Wednesday, July 16, 2014

எவ்ளோ டீடைலா போறாங்கப்பா; ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!(காவிய புதன்)

      
தலைவா you are so great!!

எழுத்தாளர்: நான் இந்த வருடம் எந்த புத்தகமும் எழுதலையே. ஏன் எனக்கு இந்தவருடம் விருது தருகிறீர்கள்?

        விழா தலைவர்; நீங்க எந்த புத்தகமும் எழுத்தாதது தான் எழுத்துலகுக்கு நீங்க செஞ்ச பெரிய சேவை.

       எழுத்தாளர்: கிர்ர்ர்ரர்ர்ர்ர்
     
             இந்த மாதிரி இல்லாமல் சில பேர் எழுதிய பதிவுகளை படிச்சா, இதுக்கு மேல சொல்ல என்ன இருக்கு? இதைவிட சொல்ல என்ன இருக்கு? என்றெல்லாம் யோசிக்கவைத்துவிடுகிறார்கள். எப்படித்தான் எடுத்துகிட்ட தலைப்பில் இவ்ளோ டீப்பா போறாங்களோ??அந்த மாதிரி அப்பாடக்கர்கள் பதிவுகளைத்தான் இன்னைக்கு அறிமுகம் பண்ணப்போறேன்.

நண்பர்களே !நண்பர்களேன்னு அவர் கூப்பிடும் அழகே தனி! மனுஷனுக்கு எங்கிருந்தான் இப்படி தகவல் கொட்டுமோ!! ஆமாங்கோ,,, நம்ம கரந்தை ஜெயகுமார் அண்ணாவே தான். க்ரூப் தேர்வுகளுக்கு தயாராக இவரது வலைப்பூ போதும். சாம்பிள் பாருங்க.

பார்க்க வாத்தியார் போலவே இருக்கும் இந்த அய்யா ஒரு ஒய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர்கொடுக்கிற இந்த ஹெல்த் டிப்ஸ் பாருங்களேன். அட அவருதான்ப்பா தமிழ் இளங்கோ அய்யா!

இவங்க ரெண்டு பேர். பயம்னா என்னனே தெரியாது(backgroundல காக்க காக்க சூர்யா intro இசை கேட்குதா?) ஆமாங்க பிசாசுங்க இங்கிலீஷ் டீச்சர் ரெண்டு பேரும் சேர்ந்துக்கிட்டு எல்லா துறை பதிவுகளையும் விலாவாரியா போட்டு என்னை கிளீன் போல்ட் ஆக்கும் இவர்கள் தில்லையகத்து க்ராநிகல்ஸ் துளசி அண்ணாவும், தோழி கீதாவும் தான். இதை படிங்க உங்களுக்கே புரியும்.

அதிகபட்சமா பவர் கட்சமயங்களில், இன்வெர்டரும்  காலை  வாரினால் கொசுக்கடியில் என்னால் தூங்க முடியாது. என்ன ஏதேதோ சொல்லுறேன்னு பார்க்கறீங்களா ? இந்த மனிதர் ஒரு வார்த்தையை  ஆய்வு செய்ய எனக்கு தூக்கமே வரலைன்னு சொல்றார்ப்பா. கனமான விஷயங்கள் ஆழமாகச்சொல்லும்   ஊமைக்கனவுகள் ஜோசப் விஜூ அண்ணாவின் இந்த பதிவை பாருங்களேன். டூ மச் சா இல்லை.  

இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை, வலைஉலகின் எழுத்துச்சித்தர், ரைட்டுங்க நம்ம ஜோதிஜி அண்ணா. இவரோட புத்தாண்டு பதிவை படிச்சுட்டு நாம என்ன எழுதி கிழிச்சோம்னு ரொம்ப வருத்தப்பட்டேங்க. சொல்லின் செல்வர். சொற்கள் வெற்று அலங்காரமா இல்லாமல் அர்த்தமுள்ளதாவும், அன்புமிக்கதாகவும் இருக்கும்.இதை படிச்சுப் பாருங்களேன்.

ஆன்மீக பதிவுகள் தான் பெரும்பாலும் எழுதுகிறார், ஆனால் இடையேடையே அவர் எழுதும் இதுபோன்ற ஆழமானபதிவுகளுக்கு நான் விசிறி, அவர்தான் அய்யா துரை செல்வராஜூ அவர்கள்.

சோழ நாட்டில் பௌத்தம் எனும் வலைப்பூவில் அய்யா Dr.ஜம்புலிங்கம் எழுதும் பதிவுகள் எல்லாம் ஆழமானவை. இதை படிச்சு பாருங்க, நான் சொன்னது ரைட்டா?

