Thursday, June 26, 2014

கடல் கடந்தும் வளரும் தமிழ்!


வணக்கம் நண்பர்களே!
பணி நிமிர்த்தமாகவும், மணம் முடித்தும் தன் தாய் மண்ணை விட்டு, சொந்தங்களைப் பிரிந்து கடல் கடந்து வாழ்ந்தும் தமிழினை இறுகப் பற்றிக் கொண்டு, தமிழைச் சுவாசித்து வாழும் வெளிநாடுவாழ் தமிழர்களின் பதிவுகளை இன்று அறிமுகப்படுத்துவதில் அளவில்லா மகிழ்ச்சி.

இவர்கள் வசந்தத்தை களித்திட ஓடிவரும் வேடந்தாங்கல் பறவைகள் அல்ல. வாழுதல் வேண்டி பயணித்த தமிழ்க்குயில்கள். இவர்களின் குரல் தமிழ்பேசும் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்துக் கொண்டிருக்கும் வரை தமிழ் வளரும்.

தாய்ப்பாசம் பற்றியே பேசி வரும் பெரும்பாலானோர் மத்தியில் தந்தைக்கும் ஒரு கவிதை தந்து தந்தையின் அன்பினை தம் காவிய எழுத்துகளில் கவி பாடியிருக்கிறார் திருமிகு. இனியா அவர்கள். தனது பெயரைப் போலவே பழகுவதில் கருத்துரை வழங்குவதில் அவர் இனியவர் தான். தன் கவி வரிகளில் படிப்பவர்களின் மனங்களை ஈர்ப்பதிலும் கெட்டிக்காரர் தான்.
அவரது பதிவு: தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை

அன்னையின் பிரிவால் துயரின் உச்சிக்கே சென்று தோழமைகளின் அழைப்பால் மீண்டும் இணையவானில் வட்டமடிக்க வந்திருக்கும் இளையநிலா என்றும் இளையநிலா தான். அவரின் அன்னையின் பிரிந்த வலிகளைத் தாங்கிய குறும்பா உங்கள் பார்வைக்கும்
அன்னைக்குச் சமர்ப்பணம்!..

படைப்பாற்றல், தோட்டக்கலை, பாடும் திறன் என பன்முகம் கொண்ட ஒரு பதிவர் ஜெர்மனியில் வசித்து வரும் ப்ரியசகி அவர்களின் எழுத்துகளில் ஒரு எதார்த்தமும் குழந்தைத் தனமும் துள்ளி எழும்புவதை நான் கண்டு உணர்ந்திருக்கிறேன். அவரின் தோட்டத்திற்கு நீங்கள் சென்று வர ஆசையா
என் வீட்டுத்தோட்டத்தில்....

மியாவ் மியாவ் என்னஙக பார்க்கிறீங்க! மின்னல் மியாவ் அதிரா அவர்களைத் தான் அழைக்கிறேன் பழகலாம் வாங்க வாங்கனு சொல்லிட்டு எங்க போயிட்டாங்க வாங்க நாம அவங்களை அவங்க சமையல் அறையில் போய் தேடுவோம்
பழகலாம் வாங்க!!.. வாங்க!!!:)

சென்னைத்தமிழில் பேசினால் நமக்கே கிறுகிறுனுகீதுபா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு இருக்குது ஆஸ்திரேலியா ஆங்கிலத்துடன் ஒப்பிட்டால் எப்படி இருக்கும் இதோ சகோதரி கீதமஞ்சரி அவர்கள் அழைத்துச் செல்கிறார் வாருங்களேன் சென்னைத் தமிழும் ஆஸி ஆங்கிலமும் 3

தாய் தன் குழந்தையைக் கொஞ்சும் அழகிற்கு ஏது இணை! அவர்களின் அன்பினில் குழந்தைகள் அடங்கிக்கிடக்கும் தொட்டிலில் அப்படியொரு கவிதையை நம் வலையுலக சகோதரி திருமிகு மஞ்சுபாஷினி அவர்கள் தந்திருக்கிறார் படிக்கலாம் வாங்க
அழகே என் அற்புதமே....

ரெசிப்பி, தோட்டமென எப்போழுதும் சுறுசுறுப்போடு இயங்கும் மற்றொரு பெண் பதிவர் திருமிகு ஏஞ்சலின் அவர்களின் பன்முகத்திறனும் பாராட்டதலுக்குரியது அவரின் தோட்டமும் அருகாமையில் தான் நாமும் கொஞ்சம் எட்டிப் பார்ப்போமா!
காகிதப்பூக்கள்

தன்னை ஈன்றெடுத்த தாய்க்கும் தான் ஈன்றெடுத்த இளைய மகனுக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் அழகிய கவிதை எழுதியவர் யாரென்றால் கிச்சன், கைவினைப் பொருட்கள் கிவியின் கூவல்கள் என்று எப்பவும் படு பிசியாக இருப்பவர் அவர் தான் சகோதரி இமா அவர்கள். அவரின் கவிதை
வாழ்த்தொன்று!

வெல்கம் டூ மகிஸ் பேஸ் என்று அன்புக்குரலில் அழைக்கும் சகோதரி அவர்களின் தோட்டத்தில் வளர்ந்துள்ள ரோஜா மலர்களைப் பார்க்க வேண்டுமென எனக்கு ஆவலாக இருக்கிறதே உங்களுக்கு!
ரோஜா...ரோஜா!

வயதும் அனுபவமும் தரும் பாடங்கள் நிறைய நிறைய. அப்படியொரு வயது தந்த தானம் பற்றித் தன் கவி வரிகளில் சொல்கிறார் திருமதி. உமையாள் காயத்ரி அவர்கள். அவருக்கு வயது தந்த தானம் தான் என்னவாக இருக்கும்
வயது தந்த தானம் - கவிதை

தன் எண்ணச் சிக்கலை எளிமையாய் தன் மன ஆறுதலுக்காகக் கோர்த்திருக்கும் வானம் வெளுத்த பின்னும் ஹேமா அவர்களின் எழுத்துகள் கரையாத ஓவியங்கள் தான்
கரையா வண்ணம்

இன்று கடல் கடந்து தமிழ்ப்பாடும்  பெண்குயில்களின் குரல்களை மட்டும் வலைச்சரத்தில் ஒலிக்க விட்டுருக்கிறேன். நாளை ஆண்குயில்கள். சந்திப்போம். நன்றி..








43 comments:

  1. //வாழுதல் வேண்டி பயணித்த தமிழ்க்குயில்கள்.// என நிறைய பெண் பதிவர்களை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அவர்களில் சிலரை தெரியும். மற்றவர்களை அவர்களின் வலைக்குச் சென்று காண ஆவலாக உள்ளேன்.

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    இதில் என்னையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      தொடர்ந்து இணைந்திருப்போம். தங்கள் எழுத்துக்கள் தொடர்ந்து மிளிரட்டும். மிக்க மகிழ்ச்சி.

      Delete
  2. ஒருசில குயில்களை தவிர மற்ற குயில்களின் கீதம் கேட்டு மகிழ்ந்து இருக்கிறேன்.
    அருமையான தளங்கள் அறிமுகத்திற்கு நன்றி.
    வாழ்த்துக்கள் உங்களுக்கும், தமிழ்பாடும் குயில்களுக்கும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  3. சிறந்த அறிமுகங்கள்..அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    நன்றி சகோதரரே

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரி வருகை மகிழ்வளிக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். ரொம்ப மகிழ்ச்சி..

      Delete
  4. அனைத்தும் ரசிக்கும் அருமையான தளங்கள்...

    அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. சகோதரரின் வருகைக்கு நன்றிகளும் மகிழ்ச்சியும்..

      Delete
  5. என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு ரெம்ப நன்றி சகோ.பாண்டியன்.
    அறிமுகப்படுத்திய அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி என்று சொல்ல வேண்டுமா சகோதரி. நல்ல எழுத்துகள் எங்கிருந்தாலும் படிப்பார்கள் என்பதற்கு தங்கள் தளம் ஒரு எடுத்துக்காட்டு..

      Delete
  6. அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  7. சிறந்த அறிமுகங்கள்

    ReplyDelete
  8. அனைத்தும் நல்லவிசயங்கள் வாழ்த்துக்கள் நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் . தொடர்வோம்..

      Delete
  9. பாண்டியன் அவர்களுக்கு மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அறிமுகத்திற்கு.ஆன்மீகத்தோழி உங்களுக்கும் என் கை கோர்த்த அன்பு என்றும் !

    ReplyDelete
    Replies
    1. என்றும் மகிழ்ச்சி தங்கட்டும். உங்கள் வருகைக்கு என் அன்பான நன்றிகளும்...

      Delete
  10. மிக்க நன்றி! பாண்டியா! எனது அறிமுகம் கண்டு அளவில்லா ஆனந்தம் அடைந்தேன்.
    /வாழுதல் வேண்டி பயணித்த தமிழ்க்குயில்கள்.// கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது. இவர்களை எல்லாம் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றிகள் பல !
    அவர்கள் பதிவுகள் காண ஆவலாக உள்ளேன். அறிமுகங்கள் அனைவருக்கும் என் நல் வாழ்த்துக்கள்...! கல்யாண மாப்பிள்ளை பல ஜோலிகளுக்கு நடுவிலும் ஏற்ற தன் பணியை சிறப்புடன் தொடர்வது சிறப்பே. வாழ்த்துக்கள் பாண்டியரே!

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வலைத்தளத்தை அறிமுகம் செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு வலைச்சர நண்பர்களுக்கு நன்றிகள்..

      Delete
  11. சிறப்பான அறிமுகங்கள்.. தொடருங்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோ. தொடர்வோம்..

