வணக்கம் நண்பர்களே! எனது திருமண வேலையின் காரணமாக வலைப்பக்கம் வருவது தாமதமாகி விடுகிறது. தாமதத்திற்கு முதலில் மன்னிக்கவும்..
என்ன்ன்ங்க நான் என்ன சொல்ல வருகிறேனு புரியல தானே!! இதோ நான் அறிமுகம் செய்யும் பதிவுகளை நீங்கள் படிக்கும் போது உங்களுக்கே புரியும்.
பதிவர்கள் மூத்தவர். நமக்கெல்லாம் தமிழ்த் தாத்தா. 70 வயதையும் கடந்த இளைஞர். பாடும் ஆற்றலையும் பாட்டுக்கு மெட்டு அமைக்கும் திறமையும் கொண்ட ஐயா சூரி சுப்பிரமணியம் சிவா ஆமாங்க நாம சுப்பு தாத்தா எழுதின ஒரு பதிவுல பதிவுலக நண்பர்களின் பதிவுகளையெல்லாம் குறிப்பிட்டு அழகான நகைச்சுவை ததும்ப பதிந்துள்ளார். நீங்களும் கொஞ்சம் படிங்களேன்
வெற்றி வேண்டுமா போட்டு பாரடா எதிர் நீச்சல் !!
இவரைப் போலவே வயதில் மூத்தவராக இருந்தாலும் கருத்துகளின் என்றும் இளைமையாகத் திகழும் இன்னொரு மதிப்பிற்குரிய ஐயா ஜி.எம்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கம்பராமாயணம் ஆறு காதைகளையும் ஒரு கவிதையில் சொல்லி முடித்தவர். அப்படிப்பட்ட அவரிடமிருந்து வந்துள்ள ஒரு படைப்பு படித்து ரசித்தேன். நீங்கள் ரசிக்க
எனக்கொரு GIRL FRIEND வேண்டாம்....!
வலைச்சர நிர்வாகி சீனா ஐயா அவர்கள் பற்றி அனைவரும் நன்கறிவீர்கள். ஆனால் அவரின் முதல் கணினி அனுபவம் பற்றி அறிந்திருக்கிறீர்களா?அவரே தனது முதல் கணினி அனுபவம் பற்றி எழுதி அசை போடுகிறார் நீங்களும் படித்து அசை போடுங்களேன்
எனது முதல் கணினி அனுபவம் -
நல்லவர்கள் அதிகாரிகளாய் அமைவது மிகவும் அரிது. அவர் கல்வியாளராக புதுமைச் சிந்தனையாளராக அமைவது அதை விட அரிது. அதிலும் பணி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மண்ணில் புதைந்த போன வரலாற்று பொக்கிசங்களை உலகிற்கு அறிமுகம் செய்யும் அதிகாரி கிடைப்பது அதனினும் அரிது. அவர் தான் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் திரு. அருள்முருகன் ஐயா அவர்கள். அவர் மண்ணில் புதைந்து கிடைந்த மைல்கள் துணைக் கொண்டு கண்டறிந்த ராசராசன் பயணம் செய்த பெருவழியை நமக்கெல்லாம் அறிமுகம் செய்யும் அழகான பதிவு
நட்ட கல்லும் பேசுமே…
சிறந்த சிந்தனையாளர்,கல்வியாளர், பட்டிமன்ற பேச்சாளர், தமிழாசிரியர், ஆறாம் திணையாகிய கணினித்தமிழை அனைவருக்கும் வழங்கிடும் பொருட்டு பயிற்சிப் பட்டறைகளை முன்னின்று நடத்துபவர், வளம்மிக்க நாளைய உலகம் இளைஞர்கள் கையில் இருக்கிறது என்பதை நன்குணர்ந்து அவர்களுக்கு தோள்கொடுக்கும் தோழர். அவர் தான் கவிஞர் திரு. நா.முத்துநிலவன் அவர்கள் வளரும் கவிதை எனும் தனது தளத்தில் மகளுக்கு எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்கும்
முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!
தொடர்ந்து தனது பதிவுகளில் காஞ்சி பெரியவரின் அற்புதங்களைக் கூறி வருபவரும் சிறுகதைப் போட்டி நடத்தி வலையுலக சிறுகதை தந்தையாக திகழுபவருமான திரு. வை.கோ ஐயா அவர்கள் எழுதிய சாத்திரம் சொல்லும் ஸ்நான வகைகள் - ஐந்து.
ஸ்நான வகைகள் - ஐந்து.
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நான்மாடக்கூடலாம் மதுரையில் வீற்றிருக்கும் ஒரு சிந்தனையாளர். மாற்றி யோசிப்பதில் கெட்டிக்காரர். கவிதை, கட்டுரைப் போட்டிகளுக்கு தன் முழு ஆதரவையும் தந்து முன்னின்று நடத்திக் கொடுத்து மகிழ்பவர் ரமணி ஐயா அவர்கள் எழுதிய ஒரு படைப்பு நமக்கெல்லாம் வழிகாட்டல்
தினம் நன்மை தடையின்றித் தொடர
பல புத்தகங்கள் படைத்து தன் எண்ணங்களுக்கு தட்டச்சால் உயிர்கொடுத்து வலைப்பக்கத்தில் உலாவ விடும் கவிஞர் இவர். அடிக்கடி விமானம் மூலம் வெளிநாடு என்று பறந்தாலும் கூடவே மடிக்கணினியுடன் பயணம் செய்து தமிழ்க்காற்றைச் சுவாசிக்கத் தயங்குவதில்லை அவர் கவிஞர் இராய செல்லப்பா அவர்கள் தான். அவரின் நல்ல எண்ணங்களை அறிந்து கொள்ள உதவும் ஒரு படைப்பு
பத்து கேள்விகள் - பத்துக்கும் பதில்கள்
பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்டது தான் நம் வாழ்க்கை. இதற்கிடையில் நாம் வாழ எடுக்கும் சிரத்தைகள் எத்தனை எத்தனை? இது பற்றிய புலவர் திரு.சா.ராமாநுசம் அவர்கள் எழுதிய கவிதை அனைவருக்கும் வாழ்க்கைப் பாடம்
பிறப்பு வாழ்வில் ஒரு முறை தான் மேலும் இறப்பு வாழ்வில் ஒரு முறை தான்
பௌத்த சுவட்டைத் தேடித் தேடி தன் வாழ்நாளின் மணித்துளிகளை எல்லாம் செலவிட்டு அறிய கண்டுபிடிப்புகளை அரசாங்கத்திற்கு அறிமுகம் செய்து வருபவருமான, தான் படித்த நூல்களை நம்மோடு அன்போடு பகிர்ந்து கொள்பவருமான முனைவர் பா.ஜம்புலிங்கள் அவர்கள் எழுதிய வரலாற்று கண்டுபிடிப்புகளில் செதுக்க வேண்டிய ஒரு பதிவு
பௌத்த சுவட்டைத் தேடி : பெரண்டாக்கோட்டை
இப்படிப்பட்ட தமிழறிஞர்களை இந்த சிறியவன் அறிமுகம் செய்தது மட்டற்ற மகிழ்ச்சியளிக்கிறது. மேலும் இவர்களை நான் அறிமுகம் செய்து தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா! என்று நீங்கள் கூறும் வாசகம் என் செவிகளையும் எட்டுகிறது.
மீண்டும் வேறொரு பதிவில் சந்திப்போம். பணிச்சுமையே என் முன் வந்து பயமுறுத்துகிறது. இருப்பினும் விடுவதாக இல்லை. தொடர்ந்து சந்திப்போம். நன்றி
சூரியனுக்கு டார்ச் லைட் தேவையா!
மலர்களுக்கு வாசனை திரவியம் தெளிக்க வேண்டுமா!
கார்முகிலுக்கு கருவண்ணம் பூசிப் பார்ப்போமா!!
நிலவுக்கு ஒப்பனைகள் செய்வோமா!!
மழைத்துளியை குளிப்பாட்டிப் பார்ப்போமா!
கம்பனுக்கு தமிழ்க் கற்று கொடுப்போமா!

பல நல்ல வலைப்பூக்களை நேரம் இடம் கொடாததால் நாமாகவே தேடிப் படிக்கக் கிடைப்பதில்லை. இப்படி யாராவது தேடிக் கொடுப்பது அவசியமாகத்தான் இருக்கிறது.
ReplyDeleteஇந்த இடுகை மூலம் சிலர் புதிதாக எனக்கு அறிமுகமாகி இருக்கின்றனர். நன்றி பாண்டியன்.
மிக்க நன்றிகள் சகோதரி
Deleteவெகு சிறப்பான வலைபதிவுகளை அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...நன்றிகள் பல சகோதரரே..
ReplyDeleteமிக்க நன்றி சகோதரரே
Deleteபுதிய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! பணி சிறக்க வாழ்த்துக்கள் பாண்டியா !
ReplyDeleteமிக்க நன்றி சகோதரி. எல்லாம் உங்கள் ஊக்கத்தால் சாத்தியமாகிறது.
Deleteசிறந்த பதிவர்களுடன் என்னையும்
ReplyDeleteஒருவனாய் இணைத்து அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு மிக்க நன்றிகள் ஐயா. நேரமின்மை காரணமாக மிக சுருக்கமான அறிமுகத்தைத் தான் தர முடிந்தது. மன்னிக்கவும் ஐயா..
Deleteஅறிந்த, அறிந்திராத பதிவர்கள் இன்று இங்கு.
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நல்ல பகிர்வினுக்கு உங்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோ!
அன்பின் சகோதரி தந்த உற்சாகங்கள் நிறைய. நீங்கள் தான் என்னை முதலில் தங்கள் பக்கத்தில் அறிமுகம் செய்தீர்கள். அதை என்றும் மறவேன் சகோதரி. கருத்துக்கு மிக்க நன்றி..
Deleteபதிவுலக ரத்தினங்களை இன்று அறிமுகப்படுத்தி இருக்கீங்க பாண்டியன்ன். நன்றி!! வாழ்த்துகள்.
ReplyDeleteஆம் சகோதரி ரத்தினங்களுக்கு அறிமுகம் தேவையில்லை என்றாலும் என் கடமையும் இருக்கிறதல்லவா! தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிகள்..
Deleteஅனைத்தும் சிறந்த தளங்கள்...
ReplyDeleteசிறந்த பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
வலைச்சித்தருக்கு தெரியாத தளங்கள் என்று இருக்க முடியுமா! மிக்க நன்றி சகோதரர்..
Deleteதிருமண வேலைகளுக்கிடையிலும், இவ்வளவு சிறப்பாக அறிமுகம் செய்வீர்கள் என்று நினைக்கவில்லை பாண்டியன். உங்களைப் போலும் இளைஞர்கள் நல்லவற்றைக் கற்று, கற்பிக்க வயது தடையில்லையென்று முன்வந்தால் நம் உலகம் நாலுகால் பாய்ச்சலில் முன்னேறுவது உறுதி..தனிப்பட்ட நன்றியும், பொதுப்பட்ட வாழ்த்துகளும் தொடருங்கள். நானும் தொடர்கிறேன்.வாய்ப்பளித்த வலைச்சர நண்பர்களுக்கும் பணி தொடர வாழ்த்துகள் வணக்கம்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களைப் போன்ற அறிஞர்களை அறிமுகம் செய்யும் வாய்ப்பினை வழங்கிய வலைச்சர நண்பர்களுக்கு எனது நன்றிகளும். நேரமின்மையால் சுருக்கமான அறிமுகம் ஐயா. பிழை இருந்தால் பொருத்தருள்க. நன்றீங்க ஐயா..
