Friday, October 24, 2014

கதை சொல்லப் போறேன்


வலைச்சர நான்காம் நாள் பகிர்வான 'கவிதை அரங்கேறும் நேரம்' குறித்து தங்கள் கருத்துக்களைச் சொன்ன உறவுகளுக்கு நன்றி.

*********

ன்றைய வலைச்சர பகிர்வாக சிறுகதை ஆசிரியர்கள் சிலரைப் பற்றிப் பார்க்கலாம். அதுக்கு முன்னால எப்பவும் போல கொஞ்சம் கதையளக்கலாம் வாங்க.

"முடிவில் திருப்பம் உடைய சிறிய கதை வடிவமே சிறுகதை என்று சொல்வார்கள். உலக இலக்கியத்தில் அமெரிக்க எழுத்தாளர்களான எட்கார் ஆல்லன் போ, ஓ ஹென்றி இருவரையும் சிறுகதையின் தொடக்கப்புள்ளிகளாகச் சொல்வது வழக்கம். ஆனால் சிறந்த வடிவம் கொண்ட சிறுகதைக்கு ஆண்டன் செக்காவ் தான் முன்னோடி என்பார்கள். தமிழில் சிறுகதை வடிவம் எவரால் முதலில் கொண்டுவரப்பட்டது என்பதுகுறித்து விவாதம் உள்ளது. பாரதியாரின் ரயில்வே ஸ்தானம் என்ற சிறுகதையே முக்கியமான முதல்சிறுகதை என்பார்கள், ஆனால் சிறுகதை வடிவம் சரியாக அமைந்தது வ.வெ.சு அய்யர் எழுதிய மங்கையற்கரசியின் காதல் என்ற தொகுதியில் உள்ள குளத்தங்கரை அரசமரம் என்ற சிறுகதையாகும். தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும்." (நன்றி தமிழ் விக்கிப்பீடியா)

சிறுகதையில் சொல்ல வந்ததை சிறப்பாக சொல்லி முடித்தால் அந்தக் கதை வாசகனைக் கவரும் என எங்கள் ஐயா சொல்லுவார். அவரின் கதைகள் பெரும்பாலும் வாழ்வியலோடு பயணிக்கும். நான் கதை எழுத ஆரம்பித்தது ஒரு நாள் மாலை ஐயாவுடன் பேசியபடி நடந்து சென்றபோது அவர் நீங்களும் எழுதுங்க என்று சொன்ன பிறகுதான்... முதல் கதை காதல் கதை... அப்ப அப்புறம் என்ன கதை எழுத வரும். அதையும் படித்து... நல்லாயிருக்கு... இன்னும் நல்லா முயலுங்க... என்று சொன்னார். அதன் பின் எழுதிய கதைகளில் கொஞ்சம் மாற்றம் இருக்க... விட்டு விட்டுத் தொடர்ந்தாலும் தற்போதைய எழுத்தில் வாழ்வியலோடு பயணிக்க ஆரம்பித்திருப்பதாக நண்பர்கள் சொல்கிறார்கள்... இருந்தும் இன்னும் சிறப்பாக எழுத வேண்டும்... நிறைய எழுத வேண்டும் என்பதே எனது எண்ணம். இப்போ சில வாரங்களாக தோன்றும் கருவெல்லாம் சோர்வில் கலைகிறது.

ஆமாங்க... அதேதான்... எப்பவும் போல முதலில் நட்பு வட்டத்தில் இருக்கும் கதையாசிரியர்கள் சிலரின் படைப்புக்கள் உங்களின் பார்வைக்காக.

மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான கனடாவில் வாசம் செயும் மதுரைக்காரர் ராகவன் அண்ணா அவர்கள் தனது பெயரிலேயே வலைப்பூ வைத்துள்ளார். இதில் எழுதும் கதைகள் எல்லாம் உயிர்ப்புடன் இருக்கும். அந்தக் கதைகளுக்கு ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கும். இவற்றைப் படிக்கும் போது நாமும் எப்போது இவரைப் போல் கதை எழுதுவோம்ன்னு நினைத்துக் கொள்வேன். அவரது பரிவர்த்தனை என்ற சிறுகதையில்... 

எலே கூரு கெட்ட மூதி, முன்னாடி வந்து நிக்க, சோலி பாத்துகிட்டிருக்குது தெரியல? தள்ளுலே வெளிச்சத்த மறிக்காமே! என்று கைக்குத் தோதாய் கிடந்த புருசுக் கட்டைய எடுத்து ஆடுசதையில் அடித்தான். அடி உரைப்பாய் விழ, காலை உதறியவன் இழுத்துக் கொண்டிருந்த கம்பியை மிதித்து விட்டான்.

*
வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் என்று சொல்லும் குடந்தை சரவணன் அண்ணன் குடந்தையூர் என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரது சிறுகதைகள் சிறப்பாக இருக்கும். ‘இளமை எழுதும் கவிதை’ என்ற நாவலை வெளியிட்டு நாவலாசிரியராய் இருக்கும் இவர், பதிவர் சந்திப்பில் 'சில நொடி சிநேகம்'  என்னும் குறும்படத்தை வெளியிட்டு இயக்குநராகிறார். அவரை வாழ்த்துவோம். இவரின் மருமகளான மாமியார் என்ற சிறுகதையில்... 

"என் கண்ணாடியை எடு " என்ற அடுத்த அதட்டலுக்கு செவி சாய்த்தவள் உடனே கொண்டு வந்து நீட்டினாள். பாத்ரூமிலிருந்து வெளி வந்த மாமனார் " குட் மார்னிங் மா "என்றவர் அவள் கொடுத்த காபி யை வாங்கி பருகி கொண்டே "உன் புருஷன் எழுந்துட்டானா "என்று கேட்டார்
*
னக்கு ஆலோசனைகள் சொல்லும் அன்பு அக்கா காயத்ரி அவர்கள் "தூரிகைச் சிதறல்...." என்ற வலைப்பூவில் எழுதி வருகிறார். இவரின் கதைகள் மிக அருமையாக இருக்கும். பெரும்பாலும் இவர் பதிவிடும் முன்னரே வாசிக்கும் பாக்கியசாலி நான்... தம்பி இதைப்பாரேன் என்ற குறுஞ்செய்தி வந்துவிடும். நான் இரண்டாவது தொடர்கதை ஆரம்பிக்கும் போது நண்பன் தமிழுடன் தலைப்பு குறித்துப் பேசி அவன் சொன்ன தலைப்பு ஓகே ஆக,  அக்காவிடம் இதுதான்... இப்படித்தான் எழுதப் போறேன் என்றதும் 'ஏம்ப்பா எல்லோரும் மருமகளை கெட்டவள்ன்னு சொல்றீங்க... என்றார். பின்னர் இப்படி அக்கா என்று சொன்னதும் சரி எழுது என்றார். அப்புறம் அக்கா நமக்கு வைத்திருக்கும் செல்லப்பெயர் 'பரிவை' பாரதிராஜா. (ஹி... ஹி.... ஒரு விளம்பரம்தான்). சரி... சரி... அக்காவின் கதைகள் எல்லாமே பிடிக்கும். அவரின் மௌனமாய்..!! சிறுகதையில்... 

எனக்கும் அந்த வீட்டில வேலை செய்யறோம்ன்ற நினப்பே இல்லாம  நம்ம வீடுமாதிரியே இருக்கும். அந்த உரிமையில சிலநேரம் எங்க போறீங்க எப்ப வருவீங்க.. நேரத்துக்கு வாங்கன்னு சொல்வேன். முன்னெல்லாம் அத சந்தோசமா ஏத்துக்கிட்ட அந்தம்மா, இப்ப கொஞ்ச நாளா அவங்க சுதந்திரத்துக்கு இடைஞ்சலா நினைச்சுட்டாங்க போல. இப்பல்லாம் அதிகம் அப்படி உரிமையா அன்பா பேசறது இல்ல. எதும் வேலைன்னா சொல்வாங்க..நானும் செஞ்சுட்டு வந்திடறேன்.  இருந்தாலும் என்ன அறியாமையே ஏதோ என் மனச சஞ்சலப்படுத்துது. எங்கனா கொஞ்ச நாள் அமைதியா போயிடமாட்டமானுகூட தோணுது.
*
விமலன் அண்ணா தனது சிட்டுக்குருவி என்னும் தளத்தில் வாழ்வில் எதிர்நோக்கும் எல்லா விஷயங்களையும் கவிதையாக... கதையாக... வடிக்கிறார். படிப்பவரை கட்டிப் போடும் எழுத்துக்குச் சொந்தக்காரர். அப்படியே நம்மையும் கதையோட்டத்தோடு கொண்டு செல்வதில் கில்லாடி. இதுவரை ஐந்து சிறுகதைத் தொகுப்புக்களை வெளியிட்டிருக்கிறார். ஒரு நாளைக்கு ஒரு கதை என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்... ஐந்து என்ன ஐநூறு புத்தகம் போடலாம். இவரை வாழ்த்துவோம். இவரின் கொடக்கம்பி சிறுகதையில்... 

அவ என்னடான்னா ஒத்தப்பொண்ண பெத்து வச்சிகிட்டு பொண்ணக்கட்டிக்கோ, கட்டிக்கோ ஒத்தக்கால்ல நிக்கிறா,அங்க போகுபோதெல்லாம் இது ஒரு பெரிய பஞ்சாயத் தா இருக்கு.இதுக்குதான் அக்கா இல்லாத வீடாப்பாத்து பொறக்கணும்ங்குறது, ஏங்மச்சான் என்னடான்னா நைட் 11மணிக்கு எழுப்பி கொத்துக்கறி வச்சிருக்கேன் சாப்புடுங்கன்றாரு,
 எதுக்கு மச்சான் இதெல்லாம் வேணாத வேலையா,கொத்துக்கறி சாப்பிடுற நேரமா இதெல்லாம் அப்படின்னா ஏங் பொண்ணக்கட்டும் போது தெம்பா இருக்க வேணாமான்றாரு என்ன செய்ய சொல்லுங்க
*
பிரான்சில் வசிக்கும் அக்கா அருணா செல்வம் அவர்கள் அருணா செல்வம் -கதம்ப வலை- என்ற தளத்தில் எழுதுகிறார். நிமிடக்கதைகளை நிறைய எழுதுவார்... அத்தனையும் அருமையான கதைகள். சமீபத்தில் கூட ஒரு பதிவுத் திருடர் (வயசுக்கு மரியாதை) இவரின் படைப்புக்களைச் சுட்டு பகிர்ந்திருந்தார். அப்பன்னா இவரின் எழுத்தின் ஈர்ப்பு எப்படிப்பட்டதுன்னு தெரிஞ்சிக்கங்க. இவரின் பொறுப்பு!! சிறுகதையில்...

குமுதா.... நான் பத்து மணிக்கு வீட்டுக்கு வர்றேன். நீ கிளம்பி ரெடியா இருஎன்றார் மாமா காலை சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டே. எங்க மாமா போறோம்....?“ குமுதா கேட்டாள். ரிஜிஸ்டர் ஆபிசுக்குமா. இப்போ கடைக்குப் பக்கத்திலேயே ஒரு அப்பாட்மெண்ட் வாங்க இருக்கிறேன் இல்லையா... அதை உன் பேருக்குத் தான் ரிஜிஸ்டர் பண்ணப் போறேன். நீ கிளம்பி இரு. நான் வந்து அழைச்சிக்கினு போறேன்என்று சொல்லிபடி கையலம்பினார்.
 *
ரணியில் வசிக்கும் ஆசிரியை மற்றும் எழுத்தாளர் பவித்ரா நந்தகுமார் அவர்கள் தனது பெயரிலான வலைப்பூவில் நிறைய எழுதி வருகிறார். இவரின் சிறுகதைகள் அனைத்தும் அருமையாக இருக்கும். இவரின் யாரும் படிக்கக்கூடாத டைரி பக்கங்கள்... என்ற சிறுகதையில்... 

