Thursday, July 17, 2014

தீயா வேலை செய்றாங்கோ; அதிரடி வியாழன்







 மேலைநாடுகளில் ஷூ வில் தக்காளி சாஸ் தடவிக்கொடுத்தா கூட சாப்டுடுவாங்கனு எதிலையோ படிச்சேன். ஆனா நம்ம ஆளுங்க இருக்கங்களே!! இட்லி-சாம்பார், அடை-அவியல், வடை-பாயசம் னு பல ஸ்பெஷல் காம்பினேசன் வைத்திருக்கிறார்கள். அப்புறம் காம்போ என்றவுடன் இன்னொன்னு நினைவுக்கு வருது. சோப்பு வாங்கின காப்பி தூள் ப்ரீ, பைக் வாங்கினா செல்போன் ப்ரீ என நமக்கு நிறைய காம்போஸ் தேவைபடுது இல்லையா? ( அட பேரா போடாமல் படத்தை போடுங்கப்பா) ஓகே ஓகே விசயத்துக்கு வரேன். இப்டி அப்பப்போ ஸ்பெஷல் கம்போ பதிவு வெளிட்டு கலக்கும் சூப்பர் பதிவர்களின் பதிவுகள் இப்போ பார்க்கப்போறோம்!



புதிர், நகைச்சுவை, சமூக சிந்தனை, டி.வி விமர்சனம் என எல்லா துறையிலும் கலக்கும் ஆல் ரௌண்டர்  மூங்கில் காற்று T.N.முரளிதரன் அவர்களின் பெட்டிக்கடை .படித்த, பிடித்த, ரசித்த பக்கெட் நாவல்போல விறுவிறுப்பான  பல சரக்குகள் இங்கு கிடைக்கும்.


மென் ரசனைக்கார நண்பன். நிலாச்சோறு போடுபவர். ஆடை துறையில் எக்ஸ்பெர்ட் என்பதால் இவரது பதிவுகளில் வண்ணமயமான ரசனை தலைகாட்டும். ஜீவன் சுப்பு அவர்களின்   பேசாத வார்த்தைகள் . ரசித்த பாடல்கள், நிகழ்ச்சிகளின் கலவையை கதை பேசிச்செல்லும்.


அரசியல் தலைவர்கள் இங்கு கதறக்கதற கலாய்க்கபாடுவார்கள். படிக்க சுவாரஸ்யமாவும், நாட்டுநடப்பை அரசியலை தெரிந்துகொள்வது மாதிரி இருக்கும். அவர்கள் உண்மைகள் மதுரை  தமிழன் அவர்களின் மெயில் பேக்.

 
 புண்ணியம் தேடி, மௌன சாட்சிகள், கிராப்ட் corner என பல சூப்பர் விஷயங்கள்  இருந்தாலும் காணாமல்போன கனவுகள் ராஜியக்கா வின் ஐஞ்சுவை அவியல் தான் எனக்கு அவங்க ப்லாக் ல ரொம்ப பிடிக்கும்.


சினிமா விமர்சனப் புலி ஆ,வி அவர்கள், கவிதைகளில் கலக்கக்கூடியவர்.
கோவை ஆவி அவரது  பயணிகள் நிழற்குடை.ஒரு பஸ் ஸ்டாப் போல  என்ன கிடைக்கும்னு அறுதியிட்டுசொல்ல முடியாதபடி சர்ப்ரைசிங்கா பல விஷயங்கள் இங்க கிடைக்கும்.

இது கும்மாட்சி அவர்களின் கலக்கல் காக்டெயில். பேரைபோலவே பதிவும் கிக்கா தான் இருக்கு. நான் அப்படி, நான் இப்படின்னு ரொம்ப நல்லவன் பில்டப் இல்லாத இன்றைய இளைஞர்கள் இது தான் நான் என காட்டும் நேர்மைக்கு இந்த இடத்தில மைதிலியின் சல்யூட்.

ஸ்கூல் பையன் என்றவுடன் நான் என்னமோ ரைம்ஸ் இருக்கும்னு நினைச்சேன்(சகோ! சும்மா ஜுஜு). ஒரு சினிமா, ஒரு கதை, ஒரு நிகழ்வுன்னு ரொம்ப கலர்புல்லா தான் இருக்கு நம்மால் ஸ்.பை என சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்கூல் பையனின்   கலர் பென்சில்.


ஊரை பத்தி பேசச்சொன்ன யாருக்குத் தான் கசக்கும். இந்த பதிவில் தன் ஊர் பற்றிய தகவல்கள், துணுக்குகள், மற்றும் அழகிய புகைப்படங்களால் கரைசேர அலைகள் அரசனின்  ஊர்ப்பேச்சு .ரொம்ப சுவையாய் தான் இருக்கு.


தேன்மிட்டாய் என்றதும் நினைவுக்கு வரும் பிள்ளை பிராயக்கதைகளை போல் எதிர்ப்படும்பொருள் எல்லாம், தொட்டு செல்லும் நனவோடை கோட்பாட்டுக்கு ரூபக் விவரிக்கும்  தேன்மிட்டாய் ஒரு இனிய எடுத்துக்காட்டு .



நாடோடி எக்ஸ்ப்ரஸ் திடங்கொண்டு போராடு சீனிஅவர்கள் பயணம், புத்தகங்கள் என பல விசயங்களை மெலடியாக சொல்லக்கூடியவர்.அவரது   ஜஸ்ட்ரிலாக்ஸ் சந்தித்த நண்பர்கள், சென்ற இடங்கள் என ரசனையை இருக்கு பதிவு.


ஏதாவது சாப்பிடனும், அது சுவையாவும் இருக்கணும், உடல் நலனுக்கு உகந்ததாவும் இருக்கணும்னு நாம சாலடை தேர்ந்தெடுப்போம் இல்லையா? அப்போ உங்களுக்கு வெங்கட் நாகராஜ் அண்ணாவோட  ஃப்ரூட் சாலட் கண்டிப்பா பிடிக்கும்.


ஒரு கை மிக்ஸரில் கரகர காராபூந்தியும், கொஞ்சம் இனிப்பா முந்திரியும் தட்டுபடுவதைப்போல் மின்னல் வரிகள் பால கணேஷ் அண்ணாவின்    மொறு மொறு மிக்ஸர் . பழைய சினிமா, நாவல், நகைச்சுவை எல்லாம் இருக்கும்.


முன்பெல்லாம் பிக்னிக் போனால் கதம்ப சோறு இல்லாமல் போவதில்லை. இப்போ அந்த கலாச்சாரம் அழிந்து விட்டதோன்னு கவலைபடாதீங்க. தளிர் சுரேஷ் அவர்களின் கதம்ப சோறு இருக்கே. புத்தக பரிந்துரை, சமையல் டிப்ஸ் இந்த பதிவின் கூடுதல்சிறப்பு.


ஒரு கபே யில் கிடைக்கும்  அசத்தலான காப்பி முதல் மசால் தோசை வரை பல சுவையில் செய்தி தருகிறது அரசர்குளத்தான் ரஹீம் கஸாலி அவர்களின்  கசாலி கஃபே ஒரு வருத்தம், ஒரு சிந்தனை என நீளும் அத்தனையும் அருமை.

இது ஜூஸ் தானே?!!

இது போல காக்டெயில் கலக்கும் வேற பதிவர்கள், பதிவுகள் பற்றிய தவகல்கள் தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க நண்பர்களே! பல தலைப்புக்கள் பசியை தூண்டுகின்றன( அறிவு பசி? நோ..நோ..யாருக்கிட்ட) நான் போய் டிப்பனை முடிச்சுட்டு வந்துடுறேன்:))

71 comments:

  1. பர்ர்ப்ப் ... எக்ஸ்குயுஸ் மீ! என்னையும் அறியாமல் ஏப்பம் வந்துடிச்சி. அருமை அறிமுகம். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஹா...ஹா...ஹா..
      வாங்க அண்ணா! ரொம்ப நன்றி!

      Delete
  2. மேடம், உங்களுக்கும் நான் ஸ்.பை.யா? ஹா ஹா....

    ரொம்ப நாள் கழித்து வலைச்சரத்தில் என் பதிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது... மகிழ்வுடன் மிக்க நன்றி....

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...ஹ...
      அப்புறம் டீச்சரா இருந்துட்டு ஸ்கூல் பையனை என்கரேஜ் பண்ணலேன்னா எப்டி:)))
      நன்றி சகோ!

      Delete
    2. அட அட அட.. டைமிங் கலக்குறியே மைதிலி.. எப்புடீ,,,? -ஆச்சரியத்தில்அண்ணன்.

      Delete
  3. தொகுப்புகளாக வெளியிடப்படும் பதிவுகளை அறிமுகப் படுத்தியது புதுமை. எனது பெட்டிக்கடைக்கும் விளம்பரம் தந்தமைக்கு நன்றி.அனைத்தும் சிறப்பானவை என்பதில் ஐயம் இல்லை

    ReplyDelete
    Replies
    1. நான் சுதேசி அண்ணா! ஹா...ஹா...
      அதான் நம்ம கடைக்கு விளம்பரம்!! நன்றி அண்ணா!

      Delete
  4. அறிமுகத்தைப் பார்த்ததும் ஏதோ சாப்பாட்டைப் பற்றி பேசப்போகிறீர்கள் என நினைத்தேன்.ஆனால் வித்தியாசமான கோணத்தில் பதிவர்களை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். அனைத்துப் பதிவையும் படித்தேன். பலர் பழைய நண்பர்களே. புதுமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
    www.drbjambulingam.blogspot.in
    www.ponnibuddha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா! தங்கள் ஆதரவுக்கு நன்றி!

      Delete
  5. அறிமுகங்கள்
    சூடு பிடிக்கிறது

    ReplyDelete
  6. நன்றி அய்யா! தொடர்ந்து வருக!!

    ReplyDelete
  7. //சினிமா விமர்சனப் புலி ஆ,வி //// அவ்வ்வ்வவ்வ்வ்வவ்.. புலி எல்லாம் இல்லீங்.. எலின்னு வேணும்னா சொல்லிக்கலாங்.. :)

    அறிமுகத்திற்கு நன்றி சகோ..

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...
      இதென்ன விஜய் ஸ்டைலாங் ...
      நன்றி சகோ!

      Delete
  8. அடாடா... இணைய இணைப்பு படுத்தறதால கொஞ்சம் லேட்டா என் விசிட். இங்க என்னோட பகிர்வோட சேர்த்து என் தங்கையால அறிமுகப்படுத்தப்பட்டிருக்கற எல்லாருமே என்னுடைய நல்ல நண்பர்கள் என்பதால கூடுதல் மகிழ்ச்சி இன்னிக்கு. அசத்தும்மா....

    ReplyDelete
    Replies
    1. நான் தொகுக்கும்போதே நினைச்சேன் அண்ணா! இன்னும் சொல்லனும்னா நம்ம பாலா அண்ணா செட்ல இதுக்கு நிறைய மேட்டர்ஸ் கிடைக்கும்ற தைரியத்துல தான் இந்த டாபிக்கை தேர்ந்தெடுத்தேன்:) நன்றி அண்ணா!

      Delete
  9. படத்தைப் பார்த்தவுடன்,ஏதோ நீங்கள் வீட்டில் ஸ்பெஷலா செய்திருக்கீங்க போலன்னு நினைச்சா, ஏமாத்திட்டீங்களே....

    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. நல்ல வேளை !! நீங்க பொழச்சீங்க சகோ(இது கஸ்தூரியின் மைன்ட் வாய்ஸ்)
      ஹா..ஹா...நன்றி சகோ!!

      Delete
  10. என் பதிவை இங்கு அறிமுகம் செய்து வைத்ததற்கு மிக்க நன்றி சகோதரி. மற்ற அறிமுகங்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    ReplyDelete
  11. பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பதற்கிணங்க இங்கு அறிமுகப்படுத்திய நல்லவர்களுக்கிடையே என்னையும் சேர்த்து அறிமுகப்படுத்திற்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ச்சோ...ச்சோ..வரவர தமிழன் சென்டிமென்ட் ஓவரா இருக்குப்பா!!
      வெல்கம் சகா:))

      Delete
  12. இந்த எளியேனது பதிவினையும் இங்கே அறிமுகம் செய்தமைக்கு நன்றி மைதிலி.....

