வலைச்சரத்தில்
ஐந்தாம் நாளுக்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி.
இன்று என்ன செய்ய.
சரி என்னைக் கவர்ந்த
(நான் அறிந்த) பதிவர்கள் பற்றி சொல்லலாமா?
முதலில் என் குருநாதர்
வை கோபால கிருஷ்ணன்.
மஹா பெரியவாளைப்
பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.
ஆஞ்சனேயருக்கு
ஏன் வடைமாலை (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )
அன்னதான மகிமை
பகுதி 1 முதல் 3 வரை
ஆன்மீகம்
வலைத்தளங்களில்
ஆன்மீகம் என்று தேடிய பொழுது என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரே ஒரு வலைப்பதிவாளர் திருமதி இராஜராஜேஸ்வரி. ஆத்திக அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம் இவர் வலைப்பூ. இவங்க கிட்ட
இருந்து கத்துக்க, காப்பி அடிக்க (அவங்க அனுமதியோட தான்) நிறைய இருக்கு.
இன்று சனிக்கிழமை
அதனால் அவரது பதிவுகளில் இருந்து
திரு ரிஷபன் சார்,
இவரைப் பற்றி ரொம்பவும் சிலாகித்து சொல்வார் கோபு அண்ணா. இவங்கள பத்தி எல்லாம் எழுதற அளவுக்கு எனக்கு என்ன
தகுதி இருக்குன்னு தெரியல. ஆனா ஒண்ணு நிச்சயம்.
இனி என் தகுதியை வளர்த்துக்க முயற்சி செய்வேன் கண்டிப்பாக.
திரு ரமணி சாரின்
நச்சென்ற கவிதை. (எனக்கே சொன்னா மாதிரி இருக்கு
முதல் இரண்டு வரிகள்)
எண்ணிக்கை
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...
தரத்தை முடிவுசெய்வதில்லை என
காகமும் மயிலும் எனக்கு
ஆறுதல் சொல்லிப்போக
தொடர்ந்து நான் பயணிக்கிறேன்
வெற்றி என்பது உணர்வது
பெறுவதல்ல என்னும் இறுமாப்புடனே...
திண்டுக்கல் தனபாலன்
எந்த பதிவிற்கும்
உடனடி பதில் வரும் இவரிடமிருந்து. தற்பொழுது
ஏனோ காணவில்லை. ‘வலைப்பூக்களில் வர்ணஜாலம்’ன்னு இவர் வகுப்பு எடுத்தால்
முதல் மாணவி நான் தான்.
திரு வெங்கட் நாகராஜ்
– பல போட்டிகளைப் பகிர்ந்தும், தானே புகைப்பட கவிதைப் போட்டிகளையும் நடத்துபவர்.
இவர் எழுதும் ப்ரூட்
சாலட் போலவே பல விஷயங்களை உள்ளடக்கிட அருமையான பதிவுகள்.
சுப்புத் தாத்தா
– பேரனோட இவர் டாக்டர் வீட்டுக்குப் போன கதையை படியுங்க.
அப்பாவி தங்கமணி. அடுத்த முறை சென்னைக்கு வந்துடுங்க தங்கமணி. தங்கமா ஒரு சந்திப்பு ஏற்படுத்திடலாம்.
ஹுசைனம்மா – நான்
‘பண்புடன்’ குழுவினர் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு வாங்கிய போது ஜுசைனம்மாதான்
முதல் பரிசு வாங்கினார். வாழ்த்துக்கள் ஜுசைனம்மா.
வலைப்பதிவாளர் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்தப் பூங்கொத்து.
நாளை மட்டும் மீண்டும் வருகிறேன். நாளன்னிக்கு உள்ள விடமாட்டாங்கோ.
வணக்கத்துடனும், நன்றியுடனும்
ஜெயந்தி ரமணி
இன்றைய தொகுப்பிலுள்ள தளங்களும் ரசனையானவை..
ReplyDeleteவாழ்க நலம்!..
திரு துரை செல்வராஜூ சார்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
எமது தளத்தை மிகவும் சிறப்பாக அறிமுகம் செய்து வைத்தமைக்கு மனம் நிறைந்த
ReplyDeleteஇனிய நன்றிகள்..
திருமதி இராஜராஜேஸ்வரி
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
சிறப்பான தளத்தை சிறப்பாகத்தானே அறிமுகம் செய்ய முடியும். இப்படி ஒரு தளத்தை அமைத்து அருமையாக எழுதுவதற்கு என் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிரு சே. குமார்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
எனது தளத்தினை இங்கே அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி ஜெயந்தி ரமணி அவர்களே.......
ReplyDeleteமற்ற வலைப்பதிவாளர்களுக்கும் வாழ்த்துகள்.
திரு வெங்கட் நாகராஜ் சார்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி. அறிமுகன்னு சொல்ல முடியாது. நீங்கள் எல்லாம் ஏற்கனவே அறிமுகமானவர்கள். பூக்கடைக்கெல்லாம் விளம்பரம் தேவை இல்லையே.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அன்புள்ள ஜெயா,
ReplyDeleteவணக்கம்மா.
வலைச்சர ஆசிரியர் பணியை ஏற்று ஆறாம் நாளும் அழகாக முடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
>>>>>
இனிய காலை வணக்கம் கோபு அண்ணா
Deleteவாழ்த்துக்கும், பாராட்டுக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
//சரி என்னைக் கவர்ந்த (நான் அறிந்த) பதிவர்கள் பற்றி சொல்லலாமா?
ReplyDeleteமுதலில் என் குருநாதர் வை கோபால கிருஷ்ணன்.
மஹா பெரியவாளைப் பற்றி இவர் எழுத்துக்களைப் படியுங்களேன்.
ஆஞ்சனேயருக்கு ஏன் வடைமாலை (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )
http://gopu1949.blogspot.in/2014/01/108.html//
ஆஹா, இந்த வடைப் பதிவினைத் தேர்ந்தெடுத்து அடையாளம் காட்டியுள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. ஏனெனில் வடை என்றால் எனக்கு அதன்மேல் ஒரு தனி பிரியம் உண்டு.
[பஜ்ஜி என்றாலும் அப்படியே.]
// (சுத்திச் சுத்தி சாப்பாட்டு மேல தான் வந்து நிக்கறது புத்தி )//
அதில் ஒன்றும் தப்பே இல்லை ஜெயா. நமக்குப் பிடித்தமானதைத்தான் செய்து ஸ்வாமிக்கு நைவேத்யம் என்ற பெயரில் சும்மாக் காட்டிவிட்டு நாமே தான் ருசித்து சாப்பிட்டு வருகிறோம். ஸ்வாமியே சாப்பிட ஆரம்பித்தால் இதுபோலெல்லாம் சிரத்தையாக நாம் செய்வோமா, ஜெயா. சற்றே நினைத்துப்பாருங்கோ.
>>>>>
அதில் ஒன்றும் தப்பே இல்லை ஜெயா. நமக்குப் பிடித்தமானதைத்தான் செய்து ஸ்வாமிக்கு நைவேத்யம் என்ற பெயரில் சும்மாக் காட்டிவிட்டு நாமே தான் ருசித்து சாப்பிட்டு வருகிறோம். ஸ்வாமியே சாப்பிட ஆரம்பித்தால் இதுபோலெல்லாம் சிரத்தையாக நாம் செய்வோமா, ஜெயா. சற்றே நினைத்துப்பாருங்கோ.//
Deleteஆமாமாம். சாமி சாப்பிட ஆரம்பிச்சா அவருக்கு நைவேத்யம் பண்ணாமயே எல்லாரும் சாப்பிட்டுடுவோமே.
இங்க ஒரு குட்டிக் கத்திரிக்கா, குட்டி இட்லியை சாப்பிட்டுட்டு பக்கத்துல வந்து உக்காந்துண்டு ஆரம்பிச்சுட்டா, ‘பாட்டி, சரிகமபதநி போடு, விஷமக்காரக் கண்ணன் போடுன்னு. இனிமே இவள சமாளிச்சுட்டுதான் இங்க வர முடியும்.
