Wednesday, June 18, 2014

எப்படி எப்படி? அது எப்படி எப்படி?

இந்தப் பதிவ எப்புடி ஆரம்பிக்கிறதுன்னே தெரியல. எப்புடி எப்புடியோ எழுதனும்னு நெனைச்சேன் கடைசில இப்புடி வந்து மாட்டிக்கிச்சி. எப்புடி இந்தப் பிரச்சனை எனக்கு வந்துச்சின்னு  கேட்டீங்கன்னா எப்புடி பதில் சொல்றது? ஏன்னா இது எப்புடி எப்புடின்னு  வர்ற பல எப்புடிக்களப்  பத்தின பதிவு. எப்பூடி மொத பாராவே மண்டைகாயிதா.... யாருப்பா அது கல்ல எடுக்குறது.. சாந்தி சாந்தி..

நாம எல்லாருக்குமே தெரியும் கேள்வி கேக்குறது ஈஸி ஆனா பதில் சொல்றதுதான் கஷ்டம்னு? ஆனா அத்தனை கேள்விக்கும் நம்ம பதிவுலகத்துல பதில் கொட்டிக்கெடக்கு. உதாரணத்துக்கு உங்களுக்கு படம் எடுக்க ஆசை வந்துருச்சி. தமிழில் படம் எடுப்பது எப்படி? அப்புடின்னு நம்ம பாலா பக்கங்கள் பாலா அண்னன்கிட்ட கேளுங்க. உங்களுக்கு என்ன டைப் படம் எடுக்கனுமோ அத்தனைக்கும் அண்ணேன் ஐடியா வச்சிருக்காரு.

உதாரணத்துக்கு உங்களுக்கு ஒரு திகில் படம் எடுக்கனும்னு ஆசைவந்துருச்சின்னு வச்சிக்குங்க. அண்ணன்கிட்ட கேக்குறீங்க.. இப்போ பாருங்க எப்புடின்னு

"திகில் படத்தை பொறுத்தவரை ஒரே கதைதான். ஒரு பங்களா. அது நடுக்காட்டுக்குள் இருக்கிறது. யாருமே வராத அந்த இடத்துக்கு, ஒரு ஐந்து பேர் கொண்ட குழு, மூன்று ஆண்கள், இரண்டு பெண்கள்(டவுசர் மற்றும் பனியனுடன்) வந்து தங்குவார்கள். அங்கே ஏதோ ஒன்று இருக்கிறது. அப்பப்போ வந்து அனைவரையும் பயமுறுத்துகிறது. பின்னர் ஒவ்வொருவராக கொல்கிறது. ஒரே ஒருவர் மட்டும் தப்பிப்பார். பிறகு அவர் ஒரு சாமியாரிடம் செல்வார். சாமியார் உதவியுடன் பேயிடம் விசாரித்தால் அது தன் கதையை சொல்லும். அதாவது சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெண் இதே பங்களாவில் வைத்து கற்பழித்து கொலை செய்யப்பட்டிருப்பாள். அதற்கு இந்த ஐந்து பெரும் உடந்தை. பிறகென்ன, மிச்சமிருக்கும் அந்த ஒருவனையும் கொன்றுவிட்டு பேய் சாந்தி அடையும். படத்தில் பேயை விட, அதில் வரும் சாமியார், வேலைக்காரி ஆகியோர் மிக டெரராக இருக்கவேண்டும். பேயாக வருபவர் கவர்ச்சி நடிகையாக இருப்பது மிகமுக்கியம். பெரும்பாலும் படத்துக்கு வருபவர்கள் அந்த கற்பழிப்பு காட்சிக்காகத்தான் வருகிறார்கள் என்பதை நினைவில் கொள்க"

ரைட்டா.. இல்ல படம் எடுக்க உங்களுக்கு செட் ஆவல. சும்மா வீட்டுல உக்காந்து பாத்த படத்துக்கு விமர்சனம் மட்டும் எழுதனும்னு ஆசைப்பட்டா அதுக்கும் அண்ணனே வழி சொல்லுவாரு. எப்புடியா? இங்க ஒரு சேம்பிள் பாருங்க.. உதாரணமா நீங்க ஒரு ஒலகத்தர விமர்சகரா ஆக ஆசைப்படுறீங்கன்னு வச்சிக்குவோம்

