Wednesday, April 16, 2014

புதனின் புத்திரர்கள்

புதன் கிடைச்சாலும், பொண்ணு கிடைக்காதாம்!அந்த அதிர்ஷ்டசாலிகள் இன்று:

 ஸ்கூல் பையன்:
                    ரொம்ப அடக்கமாகவும் அமைதியாகவும் (முகநூலில்) எழுதுபவர். என் பதிவில் எப்போதாவது கருத்து சொல்லும் தம்பி.அடியேன் வாசித்த அவருடைய எழுத்துக்கள் பொதுவாகவே சிறுகதைப்படிப்பது போல இருக்கும் .அந்த வகையில் ’தாத்தா’ என்ற அந்த இடுகை,படிக்க படிக்க சுவாரஸ்யம்,இறுதியில் ஒரு சோகம் நம்மைக் கவ்விக்கொண்டது:
                                     http://schoolpaiyan2012.blogspot.com/2014/01/blog-post_27.html

கூடல் பாலா:
பார்வையில்  பேச்சிலும் எளிமையானவர் ஆனால் செயலில் மின்னல் போலவாம்.ஓர் அஹிம்சைவாதி என்று நட்புக்கள் சொல்லக்கேட்டதுண்டு!ஒருமுறை பேசியுள்ளேன். போட்டோஷாப் என்கிற ஷாஃப்ட்வேரில் படம் தரையிறக்கம் செய்து அதில்  தமிழில் எப்படி டைப் செய்வது என்று கேட்டிருந்தேன்.அதற்கு உடனே அவ்வளவு பொறுமையாக ஓர் ஆசிரியரைப்போல உள்டப்பியில்  எனக்கு கற்றுக்கொடுத்தார்.அப்போதும் என் மண்டையில் ஏறவில்லை என்பது மற்றுமொரு ரகசியம்.கூடங்குளம் அணுவுலை என்றாலே என் நினைவுக்கு வருபவர் கூடல் பாலாதான்.அவர் தொகுப்பில் ,ஓர் இடுகை   உங்கள் பார்வைக்கு
                                       http://koodalbala.blogspot.com/2012/04/blog-post_30.html

ராஜா மேலையூர்(என் ராஜபாட்டை)
 நறுக் என நகைச்சுவைகளை ஓரிரு வரிகளில் சொல்லும் திராணி உள்ளவர் ராஜா சார். ஆசிரியர் தொழில் என்பதாலோ என்னவோ அவருடைய பல பதிவுகள் பிறருக்கு வழிகாட்டியாகவே இருப்பது போல உணர்கிறேன். குழந்தைகளுக்கு அழகான  பெயர் சூட்ட என்ற தலைப்பில் ஆசிரியர் எழுதிய அந்த இடுகை எனக்கும் பலவகையில் பயனாக
அமைந்தது:                    http://rajamelaiyur.blogspot.com/2014/03/CHILD-NAME.html

உணவு உலகம் (ஆபிசர் சங்கரலிங்கம்)
 ஃபூட் இன்ஸ்பெக்டர் !திருநெல்வேலியில் இவர் பெயரைக்கேட்டால் சும்மா அதிருமாமே? (சின்ன சைஸா இருந்தால்தானே?நான் பதவி ரேங்கிங்கைச் சொன்னேன்). பிற பதிவர்கள் எழுதுவது கலவையாக இருக்கும். அனுபவம், கதை, கணிப்பு ,அரசியல் என்று ஆனால் ஆபிசரின் பதிவு பொதுவாகவே அனைத்தும் உணவு உலகம் பற்றிய பதிவாகத்தான் இருக்கும்.ஆகவே அங்கே போய் எட்டிப்பார்க்காமல் படிக்கவும் செய்தால் ,நமக்கும் நன்மையே :
                                        http://www.unavuulagam.in/2010/06/blog-post_20.html

திண்டுக்கல் தனபாலன்
பதிவர்களை அதிகம் மதிப்பவர் என்றே சொல்லாம்.எல்லா பதிவுகளையும் வாசித்து கருத்து சொல்லும் நண்பர்.பல பதிவுகள் படித்திருக்கிறேன்.என்னைக் கவர்ந்த பதிவு;
                              http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/If-you-are-a-BIRD.html

நாளையும்  வலைப்பூக்கள் மலரும் ........

12 comments:

  1. தள அறிமுகத்திற்கு மிக்க நன்றி...

    தொடரும் இனிய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தகவல் தந்தமைக்கு நன்றி சார்

      Delete
  2. புதன் தன சுயவர்க்கத்தில் எட்டு பரல்கள் எனக்கு. இந்த புதனன்று என் பதிவை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி அக்கா....

    ReplyDelete
  3. அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
  4. இப்போதுதான் உங்கள் பெயரையே கேள்விப்படுகிறேன். வலைச்சர ஆசிரியர் பணிக்கும் அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ ... தொடரட்டும் உங்கள் சேவை

    ReplyDelete
  6. அனைவரும் நான் தொடரும் சிறந்த பதிவர்கள்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்! அறிமுகம் செய்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  7. அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்!.

    ReplyDelete
  8. அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. தேங்க்ஸ் டீச்சர்!

    ReplyDelete
  10. இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. புதிய அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete