Thursday, October 23, 2014

கவிதை அரங்கேறும் நேரம்

நேற்றுப் பகிர்ந்த 'கவிதைபாடு குயிலே... குயிலே...' என்ற இடுகைக்கு தங்கள் கருத்துக்களைத் தெரிவித்த அன்பு உறவுகளுக்கு நன்றி.
----------------------------

விதாயினிகளின் கவிதைகளை வாசித்து மகிழ்ந்த நாம் இன்று நவீன பாரதிகளாம் ஆண் கவிஞர்களின் கவிதைகளை வாசிக்க இருக்கிறோம்.

பள்ளியில் படிக்கும் போது உருவாகாத கவிஞர்கள் எல்லாம் கல்லூரிக்கு சென்றதும் உருவெடுக்க ஆரம்பித்து விடுவார்கள். எனது நட்பு வட்டத்தில் முருகன், ஆதி, இளையராஜா, பிரபாகர், சுபஸ்ரீ இவர்கள் மட்டுமே திறமையான கவிஞர்கள். அதிலும் கவிதை, கட்டுரைப் போட்டிகள் என்றால் முருகனும் சுபஸ்ரீயும் கண்டிப்பாக கலந்து கொண்டு கல்லூரிக்கு பரிசைத் தட்டிவருவார்கள். மற்றவர்கள் எல்லாம் எழுதுவதும் இல்லை அதைப் படிப்பதும் இல்லை.

பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும் என்பது போல இவர்களுடான நட்பால் நாமளும் கவிதையின்னு கிறுக்க ஆரம்பிச்ச நேரம் சின்னக் கவிதையே வராது. பக்கம் பக்கமாத்தான் எழுத வரும். பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி ஓரளவுக்கு எழுத வந்தபோது நண்பர்களின் காதலுக்கு கவிதை எழுதிக் கொடுக்கும் நிலை வந்தது. நம்ம பயக பொண்ணு யாரு... அவனுக்கு உறவா இல்லை பழக்கமா... எங்க படிக்குது... என எல்லாம் விவரமாச் சொல்ல, அதை வைத்து அப்படியே ஒரு கவிதை உருவாக்கிக் கொடுத்து விடுவேன். இதில் முக்கியமா கவனிக்க வேண்டியது என்னன்னா... அப்போதைக்கு அம்புட்டும் சக்ஸஸ் ஆனதுதான். அதுக கவிதைக்கு மயங்குச்சுகளோ இல்ல இவன வேண்டான்னு சொன்னா இன்னம் அந்தக் கிறுக்கனுக்கிட்ட கவிதை வாங்கிகிட்டு வந்து கொன்னுடுவான்னு நினைச்சதுங்களோ தெரியல. இன்றைய நிலவரப்படி எத்தனை காதல் வாழ்கிறது என்பதும் அடியேனுக்குத் தெரியாது.

ஹைக்கூ கவிதை எழுத ஆரம்பித்த நேரம் பாக்யாவிலும் கதைபூமியிலும் போட்டோ ஒன்று போட்டு கவிதை எழுதச் சொல்வார்கள். அப்படி எழுதி நிறைய பிரசுரமாகியிருக்கின்றன. அதன்பின் ஹைக்கூ கவிதை மீது காதல்... எழுதுடா... விடாதே என இரண்டு டைரிகள் நிறைய 2000க்கும் மேல் கிறுக்கிக் கிடக்கு. இப்போ ஹைக்கூவுக்கு எல்லாம் டாட்டா காட்டியாச்சு. இன்று வலையுலகில் நிறைய திறமையான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலரின் கவிதைகள் படித்ததும் பிடிக்கும்... சிலரின் கவிதைகள் படிக்கப் படிக்க பிடிக்கும். சிலரின் கவிதைகள் படித்த்தும் பிடித்து விடாது... ஆனால் அதையே சிந்திக்க வைத்து நம்மைப் பிடித்துக் கொள்ளும்.

சரி வாங்க ஆண் கவிஞர்களின் அழகிய கவிதைகளைப் பார்க்கலாம். முதலில் கவிதாயினிகளில் சொன்னது போல் நட்புக்கு மரியாதை.

னது நண்பன் கவிஞர் தமிழ்க்காதலன் அவர்கள் "இதயச்சாரல்..!" என்ற தளத்தில் எழுதி வருகிறார். இவரது கவிதைகள் அனைத்தும் மிகச் சிறப்பாக இருக்கும். தற்போது தமிழ்க்குடில் அறக்கட்டளை மற்றும் இயற்கை விவசாயம் என ஓயாது பணி செய்வதால் வலையில் எழுதுவது என்பது குறைந்து விட்டது. ஆனால் அவ்வப்போது முகநூலில் கவிதை பகிர்கிறார். நானும் மீண்டும் வலையில் எழுது என்று சொல்லி வருகிறேன். இதுவரை செவி சாய்க்கவில்லை. வெளிப்பயணம் என்ற கவிதையில் அவரது தமிழ் விளையாடுவதை நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"நிலமென நீண்ட பருவுடல் தாங்கும்

உயிரதன் உணர்வுகள் ஒளியுடன் தோன்றும்
உதிர்வன அதிர்வன ஒலியுடல் தாங்கும்
புதியன புகுவன இழைந்திட தோன்றும்"
 ----------------------------

விஞரும் பதிப்பாசிரியருமான அண்ணன் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள் தனது பெயரிலேயே வைத்திருக்கும் தளத்தில் அருமையான கவிதைகளைப் பகிர்ந்து வந்தார். தற்போது இவரும் முகநூலில் மட்டுமே கவிதைகளைப் பகிர்கிறார். நான் விரும்பி வாசிக்கும் இவரின் கவிதைகளில் இந்தக் கண்ணாடியை நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"எதிர்பாரா தருணத்தில்மலர்ந்து கசிந்த யோனியின் வலியெனமறுதலித்து உதறிச் செல்கின்றன சொற்கள்"
 ----------------------------

கோதரர் கவிஞர் ரூபன் அவர்களைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இணையத்தில் கவிதைப் போட்டிகள் நடத்தும் எழுத்தாளர். இவரின் தளமான ரூபனின் எழுத்துப்படைப்புக்கள் கதை, கவிதை, கட்டுரை என எல்லாம் தாங்கி நிற்கிறது. இவர் சமீபத்தில் பகிர்ந்த  இதயத்தில் உன்னை சிறை வைப்பேன் கவிதையில் எப்படிச் சிறை வைக்கப் போகிறார் என (சு)வாசித்துப் பாருங்கள்.  

"நித்தம் நித்தம் உன் நினைவுநீச்சல் போடுது என் குருதித் தடாகத்தில்.நீந்தி நீந்திக் களைக்கிறேன்.நிதமும் வந்து ஆறுதல் சொல்லிடுவாய்உன் குறும்புச் சிரிப்புஎன்னை சொக்க வைத்ததடி."
  ----------------------------

னது தம்பி கவிஞர் தினேஷ்குமார் அவர்கள் கலியுகம் என்னும் வலைத்தளத்தில் எழுதி வருகிறார். இவரின் கவிதைகள் எல்லாமே ஒருமுறைக்கு இரண்டு முறை படிக்க வேண்டும். புரிந்து படித்தால் ரசித்து ருசிக்கலாம். வார்த்தைகளை வசமாக இறக்கி வைக்கும் நிதர்சனக் கவிஞன். இவரும் தற்போது அதிகம் கலியுகம் வருவதில்லை. முகநூலில் முகாமிட்டுள்ளார். உயிர் மட்டும் பேசுதடி என்ற கவிதை இவரின் வரிகளில் இருந்து வித்தியாசப்படும். நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள். 
"கடுகும் கனக்குதடி-நின்கார விழி பார்வையிலே கரும்பும் கசக்குதடி-நின்னைகாணாத நாழிகையில் குரும்மிளகு இனிக்குதடி-நின்மீளாப் புன்னகையில்"
-----------------------------
இனி எனக்குப் புதியவர்களாய்த் தோன்றிய சில கவிஞர்களின் பக்கங்கள் உங்கள் பார்வைக்காக...

விஞர் இ.இசாக் அவர்கள் ஒரு கலகக்காரனின் கனவு உலகம் என்ற தளத்தில் எழுதி வருகிறார். மேலும் இவர் இணைய எழுத்தாளர் மட்டுமின்றி புத்தக ஆசிரியர்குறும்பட இயக்குநர் என பிரபல மனிதராக இருக்கிறார். இவர் இதுதான் என்றில்லாமல் எல்லாம் கலந்து எழுதுகிறார். இவரின் பிள்ளைகளின் பிரதேசம் என்னும் கவிதையில் பிள்ளைகளை நாம் எப்படி நடத்துகிறோம் என்பதை அருமையாகச் சொல்கிறார். நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"எங்களுக்குப் பழக்கப்பட்டவற்றை

உன் உலகத்துக்குள்
திணிப்பதையே கடமையாக கருதுகிறோம்
எங்கள் கவனத்துள்
அகப்படாத அற்புதம்
உன் உலகமென்பதை புறக்கணித்தபடி..."
 ----------------------------

விஞர் பா.இரவிக்குமார் அவர்கள் சிந்தனைத்துளிகள் என்ற தளத்தில் பதிவெழுதியிருக்கிறார். 2006-ல் ஆரம்பித்து 3 இடுகை... 2014 ஆகஸ்ட்டில் ஒரு இடுகை என மொத்தமே நான்கு இடுகைகள்தான் இவரின் தளத்தில் இருக்கின்றன. ஒருவேளை ஆரம்பித்த காலத்தில் வழிகாட்ட ஆளின்றி வசப்பட்ட வார்த்தைகளை வாக்கியமாக்க முடியாமல் விட்டுவிட்டாரோ என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. மீண்டும் இவர் துளிர்க்க வேண்டும் என்பதே எனது ஆசை. இவரின் நதியின் வேட்கை என்ற கவிதையில் என்ன சொல்கிறார் என்பதை நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"என்று இத்தவ மண்ணில் வசந்தம் அரும்புமேயெனவருந்தின நாட்கள் ஏராளம் ஏராளம்எழில்மிகு உடைவிலா ஒளி முகிழ்த்தது காண்!இடர்மறந்து தோள்சேர்ந்து உவகையுடன் செயலாற்றிடுவீர்தாயகத்தை தரணிபாடும் தளமாக்கிடுவீர்..."
 ----------------------------

லங்கைக் கவிஞரான அமுதன் அவர்கள் மன்னார் அமுதனின் பக்கங்கள் என்ற தளத்தில் எழுதி வருகிறார். நொறுங்கிய இதயங்கள் ஒதுங்க ஒரு இடம் என்று சொல்லும் இவரின் கவிதைகளில் காதல் தோல்வி கவிதைகள் அவ்வளவாக இல்லை என்று நினைக்கிறேன். விட்டு விடுதலை காண், அக்குரோணி கவிதைகள் என்ற புத்தகங்களின் ஆசிரியர் இவர். தனது நல்லுமரமும் ராசாதிண்ணையும் என்ற கவிதையில் என்ன சொல்கிறார் என்று நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"விழுதுதுகள் எழுகையில்வயோதிபர்களின்வேடந்தாங்கலாகியிருந்ததுஅப்பா அதைச் சுற்றிதிண்ணை கட்டினார்"
 ----------------------------

விஞர் இளங்கோ அவர்கள் ஒற்றையடிப் பாதையில் ஒரு யாத்ரீகன் என்ற தளத்தை 2005ல் ஆரம்பித்து சரியாக ஒரு வருடங்கள் மட்டுமே வலையுலகில் இருந்திருக்கிறார். ஒருவேளை வலைப்பூக்கள் மிகவும் பிரபலமாக இருந்த 2010க்கு பிற்பட்ட காலத்தில் ஆரம்பித்திருந்தால் தொடர்ந்து எழுதியிருப்பாரோ என்னவோ. இவரது கவிதைகள் ஒரு யாத்ரீகனின் மனக்கிறுக்கல்களாக அழகாக வெளிப்படுகின்றன. இப்போது நினைத்துத் தொடர்ந்தாலும் வலையுலகில் சிறப்பானதொரு இடத்தைப் பிடிக்கலாம். இவரது நதிகடத்தல் என்ற கவிதையை (சு)வாசித்துப் பாருங்கள்.  
"இவனுக்கென்ன தெரியுமெனமுகஞ்சுழுத்து ஒதுக்கியவர்க்காய்பெண்களுடன் அலைபவன்கெட்டொழிவானென சபித்தவர்க்காய்விரும்புதல் விரும்பாமையின்றிஎதிராய்த் தூக்கியதுஇந்தப் பட்டப்படிப்பு"
 ----------------------------

'ரவலான பாரதி தடத்தின் குறும்பயணி' என்று சொல்லும் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியரான கவிஞர் குருநாத சுந்தரம் அவர்கள் பெருநாழி என்ற தளத்தில் கவிதை, கதை, கட்டுரைகள் என பல்சுவையாய் எழுதி வருகிறார். எப்பொழுது வருவாய் கர்மவீரா! என்ற கவிதையில் எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார் என்று நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"நீபடிக்காததையெல்லாம்என்னைப்படிக்கச் சொன்னாய். தலைகவிழ்ந்திருந்தஎன்நிமிர்தலைவீழ்த்தினாய் !"
  ----------------------------

'மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு' என்ற தந்தைப் பெரியாரின் வரிகளை தனது தளத்தில் எழுதி தனது பெயரிலேயே வலைத்தளம் வைத்திருக்கும் கவிஞர் முனைவர் வா.நேரு அவர்கள் தனது கையில் குழந்தையோடும் கண்களில் வழியும் நீரோடும் என்ற கவிதையில் கையில் குழந்தையோடு மனசுக்குள் ரணத்தைச் சுமக்கும் ஒருவனின் கதையை கவிதையாக்கி இருக்கிறார். அருமையான தளம் நீங்களும் (சு)வாசித்துப் பாருங்கள்.  
"அப்படிச்சொன்னவர்களிடம்அபரிதமானநம்பிக்கையோடு சொன்னான்என் மனைவி அனல்அண்ட முடியாது அவளிடம்அக்கினியாய் பொசுக்கிவிடுவாள் என்றான்"
 ----------------------------

ன்றைய அறிமுகங்களை வாசித்து அவர்களின் பகிர்வுகளில் உங்கள் கருத்துக்களை தவறாமல் அளித்து வாருங்கள்... அது சரி எங்க கிளம்பிட்டீங்க... இருங்க பாட்டு ஒண்ணு இருக்கு, அப்புறம் மதுரை வலைப்பதிவர் மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இருக்கு அதையும் பாத்துட்டுப் போங்க.
கவிதை அரங்கேறும் நேரம்


2014 மதுரை பதிவர் மாநாடு நிகழ்ச்சி நிரல்


நாளைக்கு நமக்குப் பிடித்த சிறுகதை ஆசிரியர்களைப் பார்க்கலாம்... கதைகளைப் படிக்கலாம்... நன்றி.

-‘பரிவை’ சே.குமார்.

16 comments:

  1. நம்ம பயக பொண்ணு யாரு... அவனுக்கு உறவா இல்லை பழக்கமா... எங்க படிக்குது... என எல்லாம் விவரமாச் சொல்ல, அதை வைத்து அப்படியே ஒரு கவிதை உருவாக்கிக் கொடுத்து விடுவேன். நம்ம பயக பொண்ணு யாரு... அவனுக்கு உறவா இல்லை பழக்கமா... எங்க படிக்குது... என எல்லாம் விவரமாச் சொல்ல, அதை வைத்து அப்படியே ஒரு கவிதை உருவாக்கிக் கொடுத்து விடுவேன். //

    ஆஹா! சினிமாவுக்கு பாட்டு எழுதலாமே!

    //எத்தனை காதல் வாழ்கிறது என்பதும் அடியேனுக்குத் தெரியாது//


    உங்களால் வளர்ந்த காதல் நன்றாக வாழட்டும்.

    இன்றைய கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அம்மா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. சிறந்த அறிமுகங்கள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சார்....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  3. இன்றும் கவிதைச் சாரல்..
    அன்பின் நல்வாத்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  4. கவிஞர்கள் தினமா? வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  5. வணக்கம்
    அண்ணா

    இன்றைய கவிஞர்களின் தொகுப்பு மிக அருமையாக உள்ளது அறிமுகங்கள்அனைவருக்கும் வாழ்த்துக்கள்
    என்னையும்அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரூபன்....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  6. நல்ல அறிமுகங்கள் . வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜி....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  7. கவிஞர்களை வாழ்த்துகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோதரா....
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  8. மிகச் சிறந்த கவிஞர்கள்
    அறிமுகமும் மிக மிக அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ரமணி ஐயா...
      வணக்கம்.
      தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete