அறிமுகப் பதிவர்கள் வலைப்பக்கத்திற்கு வேண்டுமானால் புதியவர்களாக இருக்கலாம். ஆனால் இவர்கள் ஏற்கனவே தமிழ்க்கரம் பிடித்து நடை பழகி இன்று வேகமாக ஓடக்கூடியவர்கள் இவர்களின் ஓட்டத்திற்கு என்னால் ஈடுகொடுத்து ஓடமுடியவில்லை என்ற ஏக்கம் கூட எனக்கு உண்டு. இவர்களின் புதிய தடத்தால் வலைப்பக்க வசந்த காலங்கள் தொடரும்..
திரு.மகாசுந்தர் அவர்கள் 2012 ஆம் ஆண்டே வலைப்பக்கம் ஆரம்பித்திருந்தாலும் புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கத்திற்கு பிறகு தளத்தை வளப்படுத்தி கொண்டு எழுத தொடங்கியுள்ளார். அவரின் எழுத்துப் புலமைக்கும் ஆராய்ச்சி நோக்கிற்கும் சான்றாக அமைந்த இந்த கட்டுரை அறிமுகம் செய்வதில் அளவில்லா மகிழ்ச்சி.
உடைந்த சிலம்பும் உடையாத சிலம்புகளும்..
ஈழத்தில் நடந்த கொடுமைகளைச் சாடும், விடியலுக்கான எதிர்பார்ப்பும் கொண்ட சிறப்பான கவிதையை தந்திருக்கும் நண்பர், கருத்துரையில் கூட இவரின் எழுத்துச் செறிவினைக் காணமுடியும். இவர் யார் என்ற ஆவல் ஏற்பட்டிருக்கிறது தானே நண்பர்களே! இதோ அவரது கவிதை
தமிழ் வருவாள்!
முனைவர் பேராசிரியர் பா.மதிவானன் அவர்கள் இனிது இனிது வலைப்பக்கம் தொடங்கி வலைப்பக்கத்தில் எழுதவும் தொடங்கியுள்ளார். பலரை ஆய்வாளர்களாக மாற்றியுள்ள ஐயா அவர்களின் ஆராய்ச்சி நோக்கிற்கு இந்த பதிவே சான்று
அம்சொல் நுண் தேர்ச்சிப் புலமை நடை
எல்லாமே டூப்பு எனும் பெயரில் வலைப்பக்கம் தொடங்கி இருக்கும் திரு.ஸ்டாலின் சரவணன் எச்சில் எனும் தலைப்பில் வாழ்வின் அனுபவங்களை எதார்த்தமாக சொல்லியிருக்கும் கவிதை
எச்சில்
தலைமையாசிரியர் திருமதி. மாலதி அவர்கள் அவரது பெயரிலேயே வலைப்பக்கம் தொடங்கி தனது எண்ணங்களை எழுத்துகளாக்கி தந்து கொண்டிருக்கிறார். உயிர் எழுத்துகளில் ஓரெழுத்துகளை பட்டியலிட்டு பதிவாக தந்திருக்கிறார் உயிரின் ”“ஓர்”“ எழுத்து
சமூகத்தில் திருமணங்கள் என்ற பெயரில் நடக்கும் ஆடம்பர செலவுகள், அப்படிப்பட்ட செலவுகளை தன் செல்வாக்கை நிலைநாட்ட சம்பந்தப்பட்டவர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிவிக்கும் செல்வி. ரேவதி அவர்களின் பதிவு
இது அவசியமா?
லட்சிய வெறி கொண்டவராக நீங்கள் உங்கள் லட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதை உதவி தொடக்கக் கல்வி அலுவலர் திருமதி.ஜெயலெட்சுமி அவர்கள் ஒரு கவிதைப் பகிர்வின் மூலம் சொல்கிறார். லட்சிய வார்த்தைகள் கூறியவர் பிரிவையும் தாங்கிய பதிவு.
தூங்காமல் இருக்கச்சொன்னவர் ...தூங்கிப்போன நாள்....
தமிழின் நிலை கண்டு ஒரு கல்லூரி மாணவனின் மனக்குமுறல்கள் தமிழ் இனி மெல்ல சாகும் எனும் தலைப்பில் தனக்கான ஆதங்கத்தைச் சொல்லியிருக்கும் பதிவு. புதுகை சீலன் வலைப்பக்கத்திலிருந்து
தமிழ் மெல்ல இனி சாகும்......
குறிப்பு
நான் குறிப்பிட்ட அறிமுகப்பதிவர்களின் பதிவுகள் குறைவு தான் ஆனாலும் அவர்களின் எழுத்துகள் செறிவும் செழுமையும் கொண்டது. ஆனாலும் ஒரு சிலருக்கு எனது வேண்டுகோள் தொடர்ந்து எழுதுங்கள் தங்கள் எண்ணங்கள் எழுத்துகளாக இணையவானில் வலம் வரட்டும். நன்றி.