//அன்னதான மகிமை பகுதி 1 முதல் 3 வரை
ReplyDeletehttp://gopu1949.blogspot.in/2013/12/98-1-of-3.html
http://gopu1949.blogspot.in/2013/12/99-2-of-3.html
http://gopu1949.blogspot.in/2013/12/100-1-2-3-of-3.html //
இதுவும் மிகச்சிறப்பான பதிவு. இதிலும் சாப்பாட்டுக்கே முக்யத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிறருக்கு உணவளித்து மகிழும் உன்னதமான, உத்தமமான தம்பதியினரைப் பற்றிய கதையாக உள்ளது.
இதனை அடையாளம் காட்டி சிறப்பித்துள்ள தங்களுக்கும் ‘அன்னதானம்’ செய்த புண்ணியம் உண்டு.
>>>>>
ஆமாம். தானத்தில் சிறந்தது அன்னதானம். இதன் சிறப்புக்களை அவ்வப்பொழுது மகா பெரியவா சொல்லி இருக்கிறார்கள்.
Delete//ஆன்மீகம்
ReplyDeleteவலைத்தளங்களில் ஆன்மீகம் என்று தேடிய பொழுது என் சிற்றறிவிற்கு எட்டிய ஒரே ஒரு வலைப்பதிவாளர் திருமதி இராஜராஜேஸ்வரி. ஆத்திக அன்பர்களுக்கு அரிய பொக்கிஷம் இவர் வலைப்பூ. இன்று சனிக்கிழமை அதனால் அவரது பதிவுகளில் இருந்து http://jaghamani.blogspot.com/2014/08/blog-post_21.html//
சபாஷ் ஜெயா .... இந்தப்பதிவினில் அவர்கள் காட்டியுள்ள முதல் காணொளியைப் பார்த்தாலே போதும். நம் மனக்கவலையெல்லாம் காற்றில் பறந்து போகும்.
//இவங்க கிட்ட இருந்து கத்துக்க, காப்பி அடிக்க (அவங்க அனுமதியோட தான்) நிறைய இருக்கு.//
ஆமாம், ஜெயா. நேற்று ஒரு ஊரே திரண்டு வந்து ஒரு இராமர் பட்டாபிஷேகப்படத்தை இவர்களிடம் பலமுறை கெஞ்சிக்கேட்டு பெற்றுச் சென்றுள்ளனராக்கும்.
நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பினும், அந்த டீச்சரம்மா நமக்கு எதுவுமே சொல்லித்தரவே மாட்டாங்கோ.
அழுத்தம் ... மஹா அழுத்தம். ஆனால் சமத்து ... அழுந்தச் சமத்தூஊஊஊஊ.
எனக்குக்கிடைத்ததோர் பொக்கிஷம் இந்தப்பதிவர் என நினைத்து, நானும் தினமும் பொழுது விடிந்ததும் முதல் வேலையாக இவர்கள் பதிவுப்பக்கமே போவதுண்டு.
பிறகு எனக்கு ஒழிந்தபோது கருத்தளிப்பதும் உண்டு.
இந்த என் அம்பாளின் பதிவினில் என் கருத்துக்கள் இல்லாத ஒரேயொரு பதிவினைக் காட்டினால் ஜெயாவுக்குத் தகுந்த சன்மானம் அளிக்கப்படும்.
ஆனால் அதுபோல காட்டுவது கஷ்டம் ஜெயா. ஏனெனில் சுமார் 1400 பதிவுகளில் உள்ள பின்னூட்டங்களைத் தாங்கள் தேடிக் கண்டுபிடிக்கும்படியாக இருக்கும்.
மிகவும் களைத்துப் போய்விடுவீர்கள்.
’ஜெ’ க்கும் ’இராஜராஜே’க்கும் மட்டுமே 100% பதிவுகளுக்கும் நான் பின்னூட்டம் அளித்துள்ளேனாக்கும்.
என் பேரன்புக்குரியவருடன் [நம்மாளுடன்] சேர்த்து என் வலைத்தளத்தினையும் இன்று பின்னிப் பிணைந்து காட்டியுள்ளதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, ஜெயா.
நன்றியோ நன்றிகள். ஸ்பெஷல் நன்றிகள்.
>>>>>
//ஆமாம், ஜெயா. நேற்று ஒரு ஊரே திரண்டு வந்து ஒரு இராமர் பட்டாபிஷேகப்படத்தை இவர்களிடம் பலமுறை கெஞ்சிக்கேட்டு பெற்றுச் சென்றுள்ளனராக்கும். //
Deleteஅப்படியே சிபாரிசு செஞ்சு எனக்கும் ஒரு இராமர் பட்டாபிஷேகப் படம் வாங்கித் தாங்களேன்.
//நாம் இவர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருப்பினும், அந்த டீச்சரம்மா நமக்கு எதுவுமே சொல்லித்தரவே மாட்டாங்கோ. //
அவங்க சென்னையில இருக்காங்களா? நைசா நான் போய் கத்துண்டு வந்து உங்களுக்கும் சொல்லித்தரேன்.
//இந்த என் அம்பாளின் பதிவினில் என் கருத்துக்கள் இல்லாத ஒரேயொரு பதிவினைக் காட்டினால் ஜெயாவுக்குத் தகுந்த சன்மானம் அளிக்கப்படும். //
அந்த விளையாட்டுக்கே நான் வரல. ஏன்னா அது முடியவே முடியாதுன்னு தெரியும்.
//மிகவும் களைத்துப் போய்விடுவீர்கள்.//
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.’ முதல்ல உங்க தளத்துல வலம் வரேன்.
//’ஜெ’ க்கும் ’இராஜராஜே’க்கும் மட்டுமே 100% பதிவுகளுக்கும் நான் பின்னூட்டம் அளித்துள்ளேனாக்கும்.//
நான் இப்ப ஒண்ணும் உறுதி மொழி தரதா இல்லை. சொல்லிட்டு செய்யலேன்னா ரொம்ப தப்பு. செஞ்சுட்டு சொல்றேன்.
//என் பேரன்புக்குரியவருடன் [நம்மாளுடன்] சேர்த்து என் வலைத்தளத்தினையும் இன்று பின்னிப் பிணைந்து காட்டியுள்ளதில் என் மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது, ஜெயா. //
உங்கள் இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு நானும் ஒரு காரணம் என்று நினைக்கும் போது எனக்கும் மகிழ்ச்சியே.
//நன்றியோ நன்றிகள். ஸ்பெஷல் நன்றிகள்.//
நன்றிக்கு நன்றி.
ஆமாம், ஜெயா. நேற்று ஒரு ஊரே திரண்டு வந்து ஒரு இராமர் பட்டாபிஷேகப்படத்தை இவர்களிடம் பலமுறை கெஞ்சிக்கேட்டு பெற்றுச் சென்றுள்ளனராக்கும். - VGK
Deleteஅப்படியே சிபாரிசு செஞ்சு எனக்கும் ஒரு இராமர் பட்டாபிஷேகப் படம் வாங்கித் தாங்களேன். - Jaya
அதெல்லாம் ஒன்றும் கஷ்டமில்லை ஜெயா. நாம் பிறகு வாங்கிக்கொள்ளலாம்.
இவர்களிடமிருந்து வீட்டு விலாசமோ, ஃபோன் நம்பரோ, மெயில் ID யோ எதுவும் அவ்வளவு எளிதில் வாங்க முடியாது என்பதைத் தெரிந்துகூட, இதுபோல இராம பட்டாபிஷேகப்படம் எங்கள் ஊருக்காக வேண்டும் என்று ஒருவர் INDIRECT ஆகக் கேட்டிருக்கலாம். எதிலும் நாம் சற்று உஷாராகவே இருக்க வேண்டும். அவர்களும் அப்படி உஷாராகத்தான் இருந்திருப்பார்கள் என நினைக்கிறேன். தன் மெயில் ID மூலம் நிச்சயமாக அதை அனுப்பியிருக்க மாட்டார்கள் எனவும் நம்புகிறேன். ஈஸ்வரோ ரக்ஷது.
சரி, நான் கண்டு பிடிக்கிறேன்.
