இன்று ஞாயிற்றுக் கிழமை. வீட்டில் உள்ளவர்களுக்கு சிறப்பாக
சமைக்கலாம் என்று திட்டமிட்டு அதற்கான பொருட்களை வாங்க
புறப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள், சிக்கன், மட்டன், மீன் என்று வாங்க
புறப்படுபவர்கள் அப்படியே சென்று விடுங்கள். இங்கே உங்களுக்கு
எதுவுமில்லை.
நம்மையும் ஒரு சமையல் விஞ்ஞானி என்று மக்கள் ஒப்புக் கொள்ள
காரணம் இந்த தயாரிப்புதான் அதன் பிற்கு ஏராளமான சமையல்
குறிப்புக்கள் எனது பக்கத்தில் இருக்கும். வலைச்சரத்தில் கூட
அறிமுகமாகி உள்ளது. அதே நேரம் ஒரு சொதப்பல் அனுபவம்
படித்து சிரியுங்கள்.
ஒரு வேதனை கூட உள்ளது. முதலில் இதை படியுங்கள்.
இப்போது இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.
பதிவுலகில் மிகப்பெரிய சாபம் இது. காபி & பேஸ்ட் செய்யுங்கள்,
ஆனால் ஒரிஜனல் யாரென்று நன்றியோடு தெரிவியுங்கள்.
சரி திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் புளிக்காய்ச்சல்
தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளுங்கள்.
கர்னாடகாவின் சிறப்பு உணவான பிஸி பேளா ஹூலி அன்னா
எப்படி தயாரிப்பது என்று அண்ணன் ஜி.எம்.பி சொல்வதைக்
கேளுங்கள்.
அரிசியோடு வேர்கடலை வேக வைத்தாலும் இறுதியில்
கசகசா, பட்டை வறுத்து அந்த பொடியை சேர்ப்பதும் இன்னும்
சுவை தரும். தேங்காய் துறுவலைக் கூட வறுத்து விட வேண்டும்.
நீங்க செஞ்ச பிரியாணிக்கு தொட்டுக்கொள்ள காரமா
திருமதி ராஜி செய்துள்ள அரைச்சு விட்ட கத்திரிக்காய் குழம்பு
செஞ்சுடுங்க.
மீண்டும் மாலை பார்ப்போம்.
மதிய உணவு சாப்பிட்டதும் ஜில்லுனு பாதாம் கீர் சாப்பிடுங்க
நம்ம தயாரிப்புதான்

அருமையான சமையல் குறிப்புகளை பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteஇதோ.. சமையலறைக்கு கிளம்பிவிட்டேன்...
(நாடு விட்டு நாடு வந்து சொந்த சமையல் தானுங்க!..)
அன்புடையீர்..
ReplyDelete//ஒரு வேதனை கூட உள்ளது. முதலில் இதை படியுங்கள்.
இப்போது இந்த இணைப்பிற்குச் செல்லுங்கள்.//
சொன்னபடியே - சென்றேன்.. அங்கே ஆட்டுக் கறி சமாச்சாரம் அல்லவா இருக்கின்றது. பிறகு,
ஓசைப்படாமல் அடுப்படியை உருட்டினால் - அங்கே தங்களுடைய மைசூர்பாகு ஒளித்து வைக்கப்பட்டிருக்கின்றது..
எனவே - தாங்கள் இங்கே - வழங்கியுள்ள இணைப்பை சரி செய்யவும்.
அன்புடன் -
துரை செல்வராஜூ..
வணக்கம். புளியோதரை செய்யும் செய்முறையை இப்போது தான் படித்து தெரிந்துகொண்டேன். அருமை. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சு... இங்க வந்தா ஒரே விருந்து..புளியோதரை படித்தேன்... அந்தப் பருப்புகளை வறுத்து பொடி செய்து போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்.. நான்-வெஜ்ஜில் ஒயினெல்லாம் போடணுமாம்... அதான் பாதிதான் படித்தேன்... நன்றி ... வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி துரை செல்வராஜூ சார், சரி செய்து விட்டேன். ஒரிஜினல் மைசூர்பாகும் நான் எழுதியதல்ல. திருமதி மஞ்சுளா தயார் செய்தது. அதைத்தான் ஆட்டைய போட்டுட்டாங்க
ReplyDeleteநன்றி விக்னேஷ், நன்றி எழில்
ReplyDeleteஉங்க தயாரிப்பு பாதாம் கீர் பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்கு. ஆனா குடிக்க எப்படி இருக்கும்னு தான் தெரியலை.
ReplyDeleteஎல்லாம் அருமை ..அந்த பாதாம் கீருக்கு ரெசிப்பி லிங்க் தரவில்லையா ...ஹ்ம்ம் பர்ர்க்க அருமையா இருக்கு
ReplyDeleteமிக அருமையான் அறிமுகங்கள்
ReplyDeleteபாதம் கீரும் சூப்பர்
//பதிவுலகில் மிகப்பெரிய சாபம் இது. காபி & பேஸ்ட் செய்யுங்கள்,
ஆனால் ஒரிஜனல் யாரென்று நன்றியோடு தெரிவியுங்கள்.//
மிகச்சரியாக சொன்னீங்க. கழ்ட பட்டு நாங்க பதிவு போட்டால் மனசாட்சியே இல்லாமல் அப்படியே அட்டு காப்பி இல்லையா அடிக்கிறார்கள்
வலைச்சரத்திற்கு இன்றுதான் வந்தேன். புதிய ஆசிரியர் கலக்குகிறார். வாழ்த்துக்கள். பாதாம்பருப்பை ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவு ஊற வைத்தால் காலையில் சரியாக இருக்கும். தோலை நீக்கி, அதைப் போல ஒன்றரை மடங்கு சர்க்கரை சேர்த்து மிக்ஸியில் அறைத்துக் கொள்ளவும். பாலை நன்கு காய்ச்சி ஆற வைத்து ஏடு நீக்கி வைத்துக்கொள்ளவும். அறைத்த கலவையோடு ஏலக்காய்ப் பொடி சேர்த்து பாலில் கலந்து ப்ரிட்ஜில் வைக்கவும். சாப்பிடும்போது வறுத்த முந்திரி பருப்பைச் சேர்த்துக் கொள்ளவும். சுவையான பாதாம் கீர் தயார்.
ReplyDeleteஆஹா இங்கே சமையலா..... நல்லது. நிச்சயம் சில குறிப்புகள் எனக்குப் பயன்படும்!
ReplyDeleteஅப்படித்தான் நானும் நம்புகிறேன் திரு வெங்கட் நாகராஜ்
Delete