என் மானசீக குரு,
கோபு அண்ணா என்று நாம் அன்புடன் அழைக்கும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களை வணங்கி
இந்த வலைச்சர ஆசிரியர் பணியை தொடங்குகின்றேன்.
என்னைப்பற்றி ஒர்
அறிமுகம். பிறந்தது சென்னையில் 29.05.1955
அன்று. பிறந்தது முதல் இன்றுவரை சிங்காரச்
சென்னைவாசி. படிப்பு: Diploma in
Commercial Practice (இது உத்தியோகத்துக்காக), முதுகலை தமிழ் (இது தமிழ் மொழியின் மேல்
உள்ள காதலுக்காக).
குடும்பம்: அன்பான கணவர், ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண்,
இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. அத்துடன்
தாத்தா, பாட்டி பதவி உயர்வும் கிடைத்து விட்டது எங்கள் பேத்தி லயாக்குட்டியின் வரவால்.
உத்தியோகம்: கிட்டத்தட்ட
41 வருடங்கள் வேலை பார்த்தாகிவிட்டது. அதில் 39 வருடங்கள் 9 மாதங்கள் DEPARTMENT
OF TELECOM, BSNL ல் STENOGRAPHER ஆக 22.08.1974 அன்று நுழைந்து EXECUTIVE PRIVATE
SECRETARY ஆக பணி செய்து 31.05.2014 அன்று ஓய்வு பெற்றாகிவிட்டது. தற்பொழுதைய முக்கிய வேலை பேத்தி லயாவின் பின்னே
ஓடுவது. ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல்
DANCING TO THE TUNES OF LAYA.
விருப்பம்: சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதுவது, நல்ல
புத்தகங்கள் படிப்பது, நல்ல திரைப்படங்கள் பார்ப்பது, (அபியும், நானும், சந்தோஷ் சுப்பிரமணியன்,
பழைய நகைச்சுவைப் படங்கள், இன்னும் பல), நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவது மற்றும்
சமையல் . (அலுவலகத்தில் நிறைய முறை மகளிர்
தின நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கி இருக்கிறேன்).
எனக்கு சின்ன வயதில்
இருந்தே ஆசிரியர் பணி செய்வதில் மிகுந்த விருப்பம் இருந்தது. ஆனால் காலத்தின் கோலம். ஆனால் இன்று, இந்த என் நிறைவேறாத ஆசையை வலைச்சர
தற்காலிக ஆசிரியராக்கி நிறைவேற்றி வைத்திருக்கும் திரு அன்பின் சீனா ஐயா அவர்களுக்கும்
என் சிரம் தாழ்ந்த நன்றி. ஆமாங்க ஒரு படத்துல
வடிவேலு சொல்லுவாரே ‘எல்லாரும் பாத்துக்கங்க, நானும் ரௌடி தான், நானும் ரௌடிதான்’ அப்படின்னு. அந்த மாதிரி இனிமேல் நானும் சொல்லிக்கலாம் இல்ல
‘நானும் ஆசிரியர் தான், நானும் ஆசிரியர் தான்’ அப்படின்னு.
குருவே சரணம்
ஏகலைவன் போல் எனக்கு
மானசீக குரு திரு வை கோபாலகிருஷ்ணன் சார்.
’குருர் ப்ரம்மா குருர்
விஷ்ணு
குரு தேவோ மஹேஸ்வரஹ
குரு சாட்சாத் பரப்ரம்மா
தஸ்மை ஸ்ரீ குரவே நமஹா.’
குருவை ப்ரம்மா, விஷ்ணு,
சிவன் ஆகிய மும்மூர்த்திகளுக்கு இணை என்று சொல்கிறார்கள்.
பதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே எனக்கு ரோல் மாடல் + மானஸீக குருநாதர்.
அதனால் என் குருவை
வாழ்த்தி, வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியைத் தொடங்குகிறேன்.
இந்த ஒரு வாரமும் கோபு
அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும்
இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் (தொப்பையப்பனை எல்லா நல்ல
செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) முதலில் கொடுத்து பிறகு என் பணியைத்
தொடங்கலாம் என்று இருக்கிறேன்.
இன்று முதல் நாளாகையால்
அவரது பதிவுடன் தொடங்குகிறேன்.
கோபு அண்ணாவின்
‘அறுபதிலும் ஆசை வரும்’
அவசியமாக எல்லோரும் படியுங்கோ.
அதிலுள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ.
ஹி, ஹி, ஹி, என்ன
ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு
சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில்
பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா
கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான்
நாருன்னு). ஐ, நான் முந்திக்கிட்டேனே.
சரி இப்ப என் வலைப்பூவிற்கு
வருவோம். என்னுடைய படைப்புகளில் சிறந்தது என்று
எனக்குத் தோன்றியவற்றை இங்கு உங்களுக்காக கொடுக்கிறேன். உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுது வருகை தாருங்கள்.
என் வலைத்தளங்கள்:
சிறந்த பதிவுகள்
1.
’பண்புடன்’ குழுவினர் நடத்திய சிறுகதைப் போட்டியில்
இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை. அடிக்கடி ஆழ்துளைக்
கிணறுகளில் விழுந்து இறக்கும் குழந்தைகளைப் பற்றிய செய்திகளைப் படித்ததால் உருவாகிய
கதை.
2.
நான் எழுதி வெளி வந்த முதல் சிறுகதை. பாண்டிச்சேரியிலிருந்து வெளி வரும் ‘மலர்ந்த ஜீவியம்’ மாத இதழில் வெளி வந்தது. இந்தக் கதை முழுக்க முழுக்க 100 சதவீதம் என் சொந்த
அனுபவம்.
3.
’இல்லம்
இனிய இல்லத்தில்’ இருந்து ஒரு விருது
4.
’குடி’யைப்
பற்றி நான் எழுதிய கவிதை. ஒரு நாள் தாம்பரம்
ரயில் நிலையத்தில் ஒரு குடிகாரனையும், அவனருகில்
கையில் குழந்தையுடன் சோகமே உருவாக நின்று கொண்டிருந்த அவன் மனைவியையும் பார்த்த பொழுது
உருவான கவிதை.
5.
அதீதம்.காமில்
வெளி வந்த என் சிறுகதை. எரிவாயு தட்டுப்பாடு இருந்த சமயத்தில் தோன்றிய கதை.
6.
அறுசுவை.காமில்
வெளி வந்த என் சிறுகதை
7.
அறுசுவை.காமில்
வெளி வந்த என் சிறுகதை
8.
’புதிய தலைமுறை’ 29 நவம்பர் 2012 இதழில் ‘வேலைக்குச் செல்லும் பெண்களின் டைரி’ என்ற தலைப்பில் வெளிவந்த என் கட்டுரை.
9.
IN AND OUT
CHENNAI NOVEMBER 16 - 30 இதழில் வெளி வந்த என் கவிதை ‘ஈழம் மலரும்.
10. IN AND OUT CHENNAI JAN 1 - 15, 2013 இதழில் வெளி வந்த என் சிறுகதை. இன்றைய கால கட்டத்தில் பள்ளிக்கூடத்தில்
பிள்ளைகளை சேர்க்க பெற்றோர் படும், படுத்தும் அவஸ்தைகளைப் பார்த்து பிறந்த கதை.
11. IN AND OUT CHENNAI JAN 16-31 ல் வெளி வந்த என் கவிதை ‘வீடு’. இது கூட ஒரு போட்டிக்கு
அனுப்பிய கவிதை. .
12. என் கட்டுரை (குல தெய்வம்).
13. என் கட்டுரை (அரேபியாவில் ஆடு மேய்த்தவர்)
14. IN AND OUT CHENNAI இதழில் என் கவிதை (காலம்
மாறிப் போச்சு)
15. ’குங்குமம் தோழி’ முகப் புத்தகத்தில் என் எழுத்து
16. ‘தினகரன் வசந்தத்தில்’ என் எழுத்து
1.
என்
மானசீக குரு திரு வை.கோபாலகிருஷ்ணன் (கோபு அண்ணா) அவர்களின் வீட்டிற்குச் சென்று அவரைச்
சந்தித்தது.
2.
என்
பணி ஓய்வு பற்றி
3.
என்
மகள் திருமணமாகி ஒரு மாதம் முடிந்ததும் நான் எழுதிய கவிதை.
4.
புகைப்படத்துக்கு
கவிதை
நான் ஒன்றும் பெரிய
எழுத்தாளர் இல்லை. ஏதோ என் மனதுக்குத் தோன்றியவற்றை
கிறுக்கிக் கொண்டிருக்கிறேன். அந்தக் கிறுக்கல்களையும்
நல்ல எழுத்து என்று ஏற்றுக் கொண்டுள்ள நல்ல உள்ளங்களுக்குத் தலை வணங்கி பிரியா விடை
பெறுகிறேன். நாளை மீண்டும் சந்திப்போம். வர்ட்டா…………….
