Sunday, August 17, 2014

செல்விருந்தோம்பி வருவிருந்து காத்திருத்தல்

அன்பின் சக பதிவர்களே !
இன்றுடன்  முடியும் வாரத்திற்கு ஆசிரியப் பொறுப்பேற்றவர்  மாயவரத்தான் எம்ஜிஆர்  என்கிற இரவி ஜி
 இவரது  வலைத்தளம்   : மாயவரத்தான் எம்ஜிஆர் 
                                                 (http://mayavarathanmgr.blogspot.com )  )
 தான் ஏற்ற பொறுப்பினை சரி வர, மிகுந்த  ஆர்வத்துடனும்,  பொறுப்புணர்வுடனும்,   ஈடுபாட்டுடனும்  - நிறைவேற்றி நம்மிடமிருந்து முழு மன நிறைவுடன் விடை பெறுகிறார். 
வலைச்சர விதி முறைகளைப் பெரும்பாலும் கடைப்பிடித்திருந்தாலும் ஆங்காங்கே விதிமுறைகள் மீறலும் இருந்தன. 
வலைச்சர விதி முறைகளின் படி பல பதிவர்களையும் அவர்களது பதிவுகளையும் அறிமுகப் படுத்தி இருக்கிறார். சுய அறிமுகமும் உண்டு - முதல் பதிவில் அவரது பதிவுகளில் இருந்து சிறந்த - மற்றவர்களால் விரும்பக்கூடிய பதிவுகள் பலவற்றை அறிமுகப் படுத்தி இருக்கிறார்.
அறிமுகப் படுத்தப் பட்ட பதிவர்களும் பதிவுகளூம் மட்டுமே கீழ்க்கண்ட புள்ளி விபரங்களில் வருகின்றன. 
இவர் எழுதிய பதிவுகள்                         : 007
அறிமுகப் படுத்திய பதிவர்கள்            : 052
அறிமுகப் படுத்திய பதிவுகள்              : 172
பெற்ற மறுமொழிகள்                            : 179
வருகை தந்தவர்கள்                              : 1512
பெற்ற தமிழ் மண வாக்குகள்             : 008

மாயவரத்தான் எம்ஜிஆர் ரவி ஜி   பல் வேறு தலைப்புகளில் பதிவுகள் இட்டிருக்கிறார். பொதுவாக அனைத்துப் பதிவுகளிலும் - பதிவர்களை - ஊக்கப்படுத்தும் நோக்கத்துடன் அவர்களை அறிமுகப் படுத்துவதை தலையாய கடமையாகச் செய்திருக்கிறார்.   

ஒரு பதிவில்  " உலகெங்கிலிருந்தும் உள்ள பல்வேறு நாடுகளிலிலிருந்து வரும் தமிழ் மக்கள் வரும் தளமல்லவா? அதனால் அவர்கள் வாழும் பல உலக நாடுகளின் பல்வேறு மொழிகளிலிலும் அவர்களுக்கு காலை வணக்கம் சொல்வோம்! "     என்று      70 நாடுகளின் பெயர்களையும் அவர்களது மொழியில் காலை வணக்கத்தினையும் பட்டியலீட்டு வெளியிட்டிருக்கிறார்.
 - 
  -    அவரது   கடும் உழைப்பினைப் பாராட்டி,  வாழ்த்தி வழி அனுப்புவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். 

நாளை முதல் துவங்கும் வாரத்திற்கு   ஜெயந்தி ரமணீ   ஆசிரியப் பொறுப்பினை ஏற்கிறார் 

இவரது தளத்தின் பெயர் : மணம் ( மனம் ) வீசுகிறது 
                                                                                                                                                                                     தளத்தின் முகவரி :http://manammanamviisum.blogspot.com      

இவரைப்பற்றி ஒர் அறிமுகம்.  பிறந்தது சென்னையில் 29.05.1955 அன்று..  பிறந்தது முதல் இன்றுவரை சிங்காரச் சென்னைவாசி.   படிப்பு: Diploma in Commercial Practice (இது உத்தியோகத்துக்காக), முதுகலை தமிழ் (இது தமிழ் மொழியின் மேல் உள்ள காதலுக்காக).
குடும்பம்:  அன்பான கணவர், ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண், இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது.  அத்துடன் தாத்தா, பாட்டி பதவி உயர்வும் கிடைத்து விட்டது இவர்களது பேத்தி லயாக்குட்டியின் வரவால்.

உத்தியோகம்: கிட்டத்தட்ட 41 வருடங்கள் வேலை பார்த்தாகிவிட்டது. அதில் 39 வருடங்கள் 9 மாதங்கள் DEPARTMENT OF TELECOM, BSNL ல் பணி செய்து 31.05.2014 அன்று ஓய்வு பெற்றாகிவிட்டது.  தற்பொழுதைய முக்கிய வேலை பேத்தி லயாவின் பின்னே ஓடுவது.  ஆங்கிலத்தில் சொல்வார்களே அது போல் DANCING TO THE TUNES OF LAYA.

விருப்பம்:  சிறுகதைகள், கவிதைகள் எழுதுவது, நல்ல புத்தகங்கள் படிப்பது, நல்ல திரைப்படங்கள் (அபியும், நானும், சந்தோஷ் சுப்பிரமணியன், பழைய நகைச்சுவைப் படங்கள்), மற்றும் சமையல்.

இவரது வலைத்தளங்கள்:
                                                                                                                                                                  இவரைப் பாராட்டி,  வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில்  பெரு மகிழ்ச்சி  அடைகிறோம். 

சக பதிவர் - நாளை முதல் வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்கும் ஜெயந்தி இரமணி அவர்களை வருக வருக என வரவேற்று வாழ்த்துவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி ஜி 

நல்வாழ்த்துகள் ஜெயந்தி ரமணீ 
நட்புடன் சீனா 

19 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. பணி நிறைவு செய்த மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு பாராட்டுக்கள்!

    ஆசிரியப் பணிக்கு வரும் பதிவர் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. திரு முஹம்மது நிஜாமுத்தீன்

      வணக்கம்.
      உங்கள் வாழ்த்துக்களுக்கும், வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி.
      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  3. பணியினைச் சிறப்பாக நிறைவு செய்த இரவி ஜி அவர்களுக்கு நல்வாழ்த்துகள்..

    பணியேற்றிருக்கும் ஜெயந்தி ரமணி அவர்களுக்கு நல்வரவு..

    ReplyDelete
    Replies
    1. திரு துரை செல்வராஜூ சார்

      உங்கள் வரவேற்புக்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  4. ஆசிரியப் பணி முடித்தவருக்கும் பணியாற்ற வரும் அம்மா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. திரு சே குமார்

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  5. வலைச்சர ஆசிரியப் பணி ஏற்கும் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களை வரவேற்கிறேன்! பி எஸ் என் எல் நிறுவனத்தில் நாம் பணிபுரிந்தபோதும் நாம் பணி நிமித்தமாக சந்தித்திருக்கிறோமா தெரியவில்லை! ஆனால் வலைச்சரத்தில் பொறுப்பை நான் உங்களிடம் 'மேக் ஓவர்' செய்கிறேன்!. விந்தைதான்! வலையிலும் அடி பின்னுங்க! வாழ்த்துக்கள்! அன்புடன் MGR

    ReplyDelete
    Replies
    1. RAVIJI RAVI Sun Aug 17, 10:28:00 PM

      //வலைச்சர ஆசிரியப் பணி ஏற்கும் திருமதி. ஜெயந்தி ரமணி அவர்களை வரவேற்கிறேன்! பி எஸ் என் எல் நிறுவனத்தில் நாம் பணிபுரிந்தபோதும் நாம் பணி நிமித்தமாக சந்தித்திருக்கிறோமா தெரியவில்லை! ஆனால் வலைச்சரத்தில் பொறுப்பை நான் உங்களிடம் 'மேக் ஓவர்' செய்கிறேன்!. விந்தைதான்! வலையிலும் அடி பின்னுங்க! வாழ்த்துக்கள்! அன்புடன் MGR //

      அன்புள்ள வாத்யாரே, வணக்கம்.

      நம் அன்பின் சீனா ஐயா அவர்கள் தொடர்ந்து BSNL காரர்களையே, வலைச்சர வாத்யார் ஆக்கி வருகிறார்.

      ஆனால் ஒன்று தெரியுமா உங்களுக்கு!!!!!

      அந்த அன்பின் திரு சீனா ஐயா அவர்களின் தொடர்பு எல்லைக்கு வெளியேயே எப்போதும் தாங்கள் இருவரும் இருந்து வந்துள்ளீர்கள்.

      நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு இடைத்தரகராக நான் மட்டுமே செயல்பட்டு, தங்கள் இருவரையும், வலைவீசித்தேடிக் கண்டு பிடித்து கனெக்ட் செய்துள்ளேன் ..... BSNL வலை [Net Work] சரிவர எனக்குக் கிடைக்காதபோதும். ;)))))

      இது இங்கே ஓர் தகவலுக்காக மட்டுமே !

      அன்புடன் கோபு [VGK]

      Delete
    2. திரு ரவிஜி ரவி

      உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஆசிரியர் பணியை சிறப்பாக முடித்த தங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

      பி.எஸ்.என்.எல் ஒரு கடல். அதில் நான் ஒரு துளி. நான் சென்னைவாசி. நீங்கள் மாயவரத்தான். ஆனால் பலமுறை உங்கள் ஊருக்கு வந்திருக்கிறேன்.

      சந்தித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் ஏப்ரல் 2012 முதல் மே 2014 வரை நான் சென்னையில் உள்ள INSPECTION QUARTERS ALLOTMENT பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு வேளை அதன் நிமித்தம் நீங்கள் பேசி இருக்கலாம்.

      அதென்ன MGR. விந்தை என்ன. உலகம் உருண்டையானது. மேலும் இறைவனின் சித்தம்.

      வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
    3. கோபு அண்ணா

      //நம் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களுக்கு இடைத்தரகராக நான் மட்டுமே செயல்பட்டு, தங்கள் இருவரையும், வலைவீசித்தேடிக் கண்டு பிடித்து கனெக்ட் செய்துள்ளேன் ..... BSNL வலை [Net Work] சரிவர எனக்குக் கிடைக்காதபோதும். ;))))) //

      CONNECTION ஆல்
      CONNECT ஆகாவிடில்
      CONNECTION இருந்து என்ன பயன்.

      அதனால இந்த இரண்டு வாரங்களிலும் (எனக்கு தெரியாமல் முன்பும் இருந்திருக்கலாம்) BEST CONNECTOR நீங்கதான்.


      Delete
  6. பிரியாவிடை பெற்றுச்செல்லும் அன்பின் ரவிஜி என்கிற மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.

    நாளை வலைச்சர ஆசிரியராக ... புத்தம்புது வாஸம் மிக்க மலராக மலரப்போகும் + மணம் [ மனம் ] வீசப்போகும் என் பேரன்புக்குரிய தங்கச்சி ஜெயந்தியை வருக வருக வருக என நல்வாழ்த்துகள் கூறி வரவேற்று மகிழ்கிறேன்.

    பாராட்டுக்கள் + வாழ்த்துகள் ‘ஜெ’ ... தூள் கிளப்புங்கோ.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. திரு ரவிஜி ரவி அவர்களுக்கு என் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

      வாழ்த்துக்களுக்கு மனமார்ந்த நன்றி, நன்றி, நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  7. ஜெயந்தி ரமணீ அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. திரு விச்சு

      மனமார்ந்த நன்றி

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  8. நல்வாழ்த்துகள்
    மாயவரத்தான் எம்ஜிஆர் இரவி ஜி

    நல்வாழ்த்துகள் ஜெயந்தி ரமணீ

    ReplyDelete
    Replies
    1. திருமதி இராஜராஜேஸ்வரி

      என் மனமார்ந்த நன்றி.
      உங்கள் வலைத்தளங்களில் வந்து நான் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete
  9. மாயவரத்தான் எம் ஜி ஆர் அவர்களுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

    ஜெயந்தி ரமணீ அவர்களுக்கு நல்வரவேற்பு.

    ReplyDelete
    Replies
    1. உமையாள் (அருமையான பெயர்)

      என் மனமார்ந்த நன்றி.

      அன்புடன்
      ஜெயந்தி ரமணி

      Delete