நண்பர்கள் அனைவருக்கும் இனிய வணக்கங்கள் !!!
நண்பர்களே, இன்று கைவினை பதிவுகளின் மூலம், கைவினைகள் செய்ய நமக்கு புதிய உத்திகளையும், பயனற்ற பொருளென்று நாம் எண்ணுபவற்றைக் கூட, பயனுள்ள கண்ணைக் கவரும் அலங்காரப் பொருளாக்குவது எப்படி என்று நமக்கு கற்றுத் தரும் பதிவர்களைக் காணலாம்.
1. பதிவர் பிரியா ராம் அவர்கள் தனது ரசிக்க ருசிக்க தளத்தில், மணிகள் கொண்டு அழகான மாலையும் அதற்கு ஜோடியாக அழகான கம்மலும் செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.
வண்ண வண்ண குந்தன் கற்கள் கொண்டு இவர் வடிவமைத்துள்ள அழகான ரங்கோலியை கண்டு இரசிக்கலாமே.
2. இன்று முதல் தளத்தில் சகோதரி தர்ஷினி அவர்கள் பகிர்ந்துள்ள அழகான டைல்ஸ் ஓவியங்களை பார்ப்போமே.
கைவினைகள் செய்ய பயன்படுத்தும் களிமண்ணில் இவர் செய்துள்ள அழகான ரோஜாப் பூக்கள் உள்ளம் கவர்கின்றன.
3. சரண்யா அவர்களின் கைவண்ணத்தில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களில் இருந்து உருவாக்கப் பட்ட அழகான மலர்களை பாருங்கள். படங்களுடனான எளிமையான செய்முறை விளக்கங்களையும் வழங்குகிறார்.
நிலக்கடலை ஓடுகள் / தோல் கொண்டு இவர் செய்துள்ள எழில்மிகு வண்ண மலர்கள் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றன.
4. பொத்தான்கள் கொண்டு அழகான மரத்தினை உருவாக்கி இருக்கிறார் வேதாவின் வலை தளத்தில் எழுதி வரும் கோவைக்கவி வேதா இலங்காதிலகம் அவர்கள்.
காகிதக் கூழ் கொண்டு செய்த கரடி உருவ முகமூடி அற்புதம். செய்முறை விளக்கமும் கொடுத்துள்ளார்.
5. க்வில்லிங் முறையில் சகோதரி சங்கீதா செந்தில் அவர்கள் செய்துள்ள அற்புதமான வாழ்த்து அட்டை.
இவரது கைவண்ணத்தில் உருவான அழகான காதலர் தின வாழ்த்து அட்டை மனம் கவர்கிறது.
6.ஆச்சி ஆச்சி தளத்தில் திருமதி. பி.எஸ். ஸ்ரீதர் அவர்கள் காலுறையில் ( Socks )
ஆழகான கரடி பொம்மை செய்வது எப்படி என்று சொல்லித் தருகிறார் பாருங்கள்.
சேலைகளைக் கொண்டு இவரது கைவண்ணத்தில் உருவான அழகான மிதியடியை காணுங்கள்.
7. எளிதாக செய்யக்கூடிய அல்லது வரையக்கூடிய கடவுள் உருவம் யாதெனில், அது அனைவருக்கும் தெரியும் , அது பிள்ளையாரின் உருவம் தான். திருமதி. உஷா ஸ்ரீகுமார் அவர்களின் கைவண்ணத்தில் உருவான அருள் தரும் பிள்ளையாரை காண்போமே.
கண்ணைக் கவரும் ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் - இவரது கற்பனை மற்றும் கைவண்ணத்தில். ஆனால், இது குடிப்பதற்கு அல்ல.
8. கலைச்சாரல் தளத்தில் சகோதரி மலிக்கா ஃபரூக் அவர்களது கைவண்ணத்தில் மண் பானையும் அழகாக மிளிர்வதை காண்போம் வாருங்கள்.
மணிகள் கொண்டு உருவான அழகான மாலை பளபளப்பாய் கண்ணையும் கருத்தையும் கவர்கின்றது.
9. பயணிக்கும் பாதை தளத்தில் சகோதரி அஸ்மா அவர்கள் நட்சத்திர வடிவத்தில் கூடை பின்னுவது பற்றி அழகாக தெளிவான படங்களுடன் நான்கு பகுதிகளாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்.
சாதாரணமாக காட்சி அளிக்கும் ஹேர்பின், இவரது கைவண்ணத்தால், எவ்வளவு அழகாக மாறி உள்ளது பாருங்களேன். தெளிவான படங்களுடன் விளக்கங்களும் அருமை.
10. தேன் மதுரத் தமிழ் தளத்தில் சகோதரி கிரேஸ் அவர்களது கைவண்னத்திலும், அவரது பிள்ளையின் கைவண்ணத்திலும் வெள்ளை கைக்குட்டை எவ்வளவு வண்ணமயமாய் உருமாறி இருக்கிறது !
கிறிஸ்துமஸ் கைவினைகளும், அழகான கவிதை வரிகளும் அருமையிலும் அருமை.
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
மனதிற்கு மகிழ்வளிக்கும்
நல்லதோர் வினை !
ஓய்வு நேரமதில்
செய்து பார்ப்போமே
உற்சாகம் ஊட்டும்
கைவினை !

அறிவிப்பு
திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா அவர்களது தளத்தில் நடைபெறும் சிறுகதை விமர்சனப் போட்டி
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று
ஓர் சிறுகதை வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த சிறுகதைக்கு விமர்சனம் எழுதியனுப்ப
போட்டியும் நடைபெற்று வருகிறது.
அனைவரும் இதில் கலந்துகொண்டு
பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
போட்டியின் பொதுவான விதிமுறைகளுக்கான இணைப்பு:
இந்த வாரப்போட்டிக்கான சிறுகதையின் தலைப்பு:
“ சூ ழ் நி லை ”
ஆண்டு முழுவதும் பரிசுகள் !
அள்ளிச்செல்ல அன்புடன் செல்லுங்கள் !!
oooooooooooooooooooooooooooooo oooooooooooooooooooooooooooooo o
நண்பர்களே
! இன்றைய பதிவுகள் அனைத்தும் பயனுள்ளவையாக இருந்திருக்கும் என்று
எண்ணுகிறேன். நாளை வேறு சில பதிவர்களுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கிறேன்.
நன்றி !!!
தமிழ்முகில்,
ReplyDeleteஅனைத்தும் பயனுள்ள பதிவுகள். விருப்பமிருந்தாலும் எனக்குக் கைவினை செய்ய வராது, ஆனால் ரசிக்கவும், வியக்கவும் தெரியும். அதனால் எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறேன்.
உங்களுக்கும், இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
எளிமையானவற்றை முதலில் முயற்சித்து பாருங்கள் தோழி.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும்அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி
கைவினைகள் என்றால் எனக்கு மிகவும் விருப்பம் ..அறிமுகமானோர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று ஒரு வித்தியாசமான வலைப்பூ அறிமுகங்கள்... அறிமுகங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு எனது பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் அன்பான வாழ்த்துகட்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே .
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாம் தொடரும் வலைப்பூக்கள்தான்... இதில் இலக்கம்1.இலக்கம்2. இந்த வலைப்பூக்கள் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி..
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteஇன்றைய பதிவர்களின் தொகுப்பு பயனுள்ளவை... அறிமுகப்படுத்தியதற்கு நன்றி... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteஒருமனதாக இருந்து அழகழகாக கைவினைப் பொருட்களைச் செய்வதும் சித்திரங்கள் வரைவதும் மனிதத்தை மேம்படுத்துவன.
ReplyDeleteமுன்பெல்லாம் - தென்னை ஓலை, பனங்குருத்து இவற்றிலெல்லாம் அழகான கிலுகிலுப்பைகளைச் செய்வார்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள்.. வீடுகளில் நிலை மாலை, தடுக்கு, ஒயர் கூடைகள், அலங்காரப் பூக்கள், வண்ண மணிகளால் சிறு சிறு பதுமைகள் என்று அக்காவும் தங்கையும் செய்யும் போது வீடு முழுதும் கலையம்சமாக இருக்கும்.
சுற்றுச்சூழல் சிதைப்பு, தொலைக்காட்சித் தொடர்கள் இவற்றால் மறக்கப் பட்டிருந்த கலையம்சங்கள் மீண்டும் தழைப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
இன்றைய அறிமுகங்களைத் தொகுத்து வழங்கிய தங்களுக்கு அன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்!...
கைவினைகள் செய்வதன் மூலம் புதிதாக பலவற்றையும் கற்றுக் கொள்கிறோம். நேரமும் நல்ல வழியில் செலவாகிறது. நாமே செய்ததை பார்க்கும் போது புது உற்சாகமும் தன்னம்பிக்கையும் பிறக்கிறது.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.
நல்ல அறிமுகங்கள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரரே !
Deleteசிறப்பான அறிமுகங்கள் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ !
Deleteமிகவும்
ReplyDeleteஅழகான
அசத்தலான
அற்புதமான
அருமையான
அமர்க்களமான
ஆச்சர்யமான
அறிமுகங்கள்.
அனைவருக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
>>>>>
தங்களது அன்பான உற்சாகமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteஇன்றைய அறிமுகங்களில்
ReplyDeleteஆறாம் நம்பர் ஆச்சியும்,
ஏழாம் நம்பர் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்களும்
எனக்கு மிகவும் பழக்கமானவர்கள்.
