கல்விக்கண் திறந்த காமராஜர் பிறந்த தினம் இன்று . |
2012 ஆம் ஆண்டு தொடங்கிய வலைப்பூவில் ஆடிக்கு ஒன்னு , ஆமாவசைக்கு ஒன்னு என்று எங்க ஊர்ல சொல்வதுபோல் பதிவு போட்ட காலத்தில், நாமும் மத்தவங்களுக்கு பின்னூட்டம் போடலாம்னு ஒவ்வொரு வலைப்பூவா போவேன். புதுசா காலேஜ்ல நுழைந்த ஜூனியர், ஒரு சீனியர் வகுப்பில் நுழைந்தது போல் ஒரு உணர்வில், சைலண்டா படிச்சுட்டு எஸ் ஆகிடுவேன்.
அப்போ எங்க மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி அய்யா அருள்முருகன் அவர்கள் புதுகையில் உள்ள தமிழ் ஆசிரியர்களுக்கு ஒரு வலைப்பூ பயிற்சிப் பட்டறை ஏற்பாடு செய்தார் ( நாலு வாத்தியார்களை ஒண்ணா பார்த்தாலே, lesson பிளான் எங்கே? இந்தவருடம் எவ்ளோ பேர் உங்க subject ல பாஸ் என வறுத்தெடுக்கும் அதிகாரிகள் மத்தியில், அவர் வேற மாதிரிங்க) கஸ்தூரி ஆங்கில ஆசிரியர் என்றாலும் அவருக்கு நிறைய தமிழ் ஆசிரியர்கள் நண்பர்கள், அதிலும் நிலவன் அண்ணாவின் அருமை தம்பி வேறு. எனவே அந்த வாய்ப்பு கஸ்தூரிக்கும் கிடைத்தது. கஸ்தூரி ரெங்கனின் மனைவி என்ற விசிட்டிங் கார்டும், நிலவன் அண்ணாவின் ஸ்பெஷல் கேட் பாஸ் சும் கிடைக்க நானும் அந்த ரெண்டு நாள் பயிற்சியில் கலந்துக்கிட்டேன். அந்த ரெண்டு நாள்களில் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்தார்கள். அன்று கிடைத்த நண்பர்களின் சிறந்த படைப்புகளை இன்று உங்களிடம் பகிர்ந்து கொள்வது பெரு மகிழ்ச்சி!
அருள்முருகன் அய்யாவின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒரு கவிதையையும் , ஒரு கட்டுரையும் இங்கு கொடுத்திருக்கிறேன். சமுத்திரத்தை அள்ளித்தர என்னால் இயலுமா ? நீங்களே நீந்திப் பாருங்கள்.
நிலவன் அண்ணாவிற்கு நான் அறிமுகம் செய்வதென்றால் கஸ்தூரியின் வார்த்தையை கடன் வாங்க வேண்டியது தான்.பின்ன சூரியனுக்கு நான் டார்ச் அடிக்கமுடியுமா? பல நூறு மாணவர்களை உற்சாகப்படுத்தியே உச்சியில் ஏற்றி அழகு பார்க்கத்துடிக்கும் தாய்மனம் கொண்ட ஆசான். அண்ணாவின் இந்த கவிதை எனக்கு ரொம்பப் பிடிக்கும்.படிக்கும் குழந்தைகள் வைத்திருக்கும் பெற்றோர் அவசியம் படிக்கவேண்டிய கட்டுரை இது.
இவர் ஒரு சிறந்த ஆசிரியர். தமிழில் சிறந்த, மிகச்சிறந்த , இன்னும் என்ன என்ன இருக்கோ அவ்ளோ பட்டம் கொடுக்கலாம். சகாயம் I.A.S சை உருவாக்கிய பள்ளியில் இன்னும் அவர்போல பலரை உருவாக்கவேண்டும் என்பதை குறிக்கோளாக வைத்திருக்கிறார் என்பதை இவரது பல பதிவுகளை படிக்கும் வாசகர்களால் உணரமுடியும். அதில் ஒன்று. அப்புறம் சார்க்கு புதுக்கோட்டையில் ஒரு ஆங்கிலப்பட போஸ்டரை பார்த்துடக் கூடாது. அடுத்தநாள் நீங்க சுடச்சுட விமர்சனம் படிக்கலாம். ஆம் என் இனிய நண்பன் கஸ்தூரி ரெங்கன்.
அவங்க என்னோட அம்மா. என்னடா குடும்பத்தையேஅறிமுகம் பண்ணுறேன் நினைகிறீங்களா? எல்லாம் தாயா பிள்ளையா பழகிட்டோமே. திருமிகு ஜெயலெட்சுமி (ஏ.இ.இ.ஒ)அவர்கள் ஒரு புத்தகக்கடல். ஸ்போர்ட்ஸ் ரொம்ப பிடிக்கும். வித்தியாசமான காம்பினேஷன் இல்ல! இதையும், இதையும் பாருங்க. புரியும்.
இப்போ தம்பியை பத்தி சொல்லப்போறேன். என் செல்லத் தம்பி, புதுமாப்பிள்ளை. மாணவர்களை , சமுதாயத்தை நேசிக்கிற ஆசிரியர். ஒவ்வொரு பதிவின் மூலமும் சமுதாயத்திற்கு ஏதாவது சொல்லத்துடிக்கும் இவரது கட்டுரையை பாருங்கள். ஒரு சேஞ்சுக்கு சகோ எழுதிய காதல் கவிதை.
இப்போ வரிசையா மூணு சகோதரிகள். மூணு பேருமே மாற்றத்தை விரும்பும் ஆசிரியர்கள். குழந்தைகளை நேசிப்பவர்கள். சகோ மாலதி அவர்கள் எழுதியிருக்கும் இந்த கவிதை சமுதாயத்திற்கு ஒரு சாட்டையடி. இந்த பதிவை பாருங்களேன். எவ்ளோ தகவல்கள்.
சகோ கீதா அவர்கள் வேலுநாச்சியார் எனும் வலைப்பூவில் எழுதும் கவிதைகளில் அழகுணர்ச்சியும், சமூக சிந்தனையையும் பாருங்கள். தொடர்கவிதை பாடி கின்னஸ் சாதனை குழுவில் இடம் பெற்ற சாதனைக்காரர்.
சகோ சுவாதி அவர்கள், சிறந்த பேச்சாளர். புதுகை அறிந்த பெரும் கவிஞர், இதோ இவரது ஹைக்கூக்கள் மற்றும் அழகிய கவிதை ஒன்று .
இந்த இளைஞரை பார்த்தால் புதுகையின் பல இளம் படைப்பாளிகளுக்கு காதில் புகைவரும். முகநூலில் கலக்கும் இவர் சூரி சிவா அய்யா வை போல் எங்கள் பொன்.கருப்பையா அவர்கள் இயல், இசை, நாடகம் என முத்தமிழில் கலக்குபவர்.
விகடன், ஹிந்து என கலக்கும், மற்றொரு சகோ ஸ்டாலின் சரவணன். மனதை வருடும் கவிதைகள் சில, மனதைத் திருடும் கவிதை சில என மயிலிறகு சொருகிய இவர் பேனா சிந்திய கவிதை இதோ.
பாருங்க இன்னும் மூணு பேரை பற்றி சொல்லணும். ஆனா ரிபீட் ஆகாமல் சொல்லனும்ன நான் என்ன செய்றது? இவங்க மூணு பேரும் தமிழை நேசிக்கும், மாணவர்கள் தமிழை நேசிக்கத்தூண்டும் சிறந்த தமிழாசிரியர்கள், கவிஞர்கள், தமிழில் நின்று விளையாடும் நுண்ணிய ரசனைக்காரர்கள்.
அய்யா குருநாதசுந்தரம் அவர்களின் பெருநாழி சென்று பாருங்கள். தமிழ் பால் அவர்கொண்ட பற்றும், தமிழ் வகுப்பின் பால் கொண்ட பேரவாவும் புலப்பட்டும்.
ராசி பனீர்செல்வம் அவர்கள் ,முகநூலில் கலக்கும் கவிஞர், தென்றல் தவழும் மென் கவிதைகள் இவரது ஸ்பெஷல். ஆழமான நடைகொண்ட எழுத்துக்களுக்கு சொந்தகாரர். அந்த கவி மழையில் ஒரு துளி இதோ.
மகாசுந்தர் அண்ணாஅட்டகாசமான பேச்சாளர். இதுவரை நாம் பார்த்த, படித்த கருத்துக்களை வேற்றொரு திசையில் இருந்து அணுகுபவர் என்பதற்கான சான்றாய் இந்த பதிவு. அண்ணாவின் கல்வி குறித்தான ஆகச்சிறந்த ஒரு கவிதை.
இந்த சான்றோர் அவையில் நானும் ஒருத்தியாக இருக்கமுடிந்ததே மகிழ்ச்சி! சுயநலம் கருதா கர்மவீரரின் பிறந்தநாள் , கல்வி வளர்ச்சி நாளான இன்று இத்தனை கல்விப் பணி சான்றோரை பற்றி பேசியது பெரு மகிழ்ச்சி!!அப்புறம் சொல்ல மறந்துட்டேனே. இப்போ பைனல் இயர் மாணவர் போல் வலை உலகே நட்புக்கரம் நீட்டுகிறது. மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:)) நட்பு இதயங்கள் அத்தனைக்கும் நன்றி ! நன்றி!! (ஒரு பிட்டை போட்டாதானே கம்மென்ட் பகுதியில் கொஞ்சம் கம்மியா கலாய்ப்பாங்க)
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன்பதிவுகளை.
என்பக்கம் கவிதையாக.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பேனாமுனைப்போராளி:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சகோ மிக்க நன்றி ! இப்போ தான் படித்துவிட்டு தமிழ்மணம் வாக்களித்து விட்டு வந்தேன்:)
Deleteஆஹா... இது மைதிலி வாரமா... களை கட்டட்டும் ஜோராக... வாழ்த்துகள்மா. படிக்காத மேதையின் பிறந்ததினத்தில் சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறாய் தங்கையே... தொடர்ந்து வருகிறேன்.
ReplyDeleteபாலா அண்ணா ,
Deleteவாங்க ,வாங்க .நேத்து உங்களை எதிர்பார்த்து பாத்து ,கண்ணே பூத்துபோச்சு:))
ரொம்ப thanks அண்ணா:))
//படிக்காத மேதையின் பிறந்ததினத்தில் சிறப்பான பதிவர்களை அறிமுகம் செய்திருக்கிறாய்//
Deleteஎனக்கு பிறந்தநாள் இன்று இல்லை.......இல்லைஇல்லைஇல்லை
//உங்களை எதிர்பார்த்து பாத்து ,கண்ணே பூத்துபோச்சு:))//
Deleteஉங்க கண்ணுல பூத்தது என்ன பூவுங்க.....? கண்ணுல பூத்த பூவை எடுத்து காதுல வைச்சுகிட்டுதான் உங்களை எதிர்பார்த்து பாத்து ,கண்ணே பூத்துபோச்சு சொல்லுறீங்களா? ஹீ.ஹீ
ஒ! நீங்க படிக்காத மேதையா? நான் கூட நீங்க படிச்சுட்டுதான் அமெரிக்கா ல குப்பைக்கொட்டுரிங்கன்ல நினைச்சேன்:))
Deleteவணக்கம்
ReplyDeleteஎல்லாத்தளங்களுக்கும் சென்றுவந்தேன் 2தளங்கள் புதியவை அறிமுகம் செய்து வைத்தமைக்கு நன்றிகள் பல
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப நன்றி சகோ! உங்களை போன்றோர் உதவியால் தான் இந்த பணியை சிறப்பாக முடிக்க முடிகிறது:)
ReplyDeleteநின்று விளையாடும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி டி.டி.அண்ணா!
Deleteவாழ்த்துக்கள் தொடருங்கள் சகோதரியாரே
ReplyDeleteநன்றி கரந்தை அண்ணா , தமவிர்க்கும்:)
Deleteதம4
ReplyDeleteவணக்கம்மா..அறிமுகம் செய்தமைக்கு நன்றி.....சடசடன்னு கொட்டுதே தமிழ் உன்னிடம் வாழ்த்துகள்.
ReplyDeleteரொம்ப நன்றி அக்கா! பின்ன உங்ககூட எல்லாம் பழகுறேனே. அந்த பின்ன்விளைவு:))
Deleteசுயநலம் கருதா கர்மவீரரின் பிறந்தநாள் , கல்வி வளர்ச்சி நாளான இன்று இத்தனை கல்விப் பணி சான்றோரை பற்றி பேசியது பெரு மகிழ்ச்சி!!
ReplyDeleteரசனையான ,கவிதையான அறிமுகங்கள்.. வாழ்த்துகள்..பாராட்டுக்கள்.!
மிக்க நன்றி தோழி!!
Deleteஎன்னம்மா எல்லோரும் வாத்தியாரா இருக்காங்க? ஸ்கூல்ல் இருந்து தப்பி வந்த என்னை திரும்பவும் ஸ்கூலுக்கு இழுத்துகிட்டே போறியேம்மா.... எனக்கு பயமா இருக்கேம்மா..இங்கே அறிமுகப்படுத்தியவங்க கவிதை கிவிதை எழுதமாட்ட்டாங்கள்தானே......சரி நீங்க கூட்டிபோவதால் நீங்க அறிமுகப்படுத்தியவங்களின் தளத்திற்கு போகிறேன் அதற்கு முன்னால் இந்த மாணவனை பற்றி அவங்ககிட்ட சொல்லி வையம்மா.... நான் அங்கு போவதற்குள் கவிதைகிவிதை எழுதி வைச்சுருந்தா ஒழிச்சு வைச்சுக்க சொல்லும்மா. நான் ரொம்ப கோவக்காரன்.அம்ப்டுதான் சொல்லிப் புட்டேன்
ReplyDeleteஹா...ஹா...
Deleteஆல் பீபள் அலெர்ட்!!!!
ReplyDeleteபாண்டியனின் கவிதையை இப்போதான் படித்தேன் பொண்ணை பார்த்துவிட்டு வந்ததுக்கே இப்படி கவிதை எழுதியவர் இப்ப நிச்சயம் சரண்டர் ஆயிருப்பாரே...பாண்டியன் பாண்டிய மன்னர் போல வீரமா இருப்பார் போல என்று நினைத்து இருந்தேன் ஆனால் அவர் என்னவோ ஜெயலிலிதாவின் அமைச்சர்களில் ஒருவராக மாறி அம்மாவே சரணம் என்று ஆகிவிட்டாரே என்று நினைக்கும் போது மனசு வலிக்கிறது. தம்பியாவது என்னை போல இருக்கமாட்டார் என்று நினைத்தால் இப்படி ஆகி போச்சேம்மா
நீங்கள் ஆரம்பத்தில் இப்படி சரண்டர் ஆகாததுனால தான், இப்ப பூரிக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்...
Deleteதம்பி கூட தமிழன் வழி தான். தட் மீன்ஸ் பெண்ணை அவர் பத்து வருசமா பார்த்துட்டு இருக்கறாராம் ;) @ தமிழன்.
Deleteசரியா சொன்னீங்க சகோ@ சொக்கன் சகோ
அடடா இந்தப் பதிவுலகமே டீச்சர் ராஜிமாயிடுச்சு. என்னைமாதிரி என்றும் அரைவேக்காடாயிருக்கும் மாணவர்கள் எல்லாம் என்ன செய்றது? :(
ReplyDeleteபள்ளிக்கூடத்தில் இருந்து தப்பிச்சு வந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தா போற இடமெல்லாம் டீச்சரா இருக்காங்கப்பா!
****மைதிலி ஹாப்பி அண்ணாச்சி:)) நட்பு இதயங்கள் அத்தனைக்கும் நன்றி ! நன்றி!! (ஒரு பிட்டை போட்டாதானே கம்மென்ட் பகுதியில் கொஞ்சம் கம்மியா கலாய்ப்பாங்க)***
நீங்க ஹாப்பினா நாங்களும் ஹாப்பிதான் டீச்சர். ஹாப்பினெஸ் "ஒட்டுவார் ஒட்டி" னு உங்களுக்கு நான் சொல்லணுமா என்ன?
எனக்கெல்லாம் கலாய்க்கிறதுனா என்னனே தெரியாது. நாங்கல்லாம் "தெற்குத் தமிழ்நாடு"ங்க. திடீர் திடீர்னு வடக்குல இதுபோல் இப்படி வார்த்தைகள் கண்டுபிடிச்சு அழகு தமிழை ஒரு படி "உயர்த்திய" பெருமை உங்களைப்போல் வடக்கு மஹாராணிகளுக்கே சேரும்! :)
//பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பிச்சு வந்து கொஞ்சம் நேரம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு வந்தா போற இடமெல்லாம் டீச்சரா இருக்காங்கப்பா! ///
Deleteநான் மட்டும்தான் பள்ளிக்கூடத்தில் இருந்து தப்பிச்சு வந்தவன் என்று நினைத்து இருந்தால் தம்பி வரூணும் அப்படிதான் போலிருக்குது.... நீங்க ஆசியர்கள் கூட்டமா சேர்ந்தா மாணவர்கள் நாங்களும் இப்படி மழைத்துளியாட்டாம் சேருவோமே...
அட ஹாஸ்டல் ல படிச்ச எல்லாருக்கும் இப்படிதான் சகா பல ஸ்லாங் கலந்து பேசுவாங்க !! எங்க ஊர்லயும் ஓட்டுறது தான் but அப்படி சொல்லவதற்காக என் friends என்னை ஒட்டி ஒட்டி ஒரு வழிபண்ணி இப்போ நானும் கலாய்க்கிறேன்:))
Deleteஎன் ஹாப்பினஸ் உங்களுக்கு ஒட்டிகிட்ட சந்தோசம் சகா!
நான் இன்னும் மாணவி தான் உங்கள மாதிரி அப்பாடக்கர்ஸ் கிட்ட இன்னும் கத்துக்க தான் நினைக்கிறேன் @ M.T AND VARUN:))
என்ன அம்மு ரொம்ப கலாய்கிறாங்களா? சரி சரிவிடுங்க எல்லாம் ஒரு தமாசுக்கு தானே.ஆமா கவலைகிவலை படலையே இல்லையா.... அது தானே அம்முவா கொக்கா இதுக்கெல்லாம் அசருமா என் அம்மு. நீ கலக்குடா.அனைத்தும் சிறப்பாகவே உள்ளது. அறிமுகங்களை சென்று பார்க்கிறேன். அறிமுகங்களுக்கும் அம்முவுக்கும் என் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteஇனியா செல்லம் ஒரு புன்னகை சிந்தி , CHEERS சொல்லிட்ட போதுமே!! எனக்கென்ன கவலை:)) நன்றி டா செல்லம்
Deleteநல்ல நாளில் சிறந்த அறிமுகங்கள். வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநீங்க தனி ஆளுன்னு இல்ல நினைச்சுக்கிட்டு இருந்தேன். இப்ப என்னடான்னா, உங்களை சுத்தி பெரிய அறிஞர்கள் கூட்டமே இருக்குதே...
தெரியாத தளங்களை சென்று பார்க்க்ரிஎன் சகோ. வாழ்த்துக்கள்.
எப்டி நீங்க என்னை அப்டி நினைக்கலாம்??
Deleteசொக்கன் சகோ இருக்க நான் தனி ஆள் ஆவேனா:)))
நன்றி சகோ:))
தமிழ் மழை பொழிகிறது...
ReplyDeleteஒவ்வொரு வரியிலும்
உன் குணம் தெரிகிறது..
நன்றி அண்ணா!
Deleteநீங்க பாட்டாவே பாடீடிங்கன்னு நினைக்கிறேன்((ஒவ்வொரு துளியிலும்:)))
சிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteபாராட்டுகள்
நன்றி அய்யா!
Deleteவணக்கம் தோழி!
ReplyDeleteசொட்டச் சொட்ட மழையில் நனைவதுபோல
கொட்டிய பதிவர்களின் அறிமுகம் அருமை!
இன்றைய அறிமுகப் பதிவர்களுக்கும் உங்களுக்கும்
இனிய நல்வாழ்த்துக்கள்!
தோழி உங்க தமிழுக்கு முன்னால் இத்தெல்லாம் சும்மா :)
Deleteரொம்ப நன்றி தோழி!!
அருள் முருகன், மகா சுந்தர் இருவரும் புதியவர்கள். இருவரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி சகோ!
ReplyDeleteஇருவரும் வலைக்கு புதியவர்கள் ஆனால் இலக்கிய கலையில் கரைகண்டவர்கள்:)
Deleteஅவசியம் பாருங்க அக்கா! ரொம்ப நன்றி!
இனிய நண்பன் கஸ்தூரி ரெங்கன்.- இங்க நிக்கிற தங்கையே! அப்புறம்,
ReplyDelete“மனதை வருடும் கவிதைகள் சில, மனதைத் திருடும் கவிதை சில“ எனவரும் சுருக்கமான அறிமுகம் மிகவும் அருமைபா..
“சொல்லுக்குள் வாக்கியத்தை சுருக்கிவச்ச கவிப்புலவா” உன் அறிமுகம், நேர்மையும் கூர்மையும் கொண்டதாக இருப்பது கண்டு வாழ்த்துகிறேன். இந்தவாாாாாாரம் எங்க மைதிலி வாாாாாாரம்.. (கஸ்தூரிக்கு கைகுடுக்கணும்)
ஆழமும் அன்பும் விவரமும் விவேகமும் சொல்லும் சுவையுமாய்...அசத்தல் தொடரட்டும் பா. வாழ்த்துகள்..
அண்ணா,
Deleteவாங்க, கண்டிப்பா கஸ்தூரிக்கு கை கொடுங்க, பின்ன தியாகி ஆச்சே. என் பொழுது பாதி இப்போ இங்கயே போயிடுதே :))
எத்தனை பாராட்டுக்கள்:)) ரொம்ப ,ரொம்ப நன்றி அண்ணா!!
தன்னலம் கருதாத தனிப் பெருந்தலைவரின் நினைவினைப் போற்றியபடி -
ReplyDeleteதாங்கள் தொகுத்தளித்த அறிமுகங்கள் அருமை..
தொடரட்டும் தங்கள் பணி.. நல்வாழ்த்துக்கள்!..
மிக்க நன்றி அய்யா , இதே போல் ஒரு நாளில் முதன்முதலாக உங்களால் அறிமுகப்படுத்தப்பட்டவள் தானே நான்:)
Deleteஅப்படியா!.. மிக்க மகிழ்ச்சி..
Deleteஆனாலும் தமது பெயரை வேறு தளங்களில் பார்க்கும் போது - என் மனம் நம்மவர்கள் .. நம்மவர்கள் என்று சொல்லும் . அது ஏனென்று தெரியவில்லை.. என்றைக்காவது ஒரு நாள் நேரில் சந்திக்கும் போது அது விளங்கும்.. வாழ்க நலம்!..
சிறப்பான அறிமுக ஊர்வலத்தில் இன்று பாக்கியம் பெற்ற அனைவருக்கும் என்
ReplyDeleteமனமார்ந்த வாழ்த்துக்கள் .
ஆஹா! தோழி வந்துட்டாங்க!!!
Deleteமிக்க நன்றி !!
ஹாய் மைதிலி..நீங்க கொடுத்திருக்கும் தளங்கள் எல்லாம் போய் பார்க்கிறேன்..அதுக்கு முன்னாடி உங்களுக்கு ஒரு சபாஷ்! இரண்டு ஸ்டார் ஸ்டிக்கர்ஸ் ஓகே? அதுக்கு மேல வாங்கணும்னா இன்னும் நிறைய உழைக்கணும் :)
ReplyDeleteஎன் பையன்கிட்ட இப்டி சொல்லி சொல்லி பழகிடுச்சு ;-)
Deleteஹை! ரெண்டு ஸ்டார்ஸ் !! வாவ்!!
Deleteதோழிக்கிட்ட ஸ்டார் வாங்க இன்னும் உழைக்கலாம்.
ஸ்கூல் ல நானும் நிறையா ஸ்டார்ஸ் கொடுக்கிறேன் கிரேஸ் செல்லம்:)
நன்றி டா!
ஆமாம், ஸ்டார்ஸ் கொடுத்தா குழந்தைகளுக்குத் தான் எவ்வளவு மகிழ்ச்சி இல்லையா? என் தோழி ஒரு சிறந்த ஆசிரியர் என்பது நான் அறிந்ததே :)
Deleteநீங்கள் குறிப்பிட்டுள்ளவற்றில் ஒரு சில வலைப் பக்கங்கள் மட்டும் நன் இன்னும் செல்லாதவை. அவற்றையும் படித்து விடுவேன். அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteநன்றி முரளி அண்ணா! அவசியம் பாருங்க பொழுது வாய்க்கும் போது:)
Deleteநீங்கள் குறிப்பிட்டுள்ள சில வலைப்பூக்கள் எனக்கு புதியவை, அனைத்தையும் இனி தொடர்கிறேன், அறிமுகமாகிய அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி சகோ! நேரம் வாய்க்கையில் அவசியம் பாருங்க சகோ!!
Deleteகல்விக் கண் திறந்தவரின் பிறந்தநாளில் ஆசிரியர்கள் படைக்கும் வலைப்பூக்களின் அறிமுகம் சிறப்பு! சென்று பார்க்கிறேன்! நன்றி! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி சுரேஷ் சார்!! அவசியம் பாருங்க:)
Deleteஇன்றைய அறிமுகங்களில் பலர் எனக்குப் புதியவர்கள்....
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி வெங்கட் அண்ணா! அவர்கள் விஷயம் நிறைந்தவர்களும் கூட...பாருங்க அண்ணா!
Deleteகவிதை மழையில் நனைந்தோம். பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. தொடக்கத்தில் பெருந்தலைவரை நினைவுகூர்ந்தது பதிவை இன்னும் மெருகூட்டியுள்ளது.
ReplyDeleteநன்றி அய்யா!
Deleteவாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteநன்றி அம்மா!
ReplyDeleteஇந்தப் பதிவில் பலர் புதியவர்கள்! அறிமுகம் கிடைத்ததற்கு மிக்க நன்றி! தங்கலது அழகிய எழுத்து நடையில் அறிமுகங்கள்! ரசித்தோம்!
ReplyDeleteவணக்கம் அக்கா
ReplyDeleteஉங்கள் அன்பு தம்பியையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள். த்ங்களின் எழுத்தால் வலைச்சரம் கலைக்கட்டுகிறது. தொடரட்டும். வாழ்த்துகள் அக்கா.