Monday, May 26, 2014

போவோமா ஊர்கோலம்?

மாலை வணக்கம் நண்பர்களே.. இதோ எனது பணி தொடங்குகிறது.

இம்முறை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கருப்பொருளை (Theme)  மையமாக வைத்து நான் ரசித்த பதிவர்களையும் இடுகைகளையும் அறிமுகம் செய்யலாம் என்று யோசித்துள்ளேன்.

டைட்டில்லயே தெரிஞ்சிருக்கும். இன்றைய ஸ்பெஷல் என்னவென்று.

ஆம் பயணம்.

ஒரு பழைய எம்.எஸ்.வி பாட்டு “பயணம், பயணம்” னு ரயிலின் பின்னணியில் ஒலிக்கும். அந்தப் பாடலை மனதுக்குள் கேட்டபடி படிக்கத் தொடங்குங்கள்.

கோடை விடுமுறை அனேகமாக இன்னும் பத்து நாட்களுக்குள் முடிந்து விடும். அதற்குள் எங்காவது செல்ல வேண்டுமானால் பல பதிவர்களின் அனுபவங்கள் உங்களுக்கு உதவக் கூடும்.
 
பூலோக சொர்க்கம் என்று  காஷ்மீர் அழைக்கப்படுவது நியாயம்தான் என்று புகைப்படங்களோடு தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார் நண்பர் என்.கணேசன். மணிரத்னம் படத்தில் காண்பித்தது போல இப்போது துப்பாக்கிச் சூடோ இல்லை குண்டு வெடிப்புக்களோ இல்லை என்று தைரியம் தருகிறது அவரது அனுபவம்.

இந்தியாவின் சிற்பங்களுக்கு ஈடு இணை கிடையாது. ஆனால் சரியான மார்க்கெட்டிங் இல்லாததால் இந்திய மக்கள் பலருக்குமே பல கலைப் பொக்கிஷங்களைப் பற்றித் தெரியாது. ஆந்திராவின் லிபாக்ஷியில் உள்ள சிற்பங்களைப் பற்றி திரு  பிரகாஷ் இங்கே பகிர்ந்து கொண்டுள்ளார்.

திரு மு.ரமேஷ் அவர்களின் பல்லவர் கால அய்யனாரின் சிற்பத்தைப் பார்க்கச் சென்றதையும்வரலாற்றுப் புதையல் என்ற இந்த இணையதளத்தில்  படித்துப் பாருங்கள்.

கடந்த வாரம் ஒரு நாள் இரவு வேளையில் புறப்பட்டு நெய்வேலி சென்றிருந்தேன். அப்போது திருவண்ணாமலையில் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்தேன். ஏன் என்பதற்கான காரணத்தை திரு எஸ்.அருண்குமார் அவர்களின் பதிவில்  படித்தால் உங்களுக்கே நன்றாக புரியும்.

திரு கிரி அவர்களோடு நாமும் மசினகுடி சென்று யானைகளையும்
மான்களையும் பார்த்து வருவோம்.

கோவா செல்பவர்கள் அங்கே கப்பலில் நடக்கும் இசை நிகழ்வை தவறக் கூடாது என்று அழுத்தமாக சொல்கிறார் வீடு திரும்பல் மோகன் குமார். மாண்டோவி நதியினில் நடைபெறும் இந்த பயணம் சுகமானதுதான். 1988 ம் வருடம் நெய்வேலி கிளையில் பணியாற்றிய பத்து பேர் கோவா சென்றோம். அது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஒரு பேக்கேஜ் டூர். River Bridge என்று பெயரிடப்பட்ட அந்த நிகழ்ச்சியை கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று எங்களோடு வந்த கைட் கலியபெருமாள் சொல்லிக் கொண்டே இருந்தார். கோவாவின் பாரம்பரிய நடனம், போர்ச்சுகீசிய நடனம் என்று அமர்க்களமாக இருந்தது. ஆனால் நான்கு வருடங்கள் முன்பாக சென்ற போது River Cruise என்ற பெயரில் அந்த பாரம்பரிய நடனம் மேற்கத்திய இசைக்கான நடனமாக மாறி அதன் ஜீவனை இழந்திருந்தது.

பனிக்கட்டிகளை கையிலேந்தி மகிழ்ச்சியோடு புகைப்படத்தில் காட்சி தருகிறார் செம்புலியன் தனது சிம்லா குஃப்ரி பயணத்தில். குதிரைகள் மீதமர்ந்து அங்கே சென்ற அனுபவம் எனக்கும் உண்டு. கிடு கிடு மலைப்பாதையில் இரு குதிரைகளில் நானும் என் மனைவியும் செல்ல அவற்றை ஒரு குதிரையோட்டி பிடித்து வர முன்னே இரு குதிரைகளில் எனது மனைவியின் தங்கையும் அவரது கணவரும் செல்ல, அந்த குதிரையோட்டி கயிற்றை விட்டு விட்டு ஹாயாக நடந்து வந்தார். சப்தம் போடவும் அச்சம். குதிரை மிரண்டு விட்டால் என்ன செய்வது? ஆழமான பள்ளம் அல்லவா? இதயம் பக்பக் என உயிரை கையில் பிடித்தபடி மேலே சென்றோம். ஆனால் அப்போது பனிப் பொழிவு இல்லாததால் குளிரில் நடுங்கினோமே தவிர தூரத்தில் இருந்த இமயமலைச் சிகரத்தில்தான் வெண் பனியை பார்க்க முடிந்ததே தவிர அது நம் கைவசம் வரவில்லை.

திடங்கொண்டு போராடு வலைப்பக்கத்தில் கொடைக்கானல் நோக்கி புறப்பட்டவர் இன்னும்  கும்பக்கரை அருவியிலேயே நிற்கிறார். எனது ஒரு வாரப் பணி முடியும் முன்பு கொடைக்கானலை வந்தடைந்து விடுவார் என்று நம்புகிறேன். இழந்து வரும் வயல் வெளிகளைப் பற்றி அவர் கூறியுள்ளது குறித்து நாம் சிந்திக்க வேண்டும். நம்மை விட மிக முக்கியமாய் அரசுகள் சிந்திக்க வேண்டும்.

சமீபத்தில் நான் சென்ற ஒரு சுற்றுலா பற்றி இங்கே பாருங்கள். முடிந்தால் செல்லுங்கள். இந்த ஏரி மற்றும் ஒரு பூங்கா அவ்வளவுதான். அதற்கு மேல் வேறு எதுவும் எதிர்பார்க்காதீர்கள்.

இந்த இன்பச்சுற்றுலாக்களோடு நிறைவு செய்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் வாழ்க்கை இன்பம் மட்டும் கிடையாதே. எல்லாம் கலந்துதானே?

இயக்குனர் சுகா பதிவு செய்த இந்த பயணம் உங்கள் மனதையும் கொஞ்சம் பாதிக்கும், என்னைப் போல.

நாளை சந்திப்போம். 



20 comments:

  1. வணக்கம்

    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இனிய பாடலுடன் தொடங்கிய பதிவு கண்டு மகிழ்ச்சி..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. மகிழ்ச்சி ரூபன், நன்றி துரை செல்வராஜூ

    ReplyDelete
  4. சுகமான பயணம் சார்...
    தொடர்வோம்...

    ReplyDelete
  5. ஊர்கோலம் மேலும் அசத்தட்டும்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. சுற்றுலா அழைத்து சென்ற இடங்கள் அனைத்துமே அருமை !!

    ReplyDelete
  7. பயணங்கள் முடிவதில்லை.

    அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு இனிய வாழ்த்து(க்)கள்.

    ReplyDelete
  8. சிறந்த ஊர்கோலம் - அறிமுகங்கள்

    ReplyDelete

  9. வணக்கம்!

    வண்ணமிகு கோலமென வார்த்த பயணங்கள்
    எண்ணமிகும் இன்பத்தை ஈந்தனவே! - கண்களிலே
    நிற்கும் அறிமுகங்கள்! கற்கும் மனங்களைப்
    பற்றும் உலாவரும் பாங்கு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கமபன் கழகம் பிரான்சு

    ReplyDelete
  10. இனிய பயணம் தொடரட்டும்

    ReplyDelete
  11. என்னுடைய தளத்தையும் குறிப்பிட்டதற்கு நன்றி. தெரிவித்த ரூபன் அவர்களுக்கு நன்றி :-)

    ReplyDelete
  12. நன்றி திரு துரை செல்வராஜூ

    ReplyDelete
  13. நன்றி திரு முகமது நிஜாமுதீன், திண்டுக்கல் தனபாலன் ஐயா, துளசி மேடம், ஏஞ்சலின் மேடம், திரு ஜீவ லிங்கம், கவிஞர் பாரதிதாசன் ஐயா, திரு கரந்தை ஜெய குமார்

    ReplyDelete
  14. நன்றி திரு கிரி, உங்கள் அனுபவம் நன்றாக இருந்தது

    ReplyDelete
  15. இனிய பாடல் .இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. தொடர்ந்து பயணிப்போம்......

    இன்றைய வலைச்சர அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete