'ஒளியுடையோன்' பிரசன்னா இராசன் 'நானும், ப்ளாக்கும், பின்னே மொக்கை மாயாண்டியும்' என்று சின்னதாக ஒரு
இடுகை பதிவிட்டிருப்பார். முதல் பந்தியை அவசியம் ஒரு தடவை படித்துப் பாருங்கள். :-)
பிறகு அப்படியே மீதி வலைப்பூவை மேயலாம்.
சுஜாதாவின் இரண்டாவது சரித்திர நாவலான 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை’ படித்ததில்லை. பிரசன்னா இராசனின் இந்த இடுகை, கதையைத் தேடிப் படிக்கத் தூண்டியிருக்கிறது.
பல்வேறு விதமான இடுகைகள் இவரது
வலைப்பூவிலிருக்கின்றன. இடுகைகளூடே ஆங்காங்கே தந்தை மகன் பாசம் பரவலாகத் தூவித்
தெரிகிறது. அவரது "ட்ரான்சிஸ்டர், தேங்காய், வறுகடலை"க்கு
"ட்ரான்சிஸ்டர், அப்பா, மகன்" என்று தலைப்பு வைத்திருந்தால் இன்னும்
பொருத்தமாக இருந்திருக்கும். அருமையான சிறுகதை இது. ஏற்கனவே வலைச்சரத்தில்
அறிமுகமாகி இருக்கிறது.
'தொலைந்த விநாடிகளில்'... 'வாசிப்பு
விஷயத்தில் லஞ்சம் கொடுப்பதில் தவறில்லை,' என்கிறார். என் எண்ணமும்
அதுதான். வாசிப்புச் சுவை பிடிபட்டால் பிறகு குழந்தைகள் தாங்களாகவே தேடிப்
படிக்க ஆரம்பிப்பார்கள்.
பனையூரான் வலைப்பூ இது. நண்பர்கள் யாரையாவது விளையாட்டுக்கு ஏமாற்றியிருக்கிறீர்களா? ஏமாற்றினால் என்ன ஆகும்! ஒரு சின்ன அனுபவம்... அனுபவமல்ல பாடம் இது.
முனைவர் மு. இளங்கோவன் அவர்களது வலைப்பக்கம் இது. இந்தச் சுட்டி உங்களைத் தமிழறிஞர்கள் பற்றிய இடுகைகளுக்கு அழைத்துச் செல்லும். சுவாமி விபுலாநந்தர், பாவேந்தர் பாரதிதாசன் தொடங்கி தற்காலத் தமிழ் அறிஞர்கள் சிலர் பற்றிய விபரங்களையும் அழகாகக் கொடுத்திருக்கிறார்.
தமிழ் நூல் வரிசையில் இடம்பெற்றுள்ளவற்றுட் தவறவிடக் கூடாதது... '150 பக்க நூலுக்கு பாரதியாரின் 57 பக்க முன்னுரை' என்னும் கட்டுரை. நிறைய நேரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாவகாசமாக ரசித்து வாசிக்கவேண்டிய வலைப்பூ கவிஞர் செல்லப்பா அவர்களது.
அவர் எழுதிய 'ஈரம் கசியும் இதயங்கள்' என்னும் நான்கு பகுதிகளாலான நீண்ட குறுநாவல் இங்கே ஆரம்பிக்கிறது. படித்து பாருங்கள்.
நான் கோர்த்த சரம் கையளவு.
மீதியோடு நாளை வருகிறேன்.
_()_
அனைத்தும் தொடரும் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDelete//அனைத்தும் தொடரும் தளங்கள்// ஹையோ!!!!! கொடுமையா இருக்கே இது!! நான் என் செய்வேன்!! :-)
Deleteநன்றி தனபாலன். :-)
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்குமு் வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்.
Delete. நிறைய நேரத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாவகாசமாக ரசித்து வாசிக்கவேண்டிய வலைப்பூ கவிஞர் செல்லப்பா அவர்களது//
ReplyDeleteமிகச் சரியாக அவதானித்திருக்கிறீர்கள்.. பாராட்டுக்கள்..
அருமையான அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்..!
மிக்க நன்றி அக்கா. :-)
Deleteஎனது தளங்களை அங்கீகரித்துப் பெருமைப்படுத்தியமைக்கு நன்றி தெரிவிக்கிறேன். - இராய செல்லப்பா (இப்போது நியூஜெர்சியில்)
ReplyDeleteவலைச்சரத்திற்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் ஐயா. :-)
Deleteதளங்கள் புதியவை.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள்.
;) அப்பிடியே தனபாலன் சொன்னதற்கு எதிர்மாறாகச் சொல்லுறீங்கள். :)
Deleteநன்றி ப்ரியா.
கவிஞர் இராய செல்லப்பா அவர்களைத்தவிர
ReplyDeleteஏனைய பதிவர்கள் எனக்கு அறிமுகம் புதிது.
அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!
உங்களுக்கு அன்பு நன்றிகள் இமா!
//ஏனைய பதிவர்கள் எனக்கு அறிமுகம் புதிது.// அது போதும் எனக்கு. :-)
Deleteநன்றி இளமதி.
வணக்கம் சகோதரி
ReplyDeleteஅறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துகள். தங்கள் வலைச்சர பணிக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும். நன்றி சகோதரி.
உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி பாண்டியன்.
Deleteஉங்கள் வலைப்பூவில் சில இடுகைகள் பார்த்தேன். வருகிற வாரம் படிக்க வருவேன்.
ReplyDeleteவணக்கம்!
சிறந்த வலைகளைத் தேடி அளித்தீா்!
பறந்து பறந்து படித்தேன்! - நிறைந்ததென்
நெஞ்சம்! நெடுந்தமிழ்ச் சொற்கள் இமாவிடம்
கொஞ்சும் மதுவைக் குழைத்து!
கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
// நெடுந்தமிழ்ச் சொற்கள் இமாவிடம்// ஹா!!! இதற்காகவே ஒழுங்காக எழுதவேண்டும் போல் இருக்கிறதே கவிஞரே! :-)
Deleteதங்கள் பாராட்டிற்கு என் அன்பு நன்றிகள்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தொகுத்து தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteவாழ்த்துக்கும் தங்கள் கருத்துக்கும் என் அன்பு நன்றிகள் சுரேஷ்.
Deleteஅறிமுகம் செய்த அனைவருக்கும் வாழ்த்துக்கள். தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.நன்றி.
ReplyDeleteநன்றி ஐயா. // தொடர்ந்து பதிவுகளை எதிர்பார்க்கிறோம்// இன்றுதான் இறுதி நாள். நான் விடைபெறும் நேரம் நெருங்கிவிட்டது. :-)
Deleteஅறிமுகங்கள் அத்தனையும் முத்துக்கள். பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteமிக்க நன்றி விக்னேஷ்.
Deleteபகிரப்பட்ட அனைத்துத் தளங்களும் சிறப்பான தளங்களே வாழ்த்துக்கள் தோழி !
ReplyDelete:-) வாழ்த்துக்கு என் அன்பு நன்றிகள்.
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்தியமைக்கு நன்றி நேசன்.
Deleteமுனைவர் இளங்கோவன் அவர்கள் தவிர்த்து மற்றவர்கள் எனக்கு புதியவர்கள். சென்று பார்க்கிறேன்.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்.