மூன்று பதிவர்களைத் தவிர மற்றவர்கள் புதியவர்கள்..... படித்து தொடர்கிறேன் அவர்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்கு நன்றிகள்
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள்
மிகவும் சிறப்பான பகிர்வர்களாய் அறிமுகம் செய்திருக்கிறீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்.
வணக்கம் சகோ. வெகுநாளாக தங்களைக் காணவில்லை என்ற நினைப்பு எனக்கு இருந்தது. இன்று கண்டதில் மிக்க மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி சகோதரர்..
Deleteஅனைத்து தளங்களும் அருமை..
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்டுள்ள
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
வணக்கம் ஐயா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
//தொடர்ந்து தனது பதிவுகளில் காஞ்சி பெரியவரின் அற்புதங்களைக் கூறி வருபவரும் சிறுகதைப் போட்டி நடத்தி வலையுலக சிறுகதை தந்தையாக திகழுபவருமான திரு. வை.கோ ஐயா அவர்கள் எழுதிய சாத்திரம் சொல்லும் ஸ்நான வகைகள் - ஐந்து.//
ReplyDeleteவணக்கம். என் வலைத்தளத்தினை இன்றைய வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி சிறப்பித்துள்ளதற்கு, இந்த வார வலைச்சர ஆசிரியர் அவர்களுக்கு என் நன்றிகள்.
இந்தத்தகவலை என் கவனத்திற்குக் கொண்டுவந்து உதவிய திண்டுக்கல் திரு. தனபாலன் அவர்களுக்கும் என் நன்றிகள்.
என் சமீபத்திய பதிவினில் பின்னூட்டம் மூலம் இந்தத்தகவலை என் கவனத்திற்குக் கொண்டுவந்து வாழ்த்தியுள்ள கொங்கு நாட்டுக் கோவைத் தங்கம் திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும் என் நன்றிகள். - vgk
வணக்கம் ஐயா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
அண்மையில் திருமணம் செய்தவரா செய்யப் போகிறவரா , தெரியவில்லையே ரசித்த பதிவு. பதிவிலேயே பின்னூட்டத்தில் எழுதி இருக்கிறேன். இது முதிர்ச்சி இல்லாமல் காதலிப்பவருக்கு . எல்லா நலமும் பெற்று காதல் மனையாளுடன் இன்ப வாழ்வு மலர வேண்டுகிறேன் . வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். எனக்கு ஜீலை 9 திருமணம் ஐயா. இனிமேல் தான் நடக்கவுள்ளது. அதற்கான பணி தான் நடந்து கொண்டிருக்கிறது.
வணக்கம்
ReplyDeleteசகோதரன்
இன்றைய பதிவில் மூத்த பதிவர்கள் பற்றிய அறிமுகம் சிறப்பாக உள்ளது அனைவருக்கும் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோ
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.
பதிவுலக, வயதானாலும், இளமையுடன் (எல்லொருமே ஸ்வீட் 16 போலத்தான் பேசுகின்றார்கள்!! எழுதவும் செய்கின்றார்கள்!!!) மிளிர்ந்து ஜொலிக்கும், கொடிகட்டி பறக்கும் இளைய வாலிபர்களை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு - ஜாம்பவான்களுக்குஅறிமுகம் தேவை இல்லைதான்!!!!!!! என்றாலும் ....மிக்க நன்றி ! எல்லோருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
அருமையான சிறந்த பதிவர்கள். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிருமண வேலைகளுக்கு இடையில் அருமையான தளங்களைப் படித்து அவைகளை வலைச்சரத்தில் தொடுத்து இருப்பதற்கு நன்றி.
வாழ்த்துக்கள்.
வணக்கம் அம்மா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
நரி முகத்தில் முழித்தேனோ இன்று
ReplyDeleteஅறி முகம் கிடைத்திருக்கிறதே !!
பரியினில் பறந்து சென்று
பரிசல் அதைப் பெற்று மகிழ்வோம்.
பலே பாண்டியா !!
சூரியனை டார்ச் அடித்துப் பார்த்தீரா !!
