இசைக்கு
உருகாதோர் எவருமுண்டோ?
அப்படி யாரும்
இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றைய தினத்தை இனிய இசைக்கான நாளாக
அமைக்க விரும்புகிறேன்.
இசையின்
இலக்கணம் எதுவும் அறியாதவன் நான். கேட்கப் பிடிக்கும், ரசிக்கப் பிடிக்கும்.
கர்னாடக சங்கீதமும் ரசிப்பேன், கானா பாடலும் ரசிப்பேன். சில ராகங்களை அடையாளம் காண
முடியும். ஸ்ருதி விலகினாலா அல்லது தாளம் தவறினாலோ ஏதோ உதைக்கிறது என்ற அளவில்
மட்டும் இசையறிவு நின்று போகிறது.
வார்த்தைகளை சாகடிக்கிற
இன்றைய இரைச்சல் சங்கீதத்தை, அர்த்தமற்ற வரிகளை விட்டு முற்றிலுமாக விலகி
நிற்கிறேன்.
முதலில் ஒரு
பாடலைக் கேட்போம்.
இளையராஜாவின்
இசை வெள்ளத்தில் மூழ்கிக் கிடப்பவன் நான். அதனால் முன்னுரிமை இளையராஜாவின்
பாடலுக்கே. இசையமுதம் என்ற இந்த தளத்தில் பல பாடல்களின் ஒலி வடிவம் உள்ளது. அதிலே
இப்போது நான் உங்களுக்கு வழங்குவது சிறைச்சாலை படத்தின் செம்பூவே பாடல். Interlude என்று
அழைக்கப்படுகிற பாடல் வரிகளுக்கு இடையே வரும் இசைக் கோர்வைகளுக்கு இளையராஜாவைப்
போல் சுவாரஸ்யம் கொடுத்தவர்கள் யாருமே கிடையாது. இந்தப் பாடலிலும் வரிகளுக்கு
இடையே வரும் இசை உங்களை மெய்மறக்கச் செய்யும்.
பாடலைக்
கேட்டு விட்டீர்களா?
சரி ராஜாவின்
நேர் காணலை இங்கே படியுங்கள்.
ராஜா பற்றி
நாசர் நெகிழ்ந்திருந்ததை தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். அதை இப்போது
கொஞ்சம் படிக்கவும் செய்யுங்களேன்.
நான்
இளையராஜாவின் ரசிகன்தான். ஆனாலும் அவரால் பல முறை எனக்கு பிரச்சினையும்
ஏற்பட்டுள்ளது. எப்படி என்பதை இதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
ஆஹா, இசை
பற்றி என்று சொல்லி விட்டு இளையராஜா பற்றியே சொல்கிறானே என்று யோசிக்கிறீர்கள்
அல்லவா? இசையும் ராஜாவும் வேறு வேறு அல்லவே. ஆனால் இன்று இளையராஜாவோடு மட்டும்
நான் நிறுத்திக் கொள்ளப் போவதில்லை.
எம்.எஸ்.வி ஏன்
கண்ணீர் வடித்தார் என்று எஸ்.பி.பி சொன்னதைத் தெரிந்து கொண்டு அதற்குக் காரணமான
பாடலையும் பார்த்து மகிழவும்.
இந்தியாவின்
முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவரான சலீல் சவுத்ரி சலீல் சவுத்ரி பற்றி இசை விமர்சகர் ஹாஜி எழுதியதை படிக்கும் போது
அவரின் பன்முகத் திறமையை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். கொஞ்சம் ஹிந்துஸ்தானி
இசை பற்றியும் கூட நாம் தெரிந்து கொள்ள முடியும். தமிழ் மற்றும் மலையாள திரை இசை
பற்றிய ஒரு கட்டுரை கட்டுரை கூட நாம் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.
ஆனால் இங்கே ஒரு தமிழன் ஹிந்துஸ்தானி இசையை நக்கல் செய்ய
ஒரு விரிவான விவாதம் நீண்டிருக்கிறது. பின்னூட்டங்களை அவசியம்
படிக்கவும். கட்டுரையை விட அவை மிகவும் முக்கியமான பகிர்வு.
அருண்
நரசிம்மன் எனது பிரியத்துக்குரிய இசை இளம் மேதை மாண்டலின் ஸ்ரீனிவாஸின் ஒரு
கச்சேரிக்கு எழுதியுள்ள விமர்சனம் இங்கே உள்ளது. அவரது வலைத்தளத்தில் இன்னும் பல
விமர்சனக் கட்டுரைகளையும் நீங்கள் படிக்கலாம்.
காதில்
அடைத்துக் கொள்ள பஞ்சு கொடுத்து ஒருத்தர் இசை நிகழ்ச்சி நடத்தினாராம். ஏன் என்று
அவர் வாயாலேயே சொல்வதை றேடியோஸ்பதி தளத்தின் பேட்டியில் கேட்டு தெரிந்து
கொள்ளுங்கள்.