    ஒரு சிலர் தவிர மற்றவர்கள் அனைவரும் தெரிந்தவர்கள். சிலர் பதிவுகள் படித்ததில்லை... படிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணா! இவ்வளவு தன்னடக்கம் ஆகாது அண்ணா!
      போய் படிச்சுபாருங்க:))

      Delete
  13. இது ஜூஸேதான், அப்படி நினைச்சுதாங்க நாங்கெல்லாம் குடிக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. இதை இத இத எதிர்பார்த்துதான் இந்த CAPTION போட்டேன் ;)
      சிக்கிடீங்க சகா:)))

      Delete
  14. //மேலைநாட்டுகளில் ஷூ வில் தக்காளி சாஸ் தடவிக்கொடுத்தா கூட சாப்டுடுவாங்கனு எதிலையோ படிச்சேன்.//
    இப்படி சாப்பிடுவது மேலை நாட்டுக்காரார்கள்தான் நாங்க எல்லாம் இன்னும் மதுரைக்காரங்கதான் தினமும் காலையில் தோசை இட்லி பிரெட்தாங்க காலை உணவு...

    ReplyDelete
    Replies
    1. ஏய் மதுரை தமிழா! ப்ரெட் உனக்கு தமிழர்கள் உணவா!?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. சரி தப்பா சொல்லிட்டேன் 'பன்"னுதான் எங்க காலை உணவு

      Delete
    4. அமெரிக்கா காரன் என்று தான் படித்தேன். அப்படி பொதுப்படையா எழுதி உங்ககிட்ட வாங்கி கட்டிக்க கூடாது னு தான் மேலை நாடுன்னு எழுதினேன்:)))

      Delete
  15. வணக்கம்
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் எல்லாம் செல்லும் தளங்கள் தொடர்ந்து அசத்துங்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ! உங்களுக்கு தெரியாத தளமா?!

      Delete
  16. அனைத்தும் தொடரும் இனிய நண்பர்களின் தளங்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அதே ரூபன் சகோ பின்னூட்டம் :)))
      நன்றி அண்ணா!

      Delete
  17. ஒரே மூச்சுல எல்லாத்தையும் எப்படிப்பா குடிக்கிறது..? சே.. படிக்கிறது?
    அறியாத பல புதிய தளங்களை அறிமுகப்படுத்தியதற்கு ஒரு -சுதேசி-பவண்டோ குடுங்க -பெட்டிக்கடை-முரளி அய்யா, கஸ்தூரிவாத்தியாருககும் சேர்த்து
    நா காசுதந்துடுறேன்..(தங்கை இந்தப் போடு போடுதுன்னா வீட்டுப் பொறுப்பு அவருதானே? பாவம் அவரும் டயர்டா தானே இருப்பாரு?)

    ReplyDelete
    Replies
    1. என்னது குடிக்கிறதா? ஒ! பவண்டோ வை சொன்னீங்களா! ஹா...ஹா...
      //தங்கை இந்தப் போடு போடுதுன்னா வீட்டுப் பொறுப்பு அவருதானே? பாவம் அவரும் டயர்டா தானே இருப்பாரு?) // ஆமாம் அண்ணா , கஸ்தூரி வெட்டி முறிச்ச முறியில அங்கிட்டு பொப்பனைகோட்டை பக்கம் ஒத்த மரத்தை கூட காணோமாம்:)))
      நீங்கவேற, கஸ்தூரி பண்ணின பெரிய தியாகம் அவரோட FIRST WIFE என்று நானும் ,அத்தையும்(கஸ்தூரியின் அம்மா) கிண்டலடிக்கும் சிஸ்டம் மற்றும் மோடமை ரொம்ப நேரம் எனக்கு விட்டுக்கொடுக்கிறது தான்:)) மற்றபடி இப்பவும் 'மது உன் தங்கக் கையால கொஞ்சம் தண்ணீர் கொடும்மா(பக்கத்தில்தான் இருக்கும் வாட்டர் கேன்)" ஹா,,,ஹா...நன்றி அண்ணா!

      Delete
  18. நிறைய ஐட்டம் வரப் போகிறது பார்த்து சமைத்து பார்த்துவிட வேண்டியது தான் என்றல்லவா நினைத்தேன் இப்படியா காலை வாருவது ம்..ம். வித்தியாசமான முறையில்...அறிமுகம் கலக்கல் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் அம்மு....!

