நண்பர்களுக்கு வணக்கம்... முதல் முதலா சரவெடிப் பதிவர்களோட ஆரம்பிப்போம்...நான் பதிவுலகத்துக்கு வர்றதுக்கு காரணமே என்னுடைய நண்பர் டான் அசோக் தான். (அந்தக் கொடுமையைப் பன்னது அவுரு தானான்னு நீங்க கைய மடிச்சி விடுறது தெரியிது ) அதுமட்டுமில்லாம பதிவுலகதுல என்னோட குருநாதரும் இவருதான். இவரோட ஆரம்ப கால சில பதிவுகளை base ah வச்சிதான் இப்ப வரைக்கும் நான் பதிவெழுதிகிட்டு இருக்கேன்.
நாம நம்ம பாஸுங்ககிட்ட ரப்படி வாங்கிகிட்டு இருக்கும் போது ஒரு ஃபோன் வரும். அதயே சாக்கா வச்சி ஃபோன பொத்துனாப்புல காதுல வச்சிகிட்டே வெளிய வந்தோம்னா "சார் HDFC லருந்து ப்ரீத்தி பேசுறேன் சார்..." ஒரு குரல். அது என்ன்னனே தெரியல இந்த பேங்க்லருந்து பேசுறவிங்க பேருங்க ப்ரீத்தி, ப்ரியா, ரம்யா இந்த மூணு பேருல ஒண்ணாத்தான் இருக்கும். அதுவும் அந்த கொரலு இருக்கே... இன்பத்தேன் வந்து பாயுது காதினிலேங்குறதுக்கு அர்த்தமே நமக்கு அப்பத் தான் புரியும்.
"சார் HDFC ல உங்க அருமையான ரிட்டர்ன்ஸ்வர்ற மாதிரி ஒரு சேவிங்ஸ் ப்ளான் இருக்கு... அதப்பத்தி ஒரு ரெண்டு நிமிஷம் உங்ககிட்ட பேசலாமா சார்.... "
"நல்லாப் பழகுங்கவே... பேசுறதுல என்ன இருக்கு" ன்னு அஞ்சி நிமிஷம் அதுகிட்ட கடலை போட்டுட்டு சாரி மேடம் இப்போ என்னால invest பண்ண முடியாது.. ஒரு 6 months கழிச்சி வேணா பண்றேனே"ன்னு சொன்ன உடனே அந்தப்புள்ள மனசுல " அப்புடியேதஞ்சாவூருல ஆயிரம் ஏக்கருக்கு சொந்தக்கார வெண்ணையாரு இவரு.. ஆமா இப்பவே இவரால கிழிக்க முடியலையாம். ஆறு மாசம் கழிச்சி அறுவடை பண்ணிட்டாலும்.. " ன்னு திட்டிகிட்டே வைக்கும்..
அப்டியே எஸ் ஆயிட்டோம்னா தப்பிச்சோம்.. இல்லை அந்த கொரலுக்காக ஒரு ப்ளானப் போட்டு வைப்போம்னு வலையில விழுந்தோம் அம்புட்டுத்தேன்... ஃபார்ம்ல சைன் வாங்குற வரைக்கும் தான் அந்தப் புள்ள பேசும். வாங்குனதுக்கு அப்புறம் மலையூர் மம்புட்டியான்கள் தான் பேசுவாய்ங்க.. சார் பில்லு இன்னும் கட்டல சார்" "சார் உங்க அக்கவுண்ட்ல பேலன்ஸ் கம்மியா இருக்கு சார்" " இன்னிக்குள்ள பில்லு கட்டலன்னா உங்களுக்கு ஐநூறு ரூவா late fee போட்டுருவாங்க சார்"னு ஒரே அபாய சங்குளாத்தான் ஊதுவாய்ங்க. அப்படிப்பட்ட ஒரு மேட்டர ரொம்ப சிம்பிளா ஒரே பக்கத்துல நம்மாளு காலாய்ச்சிருக்காரு பாருங்க.. நான் HDFCல இருந்து பேசுறேன்...
அப்புறம் நம்மாளுங்க கிட்ட இருக்க இன்னொரு விஷயம் இந்த லேடீஸ் செண்டிமெண்ட். பஸ்ல பாத்தா லேடீஸ் சீட்டுன்னு தனியா இருக்கு.. ட்ரெயின்ல பாத்தா லேடீஸ் கம்பார்ட்மெண்டுன்னு தனியா இருக்கு... ஆனா நமக்கு என்ன சார் இருக்கு? நம்மல்லாம் பாவம் இல்லையா சார்... நம்ம நின்னா கால் வலிக்க்காதா சார்.. சார் லேடிஸ் வர்றாங்க வழி விடுங்க.. சார் லேடீஸ் வர்றாங்க இடம் கொடுங்க.. சார் லேடீஸ் இருக்க வீடு...கொஞ்சம் சத்தம் போடாம இருங்க அப்டி இப்டின்னு இந்த லேடீஸ் செண்டிமெண்ட்ட வச்சிக்கிட்டு நம்மாளுங்க பண்ற ரவுசுக்கு ஒரு அட்டகாசமான பதிவு லேடீஸ் வர்றாங்க கிளம்பு!!
இதுமட்டும் இல்லை நம்ம ராகுல் காந்தி இவர்கிட்ட மாட்டிக்கிட்டு என்ன பாடு படுறார் பாருங்க.. ராகுல் 'பாய்'யும் இரண்டு 'நாய்'யும்! இந்த பதிவ விட எனக்கு "ராகுல் பாயும் ரெண்டு நாயும்" ங்குற டைட்டில் தான் ரொம்ப புடிக்கும்..
இவரின் நகைச்சுவை பதிவுகளுக்கு மட்டுமில்லை.. இவரின் சிறு கதைகளுக்கும் நான் ரசிகன். இவரோட "நாய் வாத்தியார்" என்னுடைய all time favorite.
டான் அசோக்கின் பதிவுகளுக்கு பிறகு நான் அதிகம் ரசித்து வாசித்த வலைப்பதிவு "விசா பக்கங்கள்". அது என்ன "வாசித்த"ன்னு past tense ல பேசுறேனேன்னு பாக்குறீங்களா.. நா படிக்க ஆரம்பிச்ச நேரம் அவர் வலையவே இழுத்து மூடிட்டு எங்கயோ பொய்ட்டாரு. ரெண்டு வருஷமா பதிவுகளையே காணும். ஆனால் அசால்ட்டாக காமெடி பண்றதிலும், கலாய்க்கிறதிலும் இவர அடிச்சிக்க ஆளே இல்லை
ஏழாம் அறிவு படத்துக்கு இவர் எழுதியிருக்க விமர்சனத்த மட்டும் படிங்க. இவர் எப்படின்னு அது ஒரு பதிவுலையே புரிஞ்சிப்பீங்க. அந்த பதிவிலிருந்து ஒரே ஒரு சாம்பிள் மட்டும் உங்களுக்காக இப்போ
அழிச்சுக்குறதில்லையா? இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார்.
அதே மாதிரி ரவுசோடவும் வில்லத்தனத்தோடவும் அவர் "கோ" படத்துக்கு எழுதிய விமர்சனத்தப் பாருங்க கோ...போடாங்'கோ'....இந்தப்பதிவிலிருந்தும் ஒரு சாம்பிள் உங்களுக்காக
கோ' என்று படத்திற்கு ஏன் பெயர் வைத்தார்கள்? படத்தின் பெயர் 'கோ' என்றதும் படத்தில் ஹீரோவின் பெயர் கோதண்டபாணி அல்லது கோமகன் என்றும்
என்று அதிரடியாக ஒரு ஓப்பனிங் சாங் திறக்கும் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. திரைப்படத்தின் ஹீரோ எப்படிப்பட்டவர் என்றால் தன் கண் முன்னே தன் மனைவியை யாராவது பலாத்காரம் செய்தால் கூட உடனடியாக ஸ்டில் கேமராவை தேடிக்கொண்டு வந்து கட்டிலின் நாலா புறமும் சுற்றிச்சுழன்று முயல் குட்டி போல் கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து மல்லாக்க படுத்து பல ஆங்கிளில் புகைப்படம் எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் ரகம்."
அடுத்த சரவெடிப்பதிவர் கேடிபில்லா இளஞ்செழியன். ரெண்டு வருஷமாத்தான் பதிவெழுதுறார்னாலும் ஒவ்வொரு பதிவும் நெத்தியடி பதிவா எழுதி பட்டைய கிளப்புறவரு. வடிவேலு சொல்றமாதி இந்த நக்கலு, நைய்யாண்டி எடக்கு, மடக்குன்னு எல்லாமே கலந்து விட்டு பிண்ணி பெடலெடுக்குறவரு. நம்ம ஊர்ப்பக்கம் பயலுகல நாலு பேருக்கு முன்னால கேள்விகேட்டு அசிங்கப் படுத்துறதுக்குன்னே சிலபேரு திரிவாய்ங்க.. நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற மங்கூஸ் மண்டையன் மாதிரி.
அதுவும் இப்போ இருக்க ஆளுங்க ஒரு புது ட்ரெண்ட் கண்டு புடிச்சிருக்காய்ங்க.. "நாலு பேரு இருக்க இடத்துல "தம்பி ஆமா நீங்க என்ன சம்பளம் வாங்குறீங்க".. நாம ஒரு பெருமையா இருக்கட்டுமேன்னு "ஒரு fifty thousand uncle"ன்னு சொல்லுவோம். உடனே ஒரு ரியாக்சன் விடுறாய்ங்க பாருங்க... "என்னப்பா வெறும் fifty thousand தானா? என்னோட சன் Australia ல இருக்கான்.. monthly 2.5 lakhs வாங்குறான்... யாப்பா டேய்.. உன் பையன் சம்பளத்த நாலு பேருகிட்ட சொல்றதுன்னா சொல்லிட்டு போ... இதுக்கு ஏன்யா எங்க உசுற வாங்குற. அந்த மாதிரி டயலாக் சொல்றவய்ங்கள பாக்கும் போது எனக்கு தோணுறது மனதை திருடிவிட்டாய் படத்துல வடிவேலு சொல்ற டயாலாக் தான் "afterall 20 க்ரோர்ஸ் loss ma. அதுக்கு போயி சின்னப்புள்ள அழுகுற மாதிரி அழுதுகிட்டு இருக்காரு... எங்க ஃபேமிலிய பொறுத்த வரைக்கும் 20க்ரோர்ஸ்ங்குறது இந்த பேரருக்கு டிப்ஸ் குடுக்குற மாதிரி...."
இந்த மாதிரி மங்கூஸ் மண்டையர்கள் பசங்கள ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்குன் என்னென்னல்லாம்கொடுமை படுத்துறாங்கங்குறத நம்மாளு விளாவாரியா எழுதிருக்காரு.. இதப்படிச்சி சத்தியமா உங்களால சிரிக்காம இருக்க முடியாது.. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பா இருந்துருக்கும். "அன்புள்ள மங்கூஸ் மண்டையன்களுக்கு"..
சமீபத்துல facebook la ஒரு வாசகம் படிச்சேன். நம்மூர்ல மட்டும் தான் ஒருத்தன் கூட ட்ராஃபிக்ல நிக்கவும் மாட்டான். ஆனா ஒருத்தன் கூட எங்கயும் சரியான டைமுக்கும் போகமாட்டான்னு. எவ்வளவு உண்மை இது. இந்த சிக்னல் போடுறதுக்கு முன்னாடி வண்டில இருக்கவியிங்க மூஞ்ச பாக்கனுமே.. எதையோ நாலு நாளா அடக்கி வச்சிருந்து அவசரமா போற மாதிரி செகப்புலருந்து பச்சைக்கு மாறுறதுக்குள்ள காலால தள்ளிக்கிட்டே
பாதி ரோட்ட க்ராஸ் பண்ணிருவாய்ங்க. மத்தவன்லாம் எப்புடி போவான்ங்குற ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாதவங்க. சில வெளிநாடுகள்ல கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் எவனுமே இல்லைன்னா கூற சிக்னல் சிகப்புல இருந்தா நின்னு பச்சையா மாறுனப்புறம் தான் போவானுங்க. நாமலும் இருக்கோமே.. இந்த மாதிரி சில ட்ராஃபிக் அலும்புகள சுவையாக தொகுத்து செம ரகள பண்ணிருக்காரு... ஓரம்போ ட்ராஃபிக் கலாட்டா..
லவ் பண்ணும் போது நம்ம பசங்க பண்ற அலும்புகள செம ரகளையா சொல்லியிருக்க இன்னொரு பதிவு லவ் பண்ணுடா மவனே...
இன்னிக்கு இதோட முடிச்சிக்குவோம்.. மிகக் குறைந்த பதிவுகளையே இன்னிக்கு அறிமுகம் செய்திருந்தாலும் அனைத்து பதிவுகளும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்ங்குற நம்பிக்கையோட கிளம்புறேன்.

நோக்கு வர்மம். அப்படின்னா என்ன சார்? கண்ணால பாத்தே எதிரிய தன்னத்தானே அழிச்சுக்க வைக்கிறது. அதானே. தமிழ்நாட்டுல இன்னைக்கு நோக்கு வர்மம் இல்லேன்னு யாரு சொன்னா? தமிழ்நாட்டுல இருக்குற ஒவ்வொரு பொண்ணும் நோக்கு வர்மத்துல நொங்கெடுப்பாங்க. கில்லாடிங்க. நீங்களே யோச்சு பாருங்க. அவங்க சும்மா தான் பாக்குறாங்க. ஆம்புளைங்க நாங்க லவ் லவ்வுன்னு எங்கள் நாங்களே
அழிச்சுக்குறதில்லையா? இதுக்கு பேரும் நோக்கு வர்மம் தான் சார்.
அதே மாதிரி ரவுசோடவும் வில்லத்தனத்தோடவும் அவர் "கோ" படத்துக்கு எழுதிய விமர்சனத்தப் பாருங்க கோ...போடாங்'கோ'....இந்தப்பதிவிலிருந்தும் ஒரு சாம்பிள் உங்களுக்காக
கோ' என்று படத்திற்கு ஏன் பெயர் வைத்தார்கள்? படத்தின் பெயர் 'கோ' என்றதும் படத்தில் ஹீரோவின் பெயர் கோதண்டபாணி அல்லது கோமகன் என்றும்
கோ..கோ..கோ..கோ..கோதண்டபாணி
வா..வா...வா...வா...இது நம்ம பாணி
என்று அதிரடியாக ஒரு ஓப்பனிங் சாங் திறக்கும் என்று எதிர்பார்த்தேன். நல்ல வேளையாக அப்படி எதுவும் இல்லை. திரைப்படத்தின் ஹீரோ எப்படிப்பட்டவர் என்றால் தன் கண் முன்னே தன் மனைவியை யாராவது பலாத்காரம் செய்தால் கூட உடனடியாக ஸ்டில் கேமராவை தேடிக்கொண்டு வந்து கட்டிலின் நாலா புறமும் சுற்றிச்சுழன்று முயல் குட்டி போல் கட்டிலுக்கு அடியில் ஊர்ந்து மல்லாக்க படுத்து பல ஆங்கிளில் புகைப்படம் எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கிக்கொடுக்கும் ரகம்."
அடுத்த சரவெடிப்பதிவர் கேடிபில்லா இளஞ்செழியன். ரெண்டு வருஷமாத்தான் பதிவெழுதுறார்னாலும் ஒவ்வொரு பதிவும் நெத்தியடி பதிவா எழுதி பட்டைய கிளப்புறவரு. வடிவேலு சொல்றமாதி இந்த நக்கலு, நைய்யாண்டி எடக்கு, மடக்குன்னு எல்லாமே கலந்து விட்டு பிண்ணி பெடலெடுக்குறவரு. நம்ம ஊர்ப்பக்கம் பயலுகல நாலு பேருக்கு முன்னால கேள்விகேட்டு அசிங்கப் படுத்துறதுக்குன்னே சிலபேரு திரிவாய்ங்க.. நம்ம பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல வர்ற மங்கூஸ் மண்டையன் மாதிரி.
அதுவும் இப்போ இருக்க ஆளுங்க ஒரு புது ட்ரெண்ட் கண்டு புடிச்சிருக்காய்ங்க.. "நாலு பேரு இருக்க இடத்துல "தம்பி ஆமா நீங்க என்ன சம்பளம் வாங்குறீங்க".. நாம ஒரு பெருமையா இருக்கட்டுமேன்னு "ஒரு fifty thousand uncle"ன்னு சொல்லுவோம். உடனே ஒரு ரியாக்சன் விடுறாய்ங்க பாருங்க... "என்னப்பா வெறும் fifty thousand தானா? என்னோட சன் Australia ல இருக்கான்.. monthly 2.5 lakhs வாங்குறான்... யாப்பா டேய்.. உன் பையன் சம்பளத்த நாலு பேருகிட்ட சொல்றதுன்னா சொல்லிட்டு போ... இதுக்கு ஏன்யா எங்க உசுற வாங்குற. அந்த மாதிரி டயலாக் சொல்றவய்ங்கள பாக்கும் போது எனக்கு தோணுறது மனதை திருடிவிட்டாய் படத்துல வடிவேலு சொல்ற டயாலாக் தான் "afterall 20 க்ரோர்ஸ் loss ma. அதுக்கு போயி சின்னப்புள்ள அழுகுற மாதிரி அழுதுகிட்டு இருக்காரு... எங்க ஃபேமிலிய பொறுத்த வரைக்கும் 20க்ரோர்ஸ்ங்குறது இந்த பேரருக்கு டிப்ஸ் குடுக்குற மாதிரி...."
இந்த மாதிரி மங்கூஸ் மண்டையர்கள் பசங்கள ஆரம்பத்துலருந்து கடைசி வரைக்குன் என்னென்னல்லாம்கொடுமை படுத்துறாங்கங்குறத நம்மாளு விளாவாரியா எழுதிருக்காரு.. இதப்படிச்சி சத்தியமா உங்களால சிரிக்காம இருக்க முடியாது.. ஏன்னா ஒவ்வொருத்தருக்கும் இந்த அனுபவம் கண்டிப்பா இருந்துருக்கும். "அன்புள்ள மங்கூஸ் மண்டையன்களுக்கு"..
சமீபத்துல facebook la ஒரு வாசகம் படிச்சேன். நம்மூர்ல மட்டும் தான் ஒருத்தன் கூட ட்ராஃபிக்ல நிக்கவும் மாட்டான். ஆனா ஒருத்தன் கூட எங்கயும் சரியான டைமுக்கும் போகமாட்டான்னு. எவ்வளவு உண்மை இது. இந்த சிக்னல் போடுறதுக்கு முன்னாடி வண்டில இருக்கவியிங்க மூஞ்ச பாக்கனுமே.. எதையோ நாலு நாளா அடக்கி வச்சிருந்து அவசரமா போற மாதிரி செகப்புலருந்து பச்சைக்கு மாறுறதுக்குள்ள காலால தள்ளிக்கிட்டே
பாதி ரோட்ட க்ராஸ் பண்ணிருவாய்ங்க. மத்தவன்லாம் எப்புடி போவான்ங்குற ஒரு அடிப்படை அறிவுகூட இல்லாதவங்க. சில வெளிநாடுகள்ல கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் எவனுமே இல்லைன்னா கூற சிக்னல் சிகப்புல இருந்தா நின்னு பச்சையா மாறுனப்புறம் தான் போவானுங்க. நாமலும் இருக்கோமே.. இந்த மாதிரி சில ட்ராஃபிக் அலும்புகள சுவையாக தொகுத்து செம ரகள பண்ணிருக்காரு... ஓரம்போ ட்ராஃபிக் கலாட்டா..
லவ் பண்ணும் போது நம்ம பசங்க பண்ற அலும்புகள செம ரகளையா சொல்லியிருக்க இன்னொரு பதிவு லவ் பண்ணுடா மவனே...
இன்னிக்கு இதோட முடிச்சிக்குவோம்.. மிகக் குறைந்த பதிவுகளையே இன்னிக்கு அறிமுகம் செய்திருந்தாலும் அனைத்து பதிவுகளும் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்ங்குற நம்பிக்கையோட கிளம்புறேன்.
இன்றைய அறிமுகங்களாக -
ReplyDelete(கை கலப்பில்லாத!?..)
கலகலப்பான பதிவுகள்!..
என்ன இருந்தாலும் நம்ம மதுக்கூர் - இல்லையா!..
அதான் - கலப்புக்கு பஞ்சமில்லை!..
சில புதுமுகங்கள் இருக்காங்க. போய் கண்டுக்கிட்டு வரேன்.
ReplyDeleteபல புதமுகங்களை இங்க தான் கண்டறிய முடியுது நன்றி சகோ
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM
என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு மற்ற பதிவர்களை அடையாளம் காண மிகவும் உதவியாக உள்ளது
ReplyDeleteநன்றி..
வணக்கம்
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
விறுவிறுப்பான அறிமுகங்கள்..வாழ்த்துகள்.
ReplyDeleteபட்டய கிளப்பும் அறிமுகங்கள்..
ReplyDeleteகுதூகலம் நிறைந்த பதிவுகள்..
அசத்துங்க.. :)
வாழ்த்துக்கள்..
வித்தியாசமான முறையில் அறிமுகப் படுத்தியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
ReplyDeleteஇந்நாளின் அனைத்து அறிமுகப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
ReplyDelete