Thursday, June 19, 2014

ஒரு ஊர்ல ஒரு பாட்டி!!!

அட என்னப்பா எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி ஒரு ஊர்ல ஒரு பாட்டின்னே கதைய ஆரம்பிக்கிறீங்க. வேற யாருமே உங்க கண்ணுக்கு தெரியாதா? உருண்ணா நாலு கெழவிங்க இருக்கத்தான் செய்யும். தென்னை மரம்னா குளவி இருக்குறதும் ஊருன்னா நாலு கெழவி இருக்குறதும் சகஜம்தானப்பா. அதுக்குன்னு எப்பப்பாத்தாலும் ஒரு ஊர்ல ஒரு பாட்டி இருந்துச்சி அது வடை சுட்டுச்சின்னுட்டு. ரொம்ப வருஷமா அந்தப்பாட்டி வடைய மட்டுமே சுட்டுகிட்டு இருக்கு. ஒரு பீட்சா, பர்க்கர், ஸ்பிரிங் ரோல்ன்னு கொஞ்சம் வித்யாசமா சுட்டாத்தானே வியாபாரம் டெவலப் ஆவும். ஆகவே யுவர் ஹானர், நா எதுக்கு இப்புடி மொக்கை போடுறேன்னா, இன்னிக்கு நாம பாக்கப்போவது சில சிறுகதைகள்.

எங்க எல்லாருக்கும் பெரியண்ணா ஒருத்தர் இருக்காரு. பேரு வினையூக்கி செல்வா. நெட்ட கண்டுபுடிக்கிறதுக்கு முன்னாலயே blog எழுதுனவரு. வலைச்சரம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாலயே நிறைய வலைய பிண்ணுனவரு. சுருக்கமா சொல்லனும்னா பதிவுலகத்துல இவரு போதிதர்மன் செட்டு. இன்னும் சுருக்கமா சொல்லப்போனா ஆதாம் ஏவாள் காலத்துலருந்தே பதிவெழுதுற the one & only வினையூக்கி செல்வா.

ஒரு பக்கக் கதை, ஒரு நிமிடக் கதை, ஒரு வருடக் கதைன்னு வகை வகையா கதைங்கள எழுதித் தள்ளிருக்காரு. கிட்டதட்ட இவர் எழுதுன சிறுகதைகள் மட்டும் ஒரு 200 ah தாண்டும். ஆனா ஒரு பக்கம் எழுதுனாலும் சரி ஒன்பது பக்கம் எழுதினாலும் சரி இவரோட கதைகங்க நமக்குள்ள பெரிய தாக்கத்த ஏற்படுத்தும். பெரும்பாலும் இவரோட சஸ்பென்ஸ், திகில் கதைகள் செமயா இருக்கும்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடி தொலைச்சிட்டு இன்னுமும் தேடிகிட்டு இருக்க அந்த மலேசியா விமானத்த மையமா வச்சி அண்ணன் எழுதிய  காணாமல் போகிற விமானங்கள் "ஒரு வேள அப்டி இருக்குமோ"ன்னு நம்மள யோசிக்க வைக்கும். தொலைந்து போன விமானங்கள்

இதுவரைக்கும் நீங்க ஹைக்கூ கவிதைன்னு ஒரிரு வரி கவிதைதான் கேள்விப்பட்டுருப்பீங்க. ஆனா ஹைக்கூ கதை கேள்விப்பட்டதில்லையே.. ரெண்டு பாராவுல ஒரு கதை..  ஒரு குட்டிக்கதை - கொஞ்சூண்டு திகில் இருக்கலாம் எங்க தலைக்கு எவ்வளவு தில்லு பாத்தியா?


நம்ம பக்கத்து வீட்டுல எதாவது சண்டை நடந்தா நாம உடம்பு நம்ம வீட்டுலயும் நம்மளோட காது பக்கத்துவீட்டு சுவத்துலயும் இருக்கும். அங்க என்ன நடக்குதுங்குறதுல தெரிஞ்சிக்க அவ்வளவு ஆர்வம். அப்படி ஒட்டுக்கேட்டு மாட்டிக்கிட்ட ஒருத்தர பத்தின திகில் கதை பக்கத்து வீட்டுப்பெண்


வினையூக்கியின் கதைகள் இதுங்க வெறும் ட்ரெயிலர் தான். ஒவ்வொன்னும் ஒவ்வொரு விதத்துல நமக்கு டெரர கெளப்பும்.

" நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான். ஆனா கெட்டவங்களுக்கு நிறைய குடுப்பான் ஆனா கைவிட்டுடுவான்" ங்குறா தத்துவத்த பேஸ் பண்ணி நம்மூர்ல சாமியார்கள் எப்படி உருவாகுறாங்கங்குற கதைய நம்ம சிவகாசிக்காரன் அவரோட ஸ்டைல்ல சொல்லிருக்காரு  புது மாப்பிள்ளைக்கு ரப்பப்பரி  குறிப்பா அதுல நம்மாளுங்க எப்படி பொண்ணு பாக்குறப்போ போடுர கண்டிஷன்ஸ செமையா சொல்லிருக்காரு.

உதாரணமா 26 வயசுல பொண்ணு தேட ஆரம்பிக்கும் போது 1. படிச்ச பொண்ணா வேணும் 2. அழகான பொண்ணா வேணும் 3. வேலையில இருக்க பொண்ணா வேணும் 4. பணக்கார பொண்ணா வேணும் அப்புறம் கொஞ்ச நாள்ல 1.படிச்சிருந்தா போதும். 2 அப்டியே அழகாவும் இருக்கனும். வேலைக்கு போனா போகலாம். மனுசனுக்கு காசா முக்கியம். பணக்காரரா இருக்கனும்னு அவசியம் இல்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க. அப்புறம் கொஞ்ச நாள்ல அழகுங்குறது மனசுல தான் இருக்கு முகத்துல இல்லை. அதனால படிச்சிட்டு வேலைக்கு போற பொண்ணா இருந்தா பரவால்லைன்னு கொஞ்சம் இறங்குவாங்க இன்னும் கொஞ்ச நாள்ல  வேலை என்னப்பா வேலை.., குடும்பப்பொண்ணுங்க வேலைக்கு போனா நல்லாவா இருக்கும். பொண்ணு ஒரு பத்தாப்பு படிச்சிருந்தா  போதும்னு டன்னுலருந்து கிலோவுக்கு கொறைச்சிப்பாங்க. அதுக்கும் அப்புறம் வெறும் பொண்ணு மாதிரி இருந்தாப் போதும்பாங்குற நிலமை ஆயிடும்.
 

சாமி சத்தியமா நா ரவுடிய்யான்னு கெஞ்சி கதறுத நாம பாத்துருக்கோம். ஆனா சாமி சத்தியமா நா செத்துட்டேன்யான்னு ஒரு ஒருத்தன் கதறுத கேள்விப்பட்டுருக்கோமா... இங்கப் பாருங்க.. யோவ் என்ன ஒருத்தன் கொன்னுட்டான்யா.. நா செத்துட்டேன்... தயவு செஞ்சி ஒரு கேஸ் எழுதுன்னு ஒருத்தர் வந்து போலீஸ் ஸ்டேஷன்ல கதறுறாரு...  ஒரு தமாஷான பேய்க்கதை


பேய் இருக்கா இல்லையா... நம்பலாமா நம்பக்கூடாதாங்குற சந்தேகம் நம்ம பலபேருக்குள்ள இருக்கு. என்னதான் பேய் பிசாசெல்லாம் இல்லைன்னு அடிச்சி பேசுனாலும் நடு ராத்திரில உச்சா வரும்போது தான் அடிவயித்துல ஒரு பீதி நமக்கு கிளம்பும்.  என்னதான் சயிண்டிஃபிக்கா பல காரணங்கள எடுத்து வச்சாலும் பல சம்பவங்கள் இன்னும் விளக்கப்படாம தான் இருக்கு. அப்படி ஒரு உண்மையான பேய்க்கதை உங்களுக்காக.

அதுவும் நம்ம நடுராத்திர பஸ்லருந்து இறங்கி நம்ம வீட்டுக்கு போகும்போது இருக்க பயம் இருக்கே... பஸ்ஸ்டாப்புல இறங்கி நம்ம வீட்டுக்கு போற வழியில வீடு எதுவும் இல்லைன்னா டர்ர்ர்ரு தான். வடிவேலு மாதிரி வழில பாக்குறவிங்கள "அண்ணேன்... கா காலெங்கண்ணே"ன்னு கேட்டுட்டு ஓட வேண்டியதுதான். அப்படிப்பட்ட இன்னொரு உண்மைப் பேய்க்கதை

இருக்கா இல்லையாங்குற கன்பீசன வரவைக்கிற  ஒரு மாதிரியான பேய்க்கதை.


என்னப்பா ஒரே பேய்க்கதையா ஓடிக்கிட்டு இருக்கு. பேய்க்கதைங்கன்னா எனக்கு சின்ன வயசுலருந்தே அலர்ஜின்னு சொல்றவங்களுக்காக இன்னொரு ஜாலியான ஒரு சின்ன டச்சிங்கான கதை. வாழ்க்கைங்குறது வெறும் காசு, பணம், துட்டு ,மணி மணி மட்டும் இல்லை அதுக்கும் மேல உறவுகளுக்குத் தான் முக்கியத்துவம் தரணும்ங்குறது உணர்த்துற மாதிரி ஒரு நெகிழ வைக்கும் கதை

இல்லை.. நேக்கு அந்த மாதிரியெல்லாம் இல்லை... நீங்க தப்பா புரிஞ்சுண்டேல் நா இந்த மாதிரி சின்ன சின்ன கதையெல்லாம் படிக்க  மாட்டேன். பெரிய பெரிய நாவலாத்தான் படிப்பேன்னீங்கன்னா நம்ம தேவிகுமாரோட  The Celestial Hunt படிங்க. சூப்பரான சயின்ஸ் ஃபிக்சன் கதை.

ஓக்கே... நாளைக்கு வேற ஒரு செட்டப்போட உங்களை சந்திக்கிறேன்.  ஹலோ... பதிவுங்களச் சொன்னேன்...



10 comments:

  1. இன்றைக்கு என்ன -
    பாட்டி, அழகான பக்கத்து வீட்டுப் பொண்ணு அது இதுன்னுட்டு - பேய்க்கதை (என்னா.. ஒரு லிங்க்!)
    அதுக்கப்புறம் மனசை நெகிழ வைக்கிற கதை!?..
    எதுக்கும் பெரமையா கோயில்ல மந்திரித்து விபூதி பூசிக் கொள்ளவும்..

    ReplyDelete
  2. ஏற்கனவே பூசிட்டேன் :-)

    ReplyDelete
  3. படமே ரொம்ப சூப்பர். விதவிதமான கதைகளை அறிமுகப் படுத்தியிருக்கீங்க. எல்லாத்தையும் போய் பார்த்துட்டு வரேன்

    ReplyDelete
  4. வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளாச்சி... இந்தவாரம் நீங்கதான் வலைச்சர ஆசிரியர் என்று தெரிந்தவுடன் ஓடோடி வந்தேன்.. வழக்கமான உங்கள் நகைச்சுவை எழுத்துநடை இதிலும் மிளிர்கிறது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. அருமை.. வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  6. அருமையான அறிமுகங்கள்! சென்று பார்க்கிறேன்! நன்றி!

    ReplyDelete
  7. கதைகளின் அறிமுகம் வெகுசிறப்பு...

    நிச்சயமாக வாசிக்கிறேன்..

    ReplyDelete
  8. சிறந்த அறிமுகங்கள்!

    ReplyDelete