கடந்த ஐந்து நாட்களாக எனக்குப் பிடித்த வலைப்பூக்களை அறிமுகம் செய்ததில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
கடைசியாக இன்னும் சில பதிவர்களை இன்று பார்ப்போம்.
சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் என்று அறிமுகமாகும் வலிப்போக்கன்.
கடைசியாக இன்னும் சில பதிவர்களை இன்று பார்ப்போம்.
சமூகத்தில் நிலவும் வலிகளை பதிவிடும் தமிழ் பதிவர் என்று அறிமுகமாகும் வலிப்போக்கன்.
விசுAwesomeமின் துணிக்கைகள்
மனசு (வார்த்தைகளின் வசந்த ஊஞ்சல்)-- சே. குமார் அவர்களது தளம். கலையாத கனவுகள் என்ற தொடர்கதை எழுதிக்கொண்டிருக்கிறார். இனிதான் படிக்க வேண்டும்.
சிவிகை (இது அறியாப்பயல் தெரியாமல் கிறுக்குவது) அரவிந்த் அவர்களின் தளம்.
வா. மணிக்கண்டன் அவர்களின் தளம் நிசப்தம். பதிவுலகில் மிகவும் மூத்த பதிவர். இவரது தளங்களில் ஏராளமான முத்துக்கள் சிதறியிருக்கின்றன. அவற்றை படிக்க நிறைய கால அவகாசம் தேவை, தற்பொழுது சில பதிவுகள் படித்திருக்கிறேன்.
மேற்கூறிய வலைப்பூக்கள் எல்லாவற்றிலும் சில பதிவுகளைப் படித்திருக்கிறேன். நேரம் கிடைக்கும் பொழுது மற்ற பதிவுகளையும் படித்துவிடுவேன்.
இன்னும் நிறைய வலைப்பூக்கள் இருக்கின்றன, நேரம் கிடைக்கும் பொழுது என்னுடைய கும்மாச்சி தளத்தில் ஏற்கெனவே எழுதிய சூப்பர் ஸ்டார் பதிவர்கள் என்ற தலைப்பில் தொடர எண்ணம் இருக்கிறது.
எனது தளத்தில் புதிய வலைப்பூக்களையும், காணாமல் போன சில நல்ல வலைப்பூக்களையும் எழுத திட்டமிட்டுள்ளேன்.
வலைச்சரத்தில் எனக்கு இந்த வாய்ப்பை அளித்த வலைச்சர குழுமத்திற்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டு விடை பெறுகிறேன்.
நன்றி, நன்றி
என்றென்றும் அன்புடன்
நன்றி, கும்மாச்சி அவர்களே. சென்ற வாரம் தான் இமா அவர்கள் என்னை இங்கே அறிமுகபடுத்தினார்கள். அப்படி எனக்கு தெரியவந்தது தான் 'வலைசரமும்" அதன் பணியும். மீண்டும் ஒருமுறை அறிம்குபடுதியர்தர்க்கு மிக்க நன்றி. தொடர்ந்து எழுதுங்கள், எழுதுவோம்.
ReplyDeleteவிசு வருகைக்கும் பாராட்டிற்கும் நன்றி. தொடர்ந்து எழுதுவோம்.
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி தனபாலன்.
Deleteஉங்களது ஆசிரியப்பணி மிகவும் சிறப்பானதாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteமீண்டும் ஒரு முறை வலைச்சர அறிமுகம்...
என்னை அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி....
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
குமார் நன்றி.
Deleteவிசுவின் தளத்துக்கு இப்போதான் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கேன். மத்தவங்கலாம் தெரிஞ்ச புள்ளிங்கதான்.
ReplyDeleteவருகைக்கு நன்றி ராஜி,
Deleteதங்களின் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்!! வலைசரத்தில் என்னை அறிமுகப்படுத்திய தங்களுக்கு நன்றிகள் பல..........
ReplyDeleteநன்றி.
Deleteசிறப்பாக - தளங்களை அறிமுகம் செய்து - பணியினை நிறைவு செய்தமைக்கு பாராட்டுகள்.. வாழ்க நலம்..
ReplyDeleteபாராட்டிற்கு நன்றி ஐயா.
Deleteவிசு ஆவ்சேம், வலிப்போக்கன் தளங்களுக்கு சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! அருமையாக ஆசிரியர் பணி ஆற்றியமைக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுரேஷ் நன்றி.
Deleteவணக்கம்
ReplyDeleteஒரு வார காலமும் மிகச்சிறப்பாக வலைப்பூக்களை தொடுத்து மாலையாக வாசக உறவுகளுக்கு கொடுத்துள்ளீர்கள் தங்களின் பணியை சிறப்பாக செய்துள்ளீர்கள் எனது வாழ்த்துக்கள்...கும்மாச்சி...மீண்டும் சந்திப்போம் வலைப்பூவில்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
பாராட்டிற்கு நன்றி ரூபன்.
Deleteஆசிரியர் பணியிலிருந்து ஓய்வா....?
ReplyDeleteபாராட்டுக்கள் கும்மாச்சி அண்ணா.
இன்றைய அறிமுகங்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
அருணா பாராட்டிற்கு நன்றி.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteநன்றி.
தங்களின் மூலமாக பல புதியவர்களை அறிந்துகொண்டோம். சிறப்பாக ஆசிரியப் பொறுப்பை நிறைவேற்றியமைக்கு நன்றி.
ReplyDeletewww.drbjambulingam.blogspot.in
www.ponnibuddha.blogspot.in