6. நிறைவாய் பணி முடித்து திரும்பு கடல் பயணங்கள் நண்பருக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. ஒரு வார சிறப்பான ஆசிரியப் பணி நிறைவுக்கு வாழ்த்துக்கள். சிறிய எம்புடு தீவு பற்றிய அறிமுகம் அருமை.
    மீண்டும் சந்திப்போம்...

    ReplyDelete
  8. தங்கள் பயண அனுபவங்களுடன் ஒரு வாரத்தை நிறைவாக கொண்டு சென்றிருக்கிறீர்கள்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. வாரம் முழுவதும் இனிய அனுபவங்களை பகிர்ந்து படிப்பவர்களையும் இன்புறச் செய்ததற்கு நன்றி நண்பரே.....

    சிறப்பான வாரமாக இந்த வாரம் அமைந்தது. பாராட்டுகள்.

    ReplyDelete