பல பழைய பதிவர்களையும், சில புதிய பதிவர்களையும் அவர்களுடைய எழுத்துக்களையும் வாய்ப்பினைப் பெற்றேன். தொடர்ந்து வருகிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் அன்பான நன்றிகள் ஐயா
Deleteஇன்று இடம் பெற்ற பதிவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் அம்மா
Deleteவாழ்த்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள்
அத்தனை பதிவர்களும் எனக்கு அறிமுகமில்லாதவர்களே...
ReplyDeleteஇன்றைய உங்கள் அறிமுகத்தால் அவர்களைக் கண்டு கொண்டேன்!
அருமை! மிக்க நன்றி!
அறிமுகப் பதிவர்கள் யாவருக்கும் உங்களுக்கும் இனிய நன்றி சகோ!
புதிய தடங்களைப் பதித்து இருக்கும் நண்பர்களை அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி. நன்றி சகோதரி
Deleteஅனைத்தும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வலைச்சித்தருக்கு இந்த சகோதரனின் அன்பான வணக்கங்கள். கருத்துக்கு நன்றி..
Deleteஅருமையான அறிமுகங்கள்....
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோதரரே...
வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே
Deleteஅறிமுகம் என்பதே பலர் அறிய வாய்ப்பில்லாத நல்ல தளங்களை அடையாளம் காட்டுவது தானே சிறப்பான தொடக்கம். தொடரட்டும் உங்கள் புதிய அறிமுகங்கள். “சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்” அல்லவா? நீங்கள் தூண்டுங்கள்.
ReplyDeleteகண்டிப்பாக உங்களைப் போல்வர் தூண்டுவதினால் நான் எழுதிக் கொண்டிருக்கிறேன் அல்லவா! அது போல நாம் அவர்களைத் தூண்டுவோம் தொடர்ந்து...
Deleteஇதுவரை அறியாதவை தான் இத்தளங்களை சென்று பார்வை இட வேண்டும். வருகிறேன் பாண்டியா . புதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்....! தங்களுக்கும் என் மனம் கனிந்த வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பும் ஊக்கமும் தான் எனக்கு தூண்டுகோல் இது தொடரட்டும். நன்றி..
சில தளங்கள் அறியாதவை. சென்று பார்க்கிறேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteசகோவின் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்களின் ஒத்துழைப்புக்கு நன்றிகள்..
Deleteஅறிமுகம் செய்யப்பட்டுள்ள அன்பின் பதிவர்கள்அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களைப் போன்ற நல்லவர்கள் நட்பு கிடைக்க உதவிய வலைப்பக்கத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம், நன்றி..
ஆஹா!! எல்லாம் நம்ம சனங்க! அதிலும் அம்மா, அண்ணா, தோழி, சகோ !!
ReplyDeleteரொம்ப நன்றி சகோ!
வாங்க அக்கா! எப்படி நம்ம சனங்க எல்லாம் ஒரு இடத்துல கொண்டு வந்துட்டோம்ல. வருகைக்கு மிக்க நன்றிகள் அக்கா..
Deleteஅன்பின் பாண்டியன் - பதிவு நன்று - அறிமுகம் செய்யப்பட்ட பதிவுகள் அனைத்துமே படிக்க வேண்டிய பயனுள்ள பதிவுகள்தான் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteவெளி நாட்டில் இருந்து கொண்டு எனக்கு மின்னஞ்சல் செய்தும் அலைபேசியில் அழைத்தும் பேசியமைக்கு மிக்க நன்றிகள் ஐயா. தங்களின் சுறுசுறுப்பு நாங்கலெல்லாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம்.. கருத்துக்கு நன்றிகள் ஐயா..
Deleteஅன்பின் பாண்டியன் - வலைச்சரத்தில் இடப்படும் பதிவுகள் அனைத்துமே லேபிள் இடப்பட வேண்டிய பதிவுகள் - இப்ப்திவிற்கு லேபிள் இடுக. வலைச்சர விதி முறைகளைப் படித்துப் பார்க்கவும்.
ReplyDeleteதங்கள் பதிவுகள் உதாரணமாக "அ.பாண்டியன் " என்றோ அல்லது தங்கள் வலைப்பூ பெயரிலோ அல்லது தங்களுக்குப் பிடித்த முறையிலோ லேபிள் இடப்பட வேண்டும். யாரேனும் இந்த லேபிளைச் சொடுக்கினால் தங்களின் இடுகைகள் வரவேண்டும். அதற்காகத்தான்.
நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
வணக்கம் ஐயா
Deleteலேபிள் இட்டு விட்டேன். தகுந்த நேரத்தில் கவனத்தில் கொண்டு வந்தமைக்கு என் அன்பு நன்றிகள்..
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் சகோ! தங்களின் வருகையும் வாழ்த்தும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி..
Deleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்..
அனைத்தும் அருமையான தளங்கள் எங்களுக்கும் புதியவைதான் தங்கள் பகிர்வுக்கு, அறிமுகத்திற்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் ஐயா. தொடர்வோம்..
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோதரர். தொடர்வோம்..
Delete