      Delete
  12. எங்கள் மொத்த நட்புக்களை ஒரு சேர அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சகோ
    எனக்கு புதிய அறிமுகங்கள் இனியா மற்றும் உமையாள் இருவருக்கும் வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. உங்கள் நட்பில் என்னையும் இணைத்துக் கொள்வீர்களா சகோதரி.. மிகுந்த மகிழ்ச்சி. தொடர்வோம்..

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. தகவல் தந்த ராஜேஸ்வரி அக்கா ,ப்ரியா, ஆகியோருக்கு மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. எனது நன்றிகளும் அவர்களுக்கு உரிதாகட்டும்...

      Delete
  15. கடல்கடந்தும் நம் மொழிகாப்போர் வரிசையில்
    என்னையும் இங்கு அறிமுகம் செய்தமை கண்டு
    அகம் மிக மகிழ்ந்தேன்!.. மிக்க நன்றி சகோதரரே!

    என்னுடன் அறிமுகமாகிய - எனக்கு ஏற்கனவே அறிமுகமாகிய
    அத்தனை அன்புச் சகோதரிகளுக்கும்,
    அறிமுகம் செய்த உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இரவு மிகத் தாமதமாக இங்கு வந்து
      கருத்திட்டுச் செல்லும்போது

      இத் தகவல்தனை எனக்கு அறிவித்த
      பிரியசகி அம்முவுக்கு நன்றி கூறாது சென்றமைக்கு
      மனம் மிக வருந்துகிறேன்!.. மிக்க நன்றி அம்மு!

      Delete
    2. தங்களையும் தங்களின் நட்புகள் அனைவரையும் அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மட்டற்ற மகிழ்ச்சி சகோதரி. உங்களின் பணிக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...

      Delete
  16. ஆஹா! இனியா செல்லம் :)))
    கடைசி மூன்று பேரைத்தவிர மற்ற எல்லாரும் நம்ம friends:)
    இளமதி, கீதா அக்கா, மஞ்சு அக்கா, தோழி ப்ரியசகி மற்ற எல்லா தோழிகளுக்கும் , அறிமுகம் செய்த சகோவுக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அக்கா
      எல்லாமே நம் நட்புகள் தான். கடல் கடந்தும் தமிழ் வளர்க்கும் இவர்களின் பணிக்கு எது ஈடாகும் என்று நான் பல நாள்கள் எண்ணியதுண்டு. இவர்களை அறிமுகம் செய்த ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது விடுவோமா அக்கா....

      Delete
  17. சொல்ல மறந்துட்டேன். மத்த மூன்று பேரையும் இனி friends ஆக்கிக்கபோறேன் :))

    ReplyDelete
    Replies
    1. இதுவே பதிவின் வெற்றி. நன்று நன்று அக்கா..

      Delete
  18. சிறப்பான அறிமுகம்! ரெண்டு மூணு நாளா கொஞ்சம் ஆணி புடுங்கிற வேலை அதிகமானதால் இணையம் பக்கம் வரலை! வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இல்லாததால் தான் என்னவோ இணைய வானம் வெறிச்சோடி காணப்படுகிறது போலும். இனி தொடர்க சகோதரர்.. நன்றி.....

      Delete
  19. அருமையான தலைப்புக்கு ஏற்ற அறிமுகங்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்§

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தமைக்கு அன்பான நன்றிகள் சகோ...தொடர்வோம்..

      Delete
  20. இன்றைய அறிமுகங்களில் என் வலைப்பூவும் இருப்பது குறித்து மிகவும் மகிழ்ச்சி பாண்டியன். என்னோடு அறிமுகமான அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மிகுந்த மகிழ்ச்சிகள் சகோதரி. வாழ்த்துக்கு நன்றிகள்..

      Delete
  21. வித்தியாசமான தலைப்பும் அதற்கேற்ற படமும் மிக அருமை சகோ.

    தங்களுக்கும், மற்ற அறிமுக பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரர் கூட இருக்கும் போது இதுக்கு மேலேயும் யோசிக்க முடியாத என்ன! வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ...

      Delete
  22. இன்றைய புதிய பதிவர்களுக்கு வாழ்த்துக்கள். இவ்வாறாக நண்பர்களைத் தேடி கண்டுபிடிக்கும் தங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் தொடர் வருகைக்கும் உற்சாகமூட்டும் கருத்துக்கும் நன்றிகள் ஐயா. தொடர்ந்து இணைந்திருப்போம்....

      Delete
  23. தாமதமாகத் தகவல் அறிந்தேன், தாமதமாக நன்றியும் சொல்கிறேன். மிக்க நன்றிங்க! பகிர்ந்த மற்ற பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    தங்களுக்குத் திருமணம் என்ற தகவல் கண்ணில் பட்டது, வாழ்த்துக்கள் சகோ! :)

    ReplyDelete