தமிழனின் இசை
அடையாளமான பறை இசையின் பெருமையை விரிவாகவே இங்கே மா.அமரேசன் எழுதியிருக்கிறார். நாடி
நரம்புகளையெல்லாம் சிலிர்க்கச் செய்யும் அந்த இசையை சாவு மேளம் என்றும் ஒரு
குறிப்பிட்ட இன மக்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்ற நிலையை உருவாக்கியது
வருத்தத்திற்குரியது. அந்த நிலையை மாற்ற இன்று முயற்சிகள் நடைபெறுகிறது. தமிழ்நாடு
முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் போன்ற இடதுசாரி முற்போக்கு
இயக்கங்களின் பங்கு மகத்தானது.
எங்கள்
சங்கத்திலும் மாநாடுகளின் ஒரு பகுதியாக நடைபெறும் மக்கள் ஒற்றுமை கலை
விழாக்களிலும் இப்போது பறை இசை நிகழ்ச்சி தவறாமல் இடம் பெறுகிறது. சென்ற ஆண்டு
சென்னையில் நடந்த எங்கள் தென் மண்டல மாநாட்டை ஒட்டி நடைபெற்ற பிரச்சாரப் பயணத்திலும்
தப்பாட்ட நிகழ்ச்சி இடம் பெற்றிருந்தது.
இதோ அந்த
புகைப்படங்கள்
ஆனால் இந்த கலைக்கு உரிய அங்கீகாகரம் வழங்க வேண்டிய அரசே
ஒதுக்கி வைத்த கொடுமையைக் கண்டு பொங்கி எழுந்த ஒரு கலைஞனின் குமுறலான ஒரு கடிதத்தை படியுங்கள்.
கம்பீரமான பறை இசையின் முழக்கத்தோடு தமிழர்களின் வீர
விளையாட்டுக்களான சிலம்பாட்டத்தையும் இன்னொரு கலை
வடிவமான புலியாட்டத்தையும் இந்த இரண்டு காணொளிக்
காட்சிகளில் கண்டு ரசியுங்கள்.
இவை எங்கள் சங்க மாநாட்டுப் பேரணியின்போது எடுக்கப்பட்டது.
நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும்.
நாளை சந்திப்போம்.
தாங்கள் கூறியபடிக்கு இசைக்கு உருகாதார் யார்!..
ReplyDeleteஇன்றைய பதிவிலும் - இனிய தளங்களின் அணிவகுப்பு..
மாநாட்டு படங்கள் அருமை...
நன்றி துரை செல்வராஜூ ஐயா
ReplyDeleteபடங்களும் பகிர்வும் அருமை ஐயா!
ReplyDeleteநன்றி ஐயா
Deleteவார்த்தைகளை சாகடிக்கிற இன்றைய இரைச்சல் சங்கீதத்தை, அர்த்தமற்ற வரிகளை விட்டு முற்றிலுமாக விலகி நிற்கிறேன்.
ReplyDeleteஉண்மையான வரிகள் ஐயா.
Killergee
www.killergee.blogspot.com
நன்றி ஐயா
Deleteஅறிமுகங்களை வாசிக்க ஆவலுடன் உள்ளேன். தங்களைப்போலவே அடியேனும் திரு. இளையராஜாவின் வெறியன். துவண்டு போன என்னை பல முறை தூக்கி நிறுத்தியது அவரின் பாடல்கள் தான். அவரைப்போல் இன்டர்லூட் அமைக்க இனி ஒருவர் பிறந்து வர வேண்டும். பனி விழும் மலர்வனம், கல்யாண மாலை, அந்திமழை பொழிகிறது பாடல்களில் வரும் வயலின் இன்டர்லூடுகளை சோறு தண்ணீர் இல்லாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம். இதுபோல் நாள் முழுக்க அவரது பாடல்களைப் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். அருமையான பதிவிற்க்கு நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா. இளையராஜாவின் ரசிகன் என்பதே ஒரு பெருமை
Deleteதங்கள் அறிமுகங்களை வரவேற்கிறேன்
ReplyDeleteநன்றி ஐயா
Deleteபடங்களும் அதற்கேற்ற மாதிரியான பதிவும் அருமை.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅன்பின் இராமன் - த.ம : 01 - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஅறிமுகங்கள் நன்று.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎன்னுடைய ‘இசை அமுதம்’ வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி! :)
ReplyDeleteநன்றி ஐயா. நல்ல தளம், அடிக்கடி வருவேன்
Deleteநல்வரவு, நன்றி :)
Deleteஅறிமுகங்களை அறிந்தேன்.நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா
Deleteஎல்லாவற்றையும் கடந்து நிற்க்கும் இசை. இந்தப் பதிவும் அதை மெய்பிக்கிறது. நானும் பெருமையாக சொல்லிக் கொள்கிறேன் இசைஞானியின் ரசிகைன்னு. நன்றி
ReplyDeleteஆமாம், உண்மை மேடம். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
ReplyDeleteஇசைக்கு மயங்காதார் எவர்.....
ReplyDeleteஇசைக்கு மரியாதை செய்யும் அறிமுகங்கள்..... ஒவொன்றாய்ப் பார்க்கிறேன்.