    ReplyDelete
    Replies
    1. கேளும்மா, கேளு ! என்னையும் மதிச்சு , நம்பி ஒரு அப்பாவி பொண்ணு சமையல் குறிப்பெல்லாம் எதிர்பார்த்திருக்கு:((
      நன்றி டா செல்லம்! இனியாச்சும் சூதானமா பொழைச்சுகோங்க தோழி:)))

      Delete
  19. தொடரும் நண்பர்களுடன் புதிய நண்பர்களும் அறிமுகம்...
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  20. இன்று அறிமுகங்கள் எல்லோரும் எனக்கு தெரிந்தவர்கள்தான். என்னை மட்டும் தனியாய் அறிமிகப்படுத்தி பயமுறுத்தாம என் சகோதரர்களோடு பாதுகாப்பாய் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி மைதிலி!

    ReplyDelete
    Replies
    1. அக்கா பயப்படுவதா?! இதை நான் நம்பனுமா?! நன்றி அக்க!

      Delete
  21. புகைப்படத்தை பார்த்ததும் ஏதோ கல்யாணவிருந்து சாப்பிடப்போறோம்னு நினைத்தேன் ஆனால் நல்ல கதம்பசோறே கிடைத்தது நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லர் அண்ணா!

      Delete
  22. கேபிள் சங்கர் அண்ணா கொத்து பரோட்டா என்ற பேர்லயும், (http://www.cablesankaronline.com/2014/07/140714-dawn-of-planet-of-apes-c2h.html)
    அப்புறம் நம்ம ரூபக் ராம் தேன் மிட்டாய்ன்ற பேர்ல(http://www.rubakram.com/2014/06/then-mittai-may-2014.html) காம்போ தர்றாங்க.

    ReplyDelete
    Replies
    1. கொத்து பரோட்டா !! போய் பார்த்திட வேண்டியது தான்!!
      தேன்மிட்டாய் இங்கே அறிமுகம் செய்யப்பட்டுள்ளதே அக்கா!
      மிக்க நன்றி!

      Delete
  23. சாப்பிட்டு விட்டு ஜீரணமாவதற்கு வெயிட்டிங்க்....கல்யாண விருந்துச் சாப்பாட்டை விட "செவிக்கு உணவில்லாத போது சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும்" போல மூளைக்கும், மனதிற்கும் நல்விருந்து படைக்கும் பல வலைத்தளங்களின் அறிமுகம். எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

    ராஜி சகோதரி சொல்லும் தளங்களையும் வழிமொழிகின்றோம் சகோதரி...இரண்டும் சுவைபட படைக்கப்படுபவை.....

    தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்!

    ReplyDelete
    Replies
    1. நச் பின்னூட்டம் சகா! எதை பண்ணினாலும் தெளிவா செஞ்சிட்டு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்வீங்க:)) மன்னிப்பு , friends கிட்ட நோ பார்மாலிடீஸ் !!

      Delete
  24. இன்றைய அறிமுகங்கள் அருமை. ஒருசிலரைத் தவிர மற்றவர்கள் அறிந்தவர்களே...

    என்னவரை அறிமுகப்படுத்தியதில் மிக்க மகிழ்ச்சி...:)

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! அண்ணாவிற்காக நன்றி சொல்லும் அண்ணியை பார்க்கும்போது கண்ணுல தண்ணியா வருது:)) சூப்பர் அண்ணி!!

      Delete
  25. தோழி!...
    அருமை! அருமை! இன்றைய பதிவர்கள் அறிமுகமும் மிக அருமை!

    பசியும் பலவித(ம்)! உம்படைப்பால் ஆர்வம்!
    ருசிக்கவே உந்து(ம்) உணர்வு!

    அனைத்திற்கும் உங்களுக்கு நன்றியுடன்
    அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி தோழி!!
      கவிதை பின்னூட்டம் அருமை!!

      Delete
  26. என்னை பற்றிய அறிமுகத்திற்கு நன்றி

    ReplyDelete
  27. தலை வாழையிலையில் விருந்து வைத்து குளிரக் குளிர பழச்சாறும் வழங்கி!.... அடடா.. அற்புதம்.. ஆனந்தம்!..

    கரும்பு தின்னக் கூலி என்பது இதுதானோ!..

    ReplyDelete
    Replies
    1. அய்யா ! பழச்சாறை குடித்துவிட்டீர்களா?? அடடா ! அபச்சாரம் ஆய்டுத்து!!
      மன்னிசூ!! ஹா..ஹ...அய்யா அது பழச்சாறு அல்ல பல சரக்கு சாறு .அதுதான் cocktail,
      ஒரு பதிவின் பெயர் வந்ததால் போட்டேன்!! பாருங்க அப்பாவி ஆளுங்க இப்படிதான் மாட்டிக்குவாங்க போலா?? நன்றி அய்யா!