அதை சற்று எமக்குத் தாரும்.
நேற்று முதல் வீட்டில் கரண்ட் இல்லை.
சுப்பு தாத்தா.
www.subbuthatha.blogspot.com
www.vazhvuneri.blogspot.com
வணக்கம் ஐயா
Deleteதங்களின் நட்பு கிடைக்க நாங்கள் தான் நரி முகத்தில் விழித்திருக்க வேண்டும். மிக்க நன்றீங்க ஐயா.
கலைஞர்கள் வயதில் முதிர்ச்சியடைய அடைய
ReplyDeleteஅவர்களைன் கலை இளமையாகிறது..
சிறப்பான அறிமுகங்கள்.. அனைவருக்கும் பாராட்டுக்கள்.
வணக்கம் அம்மா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
எமக்கு, நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்திய... உமக்கு நன்றிகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
அருமையான பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றிகள் பல.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்
சகோ இவ்ளோ பிசியான நேரத்தில் பதிவிடுவதே கிரேட் :)
ReplyDeleteஇதில் இவ்ளோ தெளிவா வேற இருக்கே பதிவு! (தம்பிக்கு சுத்திபோடுங்கம்மா) நீங்க அறிமுகம் செய்த பெரியோர்க்கெல்லாம் என் வணக்கங்கள்!
வணக்கம் சகோதரி
Deleteபணிச்சுமை தான். இருந்தாலும் இது நமக்கு சவால் இல்லையா? அக்கா தான் சுத்திப்போட வேண்டும். அன்பான கருத்துரைக்கு நன்றிகள் அக்கா.
நல்ல அறிஞர் பெருமக்களில் பதிவுகளை அறிமுகப் படுத்தியதற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் அன்பான வருகைக்கு வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். அறிமுகங்கள் தொடரும்..
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா.
Deleteதங்களைப் போன்ற நண்பர்கள் எனது ஆய்வைப் பற்றிப் பகிர்ந்துகொள்ளும்போது 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆய்வின்போது பெற்ற சிரமங்கள் மறைந்துவிடுவதை உணரமுடிகிறது. தாங்கள் எனது ஆய்வைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் பகிர்ந்தமைக்கு நன்றி. இது நான் மென்மேலும் எழுத ஊக்குவிக்கும். தாங்களும் தங்கள் எழுத்தில் பரிணமிக்க இவ்வேளையில் மனம் நிறைந்த வாழ்த்துக்கள். ஜம்புலிங்கம்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.cin
www.ponnibuddha.blogspot.in
வணக்கம் ஐயா
Deleteதங்களைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது. என் பணிச்சுமை தான் அனுமதிக்கவில்லை. தங்களின் நட்புக்கும் வருகைக்கும் தங்களின் ஆழமான ஆராய்ச்சியும் கண்டு மட்டற்ற மகிழ்ச்சி ஐயா.
மூத்த பதிவர்களின் அறிமுகம் அருமை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோ...தொடர்வோம்..
Delete"//மேலும் இவர்களை நான் அறிமுகம் செய்து தான் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா! என்று நீங்கள் கூறும் வாசகம் என் செவிகளையும் எட்டுகிறது.//"
ReplyDeleteஅப்படியில்லை சகோ, இப்படி அறிமுகம் செய்வது, பெரியவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதையாகும், மேலும் என்னை மாதிரி புதிதாக எழுத ஆரம்பித்திருப்பவர்களுக்கு, இவர்கள் எல்லோரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்த அறிமுகங்கள் மூலம் அவர்களின் ஆற்றலை தெரிந்து கொள்ள முடியும்.
இவர்களை அறிமுகப்படித்தியமைக்கு மிக்க நன்றி
வணக்கம் சகோ
Deleteஎனது வார்த்தைகளுக்கு மதிப்பளித்து விளக்கம் தந்தமைக்கு அன்பான நன்றிகள். என்றும் இணைந்திருப்போம். நன்றிகள்...