Sunday, June 15, 2014

பொழுது போகிறது!

இன்னும் சில மணி நேரங்கள்தான் இந்த நாற்காலி. :-) அதுவரை... பொழுது போகட்டும் உங்களுக்கும்.
இன்று கைவினை, ஓவியங்கள் தொடர்பான வலைப்பூ இடுகைகளைக் கோர்த்துக் கொடுக்கலாமென்றிருக்கிறேன். பலரது வலைப்பூக்களை வேறு தலைப்புகளின் கீழ் அறிமுகம் செய்தாயிற்று. இன்னும் சிலர் இங்கே...
உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகளில் பானை நிறைய நகைகள் இருக்கின்றன. மாதேவி கலைவாணி...கேரளா ம்யுரல், சரஸ்வதி - ஒரு தஞ்சாவூர் பாணி ஓவியம் இரண்டும் இருக்கிறது. பஞ்சமுக கணபதி வெகு அழகாக இருக்கிறார். மூங்கில் தட்டில் பிள்ளையார்  செய்வதற்கு திறமை எல்லாம் வேண்டாம். வெகு சுலபமாக சட்டென்று செய்துவிடலாம். அப்படியே இதையும் தெரிந்துகொள்ளுங்கள்.


திருமதி ஸ்ரீதரின் வலைப்பூ இது. கரடிப் பொம்மை செய்முறை ஒன்று இங்கு பகிர்ந்திருக்கிறார். இங்கு சேலையில் கைவண்ணம் காட்டுகிறார். இங்கு... உபயோகமில்லாத உடையில் பை தயாரிப்பது பற்றிச் சொல்கிறார்.

பெண்கள்தான் அனேகம் கைவினை இடுகைகள் கொடுக்கிறார்கள். ஆண்களது வலைப்பூக்கள் காணக் கிடைக்குமாவென்று தேடினேன். முன்பு ஒருசிலரது ஓவிய வலைப்பூக்கள் பார்த்திருக்கிறேன். சுட்டிகள் பழைய கணணியோடு காணாமல் போய்விட்டது. இப்போது தேடினாற் கிடைக்கவில்லை. இது... உங்கள் வேலை. :-) தேடிப் பிடித்துக் கொடுப்பீர்களா!

என் நினைவில் நிற்பவர் VGK அண்ணா மட்டும்தான். அண்ணாவையும் அவர்களது வலைப்பூவையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள். அவரது மயக்கும் எழுத்தாற்றல் அனைவருக்கும் அறிமுகமானதே. இங்கே அவரது கைவினையும் ஓவியங்களும்.

பூந்தளிர் தியானா... இரண்டு குட்டிப்பெண்களின் தாய். விதம் விதமான விடயங்களின் கலவை இவர் வலைப்பூ. அங்கு அம்மாவும் பெண்களுமாகச் சேர்ந்து செய்யும் வேலைப்பாடுகளை இங்கே பகிரப் போகிறேன். காஃபி பெய்ண்டிங் கேள்விப்பட்டிருகிறேன். சர்க்கரைப் பாகில் கூட பெய்ண்டிங் செய்யலாமாம். காஃபி பில்டரில் அலங்காரம் இங்கே. வெகு அழகாக இருக்கிறது. முயற்சி செய்து பார்க்க நினைத்திருக்கிறேன். க்ரயான்களை மீண்டும் பாவிப்பது எப்படி என்பதையும் ப்ளே டோ செய்முறை ஒன்றையும் கொடுத்திருக்கிறார். இன்னும் இருக்கிறது. கைவினை தவிர்த்து அங்கு படித்ததில் பிடித்தது இது.

உங்களுக்கு தோட்டம் செய்வதில் ஈடுபாடு இருக்கிறதா! சிவாவின் இந்த வலைப்பூ நிச்சயம் உதவும். வலைப்பூ என்பதற்கு மேல்... உபயோகமான குறிப்புகள் நிறைய இருக்கின்றன. தான் சந்தித்த பிரச்சினைகள், அவற்றுக்காக மேற்கொண்ட தீர்வுகள் என்று பலதும் கலந்து பேசுகிறார். சந்தேகங்கள் இருந்தால் கூட கேட்டுத் தெளிந்துகொள்ளலாம். எனக்குத் தோட்டவேலை பிடிக்கும். 'எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு த்ரில்லிங் இருக்கு.' :-) என்னைப் போலவே இவர் நினைப்பும் இருக்கிறது. எதையாவது புதிதாக முயற்சி செய்கிறார். கருணைக் கிழங்கு வளர்ந்த கதை, சிவாவின் ரசனைக்கு ஒரு உதாரணம்.  முதல் இடுகையிலிருந்து விடாமல் படித்துப் பாருங்கள். அருமையான வலைப்பூ இது.

மெதுவாக ஒவ்வொன்றாகப் படியுங்கள்.
மீண்டும் வருவேன். :-)
_()_

22 comments:

  1. தோட்டம் தளம் உட்பட இன்றைய அனைத்து தளங்களும் பயனுள்ளவை... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பாராட்டுக்கு நன்றி தனபாலன்.

      Delete
  2. இன்றைய வலைச்சரம் - கலைச்சரம் எனப் பொலிகின்றது.
    அறிமுகங்கள் அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..
    வாழ்க நலம்..

    ReplyDelete
  3. வலைச்சரத்தில் என் வலைப்பூவை அறிமுகப்படுதியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்...

    ReplyDelete
    Replies
    1. Mrs. Usha Srikumar Madam,

      வணக்கம்.

