Sunday, June 1, 2014

மனிதன் என்பவன்



மனிதன் என்பவன் தெய்வமாகலாம் என்று கவியரசரின் பாடல் வரிகள் தொடங்கும். மனிதன் தெய்வமாக வேண்டிய அவசியமில்லை. அவன் மனிதனாக வாழ்ந்தாலே போதுமானது. மனிதம்  என்பதை பலரும் மறந்து போய்க் கொண்டிருக்கிறார்கள். வெற்றி என்பது பலரையும் மயக்கத்தில் ஆழ்த்தி ஆணவத்தில் ஆடச் செய்கிறது. இது ஒரு புறம். தாங்கள் ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று இலக்கே இல்லாமல் பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று வாழ்க்கையை முடித்துக் கொள்கிற பல மனிதர்களும் உள்ளனர். தங்களின் வாழ்வை அர்த்தம் மிக்கதாய் வாழ்ந்து மற்றவர்களின் வாழ்வை இனிமையாக்கியவர்களும் உண்டு. அப்படிப்பட்ட மனிதர்கள் அனைவரையும் வணங்கி வாழ்த்தி எனது நிறைவுப் பகுதிக்குச் செல்கிறேன்.

என்னைக் கவர்ந்த சில மனிதர்களைப் பற்றிய அறிமுகம்தான். உங்களுக்கு தெரியாதவர்கள் யாரும் கிடையாது.

முதலில் வலையுலகில் இருவரைப் பற்றி நான் சொல்ல வேண்டும்.

வன்மமும் வக்கிரமும் நிறைந்தவர்களின் உலகமாக பதிவுலகம் மாறி வருவது என்பது சோகமான யதார்த்தம். அனானிகளாக பலர், நேரடியாக சிலர் என்று அடுத்த பதிவர்களை குத்தி, கீறி, காயப் படுத்தி வருவதைப் பார்க்கிறோம். காயப்பட்டவன் எதிர்வினை ஆற்றுவதை புலம்பல் என்று சொல்வதையும் பார்க்கிறோம். அப்படிப் பட்ட பதிவுலகில் அனைவரையும் வாழ்த்துவது, உற்சாகப் படுத்துவது என்பதுதான் இவரது இயல்பு. மனமாறப் பாராட்டுகிறேன்.

வலைச்சரத்தின் பெருமையை எங்கெங்கும் கொண்டு சேர்க்கிற பெருமை இவருக்கே உண்டு. அறிமுகம் செய்யப்படுகின்ற ஒவ்வொரு பதிவருக்கும் தகவல் சொல்லி அவரை மகிழ்விப்பதை தன் கடமையாகக் கொண்டுள்ள இவருக்கும் எனது பாராட்டுக்கள்.

இப்போது வேறு சில மனிதர்களைப் பற்றி பார்ப்போம்.

சிம்மக்குரலோன் கடுமையான சிவாஜி ரசிகராக இருந்தாலும் இங்கே அவர் எழுதியிருப்பது யாரைப் பற்றி  தெரியுமா?

அவருடைய இன்னொரு பதிவைப் பாருங்கள். ஒரு மனிதனைக் காக்கா பிடிக்க எப்படியெல்லாம் அலங்காரம் செய்கிறார்கள் என்று பாருங்கள்.

நண்பர் கரந்தை ஜெயக்குமார் பகிர்ந்து கொண்டிருப்பது ஒரு சாமானிய மனிதன் பற்றி. படித்து முடிக்கும் போது அவர் சூப்பர்  மனிதராக உருவெடுக்கிறார்.  இன்னொரு மாமனிதர் பற்றி அவர் விரிவாக எழுதியுள்ள கட்டுரை நீங்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று.

எளிமையான எழுத்துக்களால் உள்ளத்தை  கொள்ளும் ஒரு பிரபல எழுத்தாளர் பற்றி இன்னொரு எழுத்தாளர் பகிர்ந்து கொண்டதையும்
படியுங்கள்.

இன்று வேலூரில் ஒரு விளம்பரம் பார்த்தேன். இசைஞானி இளையராஜாவின் எழுபத்தி ஒன்றாவது பிறந்த நாளை ஒட்டி நாளை எழுபத்தி ஓராயிரம் மரக்கன்றுகள் நடும் விழா பெறும் என்று. மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அந்த மகிழ்ச்சியை விமர்சகர் ஹாஜியோடு நானும் பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு மிகவும் பிடித்த பாடகரான கேஜே.யேசுதாஸ் என்ற இசையால் ஆனமனிதன்  பற்றிய பதிவு சரியான விமர்சனங்களோடு. இத்துடன் சிங்காரவேலனே தேவா பாடிய ஜானகியம்மா பற்றிய பதிவும் இங்கே.

மானுட விடுதலை வேண்டும் என போராடுகிற ரமேஷ்பாபு இந்திய விடுதலைப் போரில் தடம் பதித்த பல பெண்களைப் பற்றிய பதிவுகளை பகிர்ந்து கொண்டுள்ளார். அதிலே உங்களுக்காக இங்கே வேலு நாச்சியார் , ஜான்சி ராணி என்ற மணிகர்ணிகா, பேகம் ஹ்சரத் மஹல் ஆகியோர்  பற்றிய பகிர்வு. மற்றவைகளையும் தவற விடாதீர்கள்.

காஷ்யபனின் இந்த பதிவும் முக்கியமானது. முக்கியமான மனிதர் பற்றியது. அமெரிக்கா வெறுத்தால் அவர் கண்டிப்பாக நல்ல மனிதராகத்தானே இருந்தாக வேண்டும். அமெரிக்கா  போகிறேன் 
என்று சொல்லி விட்டு துப்பாக்கி தூக்கிய மனிதரையும் அறிந்து 
கொள்ளுங்கள்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்த இரண்டு தலைவர்கள் பற்றி  மாற்று  சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளது. அதைப்
படித்த பின்பு கடந்த ஞாயிறன்று வெளியான அம்பேத்கர் புன்னகைக்கிறார்  என்ற சிறுகதையையும் படியுங்க, சில மனிதர்கள்
பல மனிதர்களை எப்படி துயரப்படுத்துகின்றனர் என்பதை சொல்லும்.
 
அணையாத ஜோதி யார் என்பதை தோழர் மாதவராஜ் அவர்களின் தீராத பக்கங்களை புரட்டி தெரிந்து கொள்ளுங்கள்.

தோழர் மாதவராஜ் அவர்களின் மிக முக்கியமான பதிவு மிக முக்கியமான மனிதரைப்பற்றியது. ஏழு அத்தியாயங்களில் ஒன்றிற்கு மட்டும் இணைப்பு அளித்துள்ளேன். மற்ற அத்தியாயங்களையும் படியுங்கள்.

யார் அந்த மாமனிதர்?

அவரைப் போல் உலகில் படித்தவரும் கிடையாது. அவரைப் போல் உலகில் எழுதியவரும் கிடையாது. மக்களால் நேசிக்கப்பட்டவர். மக்கள் விரோத அரசுகளால் வெறுக்கப்பட்டவர். எதிர்காலத்தில் எப்படிப்பட்ட நிகழ்வுகள் வரும் என்று துல்லியமாக கணித்தவர் அவர். ஆனால் அது ஜோசியமில்லை. உலகம் எப்படிப்பட்ட திசைவழியில் போனால் நல்லது என்பதை வகுத்துத் தந்தவர். இனி எதிர்காலம் இல்லை என்று ஏளனமாய் பேசியவர்கள் கூட தங்களுக்கு ஒரு நெருக்கடி வந்த போது அந்த தாடிக்காரரின் புத்தகத்தில் ஏதாவது தீர்வு இருக்கிறதா என்று புரட்டிப் பார்த்தார்கள்.

ஆயிரம் ஆண்டுகளின் மாமனிதர் என்று வேறு வழியில்லாமல் பி.பி.சி சொன்ன அந்த மகத்தான மனிதர் “மாற்றம் மட்டுமே மாறாதது” என்று சொன்னது நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. சாமானிய மனிதனுக்கு தேவைப்படும் மாற்றமும் கூட நிகழ்ந்தே தீரும். அதுவும் அவர் காட்டிய  வழியிலேயே.

நன்றியோடு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன். வாய்ப்பளித்த வலைச்சரத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் பல. வணக்கம்.



12 comments:

  1. Very Nice Mr.Raman. Thanks for sharing

    ReplyDelete
  2. மிக்க மிக்க நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நல்ல பல பதிவுகளைக் குறிப்பிட்டு - பகிர்ந்து கொண்டமைக்கு மகிழ்ச்சி..
    என்றும் நினைவில் கொள்ளத்தக்கவை..
    அன்புடன் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து நீங்கள் உற்சாகப்படுத்தினீர்கள். மிக்க மகிழ்ச்சி. சந்திப்போம்

      Delete
  4. குறிப்பிடத்தக்க பல நல்ல பதிவுகளை அறிமுகப்படுத்தினீர்கள்.
    நன்றி! ஐயா!

    t. m. 2

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி நிஜாமுத்தீன், ஒவ்வொரு நாளும் உங்கள் பின்னூட்டம் உற்சாகமளித்தது

      Delete
  5. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு ஜீவலிங்கம் காசிராஜலிங்கம்

      Delete
  6. வலைச்சரத்தில் ஒரு வாரம் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு வெங்கட் நாகராஜ்

      Delete