Saturday, May 31, 2014

எங்கே தேடுவேன்?

இன்றைய தேடல் பணத்தைப் பற்றியதல்ல.
சில பதிவர்களைப் பற்றிய தேடல்.
காணாமல் போன பதிவர்களை கண்டு பிடித்துக் 
கொடுப்பவர்களுக்கு ஏதாவது பரிசு கொடுக்கலாமா
என்று கூட யோசிக்கிறேன்.

முதலில் சில புலிகள்

பஞ்ச பூதம் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள். ஆனால் நான்

     ஆறாவது பூதம்    என்று கிளம்பியவரைக் கண்டுபிடியுங்கள்.

வலைப்பக்கத்தில் பெயரிலேயே பஞ்ச் வைத்துக் கொண்டு
எல்லோரையும் பஞ்ச்  செய்பவர் இவர்.

பகுத்தறிவு என்றால் காத தூரம் ஓட வேண்டும் என்று
விரும்புபவர் இவர்.

வில்லுக்கு மட்டும் அல்ல கடும் சொல்லுக்கும்  விஜயன்
என்று புகழ் பெற்றவர்.

இவர்கள் எல்லாம் பின்னூட்டப் புலிகள். அவர்களது 
பக்கத்தில் அதிகமாக எழுத மாட்டார்கள். இதோ இவர்களை
உங்கள் சார்பாக அழைக்கிறேன்.

கொஞ்சம் சத்ரியன் அருமைநாயகம் அண்ணாச்சியை
ஞாபகப் படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்கள் எல்லாம் வரனும். எழுத வரனும்.
அப்போதான நாங்க பின்னூட்டம் போட முடியும்.

எழுத வேண்டும் என்று நான் விரும்புகிற இன்னும் சில
பதிவர்களும் உள்ளார்கள்.

ஒட்டகம் மேய்க்கலாம் வாங்க  என்ற அமர்க்களமான
தலைப்போடு ஆரம்பித்து துபாயின் பொருளாதார நிலைமை
பற்றி எழுத ஆரம்பித்தவர் ஏனோ நிறுத்தி விட்டார்.

மிகவும் சிறப்பாகவும் எளிமையாகவும் மனதில் பதியும்
வண்ணம் எழுதக்கூடிய எங்கள் தென் மண்டலப்
பொதுச்செயலாளர் தோழர் சுவாமிநாதனை வலைப்பக்கத்திலும்
எழுதச் சொல்லுங்கள்.

மனதைத் தொடும் எழுத்துக்கு சொந்தக்காரரானாலும் கூட
வலைப்பக்கத்தில் மட்டும் ஏனோ எழுதுவதில்லை. அவரையும்
ஒரு அதட்டல் போட்டு இங்கே எழுதச் சொல்லுங்கள்

சரி நீங்களும் தேடுங்கள், நானும் தேடுகிறேன்.
கிடைத்தால் பதிவுலகிற்கு நல்லது.
நாளை பார்ப்போம்

22 comments:

  1. தேடல்கள் என்றும் முடிவதில்லை!..
    இன்றைய தேடல்களாக - நல்ல அறிமுகம்..

    ReplyDelete
  2. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
  3. வணக்கம்
    வலைச்சர அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  4. வணக்கம்

    எல்லா வலைப்பூ பக்கமும் சென்று வாழ்த்தி விட்டு தகவலும் சொல்லிவிட்டுவந்தாச்சி.. இறுதியில் அறிமுகம் செய்த வலைப்பக்கம் பதிவு ஒன்றும் இல்லை.. கருத்தும் போட முடியாது... இதோ அந்த வலைப்பக்க முகவரி
    http://venuvinpathivugal.blogspot.com

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  5. ஆமாம் ரூபன், அவர் மிகவும் நன்றாக எழுதுபவர். அதனால்தான் ஒரு அதட்டல் போட்டு இணையத்திலும் எழுதுங்கள் என்று சொல்லச் சொன்னேன். இங்கேயே சொல்லி விடுங்கள்

    ReplyDelete
  6. அறுமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். தேடி தேடி களைத்து விட்டீர்கள் என்று தெரிக்றது.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      Delete
  7. இந்த காம்முனிச்டுகளை நினைத்தால் சிரிப்பு தான்.வடிவேலு காமெடியைவிட இவர்களின் பேச்சு

    செம காமெடி. தேர்தலில் மரண அடி வாங்கியும் இவ்ர்களின் பேச்சை பாரு.

    இனிமேல் எந்த ஜென்மத்திற்கும் இவ்ர்கள் இப்படித்தான்.மேற்கு வங்கத்தில் இவர்கள்

    லட்சணம் தெரிந்து மக்கள் இவர்களை ஒதுக்கி விட்டனர்.தமிழ் நாட்டில் கேட்கவே வேண்டாம்.

    இவ்ர்கள் வருகிறார்கள் என்றால் எல்லோரும் ஓடி விடுகிறார்கள்.இன்னும் 5 வருடம் தான்.

    அடுத்த தேர்தலில் இவர்கள் காணாமல் போய் விடுவார்கள்

    ReplyDelete
  8. வணக்கம் ஜெயராமன், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வியிருக்கிறது. துரியோதனனும் துச்சாதானனும் அவை மண்டபத்தில் சிரித்த சிரிப்பை உங்கள் வார்த்தைகளில் பார்க்கிறேன். இனி விவாதம் இங்கே வேண்டாம். எனது பக்கத்திற்கு வாருங்கள். அங்கே பதில் தருகிறேன். இவ்வளவு ஆணவம் உடம்பிற்கு நல்லதல்ல. ஐந்து வருடங்கள் நாங்களூம் பார்க்கத்தானே போகிறோம்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பதில் பார்த்து இதை பதிவு செய்கிறேன்.

      எனக்கு தோழர் நல்லக்கன்னு மற்றும் சங்கராய இருவரை பற்றி நன்றாக தெரியும்.

      அவர்கள் மாதிரி தற்போது யவரும் இல்லை என்பது தான் வருந்த தக்க விஷயம்.

      ஆரோக்கியமான விவாதத்திற்க்கு நான் என்றும்

      தயார். நன்றி வணக்கம்

      Delete
  9. தங்களின் தேடல் எங்களுக்கு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். நன்றி.

    ReplyDelete
  10. அறிமுகத்திற்க்கும் உசுப்பேற்றலுக்கும் நன்றி தோளரே, என் தளம் நான் நினைப்பதை எழுதுவேன். என்றோ நான் சொல்ல மாட்டேன் விமர்சனம் கண்டு புலம்ப மாட்டேன். ஒத்த கருத்துள்ளவர்களிடம் கூட முரட்டுத்தனமாக வாதிட மாட்டேன். அனானிகளைக்கண்டு அஞ்ச மாட்டேன். முக்கியமாக யார் மனத்தையும் காயப்படுத்தும் கருத்துக்களை வெளியிட மாட்டேன். என உங்கள் முன் உறுதியளிக்கிறேன். மேலும் வலைப்பதிவை பொறுத்தவரை நான் ஒரு குழந்தை எனது கணினி என்னைவிட மெதுவாக இயங்குவதால் என்னால் மெதுவாகத்தான் பதிவிட முடியும் என பனிவுடன் தெரிவிக்கிறேன்.

    ReplyDelete
  11. அன்பே சிவம், முதலில் எழுதுங்க தோழர். பிறகு பின்னூட்டங்களுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறீர்கள் என்று பார்ப்போம். ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கு என்று நான் புலம்ப மாட்டேன். அனானிகளுக்கு அஞ்சுவதில்லை, அருவெறுக்கிறேன். உங்கள் பதிலிலேயே ஒரு முரட்டுத்தனம் இருக்கிறது என்பது கூட உங்களுக்கு புரியாதது வருத்தமளிக்கிறது. உங்கள் பின்னூட்டம் யாரைக் காயப்படுத்த என்பது உங்களுக்கு புரியும்

    ReplyDelete
    Replies
    1. மேலும் எனது எதிரிவினைகள் பின்னூட்டங்கள் என்ன மொழியில் இருக்கிறதோ அந்த மொழியில்தான் இருக்கும். ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தை காண்பிக்க நான் ஏசுநாதர் அல்ல. அடித்தால் திருப்பி அடிக்கும் தொழிலாளி. எனது ஆயுதத்தை எதிரிதான் தீர்மானிக்கிறான்

      Delete
  12. ஜெயராமன் தோழர்கள் சங்கரய்யா மற்றும் நல்லக்கண்ணு பற்றிய உங்கள் கருத்திற்கு நன்றி. அவர்கள் பாரம்பரியத்தில் எளிமையான தியாகத்தில் புடம் போட்ட போராட்ட வேள்வியில் தயாரான எத்தனையோ தலைவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியில் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்பதை அருகில் இருந்து ஒவ்வொரு நாளும் உணர்ந்து கொள்பவன் நான். என்ன அவர்களையெல்லாம் ஊடகங்கள் முன்னிறுத்துவதில்லை

    ReplyDelete
    Replies
    1. நாம் நமது பக்கங்களில் ஆரோக்கியமான விவாதத்தை மேற்கொள்வோம். நன்றி

      Delete
  13. வலைப்பக்கத்தில் சிறப்பாக எழுதி இப்பொழுது தொடராமல் இருக்கும் இவர்கள் விரைவில் வீடு திரும்ப வாழ்த்துக்கள்! அறிமுகத்திற்கு நன்றி!

    ReplyDelete
  14. வாங்க... எழுத வாங்க...
    வரவேற்போம்.

    ReplyDelete
  15. நல்ல முயற்சி. அவர்களும் விரைவில் எழுதட்டும்...

    ReplyDelete