பி.கு: இங்கு இப்ப மின்வெட்டு. மின்சாரம் வந்ததும் மீண்டும் வருகிறேன். நன்றியுடன்
தங்களுக்கு அன்பின் நல்வரவு!..
ReplyDeleteஇனிய அறிமுகம்..
வாழ்க நலம்!..
திரு துரை செல்வராஜூ சார்
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
வணக்கம்
ReplyDeleteஅம்மா
தங்களின் சுய அறிமும் கண்டு உவகை கொண்டேன் இந்த வாரம் வலைச்சரம் சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திரு ரூபன்
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அன்புள்ள ’ஜெ’ மாமி, வணக்கம். ஆசிகள்.
ReplyDeleteஇரண்டு நாட்கள் முன்புதான் விடியற்காலம் தூக்கத்தில், தாங்கள் வலைச்சர ஆசிரியர் ஆவதுபோல நான் ஓர் சொப்பனம் கண்டேன். இதே வலைச்சரத்தில் தங்களின் ஒரு பின்னூட்டத்திற்கான என் பதிலில் கூட இதை நான் தெரிவித்துள்ளேன்:
http://blogintamil.blogspot.in/2014/08/v-behaviorurldefaultvmlo.html
அதுபோலவே தாங்கள் இந்த வார வலைச்சர ஆசிரியர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளது கண்டு பெரும் வியப்பும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.
மனம் நிறைந்த பாராட்டுக்கள். தங்களின் இந்த வார வலைச்சர ஆசிரியர் பணி இனிதே நடைபெற என் அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
>>>>>
ஆஹா, கோபு அண்ணா
Deleteவிடியற்காலை சொப்பனம் பலித்து விட்டதே. எல்லாம் உங்கள் ஆசிதான்.
நீங்களும் ஒரு சொப்பன சுந்தரரோ (என் ஆத்துக்காரர் ஒரு சொப்பன சுந்தரராக்கும்).
வாழ்த்துக்கு நன்றி
அன்புடன்
ஜெயந்தி ரமணி
//என் மானசீக குரு, கோபு அண்ணா என்று நாம் அன்புடன் அழைக்கும் திரு வை. கோபால கிருஷ்ணன் அவர்களை வணங்கி இந்த வலைச்சர ஆசிரியர் பணியை தொடங்குகின்றேன்.//
ReplyDeleteஅடடா, என் தலைக்கு எவ்ளோ பெரிய ஐஸ் கட்டி ! எங்கள் ஊர் திருச்சி மலைக்கோட்டை சைஸுக்கு இப்படி வெச்சுட்டீங்களே ...... ஜெயந்தி !!
இங்கு கொளுத்தும் வெயிலில் குளிர் தாங்க முடியாமல் நான் மட்டும் திணறிப்போகிறேனாக்கும்.
>>>>>
கோபு அண்ணா
Deleteஐசும் இல்லை, நைசும் இல்லை, இது பெரிய சைசு உண்மையாக்கும். அது உங்களுக்கும் தெரியும்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
//பதிவுலகில் எழுதத்தொடங்கிய எனக்கு தொடர்ந்து ஊக்கமும் உற்சாகமும் அளித்துவரும் என் அன்புக்குரிய ’கோபு அண்ணா’ தானே எனக்கு ரோல் மாடல் + மானஸீககுருநாதர். //
ReplyDeleteஎன் அருமை சிஷ்யக்குழந்தாய் !
குரு தக்ஷிணையாக ஓர் ஐந்து சுற்று முறுக்கும், ஓர் நெய்யில் செய்த அதிரஸமும், ஓர் குஞ்சாலாடும் மட்டுமே இதுவரை கொடுத்துள்ளீர்கள். அது போதாது.
அதிரஸம் அதி .... ர ஸ மா க, நெய் மணமாக, உதிர்உதிராக வாயில் போட்டால் அப்படியே கரைவதுபோல மிகவும் ருசியாக இருந்தது.
ஒரு 108 அதிரஸங்களையாவது அவ்வப்போது எனக்கு கொரியரில் அனுப்பி வைக்கவும். ;)
>>>>>
இதென்ன பிரமாதம்.
Deleteஏற்கனவே நான் சொன்னது போல் அதிரசங்களை கொரியரில் வாலாம்பா மன்னிக்கு அனுப்பிவிடுகிறேன். நீங்கள் அவர்களிடம் ‘அதிரசமே, கனிரசமே’ன்னு கேட்டு வாங்கிக்கோங்கோ, அவங்க கொடுத்தா
அன்புடன்
ஜெயந்தி ரமணி
//ஒரு படத்துல வடிவேலு சொல்லுவாரே ‘எல்லாரும் பாத்துக்கங்க, நானும் ரௌடி தான், நானும் ரௌடிதான்’ அப்படின்னு. அந்த மாதிரி இனிமேல் நானும் சொல்லிக்கலாம் இல்ல //
ReplyDeleteநீங்க சொல்லவே வேண்டாம். எங்களுக்கே [குறிப்பாக எனக்கே] இதுபற்றி நல்லாவே தெரியும் .......................... ’ரெளடியே தான்’ என்று
தப்பாக நினைத்துக்காதீங்கோ ....... எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ;)
>>>>>
ஆமாமாம். இப்ப ஒரு குட்டி ரௌடியையும் வளர்த்துண்டு வரேன். அதான் என் பெயரை சூட்டியுள்ள லயாக்குட்டி.
Delete//இந்த ஒரு வாரமும் கோபு அண்ணாவின் வலைப்பூவிலிருந்து எனக்குப் பிடித்த (பிடிக்காத என்று சொல்ல எந்த இழையும் இல்லை), எனக்கு மிகவும் பிடித்த இழையை தினமும் முதலில் கொடுத்து பிறகு என் பணியைத் தொடங்கலாம் என்று இருக்கிறேன்.//
ReplyDeleteஅடடா, அப்படியா ‘ஜெ’ ! இதை நான் சற்றும் எதிர்பார்க்கவே இல்லை. இருப்பினும் இதில் தங்களுக்கு மிகப்பெரியதோர் பெருமை அகஸ்மாத்தாக ஏற்பட உள்ளது.
அதைப்பற்றி தங்களின் வலைச்சர ஆசிரியர் பணி நிறைவு நாளன்று நான் தெரிவிக்கிறேன்.
>>>>>
தன்யனானேன் அண்ணா
Delete//(தொப்பையப்பனை எல்லா நல்ல செயல்களுக்கும் முன் முதலில் வணங்குவது போல்) //
ReplyDeleteஎனக்குள்ள தொப்பையை மறைமுகமாகச் சொல்கிறீர்களோ, என்னவோ ! அதனால் என்ன ? உள்ளதைத்தானே சொல்கிறீர்கள். அது [முழுப்பூசணிக்காயை சோற்றில்] மறைக்கக்கூடிய விஷயமா என்ன ? ;)
எதற்கும் என் இந்தப்பதிவினை அவசியம் படிக்கவும். தொப்பையால் ஏற்படும் பயன்களை ஓர் சிறு கவிதையில்
’உனக்கே உனக்காக’ எழுதியுள்ளேன்:
http://gopu1949.blogspot.in/2011/03/blog-post_28.html
[ Total No. of Comments : 90 ]
>>>>>
கண்டிப்பாக படித்து நீங்கள் திட்டுவதற்குள் பின்னூட்டம் கொடுத்துடறேன்.
Deleteஏற்கனவே பின்னூட்டம் கொடுத்துள்ளீர்கள், குண்டு மாமி. இது தங்கள் தகவலுக்காக !
Delete- கோபு
JAYANTHI RAMANI January 7, 2013 12:43 AM
*****உங்களுக்கென்ன தொந்தியா தொப்பையா; காற்றடித்தால் மிதந்து பறப்பது போல ஓர் உடல்வாகு. பிறகு செள்க்யத்திற்கும் சந்தோஷத்திற்கு என்ன குறைச்சல்! ;)))))*****
//உங்கள் ஆசியில் கண்டிப்பாக சந்தோஷத்திற்கும் சௌக்கியத்திற்கும் குறைச்சலே இல்லை.//
கேட்கவே எனக்கு சந்தோஷமாக உள்ளது.
தீர்க்க சுமங்கலி பவ: [ததாஸ்தூஊஊஊஊ.]
//ஆனால் என் பெண் இதைக் கேட்டால் சிரிப்பாள். ஏன்னா அவ என்னை கூப்பிடறதே, ‘குண்டு மாமி’ன்னுதான்.//
அப்போ அவள் இப்போ [எங்கள் ஊர் திருச்சி மலைவாசல் அருகே உள்ள “சூர்யா” ரெஸ்டாரண்டில் விற்கும் ஓமப்பொடி போல] ஸ்லிம்மாக இருப்பாள் என்று நினைக்கிறேன்.
அவளுக்கு விவாஹம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்குத் தாயும் ஆகி, உங்கள் வயதில் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்போம், எனச்சொல்லுங்கோ.
பிரியமுள்ள
கோபு
//இன்று முதல் நாளாகையால் அவரது பதிவுடன் தொடங்குகிறேன்.
ReplyDeleteகோபு அண்ணாவின்
‘அறுபதிலும் ஆசை வரும்’
அவசியமாக எல்லோரும் படியுங்கோ.
அதிலுள்ள படங்களை மட்டுமாவது பாருங்கோ.
http://gopu1949.blogspot.in/2013/08/blog-post_15.html //
நம் நல்லுறவு வலுப்பெற ஓர் பாலமாக அமைந்துள்ள இந்த என் பதிவினை சிறப்பித்து இன்று இங்கு அடையாளம் காட்டியுள்ளது மிகவும் மகிழ்வளிக்கிறது ‘ஜெ’ ;)
>>>>>
என்னுடன் மட்டுமா?
Deleteஉங்களை சந்திக்கும் எல்லா பதிவர்களையும் நீங்கள் கௌரவிக்கும் விதம் அருமையிலும் அருமை.
உங்களால் எங்கள் வலைப்பூக்களில் மற்றவர்களின் வருகை அதிகமாகிறது.
அதற்கும் மனமார்ந்த நன்றி.
//ஹி, ஹி, ஹி, என்ன ஒரு நமுட்டு சிரிப்பு சிரிக்கிறீங்க. நாரோடு சேர்ந்து, பூவும் மணம் பெரும் தானே. அதனால தான் என்னைப் பத்தி அவர் எழுதிய இழையை முதலில் பதிவிட்டேன். (இதைப் படிச்சுட்டு கண்டிப்பா கோபு அண்ணா யார் பூ, யார் நாருன்னு கிண்டலா கேப்பாரு. எல்லாருக்கும் தெரியும், அவரு தான் பூ, நான் தான் நாருன்னு). ஐ, நான் முந்திக்கிட்டேனே.//
ReplyDeleteபூவும் நாருமாக ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடுத்தபின்னர் தான் அந்தப்பூவுக்கே ஓர் தனிப்பெருமை ஏற்படுகிறது.
அதனால் தான் குறிப்பாக [முடியுள்ள சீமாட்டிகளான] பெண்மணிகள் அதனைத் தங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொள்ளுகிறார்கள். கொண்டாடுகிறார்கள். நாருடன் சேர்ந்து தொடுக்கப்பட்டப் பூவைச்சூடி மகிழ்ந்து, தானும் வாஸம் பெற்று பிறருக்கு நறுமணம் கமழ்பவராகத் திகழ்கிறார்கள்.
பூவுக்கு நார் முக்கியம். நாருக்கு பூ முக்கியம். இரண்டும் இணைந்தால் மட்டுமே இது தலைமேல் வைத்து கொண்டாடப்படுகிறது. அதனால் பூவாக இருந்தால் என்ன? அதைத் தொடுத்து அதில் ஊடுருவியுள்ள நாராக நான் இருந்தால்தான் என்ன? எதுவும் எனக்கு சம்பதமே.
எனக்குத்தாங்கள் பூப் போல.....
அதுபோல தங்களுக்கு நான் பூப்போல.....
நாம் பாசத்துடன் பழகுவது பூவும் நாரும் சேர்ந்து மிகவும் நெருக்கமாகத் தொடுக்கப்பட்ட எங்கள் ஊர் இருவாச்சி மல்லிகைச்சரம் போல !!!!! ;)
>>>>>
நான் மட்டும் அல்ல. என் குடும்பத்தில் அனைவருமே உங்கள் அன்பால் நெகிழ்ந்து தான் போனோம்.
Deleteநன்றியுடன்
ஜெ.
தங்களின் சுய அறிமுகமும், படைப்புக்களின் இணைப்புக்களும் வெகு அருமை.
ReplyDeleteதங்களின் ஆக்கங்கள் அனைத்திலும் 100% என் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கும் என நினைக்கிறேன்.
ஏதேனும் விட்டுப்போய் இருந்தால் அதற்கான இணைப்பினை எனக்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கவும்.
>>>>>
//ஏதேனும் விட்டுப்போய் இருந்தால் அதற்கான இணைப்பினை எனக்கு மெயில் மூலம் அனுப்பி வைக்கவும்.//
Deleteஅந்தப் பேச்சுக்கே இடமில்லை. எல்லா இழைகளிலும் உங்கள் கருத்துக்கள் இடம் பெற்றிருக்கின்றன. நான் தான் எல்லாவற்றிற்கும் மறு மொழி கொடுக்க வேண்டும்.
//பி.கு: இங்கு இப்ப மின்வெட்டு. மின்சாரம் வந்ததும் மீண்டும் வருகிறேன். நன்றியுடன்//
ReplyDeleteஅங்கு தங்களுக்கு மின்சாரப்பிரச்சனை.
இங்கு எனக்கு சம்சார [சாஹரப்] பிரச்சனை.
அதனால் நானும் முடிந்தால்
மீண்டும் மீ ண் டு வருவேன்.
அன்புடன் கோபு அண்ணா
oOo
வீட்டுக்கு வீடு வாசப்படி. அகல, நீளம்தான் வித்தியாசப்படுகிறது.
Deleteசுய அறிமுகம் புதுமை! தொடரட்டும் பணி .வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி.
Deleteஅன்புடன்
ஜெயந்தி ரமணி
அமர்க்களமான அறிமுகம்..
Deleteஇனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..
திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteஉங்கள் வாழ்த்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
தங்களின் அறிமுகமே அமர்களப்படுகிறது அம்மா... வாழ்த்த வயதில்லை ஆகவே வணக்கம் தெடர்கிறேன் தினமும்.
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி.
Deleteஆமாம் உங்கள் பெயர் என்ன?
தாராளமாக நீங்கள் என்னை வாழ்த்தலாம்.
ஈடு, இணை இல்லாத இறைவனை நாம் வாழ்த்துவதில்லையா? அதுபோல் தான்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
எனது பெயர் கில்லர்ஜி தி கிரேட் தேவகோட்டையில் இருப்புக்கொள்ள முடியாமல் இருப்பு (அபுதாபி) யில்.
Deleteஇறைவனை ''வாழ்த்துப்பா'' வேண்டுமானால் ? பாடலாம் அதற்க்கும் எனக்கு பக்குவம் போறா... ஆகவே மீண்டும் வணக்கம்.
அன்புடன்
கில்லர்ஜி.
அபுதாபி.
அறிமுக உரை அருமை! தொடருங்கள்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதிரு ‘தளிர்’ சுரேஷ்
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
இந்த வாரம் வலைச்சரம் ஆசிரியையாகப் பொறுப்பேற்றிருக்கும் சகோதரி ஜெயந்தி ரமணி அவர்களுக்கு வாழ்த்துக்கள். என்னுடைய மனைவியும் BSNL தான்.
ReplyDeleteஉங்களுக்கும் எல்லோரையும் போலவே கோபு அண்ணாதான் குருவாக இருக்கிறார். நல்லது. இனி ஒருவாரத்திற்கு உங்கள் வலைச்சரத்தினுள் V.G.K இன் வெடிச்சரத்தைக் காணலாம்.நன்றி!
த.ம.1
திரு தி. தமிழ் இளங்கோ
Deleteவருகைக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
உங்கள் மனைவியும் BSNL ஆ. நாங்க தான் இமயம் முதல், குமரி வரை எல்லா இடங்களிலும் இருக்கிறோமே. உங்கள் மனைவியை நான் கேட்டதாகச் சொல்லுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
சுய அறிமுகம் அருமை.
ReplyDeleteதிரு சத்யா நம்மாழ்வார்
Deleteபாராட்டுக்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
ஆஹா...
ReplyDeleteஆரம்பம் அமர்க்களம்!
சுவையான அறிமுகம்...
தொடர்வோம்
திரு அ. முஹம்மது நிஜாமுத்தீன்
Deleteவருகைக்கு நன்றி.
வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
ஆரம்பமே அமர்க்களம்...
ReplyDeleteதொடருங்கள் அம்மா...
திரு சே குமார்
ReplyDeleteமனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி