அனைவருக்கும் வணக்கம். வலைச்சரத்தின் இரண்டாம் நாளான இன்று குழந்தைநலம் சார்ந்த சில பதிவுகளைப் பார்ப்போம்.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.
பழி இல்லாத நல்ல பண்பு உடைய மக்களைப்பெற்றால் ஒருவனுக்கு ஏழு பிறவியிலும் தீவினைப் பயனாகிய துன்பங்கள் சென்று சேராவாம். மக்களைப் பெறுவது மாத்திரம் பெற்றோர் கடமை அன்று. பழி இல்லாத நற்பண்புகளை உடைய மக்களைப் பெற வேண்டுமாம். ஒரு நல்ல, தெளிவான சுயசிந்தனையுள்ள,
ஆக்கபூர்வமான, மனோதிடமுள்ள ஒரு முழு மனிதனாக
சமுதாயத்தில் சிறந்து விளங்குமளவுக்கு குழந்தையிலிருந்தே
அதன் குணநலன்களை வார்த்தெடுப்பதும் நம் கடன் அன்றோ?
நாம்
சொல்வதைத் தட்டாமல் கேட்டு, சாவி கொடுத்த
பொம்மை போல் நடக்கும், குறும்பு
செய்யாத குழந்தைகளை சமர்த்து என்கிறோம். அது பாராட்டு என்பதை
விடவும் குழந்தையின் இயல்பான வளர்ச்சியைத் துண்டிக்கும்
செயல் என்பதே சரியாகும்.
1. தமிழ்பேரண்ட்ஸ்
தளத்தில் பெற்றோருக்கான பல நல்ல ஆலோசனைகளும்
வழிகாட்டல்களும் உள்ளன. பெற்றோர் குழந்தைகளை வளர்க்கும் முறையை வைத்து ஐந்து விதமாகப் பிரிக்கப்படுகின்றனர். அவர்களுள் நாம் எந்த வகையான பெற்றோர் என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.
2. நம் குழந்தைகளை
ஆரோக்கியமாக வளர்ப்பதுடன் அறிவாளியாக, புத்திசாலியாக, மிகவும் நல்லவர்களாக, இக்காலத்திற்கு
ஏற்றாற்போலவும் வளர்ப்பது எப்படி என்பதையும், அதை யார் எப்படி செய்வது என்பது பற்றியெல்லாம்
இங்கே விரிவாக விவாதிப்போம் என்கிறார் ரேவதி சுதாகரன் அவர்கள் குழந்தைவளர்ப்பு என்ற
தளத்தில். குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயதாகும் வரை படிப்படியாக அவர்களின் உடல் வளர்ச்சிக்கும்
மூளை வளர்ச்சிக்கும் உதவும் வழிமுறைகளை அழகாக தொகுத்தளித்துள்ளார்.
3. பத்துப்
பன்னிரண்டு அம்மாக்கள் ஒன்றாக இணைந்து அம்மாக்களின்
பகிர்வுகள் என்றொரு தளத்தை ஆரம்பித்து
தங்கள் குழந்தைகள் மட்டுமல்லாது குழந்தை வளர்ப்பு, குழந்தை
நலம் பற்றிய பல பொதுவான
தகவல்களைப் பகிர்ந்துகொண்டுள்ளனர். தொலைகாட்சியின் பாதிப்பால், ஒருவரைப் பார்த்த மாத்திரத்தில் கெட்டவர் என்று ஒதுங்கிய தன் குழந்தையின் செயல் பற்றி ஆதங்கத்தோடும் அதற்கான
தீர்வோடும் தன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார்
சந்தனமுல்லை.
4. வளர்ந்துவரும்
விஞ்ஞான யுகத்தில் முழுக்க முழுக்க தொலைக்காட்சியை நிராகரித்து விட முடியுமா? புதிய
தொழில்நுட்பத்தை ஓரம் கட்டிவிடமுடியுமா? உண்மையில் குழந்தை வளர்ப்பில் தொலைக்காட்சியை
எப்படித்தான் அணுகுவது? குழந்தைகள் தொலைக்காட்சியின் அடிமையாகப் போவதற்கான அடிப்படைக் காரணங்கள் என்ன? தன் அனுபவத்தோடு கூடிய நேரிய அலசலொன்றைப் பகிர்கிறார் குழந்தை எழுத்தாளர்
விழியன் அவர்கள்.
5. எல்லோருக்குமே
தங்கள் குழந்தைகள் அறிவாளியாக இருக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக குழந்தைகளைப்
படாத பாடு படுத்தும் பெற்றோர் எத்தனை பேர்? அறிவாளி குழந்தையை தயாரிப்பது எப்படி என்று தேவையான பொருட்கள் முதல் செய்முறை வரை ஒரு சமையல் குறிப்பு போல பகிர்ந்துள்ளார் தோழி
முகுந்த் அம்மா. நகைச்சுவையாகத் தோன்றினாலும் அதனுள்ளிருக்கும் உண்மை நெஞ்சை உறுத்துகிறது.
6. ‘அப்பா,
British People இன்னும் இருக்காங்களா?’
Of course, இருக்காங்க.
ஏன் அப்படிக் கேட்கறே?’
‘இல்ல,
1947ல நாம Freedom வாங்கினபோது அவங்க எல்லாரையும் கொன்னுட்டோம்ன்னு
நினைச்சேன்!’
அதிர்ச்சி தரும்
இந்த உரையாடல் ஒரு தந்தைக்கும் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மகளுக்கும் இடையில் நிகழ்ந்த
ஒன்று. சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றி பாடப்புத்தகத்தில் நன்கு விளக்கப்பட்டிருந்தும்
ஒரு குழந்தையின் மனத்தில் எழுந்த வினாவுக்கான விடை முறையாக அளிக்கப்படாத காரணத்தால்
தவறான புரிதலொன்று அக்குழந்தையின் மனத்தில் புகப் பார்த்திருக்கிறது. நல்லவேளை, தந்தையிடம்
தன் சந்தேகத்தைக் கேட்டுவிட்டாள். பிரச்சனையின் மையத்தை மிக நுணுக்கமாய் புரிந்த தந்தை
தன் மகளுக்கு மட்டுமின்றி மகள் வயதை ஒத்த குழந்தைகள் அனைவருக்குமான, சுதந்திரப் போராட்ட வரலாறு பற்றிய ஒரு தெளிவான விளக்கவுரையை கதை சொல்வது போன்ற சுவாரசியத்துடன் மூன்று
வீடியோக்களாகப் பதிவு செய்து வழங்கியுள்ளார். திரு. என்.சொக்கன் அவர்களுடைய அற்புதமான
முயற்சியை நாம் பாராட்டவேண்டும்.
7. உங்கள் குழந்தைகள்
கதை கதை என்று நித்தமும் நச்சரிக்கிறார்களா? கவலை வேண்டாம். குழந்தைகளுக்கான
ஏராளமான நீதிக்கதைகள், தெனாலிராமன் கதைகள், முல்லா கதைகள்,
தன்னம்பிக்கையூட்டும் கதைகள், நகைச்சுவைக் கதைகள்
என்று தமிழ் அறிவுக் கதைகள்
தளத்தில் ஏராளமான கதைகள் கொட்டிக்கிடக்கின்றன.
தன்வினை தன்னைச் சுடும் என்ற நீதியை இக்கால நிகழ்வுடன் ஒப்பிட்டு உரைக்கும் கதையை இங்கு காணலாம்.
8. ஆறாவது படிக்கிற பையன் லவ் பண்ணினா தப்பா? மாணவ நலத்தில் அக்கறை கொண்ட ஒரு பள்ளி ஆசிரியையின் கேள்வி இது. எல்லா பாடத்திற்கும் பயிற்சி கொடுக்கும் கல்வித்துறை இந்த உளவியலுக்கும் பயிற்சி கொடுத்து மாணவர்களை எங்களிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்ற வேண்டுகோளுடன் தன் பள்ளி மாணாக்கன் பற்றிய அனுபவமொன்றைப் பகிர்ந்துகொள்கிறார் தோழி மைதிலி.
9. குடும்ப உறவில் பெற்றவர்களுக்கும் பிள்ளைகளுக்குமான முரண்பாடுகளைத் தவிர்ப்பதெப்படி என்று ஏழு
பாகங்கள் கொண்ட தொடர் ஒன்றை எழுதியுள்ளார் தோழி சாகம்பரி. வெற்றிகரமான வாழ்க்கை என்பது
சுற்றம் சூழ வாழுதல்தான். புரிந்து கொள்ளுதலும் விட்டுக்கொடுத்தலும் மட்டுமல்ல குடும்ப
வெற்றியின் ரகசியம். குடும்ப வரைபடத்தில் நம்முடைய இடத்தை உணர்வதும், மற்றவர்களுடைய
இடத்திற்குரிய மதிப்பை தருதலும்தான் என்பதை ஆழப் பதிக்கிறார் நம் மனத்தில். வெகு நாட்களுக்குப் பின்னரான அவர் வருகையும் பதிவுகளும் மனம் நிறைக்கின்றன.
10. கட்டுப்பாடுகள்
தளர்த்தப்படும்போது விட்டுக்கொடுப்புக்கள் பிள்ளைகள் பெற்றோர் இருசாராரிடமும் இடம்பெறும்போது
இருவருக்கிடையிலான மனக்கிலேசங்கள் இடம்பெற வாய்ப்புக்கள் குறையும் என்ற கருத்தை முன்வைத்து
பிள்ளைகளால் காதில் பூச்சூடப்படும் பெற்றோர் பற்றிய ஒரு அலசலைப் பகிர்ந்துள்ளார் தோழி
சந்திரகௌரி.
11. பொதுவாகவே
இன்றைய பெற்றோர்களுக்குக் குழந்தைகள் மீது எதிர்பார்ப்புகள் மிக அதிகம். உலகில் உள்ள
எல்லாத் திறனையும் வளர்த்துக்கொள்ளும் பொருட்டு குழந்தைகளை முடுக்குகிறார்கள். கண்ணுக்குத் தெரியாத ஒரு சாட்டையைக் குழந்தைகளை நோக்கி எப்போது சுழற்றிக்கொண்டே இருக்கிறார்கள் என்று
தங்கள் குழந்தைகளின் குழந்தைமையைப் பறிக்கும் பேராசைமிகு பெற்றோர் மீதான சாட்டையை சுழற்றுகிறார்
மண்குதிரை அவர்கள்.
12. இயல்பான
குழந்தைகளைக் கையாளவே பல பெற்றோரும் ஆசிரியர்களும் பக்குவப்படாத நிலையில் மனவளர்ச்சியில்
குறைபாடுடைய குழந்தைகளுக்கு ஆசிரியராய் இருப்பதென்பது எவ்வளவு பெரிய சவால்! அதனைத்
திறம்பட செய்வதோடு தன் மாணாக்கக் குழந்தைகளைப் பற்றியும் அவர்களுடனான தன் அனுபவங்களைப்
பற்றியும் மிகவும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கிறார் தோழி இமா. பிரிவு புரியாதவர்க்கோர் பிரிவுபசாரம் என்ற பதிவை வாசித்துப் பாருங்கள். கண்கள் கலங்கிவிடும்.
13. குழந்தைகளுக்குத்
திசையைக் காட்டிவிட்டு, அவர்கள் நடந்து செல்வதை ஒரு பார்வையாளனாய் வேடிக்கைப் பாருங்கள்.
தடுக்கிவிழும் சூழல்களில் மட்டும் தலையிட்டுத் தட்டிக் கொடுத்துத் தூக்கிவிடுங்கள்.
மாறாக குழந்தையின் கைகளைப் பற்றி, நடத்திச் சென்று தனக்கு நடக்கத் தெரியும் என்கிற உண்மை புரியாதவர்களாய் தன்னம்பிக்கை அற்றவர்களாய் அவர்களை மாற்றிவிடாதீர்கள் என்கிறார்
புதிய தலைமுறை வார இதழின் துணையாசிரியரும் குழந்தைகளுக்கான சிறுகதை எழுத்தாளருமான திரு.பெ.கருணாகரன்
அவர்கள் பகுத்தறிவு சிந்தனை இதழில் வெளியான தனது பேட்டியில்.
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
தம்மக்களே தம்முடைய பொருள்கள் என்று அறிஞர் கூறுவர். மக்களாகிய அவர்தம் பொருள்கள் அவரவருடைய வினையின் பயனால் வந்து சேரும் என்கிறார் வள்ளுவர்.
உங்கள் குழந்தைகள் என்பவர்கள் உங்கள் உடமைகள் அல்லர். அவர்களுக்கென்று சுய சிந்தனைகள் உண்டு. உங்கள் சிந்தனைகளை அவர்கள் மேல் திணிக்கமுடியாது என்கிறார் கவிஞர் கலீல் கிப்ரான்.