ஜனவரி 1
    ஒரே வீட்டில் முன்பு கணவன் மனைவியாக இருந்ததைவிட நல்ல நண்பர்களாக இருப்பது அவ்வளவு சிரமமாக இல்லை.  ஜஸ்ட் இன்ட்ரஸ்டிங். இரவு நேர சண்டைகளுக்கு விடிவு கிடைத்ததில் என்னைவிட அருணுக்குத்தான் வசதியாக இருக்கும் என நினைக்கிறேன்.  இரவு பத்துக்கெல்லாம் அவர் குறட்டை விடும் சத்தம் என் அறையை சுத்தி வட்டமிடுகிறது.  அஞ்சலியிடம் எங்கள் பிரிவை மறைப்பதில் தான் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.  பத்து வயதில்லையா, துறுதுறுவென எதையாவது கேட்டுக் கொண்டே இருக்கிறாள்.
 *
இனி எனக்குப் புதியவர்களாகத் தெரியும் சில சிறந்த படைப்பாளிகளின் படைப்பைப் பார்ப்போம்.

லங்கையைச் சேர்ந்த ஜே.கே (ஜெயக்குமாரன்) என்னும் நண்பர் படலை என்னும் வலைத்தளத்தில் எழுதுகிறார். இவரின் கதைகள் எல்லாம் இலங்கைத் தமிழ் பேசும். இவரின் கதைகள் சிலவற்றை முன்னர் வாசித்த ஞாபகம் இருக்கிறது. இந்த மண்ணெண்ணெய் கதையையும் வாசித்திருக்கிறேன். நல்ல நடை... வாசிப்பவரை ஈர்க்கும் எழுத்து. இவரின் மண்ணெண்ணெய் சிறுகதையில்...

ஒருநாள் மா இடிக்க வந்த மனிசியிடம் "கிழடு செத்து துலயுதில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். அப்போது இவர் கக்கூஸ் உள்ளே இருந்தார். அது தெரிந்தே கேட்கட்டும் என்று சொல்லியிருக்கலாம். இவருக்கு அவமானமாக போய்விட்டு. சத்தம் போட்டு உள்ளே இருப்பதை காட்டாமல் இருந்தார். தண்ணி ஊத்தி கழுவினால் சத்தம் கேட்கும் என்று அவள் அப்பால் போகும்வரை பொறுத்திருந்தார். போன பின்னர் வெளியே வந்தபோது மா இடிக்கும் மனிசி இவரை இளக்காரமாக பார்த்தது. நமசிவாயம் எதையுமே மறக்கவில்லை.
 *
லைப்பதிவர் மட்டுமின்றி ‘ஒரு மரணமும் சில மனிதர்களும்’, இளவேனில் மீண்டும் வரும்’, அங்கயற்கண்ணியும் அவள் அழகிய உலகமும்’ என்ற நூல்களின் ஆசிரியருமான தாட்சாயிணி அவர்கள் மார்கழி மாதத்துப் பனித்துளிகள் (தாட்சாயணியின் படைப்புக்கள்) என்னும் தளத்தில் எழுதுகிறார். இவர் எதுவுமில்லை சொல்வதற்கு... இந்த எழுத்துக்கள் தவிர்த்து..! என்று சொல்கிறார். இவரின் கதைகள் மிக நன்று. சாட்சிகள் எதுக்கடி? சிறுகதையில்... 