அவர்களின் அனைத்துப்பதிவுகளிலும் அநேகமாக என் பின்னூட்டங்கள் இடம் பெற்றிருக்கும்.
அவர்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய பாராட்டுக்கள் + நல் வாழ்த்துகள். அவர்களை இங்கு அடையாளம் காட்டி சிறப்பித்த தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
தங்கள் பாராட்டுக்களுக்கும் வாழ்த்துக்களுக்கும் என் நன்றிகள்,V G K சார்
Deleteதமிழில் கைவினை பற்றி வலைப்பக்கம் / வலைப்பதிவு எழுதுபவர்கள் மிக குறைவு ஐயா. இங்கு குறிப்பிட்டிருக்கும் பதிவர்களில், சிலர் ஏற்கனவே அறிந்தவர்கள், பலர் அறியாதவர்கள். வலைச்சரத்தில் பதிவு எழுதியதன் மூலம் பலரை அறிந்து கொண்டேன்.
Deleteதங்களது அன்பான கருத்துரைக்கு நன்றிகள் ஐயா.
எந்தவொரு
ReplyDelete‘சூ ழ் நி லை’ யிலோ
தங்களால்
கடைசியாகக்
கொடுக்கப்பட்டுள்ள
அ றி வி ப் பு
என்னை
மகிழ்ச்சிக்கடலில்
ஆழ்த்துகிறது !
அதற்காக என் ஸ்பெஷல் நன்றிகள் !
THANKS A LOT MADAM.
அன்புடன் கோபு [VGK]
நன்றி எல்லாம் எதற்கு ஐயா? ஏதோ என்னாலான ஒரு சிறு உதவி. அவ்வளவே.
Deleteமிக்க நன்றி சகோ ...இந்த இனிய செய்தி எனக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்துள்ளது....என்னை வலைச்சரத்தில் அறிமுக படுத்திய தமிழ் முகில் பிரகாசம் அவர்களுக்கு என் கோடான கோடி நன்றிகள் .....
ReplyDeleteதங்களது வருகைக்கும் அன்பான கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteவித்தியாசமான வலைப்பூ அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Delete''...திருமதி தமிழ் முகில் பிரகாசம் இன்று தமிழ் மணத்தில் என் வலையில் கைவினைகளை அறிமுகப் படுத்தியுள்ளார். அவருக்கு மனமார்ந்த நன்றி உரித்தாகுக...'' - இப்படி இதன் லிங்கையும் முகநூலில் எனது சுவரில் இட்டுள்ளேன் .
ReplyDeleteமிக்க மிக்க நன்றி சகேதரி.
உங்கள் ஆசிரிய வாரமும் சிறக்க அமையட்டும்.
இதை அறிவித்த இனிய டிடிக்கும் (சகோதரர் தனபாலனிற்கும்) மனமார்ந்த நன்றி.
வேதா. இலங்காதிலகம்.
தங்களது வருகைக்கும், அன்பான உற்சாகமூட்டும் கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் கவியே !
Delete
ReplyDeleteவணக்கம்!
கைவினை மின்னும் கலைவினைக் காட்சிகள்
தைவினை தந்து தழைத்தனவே! - மைவிழி
மாதே! மணக்கும் தமிழ்முகிலே! உன்னெழுத்தில்
போதே மணக்கும் பொலிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
மிக்க நன்றி ஐயா. தங்களது அன்பான வாழ்த்துப் பாக்களினால் மிகவும் மகிழ்ச்சியுற்றேன் ஐயா.
Deleteஎன் பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு மிக்க நன்றி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteanaivarukkum vaazththukkaL
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோதரி.
Deleteஅறிமுகங்களைக் கண்டேன். விடுமுறையை பயனுள்ளதாகப் போக்கும் அளவு அமைந்துள்ளது இப்பதிவு.
ReplyDeleteதங்களது அன்பான ஊக்கமூட்டும் கருத்துரைக்கு மனமார்ந்த நன்றிகள் ஐயா.
Deleteபயணம் காரணமாக இன்றுதான் பார்க்கிறேன் தமிழ்முகில்..என் தளத்தை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள். தகவலைச் சொல்லிய திரு.தனபாலன் மற்றும் திரு.,ரூபன் அவர்களுக்கும் நன்றிகள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றிகள் தோழி.
Deleteமன்னிக்கவும்...இன்றுதான் பார்த்தேன்! உங்கள் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்க்கும், அனைவரின் வாழ்த்திற்க்கும்,பாராட்டுகளுக்கும் நன்றிகள்..
ReplyDeleteஅறிமுகப்படுத்திய வலைதளங்களும் அருமை...