Thursday, May 29, 2014

கத கேளு, கத கேளு,

இளையராஜாவின் குரலில் இரண்டு பாடல்கள் மேலே சொன்ன
தலைப்போடு துவங்கும்.

கத கேளு, கத கேளு மைக்கேல் மதனகாமராஜன் கதய
நல்லா கேளு 

என்று ஒரு பாடல்,

கத கேளு, கத கேளு, கரிமேட்டுக் கரிவாயன் கத கேளு

கதை கேட்டு வளர்ந்தவர்கள் நாம். கதையை ரசித்து 
வளர்ந்தவர்கள் நாம். அதனால்தான் தேர்தல் வாக்குறுதி
என்ற பெயரில் சொல்லப்படுவதையும் கதையாகக் கேட்டு
ரசித்து மறந்து விடுவதை வழக்கமாக வைத்துள்ளோம்.

அந்த கதையை விட்டு விட்டு வேறு கதைகளை இப்போது
பார்ப்போம். 

இந்த பதிவர்கள் அறிமுகம் என்று நான் சொன்னால் அதற்காக
நீங்கள் என்னை அடிப்பதே பெரிய கதையாகி விடும். அதனால்
நான் ரசித்த கதைகள் என்று சொல்வது சரியாகும். அல்லது
இணையத்திலும் செயல்படுகிற பதிவர்கள் எழுதி இணையத்தில்
உள்ள சிறுகதை என்று சொல்வது இன்னும் பொருத்தமாக
இருக்கும். 

வறுமையில் தவிக்கும் பெற்றோர் சண்டை போடக்கூடாது
என்று கடவுளிடம் வேண்டிக் கொள்ளும் குழந்தையின் 
வேண்டுதல் நிறைவேறினாலும் குழந்தை ஏன் கடவுள் மீது
கோபமாய் உள்ளது என்பதை சிவகாசிக்காரனின் பக்கத்தில்
பாருங்கள்.

அப்பத்தா  செத்துப் போனதுக்கு இந்த்ப் பெண்ணிற்கு கோபம்
என் வருகிறது என்று திருமதி தேனம்மை லட்சுமணன் 
சொல்வதையும் படியுங்கள்.

ஒரு மாவீரனை சாதாரண சுடலை முத்தாக மாற்றியது யார்?  
என்று தோழர் மாதவராஜின் கதையைப் படித்தால் தெரியும்.
உங்கள் கண் முன்னாலும் பல முன்னாள் மாவீரர்கள் 
தோன்றுவார்கள். இதில சத்தியமா அரசியல் எதுவும் இல்லீங்க.

லிபரல் பாளையத்தில் மூன்று ஆண்டுகள் முன்பாக நடைபெற்ற
தேர்தலில்   ஆதவன் தீட்சண்யா வெற்றி பெற வைத்த ஏழு அ
கட்சி வேட்பாளர்களுக்கும் 7 ஆ கட்சி வேட்பாளர்களுக்கும்
தற்போதைய தேர்தல் முடிவுகளுக்கும் யாதொரும் தொடர்பில்லை
என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்.

அடிமைகளுக்கு தாய்மொழி இல்லை என்று நாடறிந்த 
பேச்சாளர் பாரதி கிருஷ்ணகுமார் காக்கா  மூலம் நமக்கு
சொல்கிறார். சுதந்திரத்தின் அருமையை உண்ர்த்துகிறார்.

இப்படிப் பட்ட  தைரியமான அதிகாரிகள் இருந்தால் எப்படி
இருக்கும் என்ற ஏக்கம்  உங்களுக்கு வருமளவு எழுதியுள்ளார்
எங்கள் முன்னோடி காஷ்யபன்.

எனது மூன்று சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளதாக எனது
அறிமுகத்தில் சொல்லியிருந்தேன். அதில் ஒரு சிறுகதையை
இங்கே படியுங்கள்.  இது நூற்றுக்கு நூறு அரசியல் கதைதான்
என்று சொல்வதில் தயக்கமே இல்லை.

சரி நாளை வேறு ஒரு கருப்பொருளோடு சந்திப்போம்

 

18 comments:

  1. கதை சொல்வதும் கேட்பதும் தனிக் கதை தான்!....
    கருத்துக் குவியல்களான - கதைகளைக் குறித்த பதிவு.
    மனதைக் கவர்கின்றது.

    ReplyDelete
  2. நமக்கு பிடித்த/ அனுபவிக்க முடியாத விடயங்களைக் கதையால் சொல்லுவதில் தமிழர்கள் கில்லாடிகள் தான். அழகான அறிமுகங்கள். அவர்களுக்கு வாழ்த்துகள். தங்கள் வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கட்டும்.

    ReplyDelete
  3. கதை சொல்லிப் பதிவர்களை எடுத்துக் காட்டுக் கதையுடன் நல் அறிமுகம்.
    மீண்டும் நாளை... இறை நாட்டம்...

    ReplyDelete
  4. நல்ல அறிமுகங்கள்.... நன்றி நண்பரே.

    ReplyDelete
  5. அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உற்சாகப்படுத்தும் உங்கள் பணி தொடரட்டும்

      Delete
  6. அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். கதைதானே நம் சொத்து ஐயா

    ReplyDelete
  8. அறிமுகம் செய்தமைக்கு நன்றி. அவர்களின் தளங்களைப் போய் பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பாருங்கள், பார்த்து கருத்துக்களை பகிருங்கள்

      Delete
  9. கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைவருக்கும் நன்றி

    ReplyDelete
  10. தங்கள் அறிமுகங்களை வரவேற்கிறேன்.

    ReplyDelete