கத்த வேண்டும் போலிருந்தது.. இந்த மழையை நிறுத்தச்சொல்லி... அது முடியாது. அவ்வாறெனின் இந்தக் கட்டிலை மாற்ற வேண்டும். ஒழுக்குகள் இல்லாத இடம் பார்த்து அதுவும் முடியாது. வீடெங்கும் பரந்துபட்ட ஒழுக்குகள். அவர் எப்படித்தான் விலகிப் போக முயன்றாலும்... அவரது அமைதியை வேரறுத்து, உயிர் வளையை நெரிக்கப் போவதாய் அச்சுறுத்தி... அச்சுறுத்தி... மனதை இறுக்கிக் கொண்டிருக்கின்ற அந்த நரக வேதனை... அந்தச் சத்தம் தருகின்ற துன்பம்... "பட்... பட்.. " மீண்டும் மீண்டும்...
*
மிழ் சிறுகதைகள் (Tamil Short Stories) என்னும் தளத்தில் எழுதிய சக்தி அவர்கள், நீண்ட நாட்களாக தளத்தை அடைத்து வைத்திருக்கிறார். ஆம் 2009-ல் ஆரம்பித்து 2010-ல் போதுமென நினைத்துவிட்டார் போலும். இவர் சிறுகதைகள் தவிர சிறுகதைகளின் வளர்ச்சி குறித்தும் பகிர்ந்திருக்கிறார். இவரின் குப்பனின் கனவு என்று சிறுகதையில்... 

குப்பன் வண்டியை இழுத்துக் கொண்டு போகிறான். முகத்தில் பன்னீர் தெளித்த மாதிரி ஓயாமல் தூறல் விழுந்து சொட்டிக் கொண்டிருக்கிறது. சில சமயம் மூக்கில் போகாமல் தும்மிக் கொள்கிறான்... வண்டியும் சடசடவென்று அவன் எண்ணத்திற்குத் தாளம் போடுகிறது.  'அந்த டிராமிலே ஏர்ன ஆசாமி மாதிரியிருந்தால்..." அவ்வளவுதான்...
* 
வாழ்வின் பிற்பகுதியை சுவராஸ்யமாக்கிய மகளுக்கு என்ன தரமுடியும். அவளை நானாக அடையாளப்படுத்திக் கொள்வதை தவிர? என்று கேட்கும் அமிர்தவர்ஷினி அம்மா மிகச் சிறந்த கதைகளுக்குச் சொந்தக்காரர். இவரின் சாமிவேலுவின் மகன் சிறுகதையில்... 

ஹூம் அம்மாவுக்கு அப்பாவ விட பை மேலதான் கவனம் என்றவாறே சின்ன மகள் பெரிய மகள் காது கடித்தாள். பஸ் பாதிக்கும் மேல் நிறைந்திருந்தது. மத்தநாட்களில் இப்படியிருக்காது, இப்போது தன் ஊரில் நடக்கும் நெருப்புத்திருவிழாவை முன்னிட்டே பஸ்ஸில் பாதி சீட்டு ஃபுல் ஆகியிருக்கு என்று நினைத்துக்கொண்டார். பஸ் புறப்பட எப்படியும் இன்னும் கால் மணி நேரத்துக்கு மேலே ஆகும். அதற்குள் இன்னும் நிறைய ஊர் ஜனம் வரும் என்று நினைத்துக்கொண்டே தனக்கு தெரிந்த முகம் எதாவது இருக்கா என்று நோட்டம் விட்டார்.
 *
னதில் உதிக்கும் அழகான எண்ணங்களுக்கு உருக்கொடுக்க முயன்று கொண்டே இருக்கும் ஒரு எளியன்... வாழ்க்கையை ரசித்துக்கொண்டே பயணிக்கும் ஒரு ரசிகன் என்று சொல்லும் பதிவர் மாதவன் இளங்கோ அவர்கள் ரசிக்கிறேன்.. ருசிக்கிறேன்.. என்னும் தளத்தில் எழுதுகிறார். இவர் ரசித்து எழுதி நமக்கு ருசிக்கத் தருகிறார். இவரின் அமைதியின் சத்தம் சிறுகதையில்... 

ஒருவேளை என் மனைவிதான் சமையலறையில் ஏதாவது செய்து கொண்டிருக்கிறாளோ என்று ஹாலுக்கு வந்தால், அவள் எனக்குமேல் பதைபதைத்துக் கொண்டு ஓடிவந்து, “என்ன சத்தம்?” என்று கேட்டாள். தெரியல அர்ச்சனா. பக்கத்து வீட்லர்ந்து யாரோ சொவத்த இடிக்கற மாதிரி தெரியுது.என்றேன். ஒருவேளை நீங்க மூணுபேரும் ரொம்பச் சத்தம் போட்டு விளையாடினதால வார்ன் பண்றாங்கன்னு நெனெக்கிறேன் சத்யா. கொஞ்சம் நேரம் அமைதியா இருந்து பார்க்கலாம்.என்றாள் என் மனைவி.
*
ரம்பு மீறும் இளைஞனின் எண்ணங்கள் என்ற வரிகளோடு விழியன் பக்கம் என்ற தளத்தில் எழுதும் விழியன் அவர்கள், வரம்பு மீறாமல் நல்ல கதைகளைப் பகிர்ந்திருக்கிறார். இவரின் நெஞ்சுக்குள்ளே தூறல் என்னும் சிறுகதையில்...
என்ன ஆச்சுங்க
 இங்கே பள்ளம் இருக்கும்னு தெரியல சார். செகண்டு கிராஸ்ல ஒருத்தருக்கு அட்டாக் வந்துருக்கிறது.வேகமா வந்தேன் பள்ளத்தில் மாட்டிக் கொண்டது. போகிறவன் வருகிறவன் எவனும் கண்டுக்கல. இதனைக்கும் சிகப்பு விளக்கு , சைரன் எல்லாம் போட்டுருக்கேன்”. அலுத்துக் கொண்டார் ஓட்டுனர்.
 *
ரிங்க... இன்றைக்கு இவர்கள் போதும் என்று நினைத்து கடையை மூட நினைக்கும் போது இப்போதுதான் சிறுகதைகள் எழுத ஆரம்பித்து வெற்றி பெற்றிருக்கும் தம்பி மனசில் வந்து போகிறார். யார் அவர்? அப்படின்னு கேக்குறீங்களா... இந்தாச் சொல்றேன்... முதுகலை படிக்கும் மாணவர், சிறந்த சிந்தனையாளர், அன்புத் தம்பி ஜெயசீலன் அவர்கள் புதுகை சீலன் என்ற பெயரில் எழுதுகிறார். இவரின் எழுத்தை வாசியுங்கள்... உங்களுக்கும் பிடிக்கும்... இவரின் குலசாமி சிறுகதையில்... 

ஏண்டி  வந்த ஒடனேயே அந்த ஆட்டுக்குட்டியை கொஞ்ச போய்ட்ட,துணிய கழட்டிவச்சுட்டு வாடி காப்பி குடிக்கலாம்." என்று." இந்தா வரேன்ம்மா" என்றபடி கைகால் அலம்பிவிட்டு வீட்டிற்குள் நுழைந்தாள்.அம்மா கொடுத்த கருப்பட்டி காப்பியை அவளும் அவளுடைய‌ வீராவும் பகிர்ந்து உண்டனர். வீரா வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது, வீராவின் மேல் வள்ளி வைத்திருந்த பாசமும் தான்.
 *
ஏங்க கோவிச்சிக்காதீங்க இன்னைக்கு பதிவு நீளமாத்தான் இருக்கும். காரணம் சீனா ஐயா சொன்ன மாதிரி சிறுகதைகள் எழுதுவது எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றால் வாசிப்பதும் பிடிக்கும். இன்னும் நிறையப் பேரைச் சொல்லணும்ன்னு ஆசை... ஆனா இது பதிவா... இல்லை... ரெயிலான்னு நீங்க திட்டக்கூடாது பாருங்க... அதனால அவர்களை எல்லாம் பிரிதொரு சந்தர்ப்பத்தில் பகிரலாம். சரி பாட்டை ரசிச்சிட்டுப் போங்க. 
கத சொல்லப் போறேன்


மதுரை வலைப்பதிவர் மாநாடு-2014 நிகழ்ச்சி நிரல் உங்கள் பார்வைக்கு... மதுரை குலுங்கக் குலுங்க பதிவர் கூட்டம் நிறையட்டடும்...

 நன்றி. 

-'பரிவை' சே.குமார்.

25 comments:

  1. இன்று இடம்பெற்ற கதை எழுதும் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    ஒவ்வொரு கதையையும் நிதானமாக படிக்க வேண்டும்.
    பாடல் பகிர்வும் பொருத்தமாய் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. கதை எழுதும் பதிவர்கள் பற்றிய இன்றைய தொகுப்பு அருமை..
    நிதானமாக அவற்றைப் படிக்க வேண்டும்..
    அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. வணக்கம் குமார்.

    அருமையாக தொகுத்து எழுதி இருக்கிறீர்கள். இது சாதாரண விசயம் இல்லை.
    வாழ்த்துக்கள்.
    தாங்கள் தொடுத்த மலர்ச்சரத்தில் இன்று நானும் ஒரு மலர்..... மிக்க மகிழ்ச்சி.

    இன்று அறிமுகமான அனைத்து கதாசிரியர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. Replies
    1. வாங்க அம்மா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. குமார் என் மனமார்ந்த பாராட்டுரைகள். இன்று உங்களின் ஒவ்வொரு பதிவையும் முழுமையாக பார்த்தேன். படித்தேன். மிக அற்புதம். கடுமையான உழைப்பும் கூட.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா...
      சோர்வு கொள்ளாதே சுறுசுறுப்பாய் எழுது என்று சொன்னவர் நீங்கள்...
      உங்கள் வாழ்த்து ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்குது அண்ணா.
      மிக்க நன்றி.

      Delete
  6. நன்றி குமார். மற்ற அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. சிறுகதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்;
    அதனால், இந்தப் பதிவும் பிடிக்கிறது!

    ReplyDelete
    Replies
    1. வாங்கசகோதரா...
      வணக்கம்.
      ஹா... ஹா... ரொம்ப சந்தோஷம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  9. மிக்க நன்றி குமார். என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மேலும் நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  10. எத்தனை வலைத்தளங்கள்! பலரையும் அறிவோம்...சிலர் புதிது...அறிந்ததற்கு மிக்க நன்றி! தங்கள் பதிவுகளும் அருமையாக இருக்கின்றன! நண்பரே!

    ReplyDelete
    Replies
    1. வாங்க துளசி சார்...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  11. பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  12. சிறப்பான படைப்பாளிகளையும் படைப்புக்களையும் அறிமுகம் செய்தமைக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  13. தம்பி ஆசிரியராக பொறுப்பேற்று சிறப்பாக வழங்கியிருப்பது அதிசமில்லை... ஏனெனில், கதாசிரியர் 'பரிவை' பாரதிராஜா இதில் தேர்ச்சியடைந்தவராயிற்றே..மனமார்ந்த நல்வாழ்த்துகள் தம்பி. தொடர்ந்து பொழியட்டும் எழுத்துமழை..

    அறிமுகமாகியிருக்கும் அனைத்து படைப்பாளிகளுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துகள்.

    நான் சிறுகதை எழுத ஆரம்பித்ததே ”பரிவை” பாரதிராஜா கொடுத்த ஊக்கத்தினால்தான்...எனவே மனமார்ந்த நன்றி தம்பி... :)

    ReplyDelete