இந்த பொறியாளர் அம்மணி இருக்காங்களே அவங்க சங்கத்தமிழை கரைத்துக்குடித்து தமிழிலும், ஆங்கிலத்திலும் சங்க பாடல்களை பரப்பும் மந்திர பேனா வித்தைகார தேன்மதுர த்தமிழ் கிரேஸ் தோழியின் பதிவை பார்த்து அப்போப்போ நானும் சங்கத்தமிழ் கத்துக்கிறேன். அதை ஒத்துக்குறேன்.

இவங்க கவிதை பாடினாலும் சரி,  க்வெல்லிங் பண்ணினாலும் சரி, அட பின்னூட்டம் கூட குறள் வெண்பாவில் தட்டுகிற அப்பட்டக்கர் நம்ம தோழி இளமதி யின் இந்த கவிதையை படிச்சுப்பாருங்க.


இளமதி நம்மதோழி தானே. அந்த உரிமையில் ஏம்மா மரபுக்கவிதைகளில் இந்த கலக்கு கல்க்குறீகளே உங்க குரு யாருன்னு கேட்டேன். பாரதிதாசன் அய்யா னு சொன்னங்க. அப்புறம் கலக்கவேண்டியது தானே.  அவர் மரபுகவிதையில் மன்னர் அல்லவா? உங்களுக்கு தெரியும் என்றாலும் எனக்கு பிடித்த இந்த கவிதையை பாருங்கப்பா.

இவங்க பக்கத்தில் நிறைய நிறைய தகவல்கள் கொட்டிக்கிடந்தாலும்  டிஸ்கவரி சேனலுக்கு போட்டியா  ஆஸ்திரேலிய விலங்குகள், பறவைகளை பற்றி கீதமஞ்சரி அக்கா எழுதிய பதிவு என்றால் எனக்கு ரொம்ப பிடிக்கும். நிறைமதியையும்(என் முதல் மகள்) பக்கத்தில் வைச்சுக்கிட்டு தான் படிப்பேன்.

blogging, முகநூல், இப்படி டெக் விசயங்களில் சந்தேகமா இங்க போங்க. பொன்மலர் பக்கங்கள் பயனுள்ள பக்கங்கள்.எனக்கு இப்படி டெக் உதவிகள் தேவைபட்டால் கஸ்தூரி பொன்மலர் பக்கங்களை பார்த்து உதவுவதுண்டு. 

ஆனா  எனக்கே புரிகிற மாதிரியான(அதாவது மரமண்டைக்கு) விளக்கங்கள் கொடுக்கிற உதவும் கரம் ஒன்றை இப்போதான் கொஞ்ச நாள் முன்ன கண்டுபிடிச்சேன்.(நான் ஏன் இவ்ளோ ட்யுப் லைட்டா இருக்கேன்). தமிழ்வாசி பிரகாஷ் சகோவின் இந்த பதிவை தான் சொன்னேன்.

இவர் தொல்லை தாங்க முடியலைப்பா. மனுஷனை பார்த்தாலே காதில் புகை வருது. என்ன சுறுசுறுப்பு, என்ன நினைவாற்றல், என்ன வாசிப்பு சொல்லிகிட்டே போகலாம் சுப்பு தாத்தாவை பற்றி. ரசனைக்கார தாத்தாவின் இந்த தலைப்பை பார்த்தீர்களா?

தற்கால தமிழ் கவிதைகளுக்கு ட்யுஷன் போக விரும்புவோர் இந்த அசிஸ்டன்ட் டைரக்டர் நந்தன் ஸ்ரீதர் அண்ணாவின் பக்கத்திற்கு செல்லலாம். அவ்ளோ அழகான படிமங்கள், வார்த்தைகள், காட்சிப்படுத்தல். இந்த கவிதையை படித்த நொடியில் மனசு கனக்கிறது.

இவர் ஒரு ஒளி ஓவியர். ஆமா இவர் ஒளிப்பதிவாளர் என்பதை இவரது வலைப்பூ அழுத்தமாக சொல்கிறது. திரு விஜய் ஆம்ஸ்ட்ராங்கின் இந்த பதிவு அவரது கலை காதலுக்கு ஒரு சாட்சி.

நான் மிகவும் மதிக்கும் எங்கள் ஊர் தமிழ் தகமையாளர்கள் எல்லாம் தமிழ் இலக்கணத்தில், இலக்கியத்தில் ஒரு சந்தேகம்னா ரொம்ப ஸ்மார்ட்டான ஒரு வழியை பின்பற்றுகிறார்கள். அப்டியே இலக்கணத்தேறல் னு ஒரு ப்லாக் நம்ம கோபிநாத் k.s அண்ணா பக்கம் திருப்பிட வேண்டியதான். நாமளும் பார்ப்போமா .


(சொன்ன விதம் காமெடினாலும் சொன்ன விஷயம் ரொம்ப சீரியஸ்ங்க . அறிமுகப்பதிவுகள் பெரும்பாலும் என் நண்பர்களுடையது தான். அவங்க இந்த காமெடியை எல்லாம் தப்பா புரிஞ்சுக்க மாட்டாங்க, படிக்கிறவங்களுக்கு தான் இந்த விளக்கம்:))சரி ஆழமாய் உழும் அப்பாட்டக்கர்கள் பற்றி இன்னைக்கு பார்த்தோம். இன்னும் அட்ராசிட்டியா கலக்குறவங்க, அதிரடிக்கிறவங்க எல்லாம் இருக்காங்க. தொடர்ந்து பாப்போம் நண்பர்களே. அதுவரை வலைச்சரத்தோடு இணைந்திருங்கள் எனக்கூறி this is mythily signing out, see you again.....bye,bye...(சும்மா ஆர்.ஜே மாதிரி ட்ரை பண்ணினேன்.ஹீ..ஹீ..)



75 comments:

  1. அறிமுக உரையாடல் ரசிக்கும்படி உள்ளது. இன்றைய பதிவர்களில் பலர் முன்பே அறிமுகம் ஆனவர்கள். தொடர்ந்து படிக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. நன்றி அய்யா! தொடர்ந்து படியுங்கள்! புதியவர்கள் தளத்தையும் பொழுது கிடைக்கையில் சென்று பாருங்கள் அய்யா!

    ReplyDelete
  3. ஆரம்ப உரையாடலை படிச்கவுடனே, நீங்களும் துணுக்குகளை எழுத ஆரம்பிச்சிட்டீங்களோன்னு நினைச்சேன்...
    சில தளங்கள், புதிய தளங்கள். சென்று பார்க்கிறேன்.
    அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. போய் பார்த்துட்டு வாங்க சகோ!!
      மிக்க நன்றி!!

      Delete
  4. எனது வலைப்பூ அறிமுகப்படுத்தப்பட்டதறிந்து மகிழ்ச்சி. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஒ! இப்போ தான் பார்க்கறீங்களா? நன்றி அண்ணா!

      Delete
  5. 'சொன்ன விதம் காமெடினாலும் சொன்ன விஷயம் ரொம்ப சீரியஸ்ங்க' - ஏது ஏது மைதிலி..சும்மா சுஜாதா ரேஞ்சுக்குப் போய்கிட்டிருக்கே.. (அது என்னமோ உனக்கு எழுதும்போது மட்டும் உன் பாஷை வந்திருதுப்பா.. கலக்கு கலக்கு.. காவிய புதனா, பெரும்பாலும் தெரிந்த நண்பர்கள்தான்.. தெரியாத ஒருசிலரையும் போய் நண்பர்களாக்கிக் கொள்ள உதவிய தங்கைக்கு .. யாருப்பா அங்க...அந்தத் “தங்கத் தாரகை“ விருத எடுத்துட்டு வா... என்னது? அம்மா தொலைச்சுப்புடுவாங்களா... அப்ப “தங்கத் தங்கை“ குடுத்துடுவோம்.. அடுத்த வியாழனுக்கு என்ன பேர் என்பதைக் காண ஆவலுடன்... -அண்ணன்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! தங்கத்தங்கை !!! சூப்பர் அவார்டா இருக்கே!!
      ரொம்ப நன்றி அண்ணா! விகடன் படித்து வளர்ந்தவர்களால் சுஜாதா டச்சை உணரமுடிகிறது இல்லையா அண்ணா! நாளைய தலைப்பை உங்களுக்கு மட்டும் சொல்றேன்.காதை காட்டுங்கள்.(>>>>>) ஓகே வா:))

      Delete
  6. என்னை வியக்க வைக்கும் மனிதர் இந்த ஜோதிஜி.... மிக அருமையாக எழுதக் கூடியவர் தமிழகம் செல்லாதவர் அவர் பதிவுகளை படித்தால் போது தமிழகம் பற்றி அறிந்து கொள்ளலாம் கடலில் குதித்து முத்து எடுப்பார்கள் என்றுதான் கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால் என் அனுபவத்தில் இவரது தளத்தில் குதித்து நீந்தினாலே முத்துக்களை அள்ளலாம்.

    நான் அறிந்த பதிவர்களில் இவர் ஒருவர்தான் சில லட்சியத்துடன் வாழ்க்கை நடத்துபவர். எனது மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.. சில சம்யங்களில் நான் நினைப்பதுண்டு இந்தியா போய் செட்டில் ஆனால் இவரது வீட்டிற்கு பக்கத்தில்தான் செட்டில் ஆக வேண்டுமென்று...

    நான் போனில் 2 பேர்கூட மட்டும்தான் பேசி இருக்கிறேன் ஒன்று பாலகணேஷ் & ஜோதிஜி மட்டுமே அதில் ஜோதிஜிக்கு என்மேல் ஒரு ஆதங்கம் உண்டு அதாவது நான் என் முழுத்திறமையை பயன்படுத்த மாட்டேங்கிறேன் என்று. உல்கில் நடக்கும் எல்லாம் புரியும் அவருக்கு அவர் நினைக்கும் அளவிற்கு எனக்கு திறமை ஏதும் இல்லை என்று நான் சொல்லுவது மட்டும் புரியவில்லை என்பதை நினைக்கும் போது எங்க்கு மிகவும் ஆச்சிரியமாக இருக்கிறது

    எது எப்படியோ அவர் என்னை நண்பாரக ஏற்றுக் கொண்டுள்ளார் அது எனக்கு மிகவும் சந்தோஷமே

    ReplyDelete
    Replies
    1. ஏம்பா! மதுரை தமிழா! கணேஷ் அண்ணாக்கு முன்னாடியே நாந்தானே உனக்கு அறிமுகம். அண்ணான்கிட்ட பேச முடியுது. தங்கச்சிக்கிட்ட பேச முடியலியா!?

      Delete
    2. ஆஹா! இது தமிழன் சகா தானா???!!!!
      பாருங்க நண்பரை பற்றி சொன்ன உடன் எவ்ளோ அமைதியா பேசுறது !! இதுகூட சூப்பர். என் friend டை போல யாரு ( இது தமிழன் ஜோதிஜி அண்ணாவிற்கு டெடிகேட் பண்றார்:))) but நீங்க சொன்னது எல்ல்லாம் சரி சகா!

      Delete
    3. //அவருக்கு அவர் நினைக்கும் அளவிற்கு எனக்கு திறமை ஏதும் இல்லை// இதை மட்டும் ஏற்றுகொள்ள மாட்டேன் சகா!

      Delete
  7. ஒன்று சொல்ல மறந்துட்டேன் 2 பேர் மட்டும் கூட பேசிய நான் 3 வது நபரிடம் பேச போன் பண்ணினேன் ஆனால் அவர் போனை எடுக்கவே இல்லை... அவர் எந்து இனிமையான குரலை கேட்கும் வாய்ப்பை இழந்துவிட்டார் ஹீ.ஹீ. அவர் வேறு யாருமல்ல நம்ம திண்டுக்கல் தனபாலன் அவர்கள்தான்

    ReplyDelete
    Replies
    1. இது டி.டி.அண்ணா கவனத்திற்கு!!

      Delete
  8. பதிவின் நீளத்தைப் பற்றி கவலைப்படாமல் முழுதான தகவல்களுடன் பகிர்ந்து கொள்வதில் இன்றைய பதிவர்கள் கில்லாடிகள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    உரையாடல் மூலம் அறிமுகம் செய்த விதத்தை ரசித்தேன்... பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. ரைட்டா சொன்னீங்கன்னா!! நன்றி! நன்றி!!

      Delete
  9. இன்றைய அறிமுகங்கள் அனைவரும் தொடர்ந்து நான் விரும்பிப் போய் படிப்பவர்களே!

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் ராஜியக்காவா கொக்கா!! நன்றி அக்கா!

      Delete
  10. அட இன்றைய அறிமுகத்தில நிறைய நட்புகள் இருக்காங்களே.... மற்றவர்களை நேரமிருக்கும்போது தொடர்கிறேன்.. அனைவருக்கும் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது படிங்க அக்கா! அப்படி சொல்லலாம்ல :))
      நன்றி அக்கா!

      Delete
  11. அறிமுகத்துடன், புதியபதிவுகள் அனைத்தும் அருமை பாராட்டுக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கில்லெர் அண்ணா!

