வலைச்சரத்தில் ஐந்தாம் நாள்!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு
எனது இனிய காலை வணக்கங்களும்
சுதந்திரப் பொன்னாள் வாழ்த்துக்களும்!
எனது இனிய காலை வணக்கங்களும்
சுதந்திரப் பொன்னாள் வாழ்த்துக்களும்!
கடந்த நான்கு நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும்
பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த
நன்றி! குறிப்பாக வாத்தியார் விஜிகே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்!
1. சுதந்திர தினம் – சுதந்திரம் பற்றிய
வரலாற்றினை எளிமையா கொடுத்திருக்கிற கட்டுரை! சுவாரசியமா இருக்கு சுதந்திரக்காற்றை (சு)வாசியுங்கள்
2. சுதந்திர தினம் – இந்த
கவிதையின் எளிமை என்னைக்கவர்ந்தது! ‘விஜய’குமார் பக்கம் போய்ப்பாருங்க்!
3. இந்தியா பற்றிய தகவல்கள் – நம்
பாரத நாட்டைப்பற்றி சின்சின்னச் செய்திகள் இங்கே இருக்கு!
4. வலைச்சர ஆசிரியரின் பேட்டி: என்னப்போல
கத்துக்குட்டிங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்! இன்னும் தமிழ் (சு)வாசிக்க போய்ப்பாருங்க! அன்பின்
சீனான்னா – சும்மாதானா?
6. கா.ந. கல்யாணசுந்தரம்.
"வீசாத வலைக்குள்
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !"
சிக்குண்டு தவிக்கிறது....
ஒரு மீனவனின் பசி !"
வாழ்க்கைல
- ஒரே ஒரு ரூபாகூட கைல இல்லாம பசி பின்னிஎடுத்தா எப்படி இருக்கும்னு ஒரே ஒருதடவ
அனுபவிச்ச எனக்கு இந்த கவிதையின் வலி(மை)யை உணர முடிகிறது-பிரமாதம்!!! என்ன தவம் செய்தோம்,
பிரிந்து செல்லும் பாதைகள், நட்பின் இலக்கணம், பாலில் நெல் ஹைக்கூ பாணி கவிதைகள் திரும்பிப்
பார்க்கவைக்கின்றன!
7. விண்ணப்பம் - சாலைப் பணியாளர்களின் சிரமத்தை தொட்டுசெ(சொ)ல்லும்
கவிதை! மாரிமுத்துவின் வலப்பூவிற்குள் சென்று
விண்ணப்பத்தைப் பார்வையிடுங்கள்
8. எது நாகரீகம்? நீ
முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்னு பாடுனத கேட்டிருப்போம்! ஆனா இவரோட பாணி “நீ முன்னாலே
போன நான் உனக்கு முன்ன இருப்பேன்” ! என்ன ஒருதடவ கேட்டேபுட்டாரு! “இன்னாடா நீ வூட்லயே குந்திகினு
இருக்க”ன்ற மாதிரி! போய்பாத்தாதான் தெரியுது இவரு
காத்துமாதிரி எல்லா எடத்துலயும் பூந்துடுவாருன்னு!
‘ வெட்டி பந்தா’ எங்கே கொண்டுபோய் விடும்னு மட்டைக்கு
ரெண்டு கீத்தா சொல்லியிருக்காரு! அதுல அருமையா ஹென்றி போர்டு, நேட்டிவிடியோட தெங்கச்சி சாமிநாதன் இவங்களோட
வாழ்க்கைலேருந்துன்னு நல்ல உதாரணங்கள்வேற! இவரு தளத்த முழுசா சொல்லணும்னா – நேரம் பத்தாது!
நீங்களே பொய் செல்ப் செர்விஸ்ல புடிச்சத எடுத்துக்குங்கோ! அவருதாங்க வலை= டபுள்-டி!
9.
காற்றாலே தோற்றமிங்கே! “காயமே இது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா” என்று சொல்லாமல்
சொல்லும் கவிதை! அடைபட்ட காற்றுக்கு(ம்) சுதந்திரம் கிடைத்தால் என்னாகும்? ஆங்கிலத்திலும்
பாண்டித்தியம் காட்டும் விளையும் பயிர் பவித்ரா! வரிகளில் விரியும் வானவில்லுக்குச் சென்று ‘காற்றின் தோற்ற’த்தைக் காணுங்கள்!
10. சி. ஜெயபாரதன், கனடா.
தாகூரை
விரும்பாத கவிஞன் உண்டா ரசிகன்தான் உண்டா? தமிழ்ப்படுத்தப்படும் கவிஞர்களின் கவிதைகள்
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான வார்த்தைப் பிரவாகத்தைத் தூண்டும்! மொழிபெயர்ப்பின்
வலிமையே அதுதானே!
ஜெயரதன் தமிழில் என் மனதிற்கு நெருக்கமான தாகூருக்கு அளித்த கீதாஞ்சலி கீழே! இந்த சுதந்திர
தினப்பொன்னாளில் இதனைப் பகிர்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்! கவியோகி தாகூரைப்பற்றி
மேலும் அறிய கீழே உள்ள வலைப்பூவிற்குள் ப்ரவேசியுங்கள்!
இது எனது படைப்புகளுக்கான நேரம்!
உரிமை!
உளுத்துப்போன
‘நிலை’ ஆனாலும்
உடைந்துபோன
ஜன்னல் ஆனாலும்
பூட்டிய பூட்டு
எடுத்தியம்பும்
மிஞ்சிய வீட்டின்
‘பத்திர’ நிலை!
(ஆக்கம் & புகைப்படம் ரவிஜி---)
தேடல்!
எந்தன் சுயம்
காணும் விருப்பத்தில்
எனது தேடல்கள்--!
நிழலை
கண்ணுற்றேன்!
நிஜத்தினில்-
எப்போது…?
(ஆக்கமும், புகைப்படமும்
புகைப்படத்திலும் – எம்ஜிஆர்)
(இந்த புகைப்படம் எங்கே எப்படி எடுக்கப்பட்டது என்பதனை
முதலில் சரியாக சொல்பவருக்கு நாளை பாராட்டு தெரிவிக்கப்படும்)
சுதந்திரக்காற்றை சுவாசித்து மீண்டும் நாளை சந்திக்கும்வரை வணக்கம் கூறி விடைபெறுவது
உங்களின்
அன்பு
MGR
தேடலும் உரிமையும் அருமை.
ReplyDeleteதங்களுக்கு என் சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
//குறிப்பாக வாத்தியார் விஜிகே அவர்களுக்கு எனது தனிப்பட்ட நன்றிகள்!//
ReplyDeleteஎதற்கு வாத்யாரே ? எனினும் வாழ்க ! ;)))))
லிப்டின் உள்புறம்.
ReplyDeleteகீழிருந்து மேல்ப்புறக்கூரையை பார்த்து எடுத்தது.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா.
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சுதந்திரதின பதிவு சூப்பர்! விடையை நான் சொல்லும் முன் கில்லர் அண்ணா சொல்லீட்டரே:((
ReplyDeleteசுதந்திரதின வாழ்த்துகள்!
விடை சரியெனில் ? பரிசை பெற்றுக்கொள்ளுங்கள் சகோதரி.
Deleteசுதந்திரதின நல் வாழ்த்துக்கள்.!
ReplyDeleteசுதந்திரதினத்திற்கு ஏற்ற சிறந்த தளங்களை தொகுத்து தந்தமைக்கு நன்றி.
இன்று இடம்பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்! தளங்களின் தொகுப்பு, கவிதை அருமை!
ReplyDeleteஇனிய சுதந்திரப் பொன்னாள் வாழ்த்துக்கள்..
ReplyDeleteசுதந்திரத்தின் அருமை-பெருமைகளை, சிறப்புகளைச் சொல்லும் பற்பல பதிவுகள் இங்கே சரமாக தொடுத்தளித்தீர்கள்; மணம் வீசுகிறது; மனம் மகிழ்கின்றது. நன்றிஜி!
ReplyDelete[குழுவினர்: எஸ்.பீ .பி. - எஸ்.ஜானகி ] :
ReplyDeleteஎன் தாயின் மணிக்கொடியே வாழ்வோடு சங்கமமானவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா
உன் மூன்று நிறங்களால் தாய் நாட்டின் மூலங்கள் தந்தவளே!
ஒ...ஒ...ஒ...ஒ... லலாலா லா லலலலா
இந்து கிறிஸ்து முஸ்லிம் பௌத்தம் சமணம்
உனது சபையில் ஒன்று அன்றோ?
நாங்கள் உண்ணும் சோறும் பருகும் நீரும்
அன்னை நீயே தந்ததன்றோ?
நீ வாழ்க தாயே! நீ வெல்க தாயே!
என்றும் எங்கள் கோட்டையில் ஜெயக்கொடி நீதானே!
லாலலலலாலா லலாலாலாலா
ஒ... ஒ... ஒ... ஒ...
http://kalaiyanban.blogspot.com/2010/12/super-star-rajni.html
அன்பர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்!
-கலையன்பன்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteவலைச்சர வாசிப்பாளர்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்....
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
ReplyDeleteமுரிமையும், தேடல் கவிதைகள் மிகவும் அருமை......
ReplyDeleteடிடி யைப் பற்றி அறியாதவர் யார்? !!!! மற்ற வலைத்தளங்களை பார்க்க வேண்டும்.
தாமதமாகிவிட்டது விடை கொடுக்க.....கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு புகைப் படம் உள்ளது எங்களிடத்தில்....ஆனால் என்ன அது பேயோ என்று நினைத்துவிட வாய்ப்புண்டு....ஆனால் தங்களது நல்ல க்ளியராக இருக்கின்றது......
கில்லர்ஜி விடையுடன் டிடி போல ஓடோடி வந்துவிட்டார்....!!!! டிடி வராததற்கு அவர் வீட்டில் நடந்து துக்கம்!