"இந்த வகை விமர்சனங்கள் உங்களை பதிவர்கள் மத்தியில் அறிவு ஜீவி என்ற இமேஜை ஏற்படுத்தும். பதிவுலக கமலஹாசன், மணிரத்னம் என்ற அடைமொழிகள் கூட கிடைக்கலாம். உலகத்தர விமர்சனங்கள் எழுத உங்களுக்கு தேவையான தகுதி, நீங்கள் தமிழ் படங்களை அறவே வெறுப்பவராகவோ அல்லது வேறு மொழி படங்களை மட்டும் பார்ப்பவராகவோ இருக்க வண்டும். குறிப்பாக ஐரோப்பிய படங்களை பார்க்க வேண்டும். எனக்கு வேறு மொழி படங்கள் எல்லாம் புரியாதே? என்று நினைக்கிறீர்களா? கவலையை விடுங்கள். நீங்கள் எழுதும் விமர்சனத்தை படித்துவிட்டு, அந்த படங்களை தேடிப்பிடித்து பார்ப்பவர்கள் 1 சதவீதம் கூட கிடையாது. ஆகவே நாம் சொல்வதுதான் கதை. நாம் சொல்வதுதான் கருத்து"

அதுவும் இல்லை.. அண்ணன், தம்பி, அமெரிக்க மாப்பிள்ளை எதுவுமே வேணாம் .நா ஸ்ட்ரெய்ட்டா ஒரு புரட்சிப்பதிவரா ஃபார்ம் ஆயிடலாம்னு முடிவு பண்ணிட்டேன்னு புரட்சிப்பதிவர் ஆவது எப்படி? ன்னு கேட்டா அதயும் அண்ணனே பாத்துக்குவாரு..

இல்லைப்பா நமக்கு இந்த சினிமா, பதிவு, விமர்சனம் இதெல்லாம் செட் ஆவாதுbaa.. நா பேசாமா ஒரு நல்ல பொண்ணா பாத்து லவ் பண்ணி காதல் மன்னன் அஜித் மாதிரி ஆவனும்னு ஒரு முடிவு பண்ணீங்கன்னு வைங்க.. நேரா குடு குடுன்னு நம்ம தகவல் உலகத்துக்குப் போங்க.போய் நா காதல் மன்னன் ஆவனும்baa..  அதுக்கு இன்னாbaa பண்றதுன்னு கூச்சப்படாம கேளுங்க.

அவரு இந்த மாதிரி சில வழிகள உங்களுக்குச் சொல்லுவாரு

1) முதலில் உங்களிடம் இருக்கும் ஃபார்மல் பேண்ட்களை துக்கி எறிந்து விட்டு, சில ஜீன்ஸ்களை வாங்கி போட்டுக்கொள்ளவும். அது புதிதாக இருந்தால் அங்கங்கே கிழித்துவிட்டு Heart டிசைன் போட்டு தைத்துக்கொள்ளவும்.. 


2) அந்த ஜீன்சுக்கு கொஞ்சமும் சம்மந்தம் இல்லாதவாறு சில டி- ஷர்ட்களை வாங்கி அணிந்து கொள்ளவும் (கேவலமான கலரில் இருந்தால் இன்னும் உத்தமம்). முக்கியமான விஷயம் அந்த டி - ஷர்ட்டில் மகா மட்டமான வாசகங்கள் இருந்தால் நல்லது.

சரி மொதத் தடவ லவ் யாருக்கு செட் ஆயிருக்கு? ஆவாது. கண்ணா பின்னான்னு லவ் பண்ணதுல அங்கங்க அடிபட்டு  மூஞ்சு முகரையெல்லாம் வீங்கிப் போயிரும். அப்போ போய் நம்ம டான் அசோக் கிட்ட ஒழுங்கா லவ் பண்றது  எப்புடின்னு? ன்னு கேளுங்க. அவரும் நமக்கு கீழுள்ள மாதிரி ரெண்டு மூணு பாயிண்ட சொல்லி நமக்கு கான்ஃபிடன்ஸ ஏத்தி விடுவாரு.

1) "நம்ம முகரைக்கெல்லாம் சுமாரான ஃபிகரு தான் கிடைக்கும்"னு நமக்கு நம்மளே முடிவு பண்ணிட்டு டைரக்டா சுமாரான ஃபிகருக்கு ட்ரை பண்ணக் கூடாது. ஆக்சுவலா எல்லா பசங்களும் இப்படி நினைக்கிறதுனால செம ஃபிகரைவிட தமிழ்நாட்டுல சுமாரான ஃபிகர்களுக்குதான் போட்டி அதிகம். இது நாட்டுக்கே ரொம்ப கேடான விசயம். போட்டி அதிகம்ன்றதால ஒரு சுமாரான ஃபிகர் தன்னத்தானே செம ஃபிகர்னு நினைச்சுக்கக் கூடிய கொடூரமான உயிர்க்கொல்லி அபாயங்கள் இதுல இருக்கு! அப்புறம் அந்த கொடுமையையும் நீங்கதான் அனுபவிக்கனும்.

காதலிக்கனும்னா நம்ம முகரை ஒரளவு சுமாராவது இருக்கனும். இல்லையா நம்ம உடம்ப பழனிப்படிக்கட்டு மாதிரி பல கட்டிங்க்ஸுகள வளத்து வச்சிருக்கனும். நம்ம மூஞ்சியப்பத்தி பேசப்போனா வடிவேலு சொல்றமாதிரி " அதான் நெக்ஸ்டுங்குறேன்ல்லப்பா"ன்னு அடுத்த ஆப்சன் தான். சரி எப்புடி உடம்புல பல கட்டிங்க்ஸ் வரவைக்கிறது? அதுக்கு நம்மகிட்ட கொஞ்சம் ஐடியா இருக்கு.  நம்ம ஏரியாப் பக்கம் கொஞ்சம் வந்துட்டுப்போனீங்கன்னா ஆறே வாரங்களில் சிகப்பழகு மாதிரி ஆறே வாரங்களில் சிக்ஸ் பேக் வாங்கி மாட்டிலாம். அப்புறம் என்ன லவ்வு லவ்வு தான் கவ்வு கவ்வு தான்.

ஒரு சேம்பிள் வழி.

லீவ் நாள்ல  எந்த வேலையும் இருக்காது. அது மாதிரி சமயங்கள்ல கலோரிய செலவு பண்ண வடிவேலு பாணிய பின்பற்றலாம்.  நேரா மதுரைக்காரய்ங்க எவண்டயாவது வம்பிழுங்க. அம்புட்டு பயலும் வகுத்துலயே மிதிச்சி வயித்துல  உள்ள மொத்த கொழுப்பையும் அரைமணி நேரத்துல எடுத்து ஃபேச ப்ரஷ் ஆக்கி விட்டுருவாய்ங்க. ஒரு நாள் முழுக்க செய்ய வேண்டிய வேலைய அரைமணி நேரத்துல முடிச்சிவிட்டுருவாய்ங்க. அப்டி இல்லையா நம்ம கலகலப்பு  மண்டை கசாயம் ஸ்டைல ஃபாலோ பண்ணுங்க. கிச்சன்ல இருக்க சாமனையெல்லாம் ஒண்ணு ஒண்ணா எடுத்து ஹால்ல வைங்க. அப்புறம் ஹால்ல வைச்ச சாமானையெல்லாம் எடுத்து பெட்ரூம்ல வைங்க. திரும்ப பெட்ரூம்ல வச்ச சாமனையெல்லாம் எடுத்து கிச்சன்லயே வச்சிருங்க. மேட்டர் ஓவர்.

எல்லாமே கடுப்பாகீதுபா.. நா பேசாம ஒரு எம்.எல்.ஏவாவோ இல்லை எம்.பியாவோ ஆயி மிச்ச காலத்த ஓட்டிக்கிறேன்னு நினைக்கிறீங்க. தப்பில்லை. ஆனா நாம எலெக்ஷன்ல நின்னா நம்ம வீட்டுல உள்ளவிங்களே நமக்கு ஓட்டுப் போடமாட்டாயிங்க. வேற என்ன வழி.. கள்ள ஓட்டுத்தான். அது எப்புடிப் போடுறது? கைவசம் நிறைய ஐடியா இருக்கு. 

என்னடா இது நமக்கு அரசியலும் சரிப்பட்டு வரமாட்டேங்குதுன்னு வைங்க. ஃபேமஸ் ஆக ஒரே வழி எதிர்ப்பு வாதி ஆகுறது. எத எதிர்க்குறதா? அட எதயுமே ஆதரிக்கக் கூடாது அதான் எதிர்ப்பு வாதி ஆக மொத கண்டிஷன். அப்பதான் என்ன நடந்தாலும் சுனாப்பானா போப்போன்னு போய்க்கிட்டே இருக்கலாம். 

இல்லைன்னா இணையத்துல பேசாம தமிழ்ப் போராளி ஆயிட வேண்டியதுதான்.  அது எப்புடின்னு கீழ பாருங்க.


"நீங்கள் சோத்துக்கே வக்கில்லாமல் வீட்டில் மூதேவி என திட்டு வாங்கும் இளைஞனாய் இருந்தால் முதல் தலையாய கடமையாய் பேஸ்புக்கில் ஒரு கணக்கை தொடங்கிக்கொள்ளுங்கள் (உங்களுக்கு ஏற்கனவே ஒரு கணக்கு இருந்தாலும் பரவாயில்லை..).

வீட்டில் எவ்வளவு நல்ல பெயர் உங்களுக்கு வைத்திருந்தாலும் அதை ப்ரொபைல் பெயராக வைக்க கூடாது. உங்கள் ப்ரொபைல் பெயரை பார்க்கும் போதே அது போலி ப்ரொபைல் என்று.. சாரி.. போராளி ப்ரொபைல் என்று தெரியவேண்டும். (எ.கா) வீரத்தமிழன், சிங்கத்தமிழன், கரடிதமிழன், அழகியடமில் மகன். அல்லது உங்கள் பெயரோடு டைகர், புலி ஆகிய அடைமொழிகளை சேர்த்துக்கொள்லாம். சுரேஷ் டமில் புலி, ரமேஷ் தமிழ் டைகர், என இருந்தால் நல்ல ரீச் கிடைக்கும். கொட்டை எடுத்த புளியாக நீங்கள் இருந்தாலும் புலி என போட்டுக்கொள்ளலாம். ஏனென்றால் புலி எதுவும் முகநூலில் இல்லை! "

எப்புடியோ... இன்னிக்கு எப்புடிய வச்சே ஓட்டியாச்சி.

7 comments:

  1. மீண்டும் - கலகலப்பு..
    இன்றைய அறிமுகங்கள் - அருமை!..

    ReplyDelete
  2. Thanks a lot for your post.
    Can you please do us a help.
    Kindly make this as an image and post it.

    ** உலகநீதி **
    - உலகநாதர்

    கடவுள் வாழ்த்து

    உலக நீதி புராணத்தை உரைக்கவே
    கலைக ளாய்வரும் கரிமுகன் காப்பு

    பாடல் 01

    ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
    ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
    மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
    வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
    போகாத இடந்தனிலே போக வேண்டாம்
    போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
    வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
    மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே.

    ReplyDelete
  3. கலக்கல் அறிமுகங்கள்! நகைச்சுவையாக பகிர்ந்த விதமும் சிறப்பு!

    ReplyDelete
  4. //ஃபேமஸ் ஆக ஒரே வழி எதிர்ப்பு வாதி ஆகுறது. எத எதிர்க்குறதா? அட எதயுமே ஆதரிக்கக் கூடாது//

    அரும.. அங்க தான் நிக்குறீங்க.. :):)

    ReplyDelete
  5. முகநூல் கமடி சூப்பர் :)) அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. எப்படின்னு கேட்டே ஒரு பதிவைத் தேர்த்திட்டீங்களே, வாழ்த்துக்கள். அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete