வணக்கம் வலைத்தள வாசகர்களே!
"சிகரம்பாரதி" ஆகிய என்னை அறிந்தவர்கள் சிலர், அறியாதவர்கள் பலர். பாடசாலைக் காலகட்டத்தில் "சிகரம்" என்ற கையெழுத்து சஞ்சிகை வாயிலாகவும் தொடர்ந்து இலங்கையின் தேசிய நாளேடுகள், சஞ்சிகைகளுக்கும் எழுதி வந்தேன். பின்பு வலைத்தளத்தின் பக்கம் "தூறல்கள்" வலைப்பதிவின் வாயிலாக கால் பதித்தேன். "சிகரம்" வலைப்பதிவின் ஊடாக என்னை நிலை நிறுத்தினேன். இன்று "சிகரம்3" உடன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறேன்.
வலைச்சரம் ஒரு ஆரோக்கியமான முயற்சி. தமிழில் வலைப்பதிவுகளையும் வலைப்பதிவர்களையும் அறிமுகப்படுத்துவதிலும் ஒன்றுபடுத்துவதிலும் வெற்றிபெற்ற முயற்சி. வலைச்சரத்தின் மூலம் பயன்பெற்றவர்கள் ஏராளம். மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பதிவுகள். அத்தனையும் வலைப்பதிவர்கள் தந்த அறிமுகங்கள்! ஆங்கிலத்தில் கூட இப்படி ஒரு முயற்சி இருக்குமா என்பது சந்தேகமே!
வலைச்சரத்தில் மூன்று முறை அறிமுகம் பெற்றுள்ளேன். இன்று வலைச்சரத்தில் ஆசிரியராக... நினைக்கவே பிரமிப்பாக இருக்கிறது. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு அழைப்பு வர சில தினங்களுக்கு முன்னதாகத்தான் மனதினுள்ளே 'வலைச்சர ஆசிரியப் பொறுப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்' என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அழைப்பு வந்ததும் நினைத்ததும் நடந்துவிட்டதே என்று ஆச்சரியமாக இருந்தது.
பணி நெருக்கடி மற்றும் சில சிக்கல்கள் காரணமாக முறையான தயார்படுத்தல்கள் ஏதும் என்னிடம் இல்லை. அதற்காக ஏனோ தானோ என்று எழுதப்போவதுமில்லை. ஏனையோரை விட வித்தியாசமான முறையில் எனது அறிமுகங்கள் இடம்பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
முதலில் எனது வலைத்தளங்களில் நான் எழுதிய நட்சத்திரப் பதிவுகள் சிலவற்றை உங்கள் முன் சமர்ப்பிக்க எண்ணுகிறேன்.
> வலைச்சர ஆசிரியப் பணி குறித்து எழுதியது:
* வலைச்சரத்தில் களம் காண்கிறது சிகரம்!
"சிகரம்" வலைத்தளம்.
* எல்லைகளுக்குட்பட்டு இயங்கக் கவிதை என்பது சிற்றோடை அல்ல
* வேலைக்கு போறேன்!
* கற்பிழந்தவள்
* பிரிவோன்றே முடிவல்ல
* கவிதைகள்
* #100 மகிழ்ச்சியான நாட்கள்
* மீண்டும் அதிசயா
* அகவை ஒன்பதில் சிகரம்!
* கல்யாண வைபோகம் - குறு [வலை] நாவல்
இவை மட்டுமல்ல இன்னும் பல பதிவுகள் இருக்கின்றன. ஒரு முறை எனது வலைத்தளம் சென்று பாருங்களேன்!
மேலும் எனது "தூறல்கள்" மற்றும் "சிகரம்3" வலைத்தளங்களிலும் பல்வேறு பயனுள்ள பதிவுகளைக் காணலாம். ஒரு வலைப்பதிவை தொடர்ந்து நடாத்துவது என்பது மிகச் சிரமமான பணி. அப்பணியை முன்கொண்டு செல்வதில் நாமனைவரும் ஒன்றிணைந்திருக்கிறோம் . எத்தனை இடர்கள் வந்தாலும் இப்பணியை தொடர்ந்து செய்ய முன்வருமாறு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன். மேலும் வலைப்பதிவர்கள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து "இயன்றவரை தமிழ்" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
மீண்டும் நாளை முதல் வலைப்பதிவு அறிமுகங்களுடன் சந்திக்கலாம்.
அதுவரை
அன்புடன்
சிகரம்பாரதி.

சிகரம் பாரதி அவர்களுக்கு நல்வரவு!..
ReplyDelete//ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து
"இயன்றவரை தமிழ்" என்ற கொள்கை//..
தங்கள் எண்ணங்கள் மேலும் சிறக்க - நல்வாழ்த்துக்கள்..
அழகிய சுய அறிமுகம் மிக அருமையான கருத்துக்கள்
ReplyDeleteநல்வரவும் வாழ்த்துக்களும் நண்பர் சிகரம் பாரதி அவர்களுக்கு ..
சுருக்கமான ஆயினும் நிறைவான
ReplyDeleteஅருமையான அறிமுகம்
இவ்வார வலைச்சர ஆசிரியர் பணி சிறக்க
நல்வாழ்த்துக்கள்
தங்கள் அறிமுகம் சிறப்பாக இருக்கிறது.
ReplyDeleteஅறிமுகம் நன்று... வாழ்த்துக்கள்...
ReplyDeleteவணக்கம் ! சிகரம் பாரதி அவர்களே ! தங்கள் வரவு நல்வரவாகுக ! சுய அறிமுகம் அருமையாக இருந்தது. தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா..! தங்களைப் பற்றிய அறிமுகப் பதிவு நன்று. அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறோம். நன்றி.
ReplyDeleteவணக்கம் பாரதி.மிகவே மகிழ்சி சொந்தமே...வாழ்த்துக்களும' இறையாசி பலவும் உங்களுக்காக.ஒரு சக பதிவராக மட்டுமன்றி நல்ல ஒரு உறவாக ஊக்கிவிப்பாளனாக உங்களை அறிந்தவள் என்ற மட்டில் பெரு மகிழ்வு
ReplyDeleteவலைச்சரத்தில் சிகரமாக வந்ததற்கு வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்களின் எழுத்துக்களை வாசித்து இருக்கிறேன்! உங்கள் தளத்தில் வந்து வாசித்தது இல்லை! சென்று பார்க்கிறேன்! அருமையான அறிமுகம்! சிறப்பாக தொடர வாழ்த்துக்கள்!
ReplyDeleteதற்போதுதான் தங்களது பதிவுகளைப் பார்க்கத் தொடங்கியுள்ளேன். ஆசிரியர் பொறுப்பேற்றமைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in
வாழ்த்துகள் சிகரம் பாரதி.
ReplyDeleteஅறிமுகம் அருமை... தொடர்ந்து கலக்குங்கள் ஐயா...
ReplyDeleteஅறிமுகம் நன்று. வாழ்த்துகள்!
ReplyDelete//எத்தனை இடர்கள் வந்தாலும் இப்பணியை தொடர்ந்து செய்ய முன்வருமாறு தமிழ் வலைப்பதிவர்கள் அனைவருக்கும் அறைகூவல் விடுக்கின்றேன்// - கண்டிப்பாக! ஒருபொழுதும் பின்வாங்கப் போவதில்லை.
ReplyDelete//வலைப்பதிவர்கள் ஆங்கில வார்த்தைப் பிரயோகங்களைக் குறைத்து "இயன்றவரை தமிழ்" என்ற கொள்கையைக் கடைப்பிடிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்// - இதை நான் வழிமொழிகிறேன்.
ReplyDelete