      Delete
    2. இது வேறயா!..
      அதுல Kiwi, Peach,Cherry, Orange slice - எல்லாம் மிதக்குதே - ன்னு நினைச்சேன்.. குடிச்சேன்!..
      அதான் இவ்வளவு நேரம் தூக்கம்!?...

      Delete
  28. இன்றைய பதிவுகளை அவற்றின் சிறப்பான பல்சுவையின் அடிப்படையில் அழகாக அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஓரிருவர் இதுவரை அறியாதவர்கள். சென்று பார்க்கிறேன். நன்றி மைதிலி. அறிமுகப்பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அறியாதவர்கள் நேரம் கிடைக்கையில் அறிமுகம் செய்துகோங்க அக்கா!
      நன்றி!!

      Delete
  29. அத்தனை பதிவர்களின் பதிவுகளையும் படித்து ரசித்து இருக்கிறேன்! அவர்களோடு என்னுடைய பதிவும் இடம்பெற்றமை குறித்து மகிழ்கிறேன்! அறிமுகம் செய்தமைக்கு நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க கதம்ப சோறு எனக்கு பிடிக்கும் சார்! நன்றி!

      Delete
  30. மலர்த்தரு என்ற வலைத்தளத்தில் உங்களுக்கு பிடித்த பதிவுகளைப் பற்றியும் எழுதவும்!
    த.ம.10

    ReplyDelete
    Replies
    1. எழுதலாம் தான் அய்யா! ஆனால் அதுக்கு மதுவின்(என் கணவர்) தளம் ஆச்சே! எனது தளம் மகிழ்நிறை:) எனக்கும் அப்படிதான் தோண்டுகிறது அய்யா! நெறைய பேரை மிஸ் பண்ண வேண்டியதா இருக்கு! நேரம் போதவில்லை!

      Delete
  31. என்ன காரணம்னு தெரியல உங்க பதிவு தமிழ்மணத்தில் சினிமாப் பகுதிகளுக்கு தாவிடுச்சு இதுக்குக் காரணம் என்னனு நானும் யோசிக்கிறேன் இன்னும் பதில் கெடைக்கலை. உங்க தலைப்பில் உள்ள "அதிரடி" என்கிற வார்த்தையாக இருக்கலாம்னு நெனைக்கிறேன்..

    என்ன நான் என்ன சொறேன்னு ஏதாவது புரியுதா உங்களுக்கு? நான் தமிழ்லதானே பேசுறேன்?

    ஃப்ரியா விடுங்க! தொடருங்கள்!

    ***********

    FYKI: I have not tried tomato juice filled in any shoes yet. Now I am confused, what shoe should I pick? Which one works the best? I mean which one brings the best taste?

    Nike or Reebok or New Balance?? or It has to be a 100% Leather shoes! LOL

    கொஞ்சம் அந்த ஆர்ட்டிக்கிளை நல்லாப் படிச்சுச் சொல்லுங்கோ டீச்சர்! தேங்க்ஸ்! :)

    Just take it easy, Mythily! :)

    ReplyDelete
    Replies
    1. எங்க போயிட்டீங்க. காணலையே னு நினைச்சேன்:) நீங்க என்ன சொல்லுரிங்கனு புரியிது. நீங்க சொன்னதுக்கு அப்புறம் பார்த்தேன்:)
      ***********
      I read it before sometime ....hmmm I think its vikatan. its juz a fun:)
      thanks for your visit Varun!

      Delete
  32. வாழ்த்துக்கள் சகோதரி ! வாழ்த்துக்கள் சொந்தங்களே !

    ReplyDelete
  33. இன்று அனைத்தும் சுவையான அறிமுகங்கள்!

    ReplyDelete
  34. நான் வலைப்பதிவுக்கு புதிய முகம். இந்த வலைச்சரம் பக்கம் வந்தாலே நிறையா பதிவர்கள் பற்றி தெரிந்து கொள்ள முடிகிரது. இனிமேலத்தான் ஒவ்வொருவர் பக்கமாகச்சென்று படிச்சுப்பார்க்கனும். அறிமுகங்கள் எல்லாமே மிகவும் சுவாரசியமானவங்க. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete