Monday, April 21, 2014

.தம்பட்டம்.தட்டும் தனிமரம்....

  வலைச்சரத்தில் இரண்டாவது முறை என்றாலும்  புதியவர்களுக்கு ஒரு சிறுகுறிப்பு சொல்வது மரபு:))) !


ஈழத்தில் பிறந்து இனவாத யுத்தத்தில் இடம்பெயர்ந்து ,புலம்பெய்ர்ந்து ,பாரிசில் முகவரியோடு வாழும் பலரில் நானும் ஒருவன்!

சின்னவயதில் எழுத்து மீது ஏனோ ஒரு காதல் :)))இல்லை ஈர்ப்பு :)) இல்லை ஒரு மயக்கம் சினேஹா மீதான கவர்ச்சி போல இன்னும் தெளியவில்லை:))) ))

கவிதை ,கட்டுரை ,கதை ,பாடல் புனைவு ,என எனக்குள்ளும் ஒரு உணர்வு தாயகத்தில் அடிக்கடி என்னை உந்தித் தள்ளியது !ஏதாவது இலக்கியத்தில் மொக்கையாக ஒரு முகம் கிடைக்குமா என்று :)))

அது ஒரு ஆசை அதையும் துறக்கும் நேரம் வந்தது தனிப்பட்ட  பொருளாதார தேடலினால்:)))

அதன் பின் சில வருடங்கள் இலக்கிய/இலக்கண எண்ணம் என்னையும் விட்டுச்சென்றது சிறையில் சில ராகம் போல :)))


மூடிவைத்த உணர்வுகளை  மீட்டிப்பார்க்கும் நாட்குறிப்பு போல ஐபோனின் வருகையோடு தனிமரம் வலை என்று தொடங்கியது 2010 இல் .

நாற்று நிரூபன் தொழில்நுட்பத்தில் கைகொடுக்க தனிமரம் நேசன்  இன்று ஐந்து கண்டத்திலும் அறியப் பட்டவனாக அகதி போல வாழ்கின்றேன்:))))))

அதிகம் மொக்கைப்பதிவு போட்டு:))

 தனிமரம்  நேசனுக்கு அன்பான அம்மா ,அக்காள் ,தங்கை ,அக்கறையான அன்பு மச்சான் பதிவாளர் காட்டான் !

ஆசை மருமகன்கள், பாசமான்  ஒரு மருமகள், என என்னையுச்சுற்றி ஒரு உறவுகள்.

 என் பிழையும் ,எழுத்துப்பிழையும், திருத்தும் என் மனைவியுடன் இன்னும் டூயட்தான் !

  .மனைவி ஒரு மந்திரி போல:))) என என் வாழ்க்கைப்பாதை.

தனிமரம் சாதாரணமான ஒரு வழிப்போக்கன் .எனக்கு என்ன தெரியும் என்றால் ?

ஏதும் தெரியாத படிக்காதவன் என்று சொல்லிக்கொள்ளும் பக்குவத்தை இந்தப் பதிவுலகம் உள்குத்துப்போட்டு உணர்த்தி இருக்கு .:)))

என்றாலும் இன்னும் பதிவுலகில் மொக்கையுடன் இருக்கின்றேன் .ஆனால் உள்குத்து போட்ட்வர்கள்??? மறப்போம் மன்னிப்போம் சிறகு  விரிக்காது சீண்டினால் தனிமரம் :)) .

எல்லாம் கடந்து  போகும் பதிவுலகம் ஒரு கடல்! அதில் ஒரு துளி தனிமரம்! எல்லாம் பிடித்துத்தான் இது வரை எழுதுகின்றேன்  இன்னும் தொடர்வேன் நேரம் கிடைத்தால் :)))

எழுதியதில் சில லிங்கு பகிர வேண்டும்!

 .இந்த பதிவுலகம் சில நேரம் புண்பட வைத்தாலும் அன்பில் பண்பட வைத்து பல உறவைத் தந்து இருக்கு .கமலஹாசனே நேசன் தனிமரம் இல்லை தோப்பு என்று என்னைப் பாராட்டியவர் !ஹீஹீ அன்பேசிவம் படத்தில்:)))) (இது ஓவர்தான்))))

எப்போதும் தங்கைகள் மீது தனிப்பாசம் எல்லா அண்ணாக்கும் இருக்கும் .

இந்த ரவுடி தாதா எனக்கு எப்போதும் போலி இல்லாத பாசத்தில் முதலிடம்!இருவரும் இணைந்து கவிதை எழுதியிருக்கின்றோம் பாசமலர்கள் என்று இன்று முகநூலில் சிலர் புகைவிடுகின்றார்கள் :)))
http://www.thanimaram.org/2013/09/blog-post_19.html
பதிவுலகில் தனிமரத்துக்கு என்ன தெரியும் என்ற ஈகோ பதிவுலக பண்டிதர்களையும் கொஞ்சம் விசயம் இருக்கு .

தனிமரத்திடம் என்று  பெயர் சொன்ன தொடர் .மின்நூல் கண்டு நண்பனின் இன்னொரு பொருளாதார நட்பு ஏய்ப்பினால் இன்னும் அட்சுக் கூடதில் தூங்குகின்றது .

என்றாவது மீண்டும்  பணமும் அச்சில் நூலும் அவனிடம் இருந்து வரும் என்ற ஒரு நம்பிக்கையில்!முகநூலில் காத்து இருக்கின்றேன்:)))!

பாரிஸ் ஏன் வந்தேன் என்று என் நண்பனையும் இமையும் ,இசையும் போல இரவினைத்தாலாட்டும் நினைவுகள் என் பார்வையில் :)))

சினேஹா போனாலும் சிரிப்பு அழகு போனாலும் இன்னும் நல்லாக நடித்த படங்கள் நினைவில்:)))


 பாடல்  எனக்கு ஒரு போதை இன்னும் பருகுகிப் பருகி சலிக்காத ஒரு தேடல் மொழிகடந்து இங்கே:)))http://www.thanimaram.org/2014/02/1.html

கவிதை போல கதையும் எழுதப்பிடிக்கும் என்றாலும் ஏன் இந்தக்கொலவெறி :)))
http://www.thanimaram.org/2014_03_01_archive.html
இன்னும் பல தொடர்கள் தனிமரத்தில் கிளையாக உங்களுக்கு சாமரமோ ,நிழலோ ,நீர்த்திவலையோ நான் அறியேன்:))

இனி இந்த வாரம் இணையத்தில் தொடரலாம் :)))


47 comments:

  1. வாழ்த்துக்கள் சகோ... இந்த வாரம் தொடரும்அந்த ந(ண்)பர் நீங்கள்தானா? ஐயோ இதுவே அடுத்த வாரம் எனக்கு வாய்ப்புக்கொடுத்திருந்தால்,உங்க வலைச்சரத்தில் நான் காப்பி(திருடி) பண்ணி எழுத நிறைய டிப்ஸ் இருந்திருக்குமே?ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே
    அருமை சகோ ஆரம்பம்!

    ReplyDelete
  2. வணக்கம்

    அறிமுகம் நல்ல சரவெடியாக உள்ளது. இந்த வாரம் சிறப்பாக
    அமைய எனது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  3. வாங்க வாங்க நேசன். வாரம் முழுதும் ஆரவாரம் செய்யுங்கள். நல்வாழ்த்துக்களுடன் நல்வரவு-

    ReplyDelete
  4. வாங்க தோழர்...

    நாளை முதல் பாடல் வரிகளுடன் வலைச்சரமும் மின்னப் போகிறது... (?!)

    அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. வாங்க பாஸ்.. கலக்குங்க..

    ReplyDelete
  6. தங்களுக்கு நல்வரவு..
    இந்த வாரம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. என்னாது நான் போட்ட கமெண்ட் வர்றதில்ல

    ReplyDelete
  8. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எங்க அண்ணன் தான் ரீச்சர் ,.....................


    ReplyDelete
  9. ஆரம்பம் அருமை....

    அசத்த வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. )) இல்லை ஒரு மயக்கம் சினேஹா மீதான கவர்ச்சி போல இன்னும் தெளியவில்லை:))) ))////

    அன்னிக்கு தெரியுமா விடயம் ...கருக்குமட்டை ரெடி பண்ணிடுங்கோ அண்ணி ..

    ReplyDelete
  11. மூடிவைத்த உணர்வுகளை மீட்டிப்பார்க்கும் நாட்குறிப்பு போல ஐபோனின் வருகையோடு தனிமரம் வலை என்று தொடங்கியது //////////

    அதுவெல்லாம் கனாக் காலங்கள் அண்ணா ..திரும்ப கிடைக்கவே கிடைக்காது

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எக்கச்சக்கமா பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
    வாங்கிக் கட்டுங்கள் ஓய்வின்றி ஓடி ஓடி இந்த வாரம் பூராவும் வலைச்சரதில்
    அறிமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ஆசிரியப் பணியிலும்
    சிறந்து விளங்கிடுங்கள் .சுய தம்பட்டம் மிகவும் ரசிக்கத் தக்க முறையில் உள்ளது :)))
    கருக்கு மட்டைக்கு அவ்வளவா வேலை வைக்கல அதனால புளைச்சுப் போங்க :)))
    சாமியே சரணம் ஐயப்பா :))))

    ReplyDelete
  13. தொடர் எழுதவே உங்களிடம் தான் அண்ணா கற்றுக் கொண்டேன் ...தினமும் ஒருத் தொடருடன் ....

    ReplyDelete
  14. ஐயூ வாத்துக்கள் சொல்ல மறந்துட்டேன் அண்ணா ...


    இந்தாங்க நிறைய நிறைய வாத்துக்கள் ...இந்த வாரம் முழுசும் கலக்க ...

    ReplyDelete
  15. தனிமரம் ஒரு தோப்போடு. வாழ்த்துக்கள் நேசன்...

    ReplyDelete
  16. வாழ்த்துக்கள் நேசன் ...

    Angelin.

    ReplyDelete

  17. வணக்கம்!

    தனிமரம் என்றாலும் தங்கத் தமிழின்
    கனிமரம் என்பேன் கமழ்ந்தே! - .இனிவரும்
    நாள்களில் தீட்டுக! நல்ல பதிவா்களைத்
    தோள்களில் நன்றே சுமந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  18. வாழ்த்துக்கள் நண்பா!

    ReplyDelete
  19. வாழ்த்துக்கள் சகோ... இந்த வாரம் தொடரும்அந்த ந(ண்)பர் நீங்கள்தானா? ஐயோ இதுவே அடுத்த வாரம் எனக்கு வாய்ப்புக்கொடுத்திருந்தால்,உங்க வலைச்சரத்தில் நான் காப்பி(திருடி) பண்ணி எழுத நிறைய டிப்ஸ் இருந்திருக்குமே?ஜஸ்ட் மிஸ் ஆகிடுச்சே
    அருமை சகோ ஆரம்பம்!//ஹீ டீச்சருக்கு என் மேல் கொலைவெறி!ஹீ

    ReplyDelete
  20. வணக்கம்

    அறிமுகம் நல்ல சரவெடியாக உள்ளது. இந்த வாரம் சிறப்பாக
    அமைய எனது வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்// வாழ்த்துக்கு நன்றி ரூபன்.

    ReplyDelete
  21. வாங்க வாங்க நேசன். வாரம் முழுதும் ஆரவாரம் செய்யுங்கள். நல்வாழ்த்துக்களுடன் நல்வரவு-//நன்றி வாத்தியாரே!

    ReplyDelete
  22. வாங்க தோழர்...

    நாளை முதல் பாடல் வரிகளுடன் வலைச்சரமும் மின்னப் போகிறது... (?!)

    அசத்த வாழ்த்துக்கள்.//வாழ்த்துக்கு நன்றி தனபாலன் சார்.

    ReplyDelete
  23. வாங்க பாஸ்.. கலக்குங்க..//நன்றி கோவை ஆவி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  24. தங்களுக்கு நல்வரவு..
    இந்த வாரம் சிறப்பாக அமைய நல்வாழ்த்துக்கள்..// வாழ்த்து நன்றி துரை ஐயா.

    ReplyDelete
  25. என்னாது நான் போட்ட கமெண்ட் வர்றதில்ல //ஏன் தாயி!ஹீ

    ReplyDelete
  26. ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ எங்க அண்ணன் தான் ரீச்சர் ,.....................
    //ஹீ சும்மா உட்கார்ந்து இருக்கிறேன் பண்ணையார் கட்டளை!அவ்வ்

    ReplyDelete
  27. ஆரம்பம் அருமை....

    அசத்த வாழ்த்துக்கள்// வாழ்த்துக்கு நன்றி குமார் சார்!

    ReplyDelete
  28. ) இல்லை ஒரு மயக்கம் சினேஹா மீதான கவர்ச்சி போல இன்னும் தெளியவில்லை:))) ))////

    அன்னிக்கு தெரியுமா விடயம் ...கருக்குமட்டை ரெடி பண்ணிடுங்கோ அண்ணி ..//கொலவெறி ஏன் வாத்து! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  29. மூடிவைத்த உணர்வுகளை மீட்டிப்பார்க்கும் நாட்குறிப்பு போல ஐபோனின் வருகையோடு தனிமரம் வலை என்று தொடங்கியது //////////

    அதுவெல்லாம் கனாக் காலங்கள் அண்ணா ..திரும்ப கிடைக்கவே கிடைக்காது//ம்ம் அது ஒரு காலம்!

    ReplyDelete
  30. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் எக்கச்சக்கமா பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்
    வாங்கிக் கட்டுங்கள் ஓய்வின்றி ஓடி ஓடி இந்த வாரம் பூராவும் வலைச்சரதில்
    அறிமுகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்து ஆசிரியப் பணியிலும்
    சிறந்து விளங்கிடுங்கள் .சுய தம்பட்டம் மிகவும் ரசிக்கத் தக்க முறையில் உள்ளது :)))
    கருக்கு மட்டைக்கு அவ்வளவா வேலை வைக்கல அதனால புளைச்சுப் போங்க :)))
    சாமியே சரணம் ஐயப்பா :))))//ஹீ வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி அம்பாளடியாள் இப்ப சாமி இல்லையாக்கும் சாதாரன் ஆசாமி!ம்ம்

    ReplyDelete
  31. தொடர் எழுதவே உங்களிடம் தான் அண்ணா கற்றுக் கொண்டேன் ...தினமும் ஒருத் தொடருடன்//கொடுமைசாமி என்று சொல்லியிருப்பார்களே!ஹீ

    ReplyDelete
  32. தொடர் எழுதவே உங்களிடம் தான் அண்ணா கற்றுக் கொண்டேன் ...தினமும் ஒருத் தொடருடன்//கொடுமை சாமி என்று சொல்லி இருப்பரகளே!ஹீ

    ReplyDelete
  33. ஐயூ வாத்துக்கள் சொல்ல மறந்துட்டேன் அண்ணா ...


    இந்தாங்க நிறைய நிறைய வாத்துக்கள் ...இந்த வாரம் முழுசும் கலக்க ...// வாழ்த்துக்கு நன்றி கலை!

    ReplyDelete
  34. தனிமரம் ஒரு தோப்போடு. வாழ்த்துக்கள் நேசன்...

    //நன்றி கவிவேந்தே வாழ்த்துக்கு!

    ReplyDelete
  35. வாழ்த்துக்கள் நேசன் ...

    Angelin.

    //நன்றி அஞ்சலின் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  36. வணக்கம்!

    தனிமரம் என்றாலும் தங்கத் தமிழின்
    கனிமரம் என்பேன் கமழ்ந்தே! - .இனிவரும்
    நாள்களில் தீட்டுக! நல்ல பதிவா்களைத்
    தோள்களில் நன்றே சுமந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு//நன்றி புலவரே வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள் நண்பா!//நன்றி சுரேஸ் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  38. வருக வருக வாழ்த்துக்கள் நேசன் !

    ReplyDelete
  39. மன்மார்ந்த பாராட்டுகள் நேசன். வாரம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்.

    ReplyDelete
  40. வாழ்த்துக்கள் நேசன்.
    உங்கள் வலைப்பூ அறிமுகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  41. வருக. வாழ்த்துக்கள். பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.

    ReplyDelete
  42. வாழ்த்துக்கள் நேசரே!உங்கள் மொழியில் கலக்குங்கள்,தொடர்வோம்!!!

    ReplyDelete
  43. வருக வருக வாழ்த்துக்கள் நேசன் !//நன்றி மனோ அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  44. மன்மார்ந்த பாராட்டுகள் நேசன். வாரம் முழுவதும் சிறப்பாகச் செயல்பட எனது வாழ்த்துகள்.//நன்றி வெங்கட் அண்ணாச்சி வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  45. வாழ்த்துக்கள் நேசன்.
    உங்கள் வலைப்பூ அறிமுகங்களுக்காகக் காத்திருக்கிறேன்.//நன்றி இமா வருகைக்கும் வாழ்த்துக்கும்.

    ReplyDelete
  46. வருக. வாழ்த்துக்கள். பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்.//நன்றி ஜம்புலிங்கம் சார் வருகைக்கும் கருத்துரைக்கும்.

    ReplyDelete
  47. வாழ்த்துக்கள் நேசரே!உங்கள் மொழியில் கலக்குங்கள்,தொடர்வோம்!!!// வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி யோகா ஐயா!

    ReplyDelete