தமிழகத்தில்
சாராயம் மூலம் கிடைக்கும் வருமானத்திற்காக, அரசே “டாஸ்மாக்” கடைகளைத் திறந்து
நமது மாநிலத்தில் பல குடிகாரர்களை உருவாக்கி வெகுவான புண்ணியம்
தேடிக்கொண்டிருக்கிறது. அந்த பாபங்களைத்
தீர்த்துக் கொள்ளலாம் என்று காவிரியில் நீராடலாம் என்றால் – அங்கே தண்ணீரே இல்லை –
மணல்கொள்ளை நடத்தும் பல பெரும்புள்ளிகளால் அழகிய காவிரிப்பெண் அம்மைத் தழும்பு
கொண்டவள் போல காட்சி அளிக்கிறாள்.
சரி இது போகட்டும் – சென்ற மாதத்தின் ஆரம்பத்தில் தீவிர
மதுவிலக்கு கொண்ட மாநிலமான குஜராத் மாநிலத்திற்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக
சென்றிருந்தேன். பல இடங்களைக் கண்டு வந்தேன்.
அங்கே பூரண மதுவிலக்கு இருந்தும் பக்கத்து மாநிலமான ராஜஸ்தானிலிருந்து
கள்ளத்தனமாய் கடத்திவருகிறார்கள். அப்படி கடத்தி வந்ததால், மதுவின் விலை பல மடங்கு
ஆகிவிடுகிறது. சாதாரண IMFL சரக்கு ஒரு ஃபுல் 1000 ரூபாய்க்கு கூட
விற்கப்படுகிறது என்கிறார் அங்குள்ள ஒருவர். சாதாரண மக்களால் அதனை வாங்கிவிடமுடியாது.
அதனால் அவர்கள் வேறொரு பழக்கத்திற்கு அடிமையாகி இருக்க்கிறார்கள்.
மாவா மசாலா – அதாவது புகையிலை, பாக்குச் சீவல்,
சுண்ணாம்பு ஆகிய மூன்றையும் கலந்து வாயில் நிரந்தரமாக அடக்கிக் கொள்கிறார்கள் –
குஜராத்தில் பார்த்த பலர் – பெண்கள் உட்பட இதை அடக்கி வழியெங்கும் எச்சில்
உமிழ்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு ஒரு
சிறிய பிளாஸ்டிக் காகிதத்தில் கட்டப்பட்ட ”புடியா” கிடைக்கிறது.
நாளொன்றுக்கு பத்து பதினைந்து பொட்டலங்களை சர்வசாதாரணமாக உள்ளே
தள்ளுகிறார்கள் சிலர்.
மது அருந்துவதும், இப்படி மாவா மசாலா பயன்படுத்துவதும் தங்களது
உடல் நலனைப் பாதித்து, தனது குடும்பத்தினையும் அவதிக்குள்ளாக்கும் என்பது தெரிந்தே
இப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட இவர்களை என்ன சொல்வது! அவர்களாகத் திருந்தினால்
தான் உண்டு.
வலைச்சரத்தில் இந்த வாரம் முழுவதும், குஜராத் நகரில்
நான் கவனித்த சில விஷயங்களை வலைப்பதிவுகளின் அறிமுகத்திற்கு முன்பாக சொல்லப்
போகிறேன் – கேட்க நீங்கள் தயார் தானே! சரி
இந்த இனிய இரண்டாம் நாளின் அறிமுகங்களைப் பார்க்கலாமா?
1 வலைப்பூ:
உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்
ஆரோக்கியக்
குறிப்புகள், மருத்துவ குணம் நிறைந்த பொருட்கள், சிறுகதைகள் என பல்சுவைப் பதிவுகளை
எழுதிக் கொண்டிருக்கும் இப்பதிவரின் ஒரு பதிவினை இன்று பார்க்கலாம்...
அறிமுகப்
பதிவு: சவுக்கு மரங்கள் அழுவதில்லை.....
நம்மை இன்று வரை சிரிக்க வைத்துக்கொண்டிருக்கும்
நகைச்சுவை மகா நடிகர் அமரர்
நாகேஷின் பேட்டியை படித்தேன்...
எத்தனை ஆழமான உண்மை...
யோசித்து பார்த்தால் நாம் எத்தனை முறைகள் சவுக்கு மரமாகப் பயன் படுத்தப்பட்டிருக்கிறோம்...
2 வலைப்பூ: கிரி ப்ளாக்
2006-ஆம்
ஆண்டிலிருந்து எழுதிக் கொண்டிருக்கும் இவர் தன்னைப் பற்றிச் சொல்லும்போது ”பதிவு எழுதுவதற்கு அடிமை ஆகி விடக்கூடாது என்று அளவாக எழுதிக்கொண்டு இருக்கிறேன். எழுதுவது
எனக்கு ரொம்ப பிடித்தமான விஷயம். தமிழை பிழையில்லாமல் எழுதுவதே நான் தமிழுக்கு
செய்யும் பெரிய தொண்டு. என்னுடைய எண்ணங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்
என்பது மட்டுமே என்னுடைய விருப்பம்”
என்று சொல்கிறார்.
அறிமுகப்
பதிவு: வீடு தாத்தா
“தாத்தா பாட்டியின் அருமை என்னைப் போன்ற அந்த
வாய்ப்பு கிடைக்காதவர்களுக்குத்
தான் தெரியும். தாய் தந்தை இல்லாதவர்கள் ஏக்கம் எப்படி பலரால் கூறப்படுகிறதோ, அது போல இதுவும் அந்த உணர்வை ஒட்டியது தான். பெரியவர்களிடம் அன்பாக
நடந்து கொள்ளுங்கள், அவர்களுக்கு
உரிய மரியாதையை கொடுங்கள். குறிப்பாக உங்கள் குழந்தைகளுக்கு பெரியவர்களின் முக்கியத்துவத்தை உணரச்
செய்யுங்கள். அனைவரும் இந்த நிலையை கடக்காமல் செல்ல முடியாது எனவே பின்னாளில், செய்த தவறை உணர்ந்து வருந்தாமல் தற்போதே சரியான வழியில் செல்லுங்கள்.”
3 வலைப்பூ: உள்ளங்கை
பங்கு
வர்த்தகம் பற்றி நிறைய எழுதுகிறார் இந்த பதிவர்.
இன்று நாம் பார்க்கும் பதிவில் அவரது அனுபவம் பற்றி எழுதி இருக்கிறார் –
கண் மருத்துவமனையில் கண்களை பரிசோதிக்கச் செல்லும்போது உங்கள் கண்களில் சொட்டு
மருந்து விட்டு உட்காரச் செய்து விடுவார்கள். அப்படி கிடைத்த அனுபவம் தான் இன்றைய
பதிவில் நாம் பார்க்கப் போவது!
அறிமுகப்
பதிவு: காணாததைக் கண்டேன்!
கண்விழிகளை விரிவாக்க (dilation aka dilatation)
கண்ணினுள் சில சொட்டுக்களை விட்டு கண்களை
மூடிக்கொண்டு சமர்த்தாக உட்கார வைத்துவிட்டார்கள். அதில் எனக்கு எந்த சிரமமும் இல்லை. வாயை மூடிக்கொண்டு
இருப்பதுதான் சிறிது சங்கடம். ஏதாவது பேசாவிட்டால் முகத்திலுள்ள தசைகள் வலிக்கத் தொடங்கிவிடும்!
4 வலைப்பூ: உண்மையைத் தேடி
கவிதைகள், கதைகள், அதிசயங்கள், அமானுஷ்யம், ஜோதிடம்,
ஆன்மீகம், அருளுரை என பல தலைப்புகளில் பதிவுகள் எழுதுகிறார். இவரது பதிவுகள் சில
பிரமிக்க வைக்கின்றன. படித்துப்
பாருங்களேன்!
அறிமுகப்
பதிவு: பார் போற்றும் பர்வத மலை அதிசயங்கள்
அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம்
செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’
பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில்
தங்கிச் சென்ற
பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
5 வலைப்பூ: ஆறுமுகம் அய்யாசாமி
ஒரு நாளிதழில் பத்திரிகையாளராகப் பணிபுரிகிறாராம்.
கோவையைச் சேர்ந்தவர். அவரது கீழ்க்கண்ட
பதிவிலேயே அது தெரிகிறது. பதிவுகள்
மட்டுமல்லாது கீச்சுகளிலும் கலக்குகிறார்.
அறிமுகப் பதிவு: லண்டன் வேலைக்குப் போகப்போறேன்!
‘‘நீங்க மட்டுமில்லிங் சார், நெறயப்பேரு எவ்வளோ சொல்லியும் கேட்காம வெளிநாடு போய், பணம் லட்சக்கணக்குல போனதுதான் மிச்சங் சார்.
உசுரோட வந்தாப்போதும்னு
ஆயிடுச்சுங். உங்கள மாதிரி படிச்சவங்க எப்படியோ தப்பிச்சுக்குறாங் சார். என்னை மாதிரி
படிக்காதவன்னா எல்லாரும் நல்லா ஏமாத்தறாங் சார். இனிமே ஆயுசுக்கும் ஒத்தப் பைசா கூட
ஏமாற மாட்டேங் சார்,’’ என்றார்.
‘ஜெயிலுக்குப் போகாமல் தப்பி வந்தது பெரும்பாடு’
என்ன நண்பர்களே, இந்நாளின் அறிமுகப் பதிவர்களின்
பதிவுகளைப் படித்து அவர்களுக்கும் ஊக்கமளிப்பீர்கள் என நம்புகிறேன். குஜராத் பற்றிய தகவல் குறித்த உங்கள் கருத்துகளையும்
சொல்லுங்களேன்...
நாளை மீண்டும் வேறு சில பதிவர்களின் பக்கங்களைப்
பற்றிப் பார்க்கலாம்.
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
டிஸ்கி: எனது பக்கத்தில் இன்றைய பதிவு: முற்றுப்பெறாதமனு – நெய்வேலி பாரதிக்குமார் - அதையும் படிக்கலாமே!
அறிமுகமும் ஆய்வும் அருமை.பாராட்டுக்கள்
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கவியாழி கண்ணதாசன்.
Deleteநேற்று எங்கள் ஊரில் நடந்த கொலை பற்றி ஊடங்கள் பேசினவே அதற்கு பெரும் காரணம் குடிதான் என்கிறார்கள். என்னவோ போங்க:((
ReplyDeleteஇந்த முறை ரொம்ப சீனியர்ஸ் அறிமுகம் செய்திரிறீர்கள். போய் பார்க்கிறேன் அண்ணா!
அவர்களே திருந்தினால் தான் உண்டு.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி...
மக்கள் போதைக்கு அடிமையாவதை பற்றி எந்த அரசுக்கும் அக்கறை இல்லை, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படவேண்டும். வலைத்தள அறிமுகத்தின் முன்பான தகவலில் உங்களின் சமூக அக்கறை தெரிகிறது. பாராட்டுகள் வெங்கட்.
ReplyDeleteஉங்கள் மூலமாக அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு எனது வாழ்த்துகள் ! சென்று பார்க்கிறேன் .
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கௌசல்யா ராஜ்.
Deleteதாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள பதிவர்கள் எனக்கு புதியவர்கள். அவர்களது பதிவுகளை படிக்க வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றியும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும்!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
Deleteமதுப்பழக்கம் ஆண்களிடம் மட்டும்தான் அதிகம் இருக்கும். ஆனால் மாவாப் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை குஜராத்தில் இருக்கிறது என்பது யோசிக்க வேண்டிய விஷயம்.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்களில் உஷா ஸ்ரீகுமார் (அய்யா V.G.K அவர்களது பதிவுகளால் தெரியும்) கிரி ப்ளாக் - பதிவுகளைப் படித்து இருக்கிறேன். மற்றவர்கள் பக்கம் போய்ப் பார்க்கிறேன்.
தமிழ்மணம் ஓட்டுப் பட்டை என்ன ஆயிற்று?
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
Deleteஇன்று தமிழ்மணம் ஓட்டுப் பட்டை ஏனோ வேலை செய்யவில்லை..... காக்கா உஷ் ஆகிவிட்டது! தெரிந்த பிறகு சேர்க்க வேண்டும்!
வெங்கட்நாகராஜ்,
ReplyDeleteதென்பெண்ணையும் இப்படித்தான் சுரண்டப்பட்டுவிட்டது. ஆறு முழுவதும் எங்கு பார்த்தாலும் மணல் & தண்ணீருக்குப் பதிலாக லாரிகள்தான்.
குஜராத்துக்கு எங்கே போகப் போகிறேன் ! இப்படி யாராவது எழுதியதைப் படித்தால்தான் உண்டு. தாராளமாய் எழுதுங்கோ !
ஒருவரைத் தவிர மற்றவர்கள் எனக்குப் புதிது. இன்றைய அறிமுகப் பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.
Deleteதென்பெண்ணை - பல வருடங்களாகவே அதில் தண்ணீர் இல்லையே.... விடாது மழை பெய்யும் நாட்களைத் தவிர...
அறிமுகப் பதிவு எல்லாமுமே புதியவை!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
Deleteகுஜராத் மட்டுமென்ன, வடமாநிலம் முழுவதுமே பான் மசாலாக்களால் ஆட்கொள்ளப்பட்டவையே! சென்ற வருட லக்னோ-அயோத்தி பயணத்தின் போது பான் மசாலா போட்டுக் கொண்டு ஆங்காங்கே பேருந்துகள், ஆட்டோக்கள், ரயில்கள் எனத் துப்பிக் கொண்டிருந்த படித்த இளைஞர்கள், இளம்பெண்களைக் கண்டு மனம் நொந்து விட்டது. இதிலே எங்கே" ஸ்வச்ச பாரத்" கொண்டு வர முடியும்னு புரியலை! :(
ReplyDeleteதுப்பித் தள்ளுவது இவர்களுக்கு வாடிக்கையாகி விட்டது. பல மருத்துவமனைகளில் இப்படி சுவர் ஓரங்களில் துப்பி வைத்திருப்பதைப் பார்க்கும்போதே எரிச்சல் தான் - சுத்தமாக இருக்க வேண்டிய இடமே இப்படி அசுத்தமாய் இருந்தால்!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...
அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகலக்குங்க வெங்கட் சார்.
.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.
Deleteமுற்றுப்பெறாத மனு
ReplyDeleteமுழுமையாக என்னைப்
புரட்டி போட்டு விட்டது.
பாரதி குமாரின் புத்தகத்தை வாங்கி
அத்தனை யும் படிக்கவேண்டும்.
. சுப்பு தாத்தா
www.subbuthatha72.blogspot.com
எனது தளத்தில் வந்திருக்க வேண்டிய கருத்தோ? :)
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா....
bar போற்றும் மக்களைப் பற்றி ஒரு குறிப்பு.
ReplyDeleteபார் போற்றும் பர்வத மலை பற்றி இன்னொரு குறிப்பு.
எங்கு செல்வது எதை நாடுவது
எல்லாமே
அவரவர் குறிஈர்ப்பு .
சுப்பு தாத்தா.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுப்பு தாத்தா..
Deletebar/பார் போற்றும் :)))
போதை எந்த ரூபத்தில் வந்தாலும் அது நம்மை அழிதுவிடுமென்பது தான் நிஜம். மக்களாக உணர்ந்து திருந்தாவிட்டால் கஷ்டம் தான்.
ReplyDeleteஎன் வலை தளத்தை வலைச்சரத்தில் அறிமுகப்படுதியதற்கு என் மனமார்ந்த நன்றிகள்
தங்களது வலைப்பூவினை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி...
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா ஸ்ரீகுமார் மேடம்.
குஜராத் பயணக் கட்டுரையோடு வலைச்சரப் பணி. அருமை. எல்லோருமே எனக்குப் புதிய பதிவர்கள்.
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
Deleteவாரம் முழுவதும் குஜராத் பற்றிய சில விஷயங்களைச் சொல்ல எண்ணம்....
எனது தளத்தில் பார்த்த இடங்கள் பின்னர் விரிவாக பதிவு செய்வேன்! :) விடுவதில்லை உங்களை!
இந்த பதிவை நீங்கள் தமிழ்மணத்தில் இணைக்கவும். இணைக்காததால் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை வரவில்லை என்று நினைக்கிறேன்.
ReplyDeleteகாலையில் தமிழ் மணம் ஓட்டுப்பட்டை வரவில்லை. ஏதோ பிரச்சனை போல. அதனால் தான் இணைக்கவில்லை.
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
சமூகத்திற்க்கு அவசியமான அலசல் நன்றி நண்பரே...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி. வலைச்சர வாரத்திற்கு பிறகு உங்கள் தளமும் வர வேண்டும்!
Deleteபுதிய தளங்கள் போய்ப்பார்க்கின்றேன் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனிமரம் நேசன்.
Deleteத.ம.1
ReplyDeleteதமிழ் மணத்தில் இணைத்து வாக்களித்தமைக்கு மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.
Deleteமாவா மசாலா பயன்படுத்துவது கவலை அளிக்கிறது.
ReplyDeleteஇன்றைய அனைத்துப் பதிவுகளும் படிக்க ஆவலை ஏற்படுத்துகிறது.
அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...
Deleteஇளைஞர்கள் பலரும் இதற்கு அடிமையாகி இருப்பது வேதனைக்குரியது....
அனைவரும் நான் அறியாத பதிவர்கள்! நேரம் கிடைக்கையில் சென்று பார்க்கிறேன்! நன்றி!
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.
Deleteபாக்கு பழக்கம் வட இந்தியா முழுவதுமே இருக்கிறது...
ReplyDeleteபுதிய அறிமுகங்களைத் தந்தமைக்கு மிக்க நன்றி சார்...
உண்மை தான் ஸ்.பை. இப்போது பல வட இந்தியர்கள் தமிழகத்திலும் வந்து விட்டதால் சென்னை போன்ற நகரங்களிலும் இந்த குட்கா போன்றவற்றின் பழக்கம் அதிகரித்து விட்டது!
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்.பை.
பதிவுகளை சிறப்பாய் அறிமுகம் செய்தீர்கள் - நன்றி!
ReplyDeleteதமிழ்மணம் 4
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன்.....
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteகுஜராத் பயண கட்டுரையில் பெண்களும் தீய பழக்கங்களுக்கு அடிமையானது வேதனைக்குரிய விஷயம். அவர்களாக திருந்த ஆண்டவன் அருள வேண்டும்.
தங்களால் வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தபட்டவர்களுக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.அனைவரின் பதிவுகளையும் சென்று வாசிக்கிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் அண்ணா...
ReplyDeleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
Deleteஅழகான நடையில்
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
தொடருங்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி யாழ்பாவண்ணன் காசிலிங்கம் ஐயா.
Deleteஐயா, வணக்கம். நேற்று அலுவலகப்பணி காரணமாக, இணையப்பக்கம் வரவில்லை. இன்று காலை தான் பார்த்தேன். என்னை அறிமுகம் செய்திருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி. தாமதமாக வந்திருப்பதை பொறுத்துக்கொள்ளவும் ஐயா. நன்றி.
ReplyDeleteதங்களை இங்கே அறிமுகம் செய்ததில் எனக்கும் மகிழ்ச்சி.... தொடர்ந்து சந்திப்போம்....
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி
மிக்க நன்றி ஐயா, மதுப்பழக்கம் தொடர்பாக என்னுடைய பதிவு ஒன்றின் இணைப்பை, தங்கள் அருள்கூர்ந்த பார்வைக்கு அனுப்பி வைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.
ReplyDeletehttp://aarumugamayyasamy.wordpress.com/2014/05/24/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/
உங்கள் பதிவின் சுட்டியை இங்கே தந்தமைக்கு நன்றி. படித்து அங்கேயே பதிலும் எழுதி இருக்கிறேன் நண்பரே..
Deleteதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.
ஏதோ ஒரு பழக்கத்திற்கு அடிமையாய்த்தானிருப்போம் என்பவர்களை என்ன செய்வது....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி எழில்.
Deleteநீங்கள் அறிமுகப்படுத்திய பதிவரில் ஒருவர காப்பி பேஸ்ட் பதிவர். இப்படி சொல்லக்காரணம் அவர் நெட்டில் படித்த செய்தி தகவல்களை முழுதும் அறியாமல் அப்படியே பகிர்வதால்தான். அவர் எழுதிய ஒரு பதிவை பார்க்க நேர்ந்தது அதில் ஒரு பொருளை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றிய அறிவுரைகளை சொல்லி இருந்தார் அந்த பொருளை விற்பனை செய்பவன் நான். அதை பற்றி பல தவறான கருத்துக்களை சொல்லி இருந்ததால் நான் உடனே நீங்கள் சொன்ன இந்த இந்த பாயிண்ட்கள் எல்லாம் தவறு இதுதான் சரி என்று கூறி பதில் கருத்து சொல்லி இருந்தேன் அதை இன்னுமும் அவர் வெளியிடவில்லை ஒருவேளை நான் அனுப்பியதுதான் அவருக்கு போய் சேரவில்லையோ என்று நினைத்து மீண்டும் அனுப்பினேன் அதையும் அவர் வெளியிடவில்லை. ஆனால் அந்த பதிவுக்கு திருச்சியில் இருக்கும் நம்ம வைகோசார் மாஞ்சு மாஞ்சு கருத்துக்கள் போட அதை மட்டும் அந்த பதிவர் வெளியிட்டுள்ளார்.
ReplyDeleteசரி நம்ம வைகோ சார் ஆதரவு அளிக்கும் பதிவர் என்பதால் அந்த விஷயத்தை அப்படியேவிட்டுவிட்டேன்,,
அப்படிபட்ட பதிவரை நீங்கள் இங்கு அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதுதான் எனக்கு ஆச்சிரியம் அளித்தது.
தங்களது வருகைக்கும் தகவலுக்கும் மிக்க நன்றி மதுரைத் தமிழன்.
Deleteஇப்படியும் சில மனிதர்கள்..... அவர் தவறு செய்து விட்டாரோ இல்லையோ நான் தவறு செய்துவிட்டேன் நண்பரே.....
குஜராத்திலும் மதுவா?!! ஆச்சரியம்தான் ராஜஸ்தானிலிருந்து கள்ளக் கடத்தல்?!! மோடி கவனிப்பாராக அவரது ஊராயிற்றே!...கேரளத்திலும் பூரண மதுவிலக்கு கொண்டு வந்துள்ளார்கள். இருந்தாலும் தமிழ் நாட்டிலிருந்து கள்ளக் கடத்தல் நடைபெறும் என்றுதான் செய்தி! என்ன கொண்டுவந்தாலும் மது விலகுமா என்று தெரியவில்லை!
ReplyDeleteநல்ல பதிவு ஜி!
அறிமுகங்களும் புதியவை! ரசிக்கும் படி உள்ளன. போய் பார்க்க வேண்டும்! மிக்க நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!
Delete