சென்ற
மாதத்தில் ஒரு நாள் சீனா ஐயாவிடம் இருந்து மின்னஞ்சல் - “வரும் வாரத்தில் வலைச்சர
ஆசிரியர் பொறுப்பினை ஏற்க முடியுமா?” ”கரும்பு திங்க கூலியா?” என்று கேட்க
ஆசையிருந்தாலும், பணிச்சுமை காரணமாக உடனேயே ஏற்றுக்கொள்ள முடியாத சூழல். சில
வாரங்கள் கழித்து என்றால் சரி என்று பதில் அனுப்பி விட்டேன். அவரும் உடனடியாக இந்த வாரத்தில் வலைச்சர
ஆசிரியராக இருங்கள் என்று சொல்லி விட்டார். ஒத்துக்கொண்டு விட்டேனே தவிர
மனதிற்குள் சஞ்சலம் - “என்னால் முடியுமா?” என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டே இருந்தது!
தினமும் ஒரு பதிவு என்று எழுதிக் கொண்டிருந்தது சில
மாதங்களாக வாரத்திற்கு மூன்று என்று குறைந்து சில வாரங்களில் “கழுதை தேய்ந்து
கட்டெறும்பு ஆன” கதையாக வாரத்திற்கு ஒன்று என ஆகிவிட்டது! இதில் வாரம்
முழுவதும் வலைச்சரத்தில் ஆசிரியர் பணியாற்றுவது சிரமம் என்றாலும் கிடைக்கும் கொஞ்ச
நேரத்தில் பதிவுகளைத் தேடி, தொகுத்து வாரம் முழுவதும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள
இருக்கிறேன்.
வலைச்சரத்தில் ஆசிரியராக பணியேற்றுக் கொள்வது இது
இரண்டாம் முறை – முதலில் ஏப்ரல் 2 2012 முதல் ஏப்ரல் 8 2012 வரை. அப்போது வலைச்சரத்தில் எழுதிய பதிவுகள் கீழே.
இப்போது இரண்டாம் முறை! வாய்ப்பளித்த சீனா ஐயாவிற்கு
முதலில் நன்றி சொல்லிக் கொண்டு இன்றைய பதிவில் என்னைப் பற்றி கொஞ்சம் சொல்லி
விடுகிறேன்!
வெங்கட் நாகராஜ் – ஒரு பயோடேட்டா! இது ஒரு பயடேட்டாவா
என்பதை நீங்க தான் சொல்லணும்!
பெயர்: வி.நா. வெங்கடராமன் –
வலைப்பதிவிற்காக வெங்கட் நாகராஜ்.
வலைப்பூ: சந்தித்ததும் சிந்தித்ததும்
பிறந்ததும் வளர்ந்ததும்: நிலக்கரி நகரம் நெய்வேலி!
வாழ்வது: இந்தியத் தலைநகர் தில்லி!
குடும்பம்: மனைவி, மகள் – அவர்களும்
பதிவர்கள் தான்... மனைவியின் வலைப்பூ – கோவை2தில்லி.
மகளுக்காக நாங்கள் வைத்திருக்கும் வலைப்பூ: வெளிச்சக்கீற்றுகள்.
பிடித்த பொழுதுபோக்கு: சுற்றுலா செல்வது, புத்தகங்கள் படிப்பது,
புகைப்படங்கள் எடுப்பது, பாடல்கள் கேட்பது.
வலையுலக அறிமுகம்: 30 செப்டம்பர் 2009 [ஐந்து வருடமா இங்க தான் குப்பை
கொட்டிட்டு இருக்கேன்!]
இதுவரை எழுதிய பதிவுகள்: நேற்று வரை 783 பதிவுகள்! அதில் எத்தனை நல்ல பதிவுகள்
என்பதை படித்தவர்கள் தான் சொல்ல வேண்டும்! 4 லட்சம் பக்கப் பார்வைகளை இந்த
வருடத்திற்குள் தொட இருக்கிறேன்!
எனக்குப் பிடித்த எனது பதிவுகள் – நான் எழுதிய அனைத்தும் எனக்குப்பிடிக்கும்
என்றால் அது அப்பட்டமான பொய்! எழுதிய பிறகு இன்னும் கொஞ்சம் சிரத்தையுடன்
எழுதியிருக்கலாம் என்று நினைத்த பதிவுகள் தான் அதிகம்! சில பதிவுகளின் சுட்டிகள்
மட்டும் இங்கே – ஒரு அறிமுகத்திற்காக!
ஸ்பெஷல் மீல்ஸ் – இரயில் பயணங்களில்
ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம் - அனுபவம்
நாவூற வைக்கும் அரிநெல்லிக்காய் – மனச்சுரங்கத்திலிருந்து....
காதிற்கு ஒரு பூட்டு – தலைநகரிலிருந்து....
கண்கவர் காதலி – மத்தியப் பிரதேசம் அழைக்கிறது பயணத்தொடர்
குச்சி தாத்தாவும் பட்டை கோவிந்தனும் – சாலைக்காட்சிகள்
இதுக்கும் மேலே என்னுடைய பதிவுகளின் சுட்டிகள்
கொடுத்தால் “அடி கிட்டும்!” என்று யாராவது சொல்வதற்குள் நிறுத்தி விடுகிறேன்!
என்ன நண்பர்களே..... இன்றைய சுய அறிமுகம் இத்துடன்
போதுமென நினைக்கிறேன். வலைச்சரத்தில் என்னுடைய பதிவுகளை பலர் அறிமுகம்
செய்திருந்தாலும், வலைச்சரத்திற்கு வரும் பல பதிவர்களுக்கு நான் புதியவன் தான்!
அதனால் இத்தனை நீளமான ஒரு அறிமுகம். நாளை
முதல் மற்ற வலைப்பதிவர்களின் அறிமுகங்கள் தொடரும் – ஒரு வாரத்திற்கு!
நாளை சந்திப்போம் நண்பர்களே..... அதுவரை வணக்கத்துடன் விடைபெறுவது....
உங்கள்.....
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு - பகைவனுக்கும் அருளும் அன்னை அதையும்
படிக்கலாமே!
வாங்க அண்ணா! வழக்கம் போல கலக்குங்க:)
ReplyDeleteவருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.....
Deleteநீங்கள் எழுதிய பதிவுகள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும்... ஒரு வாரத்துக்கு வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.....
Deleteவாழ்த்துகள். குறுகிய காலத்தில் நாலு லக்ஷம் பார்வையாளர்களைப் பெற்றமைக்கும் வாழ்த்துகள். வலைச்சர ஆசிரியராக முன்னால் இருந்தப்போ தெரியாது. இப்போப் படிச்சுடுவோம். சுட்டி மட்டும் பகிர்ந்துடுங்க. இல்லைனா மறந்துடும். :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....
Deleteகலக்குங்க வி.நா. வெங்கடராமன்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteஅன்பின் வெங்கட் ..
ReplyDeleteஅறிமுகம் அருமை...
தங்களின் வலைச்சரப் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்..
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.
Deleteஅசத்தல்...
ReplyDeleteமதுரையில் சந்திக்க மிகவும் எதிர்ப்பார்த்தேன்...
பணிச்சுமை காரணமாக மதுரை வர இயலவில்லை. அடுத்த வருடம் புதுக்கோட்டையில் சந்திப்போம்..
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.
அன்பின் வெங்கட்
ReplyDeleteவலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள்
சுய அறிமுகம் நன்று - சென்று பார்க்கிறேன் - படிக்கிறேன்.
ஒரு வாரம் - தூள் கெளப்புங்க
த.ம : 5
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
வாய்ப்பினை அளித்த உங்களுக்கு மீண்டுமொரு முறை நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
வலைச்சரப் பணி சிறக்க நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சரவணன்.
Deleteஇரண்டாவது முறையாக வலைச்சர ஆசிரியர் பொறுப்பு ஏற்றமைக்கு
ReplyDeleteநல்வாழ்த்துக்கள். வாசமிகு பூக்கள் கொண்டு நேசமிகு வலைச்சரத்தை
தொடுத்திடுங்கள். தொடர்கிறேன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்.
Deleteவேங்கடவா !!
ReplyDeleteநாகராஜா !!
நமஸ்காரம். நமஸ்காரம்.
சுப்பு தாத்தா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா.
Deleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக பணியேற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்ன? உங்களுக்கு அறிமுகம் தேவையா என்ன? சிறப்பாக பணியாற்ற வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
Deleteநல்ல அறிமுகம் தொடர்கிறேன்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி..... தொடர்ந்து சந்திப்போம்....
Deleteவாழ்த்துக்கள் நண்பரே /தொடருங்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
Deleteவலையுலகில் அறிமுகம் தேவையற்ற நிலையில்
ReplyDeleteஉள்ள சிலரில் நீங்களும் ஒருவர்
மரபு கருதி அறிமுகம் செய்து கொண்டுள்ளீர்கள்
அறிமுகம் அருமை
இவ்வாரம் சிறப்பான வாரமாக அமைய
நல்வாழ்த்துக்கள்
ரொம்பப் புகழாதீங்க ரமணி ஜி!...
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணிஜி!
வலைச்சர வாரத்துக்கு வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.
Deleteதங்களின் அறிமுகம் சூப்பர். அதிலும் குடும்ப சகிதம் வலைப்பத்திவர்களாக இருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைச்சரம் தொடுக்க வந்த சகோதரர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வழக்கம் போல அன்றையன்று வலைச்சரம் படித்து விடுவேன். நேரம் கிடைக்கும் போது கருத்துரைகள் எழுதுவேன்.
Deleteத.ம.7
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
Delete4 லட்சமா??? சூப்பர்.. கலக்குங்க !
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரிஷபன் ஜி!
Deleteவாழ்த்துக்கள் சார் கலக்குங்க..குடுப்பவலைப்பூக்கள்...! நன்று நன்று
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.
Deleteபணி சிறக்க வாழ்த்துகள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.
Deleteவாழ்த்துக்கள் நண்பரே!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவிப்ரியன் கலிங்கநகர்.
Deleteவணக்கம் !
ReplyDeleteவருக வருக அன்புச் சகோதரனே வலைச்சர வாரம் அழகொளிர !
சிறப்பான இன்றைய பகிர்வும் வழமை போல் அசத்தலாக உள்ளது !
பாராட்டுகள் சகோ .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteதங்களின் அறிமுக பகிர்வின் எழுத்து நடையே சிறப்பாக இருக்கிறது. இனியும் தாங்கள் தொடர்ந்திட, நாங்களும் தொடர்கிறோம். நன்றி!
வாழ்த்துக்களுடன்,
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
Deleteஉங்கள் அறிமுகங்களைப் பார்க்கக் காத்திருக்கிறோம். வாழ்த்துக்கள் வெங்கட்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.
Deleteவலைப்பூவில் கலக்கும் நீங்கள் இங்கு அதைவிட அதிகமாய்ச் செய்வீர்களென்பது அனைவர்க்கும் தெரியும். உற்சாகமாய் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்....
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா
தங்களின் அறிமுகமே சர வெடியாக உள்ளது.. தொடர்ந்து அசத்த எனது வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
Deleteஆசிரியர் பணியை செம்மையாக செய்ய வாழ்த்துக்கள் !
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.
Deleteஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள் நாகராஜ் ஜி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்.
Deleteவாழ்த்துக்கள் வெங்கட்! உங்களின் சிறப்பான பதிவுகள் நானும் படித்து இருக்கிறேன்! அவை கட்டாயம் சிறந்த பதிவுகள்தான்! தொடருங்கள்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
Deleteபணி சிறப்பாக தொடர வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteசிறந்த அறிமுகம்
ReplyDeleteதொடருங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காசிராஜலிங்கம் ஐயா.
Deleteமீண்டும் கலக்கவரும் உங்களுக்கு ஒரு டஜன் (த ம ) வாழ்த்துகள் :)
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!
Deleteவாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteகலக்கலான வாரமாக அமையட்டும்...
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
Deleteசுய அறிமுகம் நன்று. மேலும் இந்த வார ஆசிரியப் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
Deleteசிறப்பான சுய அறிமுகம் முன்னணிப் பதியரின் வலைசர தொகுப்பை அறிய ஆவல்
ReplyDeleteஎப்போதும் போல கலக்குங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.
Deleteப்ளாக் திறந்தால் உங்களின் பதிவு இருந்தால், அங்கே தான் முதலில் செல்வேன். அவ்வளவும் மனமகிழ்வைக் கொடுக்ககூடியவை. தொடர்ந்து ரசனை உணர்வுடன் பதிவெழுதி வரும் சகோதரர் வெங்கட் அவர்களுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகள்..
ReplyDeleteஊக்கமளிக்கும் உங்கள் கருத்துரை எனக்கு மகிழ்ச்சி தந்தது ஸ்ரீவிஜி....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.
வணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇவ்வார வலைச்சர ஆசிரியராக உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.
Deleteஅன்பின் வெங்கட்
ReplyDeleteபதிவு நன்று - அருமை - எழுபதுக்கும் மேலான மறுமொழிகள் - தூள் கெளப்புங்க !
பாராட்டுகள்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
எழுபதுக்கும் மேலான மறுமொழிகள் - அதில் பாதி எனது பதில்கள்! :)
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா.
வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
Deleteதங்கள் அறிமுகமே அட்டகாசமாய் இருந்திருக்கின்றது! கலக்கிக் கொண்டு வருகின்றீர்கள்! இன்று வரை பார்த்துவிட்டோம்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
Delete