      Delete
  12. இன்று அறிமுகமான அனுபம் மிக்க பதிவர்கள், அனைவருக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி கும்மாட்சி சகோ!!

      Delete
  13. அட அட! என்னமா கலக்குது என் அம்மு ஆர் , ஜே லெவல்ல ம் ..ம்.. ம்.. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ...!
    மேலும் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் ...! அநேகர் தெரிந்தவர்கள் ஆகையால் தப்பினேன். சென்று பார்க்கிறேன் அம்மு. வாழ்க நலமுடன் ...!

    ReplyDelete
    Replies
    1. ஒ! நல்ல இருக்க செல்லம். thanks மா!! சென்று பாருங்கள் தோழி!

      Delete
  14. என்ன ஆச்சு, ராசிபலனில் இன்று திடுக்கிடும் திருப்பங்கள் என்று வேறு போட்டு இருந்தது. இங்கே வந்து பார்த்தா நீங்களும் அவர்கள் உண்மைகளும் கதக்களி ஆடியிருக்கிங்க,

    ReplyDelete
    Replies
    1. ஆமா அண்ணா, தமிழன் இவ்ளோ சீரியஸா பேசி நானும் இப்போ தான் பார்கிறேன். ஜோதிஜி அண்ணாவால் என்னென்ன சாதிக்க முடிகிறது பார்த்தீர்களா? :))) தலைவா u r so கிரேட்!!!

      Delete
  15. அன்பின மைதிலி - அருமையான அறிமுகங்கள் - சென்று பார்க்கிறேன் - த.ம 5 ; நல்வாழ்த்துகள் -- நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனா அய்யா! எல்லாம் உங்கள் வழிகாட்டுதலும், ஆசிகளும் தான்,

      Delete
  16. அன்புத் தோழி!...

    வலைச்சரம் தன்னிலே மைதிலி உன்றன்
    கலைச்சரம் காட்டுகிறாய் கண்ணே! - விலைகாணா
    அன்பொடு வித்தகிநீ ஆள! எமதுள்ளம்
    விண்ணுயரத் தாவும் விரைந்து!

    இன்றும் கதம்பமாகப் கலக்கல் பதிவும் பதிவர்களும் அமர்க்களம்!..:)

    அருமையான பதிவர்கள் மத்தியில்.... என்னையுமா?...
    என்னையும் இணைத்து இத்தனை புகழ்ந்து... கண்கள் கரைகின்றன.. தோழி!..
    உங்கள் உள்ளங்களில் இவ்வளவு சிறப்பாக
    எனக்கும் ஓரிடம் இருப்பதை எண்ணி!... மிக்க நன்றி தோழி!

    கூடவே என் மதிப்பிற்குரிய குரு, ஐயா பாரதிதாசனையும் உற்ற தோழர்களையும்
    இங்கு அறிமுகம் செய்தமைக்கு உங்களுக்கு என் உளமார்ந்த நன்றியும்!
    அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்களும்!..

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! எனக்காக என் பெயரிட்டே கவிதையா?
      நோட்டு பண்ணு, நோட்டு பண்ணுன்னு நோட்டு pad ல நோட்டு பண்ணிக்கிடேனே!!
      நம்ம கவிதை அம்புட்டுதேன். உண்மையில் நான் வியக்கும் பதிவர்களில் ஒருவர் நீங்க தோழி!! நன்றி

      Delete
  17. இன்றைய வலைச்சரத்தில் உங்கள் சங்கப் பலகையில் எனக்கும் ஓர் இடம் தந்த சகோதரிக்கு நன்றி! எனது வலைப் பதிவிற்கு வந்து தகவல் தந்த அய்யா முனைவர் B. ஜம்புலிங்கம் அவர்களுக்கும் நன்றி!
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. அய்யா வணக்கம் !! நீங்க வந்தது ரொம்ப சந்தோசம். மிக்க நன்றி!!

      Delete
  18. காலைல இருந்து முருங்கைக் கீரையை ஆய்ந்தே நேரம் தாவி விட்டது..இப்போவந்து தளம் திறந்தா டாக்டர். ஜம்புலிங்கம் ஐயா தகவல் கொடுத்திருந்தார். இங்க வந்து பாத்தா..ஆஹா காதுல தேன் பாயுதே..கண்ணுல மலர்த்தோட்டம் விரியுதே.. :)
    ரொம்ப நன்றி தோழி, என்னையும் பெரிய ஜாம்பவான்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தியதற்கு. பொறுப்பு இன்னும் கூடுகிறது என்பதை உணர்கிறேன்.
    மீண்டும் நன்றி மைதிலி!

    ReplyDelete
    Replies
    1. புடிச்சுக்கோங்க பத்து ஸ்டார்ஸ் :)

      Delete
    2. //பெரிய ஜாம்பவான்களுடன் சேர்த்து// நீங்களும் பெரியாளுதான் கிரேஸ்!! ஸ்டாருக்கு thanks டா செல்லம்:))

      Delete
  19. சிறப்பான அறிமுகங்கள். செய்யப்பட்ட விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த வாரம் சிறக்க வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஆதி மேடம்! நீங்க வந்தது மிக்க மகிழ்ச்சி!!

      Delete
  20. விடியற்காலையிலேயே - டாக்டர். ஜம்புலிங்கம் ஐயா அவர்கள் தகவல் கொடுத்ததை galaxyயில் கண்டேன்.. அதற்கு கொஞ்சம் மொழிப்பிரச்னை!..
    வேலை முடிந்து இப்போது தான் வந்தேன்..

    பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் என்னையும் அறிமுகம் செய்து வைத்த அன்பு உள்ளத்திற்கு நன்றி .. இன்னும் பொறுப்பு கூடுவதை உணர்கின்றேன்..
    வல்லமை தருவாள் சிவசக்தி!..
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..
    வாழ்க .. வளர்க!..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முடியும் அய்யா! மிக்க நன்றி!

      Delete
  21. அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. வலையுலகின் சிறப்பான பதிவர்களின் அறிமுகம் அருமை! அறியாத சிலரையும் அறிந்து கொண்டேன்! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  23. சிறந்த பதிவர்களின் அறிமுகம்... அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  24. “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
    எல்லார்க்கும் பெய்யும் மழை“
    சரளமான அலுப்பூட்டாமல் படிக்கத் தூண்டும் நடைக்கு சான்று காட்டவேண்டுமானால் தயங்காமல் தங்கள் எழுத்தோட்டத்தைக் காட்டலாம்.
    தங்களின் பன்முகத் திறன்கள் கண்டு வியக்கிறேன்.
    இணையத்திற்குப் புதியவன் சொல்லத் தெரியவில்லை.
    அன்பில் நனைகிறேன்.
    நன்றி சகோதரி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா! நீங்க இப்படி ஒரு சான்றிதழ் கொட்டுத்தா அதை frame பண்ணி வரவேற்பறையில் மாட்டிடுவேன். ஒன்னு சொல்லவா சகோ. முதலில் கஸ்தூரி தான் எனக்கு உங்க தளத்தை அறிமுகம் செய்து வாய் ஓயாமல் புகழ்ந்தபடி இருக்க அப்டி என்ன இருக்குன்னு பார்க்கலாமேன்னு தான் உங்க ப்லாக் பக்கம் வந்தேன். கஸ்தூரி சாய்ஸ் எப்பவுமே கிரேட்(என்னை செலக்ட் பண்ணினது உட்பட:)) என்பது மறுபடி நிருபணம் ஆனது!!! மிக்க நன்றி விஜு அண்ணா!

      Delete
  25. வணக்கம்
    சகோதரி
    இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் நல்ல விளக்கவுரை கொடுத்து அறிமுகம் செய்துள்ளீர்கள் இன்று தமதாமாக வந்தேன் ஊர் சுத்தப் போனதால் வலைப்பூபக்கம் செல்லவில்லை நாளைக்கு சந்திப்போம் ... நேரத்துடன்
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. ஹா..ஹா...ஹா..
      நன்றி ரூபன் சகோ!!

      Delete
  26. வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோதரியாரே
    என்றும் வேண்டும் இந்த அன்பு

    ReplyDelete
  27. Replies
    1. நன்றி கரந்தை அண்ணா!
      என்றும் அன்புடன்
      உங்கள் தங்கை!

      Delete
  28. எனக்கு இன்னைக்குத்தான் "புதன்"! :))

    ஏற்கனவே தனியாள் இல்லைனு சொன்னீங்க! இப்போ என்னடானா பெரிய பெரிய ஆட்களை எல்லாம் இப்படி புகழோ புகழ்னு புகழ்ந்து "ஐஸ்" வச்சு எங்கேயோ போயிட்டீங்க! :)))

    அடடா, சூப்பர் ஸ்டார் கிரேஸ், ஒரு ஸ்டார் வண்டியே உங்காத்துக்கு அனுப்பீட்டாங்க போல!

    பாவம் இளமதிக்கு இப்படி ஆனந்தக் கண்ணீர் வர வச்சுட்டீங்க! ! :))

    எல்லா சிறப்பாகத்தான் போயிக்கிட்டு இருக்கு! தொடருங்கள்! :)

    ReplyDelete
    Replies
    1. ஒ! அப்போ நீங்க இந்தியா ல இல்லையா?( என்னது சிவாஜி செத்துட்டாரா?)

      நிஜமா வருண் சகா ஐஸ் வைக்க எல்லாம் சொல்லப்பா.
      I'm very much impressed. மனதுக்கு புறம்பா ஒரு வார்த்தை சொல்றோம்ன அதற்கு வழுவான ரீசன் இருக்கணும், சுயநலம் கூடாதுன்னு நினைக்கிறேன் :))
      அவங்க ரெண்டு பேரும் என் தோழிகள் என்றாலும் என்னைவிட தமிழ் இலக்கியத்தில் தீவிரவாசிப்பு உள்ளவர்கள்:) என்பதால் நான் மிகவும் மதிப்பவர்கள்.
      உங்க ஆசியோட( இது friendly kidding not ice ,ice ) அமர்க்களமா தொடரவேண்டியதுதானே!! anyway குட் நைட் ஆர் குட் மார்னிங்:))

      Delete
  29. சிறந்த அறிமுகங்கள்
    அறிமுக நடை அழகு
    தொடருங்கள்

    ReplyDelete
  30. யம்மாடி... இதில் நான்கைந்து பேரைத் தவிர மற்றவர்கள் நான் படித்திராத தளங்கள். மைதிலி சொன்னப்பறம் பாக்காம இருக்க முடியுமா என்ன...? அவசியம் ஒவ்வொண்ணா போய்ப் பாத்துடறேன்ம்மா.. அழகா வந்திட்டிருக்குது உன் அறிமுகங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அவசியம் பாருங்க அண்ணா! நன்றி:))

      Delete
  31. அறிமுகங்கள் அனைவருமே மிகப்பெரிய பதிவர்கள்! எழுத்தில்! நாங்கள் மிகவும் வியக்கும் பதிவர் திரு ஜோதிஜி திருப்பூர் அவர்களை! மிக நுணுக்கமான கருத்துக்களை மிக அனாயாசமாகவும், மனதில் பதியும் படியும், சரளமாக, ஆழமாக எழுதுபவர். அவரது புத்தகம் தமிழர் தேசம் வாசித்துக் கொண்டிருக்கின்றோம்! எத்தனை எத்தனை விஷயங்கள், அலசல்...மிக மிக ஆழமாக எழுதியிருக்கின்றார். இன்னும் முடிக்கவில்லை..அப்படியே ஆட்கொண்டுவிட்டது! ஊமைக் கனவுகள் ஜோசஃப் விஜு அவர்கள் தமிழில் ஆழ்ந்த புலமை......முத்துனிலவன் ஐயா...வெங்கட் நாகராஜ் அவர்கள்....திருக்குறளை வைத்தே பின்னும் DD ....பேச்சுத் தமிழில் சுவைபட கலக்கும் சகோதரி ராஜி, கவிதைகளிலே கலக்கும் அம்பாள் அடியாள் சகோதரி, இனியா சகோதரி, ரமணி சார்....ஏன் தாங்களும்தான்.....இப்படி இன்னும் பல பல ஜாமபவான்கள் இருக்கும் போது அவர்களின் நடுவில் அணிலாகக், கடுகளவில் இன்னும் அழகாக, ஆழமாகக் கூட எழுதத் தெரியாமல் இருக்கும் இந்த எளியவர்களையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி. தங்களது வார்த்தைகள் மிகையோ என்றும் தோன்றுகின்றது! அதற்கு நாங்கள் தகுதியுள்ளவர்களா என்பதனால். நாங்கள் இன்னும் எழுத்தில் வளர பல தொலைவு செல்ல வேண்டும்......ஜோதிஜி போன்றவர்களுடன் எங்களையும் சேர்த்து எழுதியதற்கு சிறிது வெட்கமாகவும், கூச்சமாகவும் இருக்கின்றது சகோதரி.....அவர் எங்கே நாங்கள் எங்கே......

    இப்போதுதான் பார்த்தோம் சகோதரி....தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்!

    துளசி ஆங்கில ஆசிரியர்.....தோழி கீதா ஜஸ்ட் வீட்டிலிருந்து என்ன செய்வது என்று தெரியாமல் ?! மோட்டு வளையைப் பார்த்துக் கொண்டும்.....கிறுக்கிக் கொண்டும்....

    நன்றி சகோதரி! மிக்க நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப தன்னடக்கம் சகா! நன்றி!

      Delete
  32. அன்புள்ள மைதிலி, வலைச்சர ஆசிரியப்பணிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். தாமத வருகைக்கு மன்னிக்கவும். மிகவும் அழகாகவும் சுவைபடவும் தொகுத்து வழங்குகிறீர்கள். பல அற்புதமான படைப்பாளிகளோடு என்னையும் இங்கு அறிமுகப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி. என் குட்டி வாசகிக்கு என் அன்பான வாழ்த்துக்கள். சக பதிவர்கள் அனைவருக்கும் இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  33. கனமான பதிவுகளைத் தொகுத்துத் தருவது என்கிற உங்கள் தேர்வுமுறை அருமை! நன்றி!

    ஆனால், சில தவறுகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, 'இலக்கனத்தேறல்' என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது, 'இலக்கணத்தேறல்'! 'மேலைநாட்டுகளில்' - தவறு! (இது என்ன புதுவிதமான 'நாட்'டாக -முடிச்சாக- இருக்கிறதே!) 'மேலைநாடுகளில்' என்பதே சரி! கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. திருத்திவிட்டேன். நன்றி அய்யா!

      Delete
  34. நான் எனது ப்திவுகள் அறிமுகம் செய்யப்பட்டதை அறிந்து, மகிழ்ந்து, உள்ளம் கனிந்து,
    பொறுமையுடன் எழுதிய நாலு பக்க பின்னூட்டத்தைக் கடந்த 48 மணீ நேரமாகக் காணோம்.
    வலை எஙகும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    அதைக் கன்டுபிடிப்பவர்கள் திருமதி மைதிலி கஸ்தூரி ரங்கன் அவர்களிடம் சேர்ப்பித்து
    உரிய சன்மானமான த்தை பெறுமாறு
    தாழ்மையுடன் வேண்டுகிறேன்.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்கு நான் அளித்த மறுமொழியையும் காணோம்:)) ஈடில்லா பொக்கிஷம் நீங்க உங்களுக்கு என் அன்பையும் , வணக்கத்தையும் விட பெரிய சன்மானம் கொடுக்கமுடியாது என்றே கருதுகிறேன்:))
      என்றென்றும் அன்புடன்
      மைதிலி

      Delete
    2. நான் லாகிங் செய்யாமல் பின்னூட்டம் டைப் அடித்த்குவிட்டு.. அப்புறம் கூகில் ப்ரஃபைல் செலெக்ட் பண்ணி லாகின் பண்ணினால் பின்னூட்டம் மறைந்து விடுகிறது. இது சமீப காலமாகத்தான் ப்ளாக்ரில் நடக்குது. அதனால, டைப் அடித்த பின்னூட்டத்தை செலெக்ட் செய்து காப்பி பண்ணி computer memory-la வைத்துவிட்டு லாகின் செய்தால்.."எம்ப்டி" யாக உள்ள பின்னூட்டத்தில் "பேஸ்ட்" செய்து தப்பிக்கலாம். இல்லைனா மறுபடியும் மொத்தக் கதையும் டைப் அடிக்குமுன்னாலே விடிஞ்சு போயிடும். கஷ்டம்தான்.

      Whatever you type, please select and "copy" and keep it in memory. It will be in the "memory". Then try publish it. If it disappears as it happened to you, just right click in the response box and "paste" the contents you typed in the memory and try publish it. It works! :)

      Delete
    3. ***அட! ஆமாங்க சார்! பாருங்க ஞானபிரகாசன் அய்யாவிற்கு நான் அளித்த மறுமொழியையும் காணோம்:)) ***

      May be it gets into the "spam box"! Once it appeared, it should not disappear I think. The blog administrator needs to check the "spam box" for the "missing published responses"! :)

      Delete
  35. சிறப்பான அறிமுகங்கள் ! அனைவருக்கும்
    என் இனிய வாழ்த்துக்கள் சொந்தங்களே !

    ReplyDelete
  36. அருமையான அறிமுகங்கள்.
    அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    வலைச்சரம் இவ்வாரம் மிகவும் விறுவிறுப்பாக போகிறது.
    தொடருங்கள். நானும் பொறுமையாக (எனக்கு நேரம் கிடைப்பதில்லை தோழி...))
    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நேரம் கிடைக்கும் போது வாங்க தோழி!!
      மிக்க நன்றி:))

      Delete