Monday, May 26, 2014

உங்களின் அன்பை சுமந்து கொண்டு மீண்டும் வலைச்சரத்தில்

சில தினங்கள் முன்பாக ஐயா அன்பின் சீனா அவர்களின் மின்னஞ்சல்
ஒரு இன்ப அதிர்ச்சியை சுமந்து கொண்டு வந்தது. வலைச்சர வாசகர்களின் அன்பையும் சுமந்து கொண்டு வந்தது என்றும் 
சொல்லலாம்.

பதினைந்து மாதங்களுக்குப் பின்பு மீண்டும் வலைச்சர ஆசிரியர்
பொறுப்பு கிட்டியிருப்பது எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பாகவே
பார்க்கிறேன்.

கடந்த முறை ஆசிரியப் பொறுப்பு பல அனுபவங்களையும் 
பல புதிய நட்புக்களையும் கொண்டு வந்து சேர்த்தது.  எனது 
வலைப்பக்கத்தின்  ஆயிரமாவது பதிவை எழுதுகையில்
வலைப்பக்கத்தால் கிடைத்த மிகப் பெரிய பெருமைகளில் 
ஒன்றாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றது என்பதை
குறிப்பிட்டிருந்தேன்.

இந்த பதினைந்து மாத இடைவெளியில்  நிகழ்ந்துள்ள
சில இனிய அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.

எங்களது வேலூர் கோட்டச் சங்கத்தின் 25 வருட இயக்கங்கள்
தொடர்பாக நான் எழுதிய நூலை எங்களது சங்கத்தின்
அகில இந்தியத் தலைவர் தோழர் அமானுல்லாகான் வெளியிட்டு
சிறப்பு சேர்த்தார்.



மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளன. மிகுந்த சர்ச்சைக்குள்ளாகிய
ஒரு கட்டுரை குமுதம் ரிப்போர்ட்டரில் வெளியானது. அதைப்பற்றி
பிறகு பார்ப்போம். 

எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்ட இலக்கான ஐம்பது முறை
ரத்த தானம் என்பதை அடைந்ததே இக்காலக்கட்டத்தில் நிகழ்ந்த
மனதிற்கு மகிழ்ச்சியளித்த செயல் என கருதுகிறேன்.

இத்துடன் சுய அறிமுகத்தை நிறுத்திக் கொள்கிறேன். 

மாலை ஆசிரியர் பொறுப்பை துவக்குகிறேன். நான் ரசித்த பல
இடுகைகளோடு சந்திக்கிறேன்.

வணக்கம். 



 

9 comments:

  1. அன்புடையீர்.. வணக்கம்..
    தங்களுக்கு நல்வரவு..
    வாழ்க.. வளமுடன்..

    ReplyDelete
  2. உங்களின் ரத்த தான சேவை சிறப்பு ஐயா... பாராட்டுக்கள்...

    மேலும் அசத்த வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  3. கலக்குங்க ,உங்கள் பாணியில் !
    த ம 2

    ReplyDelete
  4. வணக்கம் ..
    வலைச்சர
    வருகைக்கு
    வாழ்த்துகள்..!

    ReplyDelete
  5. வணக்கம் ஐயா
    தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி சிறப்பாக அமைய வாழ்த்துகள். தங்களின் ரத்ததான பணி பற்றி அறிந்ததும் உண்மையில் உங்கள் மீது அன்பும் மதிப்பும் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து பணியாற்றி அனைவருக்கும் உதவுங்கள். நன்றீங்க ஐயா..

    ReplyDelete
  6. தங்களின் இரத்த தானப் பணி ஓர் உயர்ந்த பணி

    ReplyDelete
  7. வணக்கம்
    வலைச்சரஆசிரியர் பணிக்கு எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. ஐம்பது முறை ரத்த தானம் - மிக்க மகிழ்ச்சி. உங்கள் சேவை மகத்தானது.

    வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துகள்.

    ReplyDelete