வலைச்சரத்தில் ஆறாம் நாள்!!!!!!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு எனது இனிய காலை வணக்கங்கள.
கடந்த ஐந்து
நாட்களாக எனது அறிமுகங்களுக்கும் இடுகைகளுக்கும் பின்னூட்டமிட்டு பெரும் கெளவரமளித்த
அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
நேற்றைய
எனது கேள்விக்கு எடுத்த இடம், கோணம் இரண்டிற்குமே முதலில் சரியான பதிலளித்த கில்லர்ஜிக்கு எனது பாராட்டுக்கள்! இதற்கு முன்னர் அமெரிக்காவில் வசித்துவரும் எனது
தம்பி சுபாஷ் மட்டுமே சரியான பதிலளித்துள்ளான்! நீங்கள் இரண்டாவது! உங்களின் கூரிய
பார்வைக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்!
இனி இன்றைய அறிமுகங்கள்:
1.கவிதை என்பது உணர்வு கடத்தி: கவிதை எழுதத்துவங்கும் எல்லோருக்குமே மனதில் எழும் கேள்வி “நல்லாத்தானே எழுதியிருக்கேன்?”, அதற்கு ஒரு பதில் – இவற்றையே ஒரு கவிதை வடிவில் அருமையாக தந்திருக்கிறார் திரு. ரமணி அவர்கள்! இது ஏதோ எனது மனதில் எழும்பிய கேள்விக்கு அவர் பதில் சொல்வதுபோலவே தோன்றியது! கவிதை என்றால் என்ன என்பதை இதைவிட எளிமையாக தெளிவாக எவராவது எழுதியிருக்கிறார்களா – தெரியவில்லை!
http://yaathoramani.blogspot.in/2012/12/blog-post_10.html
2.எனக்குள்
ஒருவன்: கண்ணீர் மன அமைதிக்கு தலைசிறந்த மருந்து!
இவ்வாறு துவங்கி ஒரு தன்னாய்வுபோல படிப்பவர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும்
விதத்தில் எழுதியுள்ளார்! அது பலருக்கும் பொருந்தும்படியாக சுவாரசியமாகத்தான்
இருக்கிறது! விருமாண்டி, WWE சூப்பர்
ஸ்டார் ஸ்டோன்கோல்ட் ஸ்டீவ் ஆஸ்டின் இதமாதிரி மெரட்டுற போட்டோவா போட்டு
வச்சிருப்பாரு! பேரயோ அல்லது போட்டோவயோ
பாத்து பயப்படாம உள்ளாற போங்க!
3. Why Speak Tamil : தலைப்புதான் ஆங்கிலத்தில் இருக்கிறது! வெளிநாட்டில் வசிக்கும் தமிழர்கள் தமிழ் பேசும் பழக்கத்தை குழந்தைகளிடம் ஏற்படுத்தவேண்டும்; அது அவர்களாக ஆங்கிலம் கற்றுக்கொள்ளும்பொழுது எவ்வாறு பலனளிக்கும் என்பதனை அருமையாக எடுத்துச்சொல்லும் இடுகை! தாய்மொழியை மறக்கலாமா? அதையே குழந்தைகளுடனான உரையாடலுடன் இடையிடையே சேர்த்து சுவைபடகொடுத்திருப்பது அருமை! மகள்களைப்பற்றிய எனது இடுகைகள் இவரைக் கவர்ந்ததன் ரகசியம் இப்பொழுது புரிகிறது! You go and see! மன்னிக்க! நீங்களும் போய்ப்பாருங்கள் சொக்கன் சுப்ரமணியனின் வலைப்பூவிற்குள்! இரண்டு அழகு, துறு துறு குட்டிகள் உங்களை வரவேற்பார்கள்!
4.
ஓவியத்திற்குக் கவிதை: மரபுக்கவிதையா
எழுதித்தள்ளுறதுல இவர் கில்லாடி! பேனாவ திறந்தாக்க கவிதை – கொட்டும்! வார்த்தை
பிரவாகம் பேசும்! இது ஒரு உதாரணம்! கணக்கில்லாம
எழுதித்தள்ளிய கணக்காயருடைய கொஞ்ச(சு)ம் படைப்புகளுக்கு இந்த மணிக்கதவினை தாழ் திறக்கச் செய்யுங்கள்!
5. சோழ
மண்ணில்: கங்கைகொண்ட சோழபுரம்! நான் சென்றுவந்த
வியக்கவைக்கும் இடங்களில் ஒன்று! மலைப்பை ஏற்படுத்தும், மனதுக்கு இதமளிக்கும்
உன்னத இடங்களில் ஒன்று! அமைதிக்காக போர்தொடுத்த ராஜேந்திரசோழனின் பராக்கிரமங்களோடு
அவன் கட்டிய கோயில், வெட்டிய குளம், மாளிகை (மேடு) என்று பயணம் அழைத்துச்சென்றது
போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார்! கரந்தை ஜெயக்குமார் அவர்களின்
வலைப்பூவிற்குள் வாருங்கள்!
இன்றைக்கான எனது
படைப்புகள்!
‘கடந்த’ காலம்!
குளத்தில் விசிறிய
குசும்புக் கல்லென
கலங்கச் செய்திடும்
துன்பம் எல்லாமே
துணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில்
சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ(இ)துவும்
இங்கே
கடந்து போகும்!
எம்ஜிஆர்---
(பட உதவி -
நன்றி கூகிள்)
பயன்(ப)பாடு!
ஏற்றிவிடும் ஏணிகள்
படியேறுவதில்லை!
நாற்காலிகள் என்றும்
தாம் அமர்வதில்லை!
பாத்திரங்கள் ஒன்றும்
உணவருந்துவதில்லை!
சாலைகள் எங்கும்
பயணிப்பதில்லை!
பயன்படுத்தும் – மனிதன்?
பலன் ஒன்றுமில்லை!
எம்ஜிஆர்---
(பட உதவி -
நன்றி கூகிள்)
மீண்டும் நாளை
சந்திக்கும்வரை உங்களிடம் அன்பு வணக்கம் கூறி விடைபெறுவது உங்கள் MGR
நான் மிகவும் நேசித்து ஆத்மார்த்தமாய் எழுதியது ''எனக்குள் ஒருவன்'' பதிவு அதற்க்கு மாயவரத்தாரிடமிருந்து அங்கீகாரம் கிடைத்தது சந்தோசமே... நன்றி ஐயா.
ReplyDeleteஇனிய நண்பர் கரந்தையார் அவர்களுக்கும், இனிய நண்பர் சொக்கன் மற்றும் இன்றைய அனைத்து அறிமுகங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
‘கடந்த’ காலம்! + பயன்(ப)பாடு! இரண்டுமே ரஸிக்கும் படியாக உள்ளன. வெற்றிகரமாக ஆறாம் நாளையும் அரும்பாடுபட்டு ஒப்பேத்தி முடித்துள்ள வலைச்சர வாத்யாருக்கு என் வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஐயா
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
சிறந்த பதிவர்களுடன் என்னையும் இணைத்து
ReplyDeleteஅருமையாக அறிமுகம் செய்தமைக்கு
மனமார்ந்த நன்றி
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி நண்பரே.
ReplyDeleteமேலும் நண்பர் கில்லர்ஜீ, நண்பர் ஜெயக்குமார் மற்றும் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.
பயன்பாடு கவிதை மிக அருமை. இப்படியெல்லாம் நான் யோசித்ததில்லை. அருமை.
அறிமுகம் ஆனதை சொன்ன நண்பர் கில்லர்ஜீ மற்றும் நண்பர் ரூபன் அவர்களுக்கு நன்றிகள்.
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்று நற்பணியாற்றும் மாயவரத்தான் MGR அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். என்னுடைய வலைப்பூவையும், என் பேத்தியின் வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு என் உளமார்ந்த நன்றி! அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் என் பாராட்டுகள்!
ReplyDeleteதுன்பம் எல்லாமே
ReplyDeleteதுணிந்து எதிர்கொள்ள
தோற்ற(த்)தில் சிறிதாகி
காலத்தின் ஓட்டத்தில்
கரைந்து போகும்!
எ(இ)துவும் இங்கே
கடந்து போகும்!
நம்பிக்கை விதைக்கும் வரிகள்..
அருமையான அறிமுகங்கள்..
பாராட்டுக்கள்.!
தங்களின் பயன்பாடு கவிதை அருமை
ReplyDeleteபயன்பாட்டுக்கில்லை பயன்
பயன்படுத்துவோர்க்கு தெரிவதில்லை
பராமறிக்க அதனை...!!!
அறிமுகங்கள் சகோதரர்கள் சொக்கன் மற்றும் கில்லர்ஜி அவர்களுக்கும், மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகணக்காயரின் தளம் சென்றதில்லை! சென்று பார்க்கிறேன்! உடல் நலமின்மையால் முந்தைய பதிவுகளை வாசிக்க முடியவில்லை! பிறகு வாசிக்கிறேன்! அருமையான தொகுப்பு! நன்றி! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்கள் இரு கவிதைகளும் நல்கருத்துக்கள் கொண்டிருக்கின்றன.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களுக்கு தங்களின் விளக்கங்கள் மிகச் சிறப்பு!
இனிய ஆறாம் நாள்!
இறை நாட்டப்படி மீண்டும் நாளை தொடர்வோம்!
தமிழ்மணத்தில் இணைத்துவிட்டேன்!
ReplyDeleteமுதல் வாக்கும் அளித்துவிட்டேன்.
(திண்டுக்கல் தனபாலன் சாரும் ரூபன் சாரும் இன்று பிசியோ?)
இன்றைய அறிமுகங்கள் மிகவும் பரிச்சயமானவர்களே! கணக்காயன் புதிது. அறிந்து கொள்கின்றோம்.
ReplyDeleteதங்கள் படைப்புகள் இரண்டுமே அற்புதம்.....முதல் கவிதை வாழ்க்கையின் பெரிய தத்துவத்தை உணர்த்தும் ஒன்று என்றால் இரண்டாவது யாதார்த்தத்தைச் சொல்லுகின்றது! அருமை.