      தங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும். ;)

      அன்புடன் கோபு [VGK]

      Delete
    2. உஷா... உங்கள் ஓவியங்களைப் பார்த்து, எனக்கும் ஒரு ஓவியமாவது அப்படி வரைந்து பார்க்க வேண்டும் என்னும் ஆர்வம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு வேண்டுகோள் இருக்கிறது. உங்கள் வலைப்பூவிற்கே வருகிறேன்.

      Delete
  4. கோபு அண்ணாவின் சித்திரங்களைப்பார்த்து வியந்திருக்கிறேன். இன்றைய அறிமுகங்கள் அனைத்துமே பயனுள்ள தளங்கள் இமா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. priyasaki Sun Jun 15, 12:35:00 PM

      வாங்கோ அம்முலு, வணக்கம்.

      //கோபு அண்ணாவின் சித்திரங்களைப்பார்த்து வியந்திருக்கிறேன். //

      மிகவும் சந்தோஷம். மிக்க நன்றி, அம்முலு.

      அன்புடன் கோபு அண்ணா

      Delete
    2. :-) நன்றி ப்ரியா.

      Delete
  5. //என் நினைவில் நிற்பவர் VGK அண்ணா மட்டும்தான். //

    இது ஒன்றே போதும் VGK அண்ணாவுக்கு. ;)))))

    //அண்ணாவையும் அவர்களது வலைப்பூவையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டீர்கள்.//

    அப்படியா சொல்கிறீர்கள் ! வலையுலகம் மிகப்பெரியது அல்லவா ! எனக்குத் தெரிந்தவர்கள் ஒருசிலர் மட்டுமே. என்னைத் தெரிந்தவர்கள் கொஞ்சம் கூடுதலாக இருக்கலாம்.

    //அவரது மயக்கும் எழுத்தாற்றல் அனைவருக்கும் அறிமுகமானதே.//

    அடடா ! இருப்பினும் தங்கள் மூலம் இன்று இங்கு நான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது தான் என்னை மேலும் மயக்கமடையச் செய்வதாக உள்ளது.

    // இங்கே அவரது கைவினையும் ஓவியங்களும்.//

    என் வலைத்தளத்தினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்துள்ள இந்தவார வலைச்சர ஆசிரியர் சகோதரி திருமதி இமா டீச்சர் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இந்த அறிமுகப்படலத்தை என் கவனத்திற்கு இன்று கொண்டுவந்து உதவிய திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மற்றும் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்கள் இருவருக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.

    இன்றைய வலைச்சர அறிமுகத்தின் மூலம் என் பதிவுக்குப் புதிய வருகை தந்து சிறப்பித்துள்ள Ms. R.Umayal Gayathri அவர்களுக்கும் என் அன்பான நன்றிகள்.

    இப்படிக்கு VGK

    ReplyDelete
  6. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. அறிமுகங்கள் அனைத்தும் அருமை இமா. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. நிறைய கைவினை, ஓவிய வலைப்பூக்களை அறிமுகம் செய்து வைத்திருக்கிறீர்கள். சென்று பார்த்து என் மகளுக்கு காட்ட வேண்டும்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. அம்ம்மாடி !!! எவ்வளவு அழகிய சித்திரங்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் !!!நன்றி இமா கோபு அண்ணா படம் வரைவார்னு தெரியும் ஆனா மொத்த பொக்கிஷமும் இருந்த இடத்தை இன்னிக்கு உங்க லிங்க் மூலமாகத்தான் பார்த்தேன் ..
    ஆச்சி நம்ம சகோதரி
    சிவா ..நா அடிக்கடி எட்டிபார்க்கும் ஒரு வலைபூ :)
    உஷா ஸ்ரீகுமார் வலை மற்றும் தியானா பக்கம் எனக்கு புதியவை .சங்கீதா செந்தில் ..நம்ம ஏரியா க்விலிங் :)
    அங்கே மல்லிபூ இட்லியையும் பார்த்திட்டு வந்துட்டேன்

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Angelin Sun Jun 15, 07:30:00 PM

      வாங்கோ நிர்மலா, வணக்கம்.

      //அம்ம்மாடி !!! எவ்வளவு அழகிய சித்திரங்களை நான் மிஸ் பண்ணியிருக்கிறேன் !!!நன்றி இமா கோபு அண்ணா படம் வரைவார்னு தெரியும் ஆனா மொத்த பொக்கிஷமும் இருந்த இடத்தை இன்னிக்கு உங்க லிங்க் மூலமாகத்தான் பார்த்தேன் .//

      பொக்கிஷமான தங்களின் கருத்துக்களுக்கு மிக்க நன்றி, நிர்மலா. ;)))))

      பிரியமுள்ள கோபு அண்ணா

      Delete
  10. அதிராஆவ் ஓடி வாங்க இங்கே உங்களுக்கு ஸ்பெஷல் அ .கோ .மு ..வச்சிருக்காங்க :)))

    ReplyDelete
  11. எனது வலைபூ அறிமுகத்திற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒரு தோழி, தோட்டத்தை எனக்கு அறிமுகம் செய்தார்கள். பிடித்திருந்தது. இங்கு பகிர்ந்தேன். :-)
      உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

      Delete
  12. அடடா ... வலைச்சரத்தில் என் வலையை அறிமுக படுத்தியமைக்கு என் கோடான கோடி நன்றிகள் ...எல்லா வலையையும் ரசித்தேன் ... அழகான கோர்வை ...

    ReplyDelete
    Replies
    1. //கோடான கோடி நன்றிகள் // ;)) ஒன்றை மட்டும் எடுத்துக்கொள்கிறேன். ;)
      //எல்லா வலையையும் ரசித்தேன் ... அழகான கோர்வை ...// சந்தோஷம். உங்களுக்கு
      என் அன்பு நன்றிகள்.

      Delete