Tuesday, April 15, 2014

செவ்வாயின் செவாலியர்கள்

முதல் நாள் இன்று.........!
              உங்கள் அனைவரின் கஷ்டகாலம்,ஏழரைச் சனி கேள்விப்பட்டிருப்பிங்கள்,ஆனால் ஏழு நாள் சனி இதுதான் போல!இன்று முதல் ஒருவாரம் என் உளறலையும்,கிறுக்கலைகளையும் படிக்கவேண்டிய கட்டாயம்.இனி வரப்போகும் எந்த அசம்பாவிதத்துக்கும் நான் பொறுப்பல்ல ,சொல்லிட்டேன்! அறிமுகம் அல்லாத ஒருவரைப் பற்றி பேசுவதோ ,விமர்சிப்பதோ எனக்கு கை வராத கலை. ஆகவே நான் அறிந்த சிலர்,ஏதோ என் கண்ணில் பட்ட இடுகைகள் என சிலவற்றை உங்கள் பார்வைக்கு கொண்டு வரப்போகிறேன். 

      கே.ஆர்.விஜயன்
                 ஒரு பதிவராக என்னைச் செதுக்கிய  அன்பினிய  நண்பர் திரு.விஜயனின் பதிவை பற்றிதான் முதல் நாளில் அறிமுகப்படுத்தவுள்ளேன்.
விஜயனின் நகைசுவையான இடுகைகள்தான் என்னை அவர் எழுத்துகளை திரும்பி பார்க்க வைத்தது. ஆனாலும் அவருடைய  சில பதிவுகள் என் ஆசிரியைத் தொழிலுக்கு மிகவும் பயனுள்ளவையாக இருந்தன.’திக்குவாய்’என்கிற தலைப்பில் விஜி எழுதிய ஓர்  இடுகை ,என்னை வெகுவாக கவர்ந்தும் ,பெரிதளவில் பாதித்தும் போன ஓர் இடுகை அது.
                 பாதிக்கப்பட்ட மாணவன் தன்னிடம் உள்ள குறையை எப்படியெல்லாம் மறைத்து கஷ்டத்துக்குள்ளாகிறான் .அதைக் களைய அவன் படும்பாடு,அவனுக்கு ஏற்பட்ட அவஸ்தைகள்,அவமானங்கள் என்று  தன்னைப்பற்றிய அனுபவத்தையே அப்படியே எழுதிய விதம் ,அப்படி ஓர் எழுத்தை விஜியிடம் நான் எதிர்ப்பார்க்கவே இல்லை.என்னை அசர வைத்த எழுத்து இது. என் என்.ஜி.ஓ ஆசிரியர்கள் மற்றும் என்  சில நட்புகளுடன் பகிர்ந்துகொண்ட இடுகை அது.விஜியின் பதிவுக்குள் நுழைந்தால் அவசியம் ஒருமுறையாவது அந்த பதிவைப் படித்துவிட்டுத்தான் வருவேன்.
நினைவில் நின்றவை
                                         http://krvijayan.blogspot.com/2012/08/blog-post_26.html
(குருவுக்கு தட்சணையாக )


        நாஞ்சில் மனோ
                    விஜியின் மூலம் அறிமுகமான நட்பு. பதிவுலகில் எப்போதாவது வந்து கிறுக்கி வச்சிட்டுப்போகும் என்னை , ’உங்களைச் சுற்றியுள்ள அனைத்தையுமே  எழுதி வையுங்கள் டீச்சர் ,உங்களிடம் நல்ல எழுத்து திறன் உண்டு, அதை அப்படியே கற்பனையாக வடிச்சிடுங்க,அதுதான் பதிவு ‘என்று என் எழுத்துக்கு ஓர் ஊன்றுகோலாக விளங்கிய அன்பு சகோதரன்.பொதுவாக என் பதிவுகளை அனைத்தையும் தன் சுவற்றில் பகிர்ந்துகொள்வார். தவறுகள் இருந்தால் மிகவும் வெளிப்படையாக ஆனால் உள்டப்பியில் வந்து திருத்தச் செய்வார். ஜாலியான பதிவர் ஆனாலும் காமெடி நடிகன் குணச்சித்திரம் பாத்திரமேற்று நடித்தால் மேலும் மெருகேற்றுவதுபோல இருக்கும் அவருடைய குணசித்திர பாங்கான பதிவுகள்.அவர் இடுகையில் ஒருமுறை எங்களையெல்லாம் வச்சி ஜாலியாக எழுதிய இந்த இடுகையை என்னால் மறக்கவே முடியாது:    நாஞ்சில் மனோ
                                    http://nanjilmano.blogspot.com/2012/11/blog-post_25.html
                                     
                       
ஆனந்தி..
                    முகநூலில் அறிமுகமாகி , ஓர் உறவுக்காரியைப்போலவே என்னுடன் பழகிய மதுரைரைக்காரி. ஹைக்கூ அதிர்வுகளின் ராணி,அன்பின் மறுவுருவம். பயங்கர அறிவாளி. அதிகம் படிச்சவள் ஆனால் படு எளிமையானவள்.ரொம்ப தைரியசாலியும் கூட .இவளுடைய எழுத்துக்களைப் பார்த்து கொஞ்சம் கொஞ்சம் என் எழுத்துக்களை மாற்றியமைத்துகொண்டேன்.பின்பற்றியும் எழுத இவள் எழுத்துக்கள் எனக்கு பேருதவியாய் இருந்தன.என் எழுத்துக்களில் வரும் தவறுக்களைச் சுட்டிக்காட்டி திருத்தச் சொன்னவள்.அவள் ஊர் சிறப்பைப்பற்றி அவள் எழுதிய இதைப் படிங்கள் : ஹைக்கூ அதிர்வுகள்
                                            http://ananthi5.blogspot.com/2011/04/blog-post_18.html
                         
சே.குமார்..
                       என் அனைத்து பதிவுகளிலும் தவறாமல் கருத்து எழுதுபவர். பல விசயங்களை  நம் கண் முன் வைத்துச் செல்வார்.சின்ன விசயத்தைக்கூட சுவாரஸ்யமாய் எழுதும் பதிவர்.இவரைப்போல ஏன் நமக்கு எழுதும் ஆர்வம் இல்லை என்று நினைப்பேன் காரணம் கூகுலில் நான் எட்டிப்பார்க்கும் போதேல்லாம் ஏதாவது அவர் எழுத்து கண்களில் படும்.சிட்டுக்குருவி தினத்தன்று அவர் எழுதிய இந்த இடுகை: மனசு
                                             http://vayalaan.blogspot.com/2014/03/blog-post_20.html

நாளையும் (வலைப்)பூக்கள் மலரும்........................


19 comments:

  1. உங்களின் கலை தொடரட்டும்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் அறிமுகமானது குறித்து தெரிவிக்கும் தங்களது செயலுக்கு வாழ்த்துக்கள் தனபாலன் சார்.

      Delete

  2. வணக்கம்
    இன்று வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது...உள்ளம் கனிந்த பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை..

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அறிமுகங்களுக்கு அறிமுக விவரம் குறித்துச் சொல்லும் தங்களின் செயலுக்கு வாழ்த்துக்கள் சகோதரரே...

      Delete
  3. சுருக்கமான ஆயினும் அருமையான
    அறிமுகங்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. அன்பின் செல்வி காளிமுத்து - அருமையான அறிமுகங்கள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  5. புதிய அறிமுகங்களையும் காணமுடிந்தது. தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  7. @சீனா ஐயா
    என் அண்ணிக்கு வாய்ப்பு வழங்கிய சீனா ஐயாக்கு மிக்க நன்றி...

    @செல்வி அண்ணி...

    என்னை வச்சு காமடி...கீமடி பண்ணலியே...:-)))

    ReplyDelete
  8. வணக்கம்,டீச்சர்!நலமா?///அறிமுகங்கள் நன்று!

    ReplyDelete
  9. தொடர்ந்தும் அறிமுக ஊர்வலம் களை கட்டட்டும் .இன்றைய அறிமுகங்கள்
    அனைவருக்கும் என் இனிய நல் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
  10. சுருக்கமான அழகிய அறிமுகங்கள்! அவர்களுக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள்!
    - kbjana.blogspot.com

    ReplyDelete
  11. சகோதரர்கள் விஜி மற்றும் மனோ மற்றும் சகோதரி ஆனந்திக்கு வாழ்த்துக்கள்....
    இவர்களுடன் அடியேனையும் அறிமுகம் செய்த சகோதரி ஆசிரியை செல்விக்கும் வாழ்த்துக்கள்...

    வலைச்சரத்தில் அறிமுகம் ஆகும் ஒவ்வொரு முறையும் புதிய உற்சாகம் பிறக்கிறது.... அதற்கும் வலைச்சரத்துக்குக்கும் இதுவரை அறிமுகம் செய்த ஆசிரியர்களுக்கும் நன்றி.

    தொடர்ந்து கலக்குங்க... நாங்களும் தொடர்கிறோம்...

    நன்றி.

    ReplyDelete
  12. வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..!

    ReplyDelete
  13. பணி சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் டீச்சர்:)))

    ReplyDelete
  14. ஹைக்கூ அதிர்வு எனக்குப் புதிது.... அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி டீச்சர்...

    ReplyDelete
  15. ஹைக்கூ அதிர்வு எனக்குப் புதிது.... அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி டீச்சர்...

    ReplyDelete
  16. அனைவருக்கும் வாழ்த்துக்கள்....என்னையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி டீச்சர் !

    ReplyDelete
  17. சிறப்பான அறிமுகங்கள்... நாஞ்சில் மனோ மற்றும் குமார் பதிவுகள் தொடர்ந்து படிப்பவை. மற்ற இரண்டும் படித்ததில்லை. படிக்கிறேன்.

    ReplyDelete