A child is the father of man என்பார்கள். குழந்தைகள்தானே என்று அலட்சியப் போக்குடன் ஒதுக்கிச்செல்லும் நாம் அவர்களைக் கூர்ந்து கவனித்தால் நாமறியாத, நமக்குத் தெரியாத பல அதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும். நம்முடைய சுயநலத்துக்காகவும் லாபத்துக்காகவும் குழந்தைகளுக்குள் ஒரு பெரிய மனிதத் தன்மையைப் புகுத்தி அவர்களுடைய குழந்தைமையைப் பறிப்பது எந்த வகையில் நியாயம்? சிந்திப்போம். செயல்படுவோம்.
வணக்கம்
ReplyDeleteசகோதரி
இன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் சென்று வருகிறேன் அறிமுகப்பக்கம்.....சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
உடனடி வருகைக்கும் பாராட்டுக்கும் தளங்களில் தகவல் பகிர்வுக்கும் மனமார்ந்த நன்றி ரூபன்.
Deleteகுழந்தைகள் நலம் பேசிய பகிர்வு வெகு சிறப்பு. அதிலும் என்.சொக்கன் ஸார் செய்திருக்கும் முயற்சி அசர வைத்தது. பெ.கருணாகரனின் பேட்டிப் பகிர்வையும் மிக ரசித்தேன். குழந்தைகள்னாலும் அவங்க பற்றின விஷயங்கள்னாலும் ரசனைக்கு ஏது எல்லை? நல்லதொரு தொகுப்பு கீதா.
ReplyDeleteகுழந்தைகளுக்கு இப்போது காணொளியில்தான் கவனம் அதிகம். பாடங்களையும் அவர்கள் போக்கில் கற்றுக்கொடுத்தால் எளிதில் விளங்கிவிடும். அந்த நுட்பத்தை அழகாகக் கையாண்டிருக்கிறார் திரு.சொக்கன் அவர்கள். உண்மைதான். வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி கணேஷ்.
Deleteஅருமை!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி டீச்சர்.
Deleteநாம் அவர்களைக் கூர்ந்து கவனித்தால் நாமறியாத, நமக்குத் தெரியாத பல அதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும். //
ReplyDeleteநீங்கள் சொல்வது உண்மை குழந்தைகளிடம் நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது.
இன்று மிக அருமையான வலைத்தள அறிமுகங்கள். அவர்கள் எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.
சிறந்த வற்றை தொகுத்து அளித்த உங்களுக்கு வாழ்த்துக்கள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி மேடம்.
Delete//குழந்தைகள்தானே என்று அலட்சியப் போக்குடன் ஒதுக்கிச்செல்லும் நாம் அவர்களைக் கூர்ந்து கவனித்தால் நாமறியாத, நமக்குத் தெரியாத பல அதிசயங்களைப் புரிந்துகொள்ள முடியும்.//
ReplyDeleteஉண்மை... உண்மை... உண்மை. குழந்தைகளின் பார்வையும், செயல்களும் மிகவும் வித்யாசமானவை. அவர்களிடம் நாம் கற்றுக்கொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் பற்றிய இன்றைய அறிமுகங்கள் மிகச்சிறப்பானவை. அனைவருக்கும் + தங்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். - அன்புடன் கோபு.
தங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் மிக்க நன்றி கோபு சார்.
Deleteஇனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteகுழந்தைகளின் செயல்களில் இருந்து நாம்
கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன...
எண்வகை மெய்ப்பாடுகளையும் எந்தவித சலனமும் இன்றி
வெளிப்படுத்தும் குழந்தைகள் பற்றிய பதிவேற்றியிருக்கும்
பதிவர்கள் பற்றிய அறிமுகங்கள் அழகு சகோதரி...
அழகாக சொன்னீர்கள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மகேந்திரன்.
Deleteஅருமையான விளக்கவுரையில் செல்கிறது.... வாழ்த்துக்கள் சகோதரி.வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன்
கில்லர்ஜி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி.
Deleteவாழ்வின் ஆதாரமான குழந்தைகள் நலத்தைக் கருப்பொருளாகக் கொண்ட பதிவுகளை அறிமுகப்படுத்திய சிறப்பான ஆக்கங்கள்.பாராட்டுக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பதிவை ரசித்தமைக்கும் நன்றி மேடம்.
Deleteகுழந்தைகளைப் பற்றிச் சொல்லியது அருமை. நண்பர் திரு சொக்கன் நிறையவே நல்ல விழயங்கள் செய்து வருகிறார். மூர்த்தி சிறிது கீர்த்தி பெரிது போல....
ReplyDeleteநல்ல பதிவுகளையும் கொடுத்த பதிவர்களுக்கும் இன்றைய அறிமுகங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்! பகிர்ந்ததற்கு மிக்க நன்றி!
தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.
Deleteதேவையான பயனுள்ளத் தொகுப்பு..நன்றி கீதமஞ்சரி. குறித்துவைத்துக்கொண்டு ஒவ்வொன்றாகப் பார்க்கிறேன், இரண்டுதான் நான் அறிந்தவை.
ReplyDeleteஎப்பொழுதும் போல செறிவான நடை..வாழ்த்துக்கள் தோழி!
ஊக்கம் தரும் கருத்துக்கு நன்றி கிரேஸ்.
Deleteகுழந்தைகளைப் பற்றிக் கூறும் தளங்களின் அறிமுகத்துடன் இன்றைய தொகுப்பு அருமை.
ReplyDeleteஅறிமுகமாகியுள்ள அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா.
Deleteபதிவு செய்த நண்பர் கீதமஞ்சரிக்கும், பாராட்டிய நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteஎன். சொக்கன்,
பெங்களூரு.
தங்கள் முயற்சி இன்னும் பலரை சென்றடையவேண்டும். தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.
Deleteஎன்னுடைய பதிவினை அறிமுகப்பத்தியதற்கு மிக்க நன்றி தோழி. இனிய இல்லம் சமுதாயத்தின் அடிப்படை என்பதே என் நம்பிக்கை. குழந்தைகள் இல்லத்தின் எதிர்கால நம்பிக்கைகள். இன்றைய அறிமுகப் பதிவுகள் மிக முக்கியத்துவம் பெற்றவை என கருதுகிறேன்.
ReplyDeleteகருத்துக்கு நன்றி. தங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைப் பாடத்தின் கையேடுகளாய் பின்பற்றக்கூடியவை. ஒன்றை மட்டும்தான் இங்கு அறிமுகப்படுத்த முடிந்தது. தங்களை மறுபடியும் வலையுலகில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சி தோழி.
Deleteகுழந்தைகள் பற்றிய பதிவினை எழுதிவரும் ஒவ்வொருவரின் பக்கத்தை மிக அழகாக தொகுத்து நீங்க இங்கு அறிமுகப்படுத்திய விதம் அழகு. பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகமாகியவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
வருகைக்கும் ரசித்தமைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ப்ரியசகி.
Deleteநிறைய பதிவுகள் புதிது. நீங்கள் பரிந்துரைப்பதால், பார்த்தே ஆக வேண்டும்! :-)
ReplyDeleteபார்த்துவிட்டு கருத்திடுங்க. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஹூஸைனம்மா.
Deleteமழலைகள் உலகம் மகத்தானதன்றோ!..
ReplyDeleteஇன்றைய உங்கள் பதிவும் அத்தகையதே!
மிக அருமை! அறிமுகமாகியிருக்கும் அனைத்துப் பதிவர்களுக்கும்
உங்களுக்கும் அன்பு வாழ்த்துக்கள்!
ஊக்கம் தரும் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் நன்றி இளமதி.
Deleteநல்ல பதிவுகள் அருமை..தேவையானதும் கூட...வாழ்த்துகள் தோழி..
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கீதா.
Deleteமிக்க நன்றி அக்கா!
ReplyDeleteஉங்கள் பதிவை அறிமுகப்படுத்துவதில் எனக்குப் பெருமையே. நன்றி மைதிலி.
Deleteநீங்கள் அறிமுகப்படுத்திய பதிவர்களை பார்க்கின்ற சந்தர்ப்பம் கிடைத்தது. மிக்க நன்றி. என்னுடைய வலையையும் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி கௌரி.
Deleteசிறப்பானதோர் தலைப்பில் பதிவுகளைத் தொகுத்தமை நன்று....
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
நன்றி வெங்கட்.
Deleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்
நன்றி ஐயா.
Deleteவணக்கம் கீதமஞ்சரி
ReplyDeleteஎனது படைப்புகளை உலகத்துக்கு எடுத்துக்காட்டி பெருமைப்பட வைத்தமைக்கு நன்றி