Deleteஅப்புறம் ஒரு விஷயம் உங்களுக்குத்தெரியுமோ தெரியாதோ ஜெயா.
ReplyDeleteதங்களின் வலைச்சர அறிமுகங்களை நேற்றும் இன்றும் அனைத்துப்பதிவர்களின் லேடஸ்டு பதிவுகளுக்கும் சென்று, இந்த அம்பாளே லிங்க் கொடுத்து தகவல் அளித்துள்ளார்கள்.
தாங்கள் செய்ய வேண்டிய வேலையை, நானும் செய்ய இயலாமல் இந்த வாரம் எனக்கு நேரமின்மையால், அதனைப்புரிந்துகொண்டு, இவர்களே தன்னார்வத்துடன் செய்துள்ளார்கள்.
நாம் ஜாடை மாடையாகச் சொல்வது எதையுமே கற்பூரம் போல கப்புன்னு புரிந்துகொண்டு, படு ஸ்பீடாக செய்து முடித்து விடுவார்கள்.
அதனாலும் இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் எதையுமே வாயைத்திறந்து ஓபனாகச் சொல்ல மாட்டார்கள். அதுதான் ’ஜெ’க்கும் ’இராஜராஜே’ க்கும் உள்ள ஒரே வித்யாசம்.
>>>>> இங்கு இன்று முழுநேர மின்தடை .......
அதனால் இப்போது இடைவேளை ........
மீண்டும் பிறகு வருவேனாக்கும் ....
ஜாக்கிரதை >>>>>
//அப்புறம் ஒரு விஷயம் உங்களுக்குத்தெரியுமோ தெரியாதோ ஜெயா.
Deleteதங்களின் வலைச்சர அறிமுகங்களை நேற்றும் இன்றும் அனைத்துப்பதிவர்களின் லேடஸ்டு பதிவுகளுக்கும் சென்று, இந்த அம்பாளே லிங்க் கொடுத்து தகவல் அளித்துள்ளார்கள்.
தாங்கள் செய்ய வேண்டிய வேலையை, நானும் செய்ய இயலாமல் இந்த வாரம் எனக்கு நேரமின்மையால், அதனைப்புரிந்துகொண்டு, இவர்களே தன்னார்வத்துடன் செய்துள்ளார்கள். //
வராதவங்க எல்லாம் வருகை தந்த போதே புரிஞ்சுக்கிட்டேன். நானும் முகப் புத்தகத்தில் சிலருக்கு லிங்க் கொடுத்தேன்.
//நாம் ஜாடை மாடையாகச் சொல்வது எதையுமே கற்பூரம் போல கப்புன்னு புரிந்துகொண்டு, படு ஸ்பீடாக செய்து முடித்து விடுவார்கள்.
அதனாலும் இவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும்.
ஆனால் எதையுமே வாயைத்திறந்து ஓபனாகச் சொல்ல மாட்டார்கள். அதுதான் ’ஜெ’க்கும் ’இராஜராஜே’ க்கும் உள்ள ஒரே வித்யாசம்.//
வித்தியாசத்தை மாத்த முடியாது.
அவங்க கிட்ட கொஞ்சம் சிபாரிசு செஞ்சு என்னை மாணவியா ஏத்துக்கச் சொல்லுங்கோ. அது போதும்.
//>>>>> இங்கு இன்று முழுநேர மின்தடை .......
அதனால் இப்போது இடைவேளை ........
மீண்டும் பிறகு வருவேனாக்கும் ....
ஜாக்கிரதை >>>>>//
வாங்க, வாங்க உங்க வரவு நல்வரவாகுக.
நீங்க வரலைன்னா இந்த அளவு கூட COMMENTS வந்திருக்காது.
// திரு ரிஷபன் சார், இவரைப் பற்றி ரொம்பவும் சிலாகித்து சொல்வார் கோபு அண்ணா. இவங்கள பத்தி எல்லாம் எழுதற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரியல. ஆனா ஒண்ணு நிச்சயம். இனி என் தகுதியை வளர்த்துக்க முயற்சி செய்வேன் கண்டிப்பாக.
ReplyDeletehttp://rishaban57.blogspot.com/search?updated-max=2014-08-04T13:55:00%2B05:30&max-results=1 //
ஆஹா, ’ஜெ’க்கு நான் எழுத்துலக மானஸீக குரு என்றால், இவர் எனக்கு எழுத்துலக மானஸீக குரு அல்லவா !
ரொம்பவும் சிலாகித்து சொல்ல இவர் என்னை அனுமதிப்பது இல்லை.
நான் இவரைப்பற்றி சொல்லியுள்ளதெல்லாம் கொஞ்சூண்டு கடுகு அளவு தான். அவ்வளவு ஒரு தன்னடக்கம். குடத்தில் இட்ட விளக்கு போன்றவர்.
இதுவரையிலான என் எல்லாப்புகழுக்கும், என் எழுத்துலக மானஸீக குருநாதர் ஆன இவரே காரணம் [தூண்டுதல்] என்றால் அது மிகையாகாது.
குரு, பரமகுரு, பரமேஷ்டி குரு, பரமார்த்த குரு என்றெல்லாம் குரு பரம்பரையைச் சொல்வார்கள்.
மாதா >>>>> பிதா >>>>> குரு >>>>> தெய்வம் என்றும் சொல்லுவார்கள்.
இங்கு இந்தப்பதிவினில் குருவையும், பரமகுருவையும், இருவருக்கும் இடையே குலதெய்வம் போன்ற என் அம்பாளையும் அடுத்தடுத்துக் காட்டி சிறப்பித்துள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.
>>>>>
// மாதா >>>>> பிதா >>>>> குரு >>>>> தெய்வம் என்றும் சொல்லுவார்கள். //
Deleteகுருவே சரணம்.
//இங்கு இந்தப்பதிவினில் குருவையும், பரமகுருவையும், இருவருக்கும் இடையே குலதெய்வம் போன்ற என் அம்பாளையும் அடுத்தடுத்துக் காட்டி சிறப்பித்துள்ளதில் எனக்கு மேலும் மகிழ்ச்சியாக உள்ளது.//
உங்கள் மகிழ்ச்சிக்கு நானும் ஒரு கருவி என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி.
என் மீதான தங்கள் அபிமானத்திற்கு நான் ஆயுசுக்கும் நன்றி சொல்ல வேண்டும் !
Deleteஇன்றைய தங்களின் அறிமுகத்தில் அநேகமாக எல்லோருமே [ஒரே ஒருவர் தவிர] எனக்கு மிகவும் பரிச்சயமானவர்களே.
ReplyDeleteஅனைவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
>>>>>
அந்த ஒருவர் யார்?
Delete//வலைப்பதிவாளர் உலகில் கலக்கிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் இந்தப் பூங்கொத்து.//
ReplyDeleteஆஹா, அருமையான அழகான பூங்கொத்து.
இது எங்கு சுட்டதோ ? :)
இருப்பினும்
’மாற்றான் தோட்டத்து மல்லிகை போல’
மனம் [மணம்] வீசுகிறது.
மிக்க நன்றி.
>>>>>
//இது எங்கு சுட்டதோ ? :)//
Deleteஎல்லாம் நம்ப “கூகுளாண்டவர்” தயவு தான்.
/நாளை மட்டும் மீண்டும் வருகிறேன்.//
ReplyDeleteவாங்கோ ! தங்களின் வருகையைக்காண
மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறோமாக்கும்.
//நாளன்னிக்கு உள்ள விடமாட்டாங்கோ.//
நாங்கள் உள்ளே விட எப்போதும் தயார்.
இங்கு இல்லாவிட்டால் என்ன ?
அங்கு எங்கள் வலைப்பக்கம் ஜாலியாக வாங்கோ.
பிறந்த வீட்டுக்கு வர என்ன தயக்கம் ?
பிரியமுள்ள
கோபு அண்ணா
-oOo-
//நாங்கள் உள்ளே விட எப்போதும் தயார்.
Deleteஇங்கு இல்லாவிட்டால் என்ன ?
அங்கு எங்கள் வலைப்பக்கம் ஜாலியாக வாங்கோ.
பிறந்த வீட்டுக்கு வர என்ன தயக்கம் ?//
தயக்கம், மயக்கம் ஒன்றும் இல்லை.
கண்டிப்பார வருகை தருகிறேன்.
ஆனால் வலைச்சரத்தில் மட்டும் MAIN ENTRANCE வழியாக வர முடியாது. அதனால் SIDE ENTRANCE வழியா வரேன்.
வணக்கம் !
ReplyDeleteஇன்றைய வலைச்சர வாரத்தில் இடம் பிடித்துக் கொண்ட அன்பு நெஞ்சங்களுக்கு
என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துகளும் ! பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மா !
வாங்க அம்பாளடியாள்
Deleteவணக்கம்
வருகைக்கும், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
மிக்க நன்றி
ReplyDeletesubbu thatha
www.pureaanmeekam.blogspot.com
வருகைக்கு நன்றி.
Deletewww.pureaanmeekam.blogspot.com க்கு வருகை தருகிறேன்.
இப்பதான் தெரியும் இந்த உங்கள் வலைத்தளம்.
கண்டிப்பாக வருகிறேன்.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
இன்றைய வலைப்பதிவர்கள் அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள். நண்பர் திண்டுக்கல் தனபாலன் அவர்களின் சகோதரி சமீபத்தில் இயற்கை எய்தி விட்டார் ஆதலால் நண்பரை தற்காலம் காண முடிவதில்லை.
ReplyDeleteவாங்க கில்லர்ஜி.
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி.
அவர் சகோதரியின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.
தகவலுக்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
கவிதைப்போட்டிக்கு அனுப்பிய எமது கவிதையை காண்க...
Deleteநன்றி.
அன்புடன்.
கில்லர்ஜி.
கில்லர்ஜி,
Deleteஎங்க கவிதை. காணுமே
Deletewww.killergee.blogspot.com
சொடுக்குக...
அன்பு ஜெயந்தி அக்கா, அறிமுகத்திற்கு மிக்க நன்றி அக்கா. தங்களின் “ஆழ்துளை” குறித்த சிறுகதை நன்றாக நினைவில் உள்ளது.
ReplyDeleteவாங்க ஹுசைனம்மா
Deleteவருகைக்கு நன்றி.
என் சிறுகதையை நினைவில் வைத்திருப்பதற்கு நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
அருமையான தளங்கள்! பகிர்வுக்கும் அறிமுகத்திற்கும் வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவாங்க ‘தளிர்’ சுரேஷ்
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
நான் விரும்பித் தொடரும் அருமையான வலைப்பூக்கள்! மேலும் பல அருமையான பதிவர்களை அறிமுகம் செய்துள்ள தங்களுக்கு என் நன்றி!
ReplyDeleteதிரு சேஷாத்ரி
Deleteஉங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
சில முக்கிய பதிவர்களின் ஒரு சில பதிவுகளை இங்கு
ReplyDeleteசுட்டியுள்ளது மிகச் சிறப்பு.
மீண்டும் நாளை இறை நாட்டப்படி சந்திப்போம்!
திரு முகமது நிஜாமுதீன்
Deleteவருகைக்கும், வாழ்த்துக்கும் மனமார்ந்த நன்றி.
அன்புடன்
ஜெயந்தி ரமணி
ஜே மாமி , அனைத்து அறிமுகங்களும் அருமை. அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநாளன்னிக்கு உள்ளே விடமாட்டாங்கோ...விழுந்து விழுந்து சிரித்தேன்
ReplyDeleteதிரு ரிஷபன் சார், இவரைப் பற்றி ரொம்பவும் சிலாகித்து சொல்வார் கோபு அண்ணா. இவங்கள பத்தி எல்லாம் எழுதற அளவுக்கு எனக்கு என்ன தகுதி இருக்குன்னு தெரியல. ஆனா ஒண்ணு நிச்சயம். இனி என் தகுதியை வளர்த்துக்க முயற்சி செய்வேன் கண்டிப்பாக. // என்னை விடவும் - மிக உயர்ந்த நிலைக்கு நீங்கள் வருவீர்கள் - என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் இப்போதே !
ReplyDelete