இன்றுடன் முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்ற -செல்வி காளிமுத்து - என் மன வானில் என்ற தளத்தில் எழுதி வருபவர் - தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த ஆர்வத்துடனும், பொறுப்புணர்வுடனும், ஈடுபாட்டுடனும் - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார்.
இவர் எழுதிய பதிவுகள் : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள் : 046
அறிமுகப் படுத்திய பதிவுகள் : 045
பெற்ற மறுமொழிகள் :099
வருகை தந்தவர்கள் : 1174
செல்வி காளீமுத்து பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.
செல்வி காளிமுத்துவினை - அவரது கடும் உழைப்பினைப் பாராட்டி, வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு நேசன் தனி மரம் ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார்.
இவரது வலைத்தளம் " தனிமரம் "http://www.thanimaram.org”
இவரைப் பற்றி என்ன சொல்வது வலைச்சரத்தில் இரண்டாவது முறை என்றாலும்
ஈழத்தில் பிறந்து இனவாத யுத்தத்தில் இடம்பெயர்ந்து ,புலம்பெய்ர்ந்து
,பாரிசில் முகவரியோடு வாழும் பலரில் இவரும் ஒருவர்.!
சின்னவயதில் எழுத்து மீது ஏனோ ஒரு காதல் :)))இல்லை ஈர்ப்பு :)) இல்லை ஒரு
மயக்கம் சினேஹா மீதான கவர்ச்சி போல இன்னும் தெளியவில்லை:))) ))
கவிதை ,கட்டுரை ,கதை ,பாடல் புனைவு ,என இவருக்குள்ளும் ஒரு உணர்வு
தாயகத்தில் அடிக்கடி என்னை உந்தித் தள்ளியது !ஏதாவது இலக்கியத்தில்
மொக்கையாக ஒரு முகம் கிடைக்குமா என்று :)))
அது ஒரு ஆசை அதையும் துறக்கும் நேரம் வந்தது தனிப்பட்ட பொருளாதார தேடலினால்:)))
அதன் பின் சில வருடங்கள் இலக்கிய/இலக்கண எண்ணம் இவரையும்
விட்டுச்சென்றது சிறையில் சில ராகம் போல :)))
மூடிவைத்த உணர்வுகளை மீட்டிப்பார்க்கும் நாட்குறிப்பு போல ஐபோனின்
வருகையோடு தனிமரம் வலை என்று தொடங்கியது 2010 இல் .
நாற்று நிரூபன் தொழில்நுட்பத்தில் கைகொடுக்க தனிமரம் நேசன் இன்று ஐந்து
கண்டத்திலும் அறியப் பட்டவனாக அகதி போல வாழ்கின்றார்.:))))))
அதிகம் மொக்கைப்பதிவு போட்டு:))
தனிமரம் நேசனுக்கு அன்பான அம்மா ,அக்காள் ,தங்கை ,அக்கறையான அன்பு
மச்சான் பதிவாளர் காட்டான் !
ஆசை மருமகன்கள், பாசமான் ஒரு மருமகள், என இவரைச் சுற்றி உறவுகள்.
இவரது பிழையும் ,எழுத்துப்பிழையும், திருத்தும் இவரது மனைவி - ஒரு மனைவி ஒரு
மந்திரி போல:))) என இவரது வாழ்க்கைப்பாதை.
தனிமரம் சாதாரணமான ஒரு வழிப்போக்கன் .இவருக்கு என்ன தெரியும் என்றால் ?
ஏதும் தெரியாத படிக்காதவன் என்று சொல்லிக்கொள்ளும் பக்குவத்தை இந்தப்
பதிவுலகம் உள்குத்துப்போட்டு உணர்த்தி இருக்கு .:))
என்றாலும் இன்னும் பதிவுலகில் மொக்கையுடன் இருக்கின்றார். .ஆனால்
உள்குத்து போட்ட்வர்கள்??? மறப்போம் மன்னிப்போம் சிறகு விரிக்காது
தனிமரம் :)) எல்லாம் கடந்து போகும் பதிவுலகம் ஒரு கடல்! அதில் ஒரு துளி
தனிமரம்!
இவரது தனிமடல்-stsivanesan@gmail.com
நேசன் தனிமரத்தினை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்.
நல்வாழ்த்துகள் செல்வி காளிமுத்து
நல்வாழ்த்துகள் நேசன் தனி மரம்
நட்புடன் சீனா
நல்வாழ்த்துகள் நேசன் தனி மரம்
நட்புடன் சீனா
சோதனை மறுமொழி
ReplyDeleteவருக.. வருக..
ReplyDeleteநேசன் அவர்களுக்கு நல்வரவு!..
சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியை முடித்த செல்வி அக்காவுக்கு மிக்க நன்றி. இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் கலக்கவிருக்கும் தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி தம்பி!சிறப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பா?உண்மையாக?
Deleteஒரு ஆசிரியையாக சிறப்பான பணி செய்த சகோதரி செல்வி டீச்சர் அவர்களுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துகளும் உரித்தாகுக.
ReplyDeleteமேலும் இனி வரும் வாரத்தை கலக்கல் வாரமாக கொண்டு செல்ல இருக்கும் சகோதரர் தனிமரம் நேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ
Deleteவருக.. வருக..
ReplyDeleteநேசன் அவர்களுக்கு நல்வரவு!..// வாழ்த்துக்கு நன்றி துரை ஐயா.
சிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியை முடித்த செல்வி அக்காவுக்கு மிக்க நன்றி. இரண்டாம் முறையாக வலைச்சரத்தில் கலக்கவிருக்கும் தனிமரம் சிவநேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.// வாழ்த்துக்கு நன்றி, ஸ்.பையன் சார்.
ReplyDeleteஉங்களுக்கெல்லாம் ஜுஜுபியாச்சே பதிவு எழுதுவதெல்லாம் சகோ.அசத்துங்க
Deleteமேலும் இனி வரும் வாரத்தை கலக்கல் வாரமாக கொண்டு செல்ல இருக்கும் சகோதரர் தனிமரம் நேசன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.//வாழ்த்துக்கு நன்றி குமார் அண்ணாச்சி.
ReplyDeleteஆசிரியரே வருக வருக நின் பணி சிறக்க என் மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் :(
ReplyDeleteசென்ற வார ஆசிரியர் செல்வி காளிமுத்து அவர்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteஇந்த வார ஆசிரியர் தனிமரம் நேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
சிறப்பாக ஆசிரியர் பொறுப்பினை நிறைவேற்றியமைக்கு வாழ்த்துக்கள். புதியவரை ஆவலோடு வரவேற்கிறோம்.
ReplyDelete